Loading ....

12 ஆம் வகுப்பு - தமிழ்,மாதிரி வினாத்தாள்,இயல் 1, 2,

 

12 ஆம் வகுப்பு - தமிழ்

கன்னியாகுமரி மாவட்டம்

இடைப்பருவத் தேர்வு - 2021, அக்டோபர்

மாதிரி வினாத்தாள் - 2 ( இயல் 1, 2)

25 One Word Questions & Answers








1.தமிழ்அழகியலைக்  கட்டமைப்பதற்கு முதன்மை ஆதாரமாக இருக்கும் இலக்கியம் எது?

         விடை :   சங்க இலக்கியம்.


2. பொதிகை பொதிகை என்பது எந்த மலையை குறிக்கும்?

 விடை : குற்றாலமலை.


3. வியந்து பகுபத உறுப்புகளைப்  பிரித்து எழுதுக

 விடை : விய+த்(ந்)+த்+உ.

 4. கவிகேசரிசாமி தீட்சிதர் எழுதிய நூல் எது?

 விடை : வம்சமணிதீபிகை.

 5. பாரதி பாடப்பகுதியிலுள்ள கடிதத்தை எங்கிருந்து எழுதினார்? 

 விடை : புதுச்சேரி.

 6. மயங்கொலி எழுத்துக்கள் எத்தனை?

 விடை : 8.

 7. ‘ஏங்கொலி நீர்’ பொருள் தருக

 விடை : கடல் நீர்.

 8. தண்டியலங்காரத்தின் பிரிவுகள் எத்தனை?

 விடை :  3.

 9. தொகை நிலை பற்றிப் பேசும் தொல்காப்பிய இயல் எது?

 விடை : எச்சவியல்.

 10. ‘நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரம் ஆகிறது’ பாடல் வரி இடம் 

       பெற்ற   நூல் எது?

 விடை : அய்யப்ப மாதவன் கவிதைகள்.

11.  உலக மொழிகள் அனைத்திலும் மிகுதியாக உள்ள சொற்கள் எவை?

 விடை :  பெயர்ச்சொற்கள்.

 12. உயிர்வரின் ஒரு, இரு என்ற சொற்கள் எவ்வாறு மாறும்?

 விடை : ஓர், ஈர்.

 13. தண்டியலங்காரம் எந்த நூலின் தழுவல் நூல்?

 விடை : காவியதர்சம்.

14. அகத்திணை புறத்திணை சார்ந்த செய்திகளைப் பாடல் 

      பொருளாக   வடிவமைத்துள்ள இலக்கியம் எது?

 விடை : சங்க இலக்கியம்.

 15. கலைமுழுமை பற்றிக் கூறும் இலக்கண நூல் எது?

 விடை :  தொல்காப்பியம்.

 16. ‘நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை’ பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

 விடை :  புறநானூறு.

 17. ‘வியர்வை வெள்ளம்’ -  இலக்கண குறிப்பு தருக.

 விடை :  உருவகம்.

18. சாகித்திய அகாதமி விருது பெற்ற சிற்பியின் கவிதை நூல் எது?

 விடை :  ஒரு கிராமத்து நதி.

 19. தமிழ் அழகியல் நூலின் ஆசிரியர் யார்?

 விடை : தி.சு. நடராசன்.

20. ஆடுகளின் அடையாளங்களைப் பல பெயர்களைச் சொல்லி 

      அழைக்கும் குறுநாவல் எது?

 விடை :  கிடை.

21. இருவேறு பொருள்கள் இடையே ஒற்றுமையை முதலில் கூறி 

      பின் வேறுபடுத்திக் காட்டும் அணி எது? 

 விடை :  பொருள் வேற்றுமை அணி.

 22. இடப்பாகுபாடு வெளிப்படாத சொல் வகை எது?

 விடை : பெயர்ச்சொல்.

23.Knowledge of languages is the doorway to wisdom - தமிழாக்கம் தருக

 விடை : மொழிகளின் அறிவு ஞாலத்தின் திறவுகோல்.

 24. ‘எலியும் பூனையும் போல’ உவமைத்தொடருக்கானப் பொருள் கூறுக

 விடை : எதிரி.

 25. Archive - தமிழ்ப்டுத்துக 

 விடை :  காப்பகம்


விடைக் குறிப்பு pdf download செய்ய கீழ்க்காணும் download button click செய்யவும்👇👇👇👇👇👇


Post a Comment

Previous Post Next Post