Loading ....

11th Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST - December 2021- Common Model Question Paper - 11 ஆம் வகுப்பு - திருப்புதல் தேர்வு - டிசம்பர் 2021- பொது மாதிரி வினாத்தாள் -

                                         


11th Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST - December  2021-  Common Model Question Paper -  11 ஆம் வகுப்பு - திருப்புதல் தேர்வு - டிசம்பர் 2021- பொது மாதிரி வினாத்தாள் -

11th Tamil - Public Exam (2021-2022) 
REVISION TEST - DECEMBER 2021,
Model Question Paper - 1 

திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி

நடைபெற இருக்கின்ற

11h Tamil, REVISION TEST,

Common Model Question Paper

தரப்பட்டுள்ளது.

Common Model

REVISION TEST Question Paper ஆகும் .

இந்த Common Model

REVISION TEST Question Paper

இந்தத் தேர்வுக்குரிய Question

எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்து

முறையாகப் பயிற்சி செய்து

அதிக மதிப்பெண்ணைப்

பெற்றுக் கொள்ளுங்கள்.

11th Tamil - Public Exam   2021 - 2022 


REVISION TEST - DECEMBER 2021


Model Question Paper -1 


 அரசுப்பொதுத்தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினா விடைகள்


திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி


திருப்புதல் தேர்வு - டிசம்பர் 2021


 மாதிரி வினாத்தாள்-1  


நேரம்: 3:மணி   வகுப்பு- 11     மதிப்பெண்:90

                                                                           

                                                                                   பொதுத்தமிழ்


இயல் : 1, 2, 3 



அறிவுரைகள் :  

  • 1)  நீலம்  அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்              அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும். 

  • 2) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

பகுதி - 1

குறிப்பு : 

  • அனைத்து வினாக்களுக்கும் விடை தருக                                  14 X1 = 14

  • கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக



1. வடகரை நாட்டில் மீனை பிடித்து உண்பதற்காக வந்த பறவை 

அ) நாரை                                                    

ஆ) ஏதிலிக்குருவி

இ) உள்ளான் பறவை                               

ஈ) கழுகு

 

2 .”வான் பொய்த்தது” என்ற சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப்பொருள் 

அ) வானம் இடித்தது                              

ஆ) மழை பெய்யவில்லை 

இ) மின்னல் வெட்டியது                          

ஈ)வானம் என்பது பொய்யானது 


3. கவிதை இயற்றுவது உடன் சிறப்பாகப் பாடும் திறனும் கொண்டவர் 

அ) சி. சு. செல்லப்பா                              

ஆ) ஜெயமோகன் 

இ) இந்திரன்                                                

ஈ) சு. வில்வரத்தினம்

 

4.புறநானூற்றைப் பதிப்பித்தவர் 

அ) உ. வே. சாமிநாதர்                            

ஆ) ஜார்ஜ் எல் ஹார்ட்  

இ) ஜி .யு. போப்                                         

ஈ) ஆர். பாலகிருஷ்ணன்

 

5. “விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ” - இவ்வடி இடம் பெற்றுள்ள நூல் 

அ) திருமலை முருகன்பள்ளு              

ஆ) திருமுருகாற்றுப்படை 

இ) தொல்காப்பியம்                                

ஈ) சிறகுக்குள் வானம்

 

6. “புல்லின் இதழ்கள்” என்ற நூலின் ஆசிரியர் 

அ) மல்லார்மே                                        

ஆ) பாப்லோ நெரூடா 

இ) வால்ட் விட்மன்                                   

ஈ) ஆற்றூர் ரவிவர்மா

 

7. மனித இனத்தின் ஆதி அடையாளம் 

அ) மொழி                                                 

ஆ) இலக்கியம் 

இ) இலக்கணம்                                         

ஈ) நாடகம்

 

8. Sailor - என்பதன் தமிழ் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும் 

அ) மாலுமி                                               

ஆ) ஆவணம் 

இ) ஒப்பந்தம்                                            

ஈ) இனக்குழு 


9. இவற்றுள் பொருந்தாதது எது? 

அ) கலப்பை                                            

ஆ) நுகம் 

இ) பூட்டு                                                     

ஈ) காரி 


10. ஈரொற்று மெய்மயக்கம் இடம்பெற்றுள்ள சொல் 

அ) அச்சம்                                                

ஆ) காய்ச்சல் 

இ) கப்பல்                                                  

ஈ) தேர்தல்

 

11. தவறான இணையைத் தேர்வு செய்க 

அ) மண் + வளம்            =  மெய் +  மெய் 

ஆ) மொழி + ஆளுமை =  உயிர் + உயிர் 

இ) கடல் +  அலை          =  உயிர் + மெய் 

ஈ) தமிழ்+ உணர்வு        = மெய்  + உயிர்

 

12. ‘வெண்சங்கு’ -  என்பதன் இலக்கணக்குறிப்பு 

அ) வினைத்தொகை                           

ஆ) பண்புத்தொகை 

இ) உம்மைத்தொகை                           

ஈ) உவமைத்தொகை

 

13. பொருத்தி விடை தேர்க 

அ) தாளம்                      -  1.  மேகம் 

ஆ) வாவி                       -  2. அலை 

இ) தரங்கம்                    -  3. முத்து 

ஈ) கொண்டல்              -  4.  நாடகம்

அ) 3 4 2 1                                                  

ஆ) 3 4 1 2  

இ) 3 1 2 3                                                    

ஈ) 4 3 2 1 


14. இவற்றுள் எதிர்கால இடைநிலை பயின்று வரும் சொல் 

அ) பார்த்தனன்                                      

ஆ) தருகுவன் 

இ) வணங்கிய                                       

ஈ) படிக்கிறான்

11th Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST - December  2021-  Common Model Question Paper -  11 ஆம் வகுப்பு - திருப்புதல் தேர்வு - டிசம்பர் 2021- பொது மாதிரி வினாத்தாள் -

 

பகுதி - 2


பிரிவு – 1


இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக                

எவையேனும் மூன்றனுக்கு விடைதருக                   3 x 2 = 6


15.  தமிழர்கள் புகழ், பழி ஆகியவற்றை எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு   கூறுகிறது?  

16. இனம் மொழி குறித்த ரசூல் கம்சதேவ் பார்வையினைக் குறிப்பிடுக 

17. “ஏதிலியாய் குருவிகள் எங்கே போயின” - தொடரின் பொருள் யாது? 

18. காற்றின் தீராத பக்கங்களில் எது எதனை எழுதிச் செல்கிறது?

 

பிரிவு – 2

எவையேனும் இரண்டனுக்கு விடைதருக                        2 x 2 = 4

19. பேச்சு மொழி எழுத்து மொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாடு சக்தி மிக்கது ஏன்? 

20. “கோட்டை” என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது? 

21. கவிதை என்பது எது? என்பதற்கு இந்திரன் கூறும் விடை யாது?


பிரிவு – 3


எவையேனும் ஏழனுக்கு விடைதருக                                             7 x 2  = 14     

22. பகுபத உறுப்புகள் எத்தனை? அவை யாவை? 

23. உயிரீறு, மெய்யீறு - விளக்குக 

24. மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் எத்தனை? அவை யாவை? 

25. ஏதேனும் ஒன்றுக்கு புணர்ச்சி விதி தருக 

அ) செங்கயல்                       ஆ) புகழெனின் 

26. ஏதேனும் ஒன்றுக்கு உறுப்பிலக்கணம் தருக 

அ)ஈன்ற                                 ஆ) நின்றான் 

27. கோசல மக்கள் நாடு ஒரு மகிழ்ச்சியாக சிறந்த வாழ்ந்து நாடு வந்தனர்        (தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக) 

28. மயங்கொலி சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக 

வலி வளி வழி 

29.வல்லின மெய்களைஇட்டும்  நீக்கி எழுதுக 

அனைத்துத் துறைகளிலும் ஆண்களை போலவே பெண்களும் அரசு பணியை பெற வேண்டும். 

30. தமிழாக்கம் தருக 

அ) Education is  the most powerful weapon which you can use to change the world. 

ஆ) Roads were made for journeys not destinations.

11th Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST - December  2021-  Common Model Question Paper -  11 ஆம் வகுப்பு - திருப்புதல் தேர்வு - டிசம்பர் 2021- பொது மாதிரி வினாத்தாள் -


பகுதி – 3

பிரிவு-1


ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை  தருக          

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக       2 x 4 = 8



31. சு.வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார் 

32. விரும்பியதை அடைவது எப்படி? குறள் வழி விளக்கம் தருக 

33. காற்றில் ஆடும் புல் வீடுகளுக்கு அழகிய பெரியவன் தரும் ஒப்பீடு யாது? ஏன்? 34. “சலச வாவியில் செங்கயல் பாயும்” - இடஞ்சுட்டிப்  பொருள் விளக்குக


  பிரிவு-2


எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக                             2 x 4 = 8

35. “மலை மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுடன் விளக்குக 

36. “என்னுயிர் தமிழ்மொழி என்பேன்”  என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப்  பற்றினை எழுதுக 

37. வாளினும் வலிமையானது மொழி என்பதை விளக்குக 

38. திராவிடர்கள் அடிப்படையில் மலைவாழ் மக்கள் என்பதைச் சான்றுகளுடன் விளக்குக

பிரிவு-3

எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக                 3 x 4 = 12

39. வேற்றுமை அணி (அல்லது)உவமை அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக 40. ‘மழை’ அல்லது ‘மரம் வளர்ப்போம்’- ஏதேனும் ஒரு தலைப்பில் பத்து வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதுக. 

41.கீழ்காணும் நிகழ்ச்சி நிரலைப் படித்து நாளிதழில் செய்தியாக வெளியிட வேண்டி முதன்மை ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக. 

                            “அரியன கேள் புதியன செய்” (திங்கள் கூடுகை) 

நேரம்: 2 : 30 

பிற்பகல்                                 இடம் : அ.மே.நி.பள்ளி


   2 : 30                    - தமிழ் தாய் வாழ்த்து 

   2 : 35                    - வரவேற்புரை  - மாணவர் இலக்கியச் செல்வன் 

   2 : 40                   - தலைமை உரை - திரு. எழிலன், தலைமைஆசிரியர் 

   2 : 50                   - சிறப்புரை - கவிஞர் வாணி “புலம்பெயர் தமிழரின் வாழ்க்கை” 

   3 : 45                   - நன்றியுரை - மாணவர் ஏஞ்சலின் 

  4 : 00                   - நாட்டுப்பண்


42. கீழ்க்ணும் பாடலைப் படித்து மையக்கருத்து எழுதி, ஏதேனும் மூன்று நயங்களை விளக்குக.                                                                                                                                                                                         

                   மீன்கள்கோடி கோடிசூழ வெண்ணிலாவே!  ஒரு 

                   வெள்ளியோடம்போல வரும் வெண்ணிலாவே! 

                   வளர்ந்துவளர்ந்து வந்த வெண்ணிலாவே! மீண்டும் 

                  வாடி வாடிப் போவதேனோ ? வெண்ணிலாவே !

      

                   கூகை ஆந்தைபோல நீயும் வெண்ணிலாவே! பகல்

                   கூட்டினில் உறங்குவாயோ ? வெண்ணிலாவே ! 

                   பந்தடிப்போம் உன்னையென்று வெண்ணிலாவே! நீயும் 

                   பாரில் வர  அஞ்சினையோ  வெண்ணிலாவே ! 

                                                                                       - கவிமணி


43. ‘ஓடு’  என்னும் வேர்ச்சொல்லைக் கொண்ட வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம், வினையாலணையும் பெயர் ஆகியவற்றைத் தொடரில் அமைத்து எழுதுக.

11th Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST - December  2021-  Common Model Question Paper -  11 ஆம் வகுப்பு - திருப்புதல் தேர்வு - டிசம்பர் 2021- பொது மாதிரி வினாத்தாள் -

பகுதி –  4

பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் 

விடை தருக                                                                             3 x 6 = 18


44. அ) திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை, தென்கரை நாட்டுப் பாடல்கள் வழி இயற்கை வளங்களை விவரிக்க.


                                  அல்லது


     ஆ) காலமறிதல் குறித்து முப்பால் கூறும் கருத்துக்களை எழுதுக.


45. அ) இயற்கையோடு இயைந்து வாழ்வு நடத்திய தமிழர்களின் வாழ்வியல் இருப்பிடங்களின் பெயர்களும் இயற்கையோடு  இணைந்தே இருந்தன-  கூற்றினை மெய்ப்பிக்க

                                             அல்லது 


        ஆ) நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சு மொழியையும் எழுத்துமொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க. 


46. அ) யானை டாக்டர் கதை வாயிலாக இயற்கை, உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து  நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக

  

                                     அல்லது 


      ஆ)வாடிவாசல் கதை வாயிலாக நீங்கள் உணர்ந்த கருத்துக்களை விளக்குக.

11th Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST - December  2021-  Common Model Question Paper -  11 ஆம் வகுப்பு - திருப்புதல் தேர்வு - டிசம்பர் 2021- பொது மாதிரி வினாத்தாள் -


பகுதி- 5

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக                           4 + 2 = 6


47.  அடி மாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக 

         அ) “ஏடு தொடக்கி” - எனத் தொடங்கும் பாடலை எழுதுக. 

         ஆ) ‘செயல்’ - என முடியும் திருக்குறளை எழுதுக. 


குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேல்நிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4,  9843448095


  

11th Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST - December  2021-  Common Model Question Paper -  11 ஆம் வகுப்பு - திருப்புதல் தேர்வு - டிசம்பர் 2021- பொது மாதிரி வினாத்தாள் -


11 ஆம் வகுப்பு

பொது மாதிரி திருப்புதல் தேர்வு - டிசம்பர் 2021.

TAMIL QUESTION PAPER Pdf

download button below 👇👇👇👇👇


11 ஆம் வகுப்பு

Slip Test 1 : click here

Slip Test 2 : click here

Slip Test 3 : click here


11 ஆம் வகுப்பு

Unit Test - இயல் - 1 : Click Here

Unit Test - இயல் - 2 : Click Here


12 ஆம் வகுப்பு

இயல் - 1 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here


12 ஆம் வகுப்பு

இயல் - 2 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : Click here


Slip Test 2 : Click here


Slip Test 3 : Click here


Slip Test 4 : CLICK HERE


மொழிப்பயிற்சி


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here


12 ஆம் வகுப்பு

இயல்  1 - 8 ( REDUCED SYLLABUS)

 

 1 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

2 மதிப்பெண் வினா விடைகள்  : click here

4 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

மதிப்பெண் வினா விடைகள்  : Click here


12 ஆம் வகுப்பு

டிசம்பர் 2021 ( REDUCED SYLLABUS)

திருப்புதல் தேர்வு - DECEMBER

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click here


12 ஆம் வகுப்பு

கன்னியாகுமரி மாவட்டப் பொது மாதிரி திருப்புதல் தேர்வு - நவம்பர் 2021.

தமிழ் QUESTION & ANSWER KEY  : Click Here

ENGLISH QUESTION : Click here


பாநயம் பாரட்டல்

12 ஆம் வகுப்பு

இயல்  - 1 :   முச்சங்கங்  கூட்டி  :  கண்ணதாசன்    :   Click Here 

இயல் - 2 :   வெட்டி  யடிக்குது  :   பாரதியார்      :  Click Here
இயல் - 3 :பெற்றெடுத்த தமிழ்   : நாமக்கல் கவிஞர் : Click Here


11 ஆம் வகுப்பு தமிழ்ப்பாடம் சார்ந்த Study materials தேவைப்பட்டால் எது தொடர்பான Study materials வேண்டும் என்பதை Comment Box இல் பதிவிடுங்கள்.

இந்த QUESTION MODEL PDF பிடித்திருந்தால் மறக்காமல்
COMMENT BOX இல் பதிவிடுங்கள்.

11 ஆம் வகுப்பு

பொது மாதிரி திருப்புதல் தேர்வு - டிசம்பர் 2021.

TAMIL QUESTION PAPER Pdf

download 👇👇👇👇👇





Icons made by Stickers from www.flaticon.com
Icons made by Stickers from www.flaticon.com
Icons made by Stickers from www.flaticon.com
Icons made by inipagistudio from www.flaticon.com
Image by Anrita1705 from Pixabay Image by Torben Stroem from Pixabay

1 Comments

Previous Post Next Post