Loading ....

12 ஆம் வகுப்பு,புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம், 2021- 2022,ஒரு மதிப்பெண் வினா விடை,கொள்குறி வகை வினாக்கள்,One Word Question & Answers

 புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்    2021 2022


வகுப்பு : 12


ஒரு மதிப்பெண் வினா விடை

கொள்குறி வகை வினாக்கள் ( பலவுள் தெரிக )

140 One Word Question & Answers







1.பதம் என்பதன் பொருள்

  அ) பகுப்பு          ஆ) பிரிவு          இ) சொல்                 ஈ) கிழவி

  விடை : இ) சொல்


   2. பகுபத உறுப்புகள் எத்தனை? 

   அ) 8                   ஆ) 6                      இ) 7                           ஈ) 5

   விடை : ஆ) 6 


3. பகுபதத்தில் சுட்டப் பெறாத  உறுப்பு எது?

   அ) சந்தி          ஆ) விகாரம்        இ) இடைநிலை       ஈ) எழுத்துப்பேறு 

  விடை :ஈ) எழுத்துப்பேறு


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095 .


4. உடம்படுமெய்கள் யாவை?

  அ) ப்,வ்           ஆ) ய்,வ்                இ) ய், ப்                      ஈ) ட் ,ற்

  விடை : ஆ) ய்,வ்


5. 'ஆ’ என்ற இடைநிலையின் பெயர் என்ன?

    அ) எதிர்மறை    ஆ) இறந்தகால        இ) எதிர்கால         ஈ)உடன்பாட்டு

    விடை : அ) எதிர்மறை


 6.தருருவன் - இச்சொல்லுக்குரிய சரியான  உறுப்பிலக்கணம் 

   அ)தரு + கு + வ் + என்        ஆ) தரு + கு + வ் + அன் 

   இ) தா( தரு) + வ் + அன்       ஈ) தா ( தரு )+ கு + வ் + என் 

   விடை : ஈ) தா ( தரு ) + கு +வ் + என்


  7.‘திருந்துமொழி’ இச்சொல்லின் இலக்கணக்குறிப்பு

    அ) பெயரெச்சம்.                                          ஆ) வினைத்தொகை   

     இ)வினையெச்சம்                                        ஈ) இவற்றில் எதுவுமில்லை

    விடை : ஆ) வினைத்தொகை


8. காலம்கரந்தபெயரெச்சம் என்பது?

    அ) பெயரெச்சம்.                                     இ) வினைமுற்று

    இ)வினையெச்சம்                                  ஈ) வினைத்தொகை

    விடை :  ஈ) வினைத்தொகை


9. மா  பலா  வாழை -  எண்ணும்மையாக  மாற்றுக

    அ) மாபலாவாழை                                         ஆ) மாவும்   பலாவும்  வாழையும்

    இ) மாமரம் பலாமரம் வாழை மரம்            ஈ) மாவும் பலாவும் மரம் 

    விடை : ஆ) மாவும்   பலாவும்  வாழையும்


10. எவ்உயிரெழுத்தில்   யகரமும் வகரமும்  உடம்படுமெய்யாக வரும் 

      அ)ஈ                ஆ) ஐ                  இ) ஏ             ஈ) இ 

      விடை : இ) ஏ


11.நரகர் எந்த திணையில் அடங்குவர்.

     அ) அஃறிணை                                             ஆ)உயர்திணை 

    இ) பொதுத்திணை                           ஈ) இவற்றில் எதுவுமில்லை

    விடை : ஆ)உயர்திணை


 12.புறப்பொருள் வெண்பாமாலை என்ற நூலின் ஆசிரியர் யார்

     அ) கபிலர்                                         ஆ) ஐயனாரிதனார்  

     இ) நக்கீரர்                                         ஈ) இளம்பூரனார்

     விடை : ஆ) ஐயனாரிதனார்


  13.தொல்காப்பியர் குறிப்பிடும் புறத்திணைகள் எத்தனை?

      அ) 8                    ஆ) 11                    இ) 12                       ஈ ) 7

     விடை : ஈ ) 7


14.புறநானூற்றில் சொல்லப்படாத திணை எது?

     அ) வெட்சி         ஆ) நொச்சி         இ) உழிஞை           ஈ) வஞ்சி

    விடை : இ) உழிஞை


 15.கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்பவர் யார்?

    அ) சேரமன்னன்                                       ஆ) சோழ மன்னன்  

     இ) பாண்டிய மன்னன்                              ஈ) இவர்களில் எவருமில்லை

    விடை :இ) பாண்டிய மன்னன்


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095 .


16.ஒருவருடைய புகழ் வலிமை கொடை ஆகியவற்றைக் கூறும் திணை எது?

     அ) வஞ்சித்திணை                                  ஆ) வாகைத்திணை 

      இ) கைக்கிளை                                         ஈ) பாடாண்திணை

     விடை :  ஈ) பாடாண்திணை


17. ஔவையார் நட்புக் கொண்டிருந்த அரசன் 

     அ) நெடுமான்அஞ்சி                              ஆ) இளையன் அஞ்சி 

     இ) முதுமான் அஞ்சி                                 ஈ)நக்கீரர்

 விடை : அ) நெடுமான்அஞ்சி


 18.காய் நெல் அறுத்து கவளம் கொளினே இப்பாடலின் துறை என்ன?

     அ) செவியறிவுறூஉ                                 ஆ) பரிசில்  

      இ) இயன்மொழித்துறை                         ஈ) பொருண்மொழிக்காஞ்சி

     விடை :   அ) செவியறிவுறூஉ


19.மக்களுக்கு நலம் பயக்கும் வாழ்வியல் நெறிகளைக் கூறும் துறை எது?

     அ) பொருண்மொழிக்காஞ்சி                ஆ) செவியறிவுறூஉ    

     இ) இயன்மொழித்துறை                           ஈ) பரிசில் 

     விடை :  அ) பொருண்மொழிக்காஞ்சி


20.நம் பாடப்பகுதியில் பரிசில் துறை இடம்பெறும் திணை எது?

    அ) வஞ்சித் திணை                                   ஆ) பாடாண்திணை 

    இ) பொதுவியல் திணை                            ஈ) காஞ்சித் திணை

    விடை : ஆ) பாடாண்திணை


21.புகழெனின் உயிரும் கொடுக்குவர் இப்பாடலைப் பாடியவர் யார்

    அ) நரிவெரூஉத்தலையார்                ஆ) மோசிகீரனார் 

    இ) நக்கீரனார்                                        ஈ) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

    விடை : ஈ) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி


22.”வாயிலோயே வாயிலோயே” இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

    அ) அகநானூறு                                    ஆ) நற்றிணை 

     இ) புறநானூறு                                      ஈ) ஐங்குறுநூறு

    விடை : இ) புறநானூறு


 23. தண்டியலங்காரம் கூறும் இலக்கணம் எது?

     அ) சொல்லிலக்கணம்                          ஆ) யாப்பிலக்கணம் 

     இ) அணிஇலக்கணம்                              ஈ) இவற்றில் எதுவுமில்லை

     விடை : இ) அணிஇலக்கணம்


 24. மாறனலங்காரம் கூறும் __________  இலக்கணத்தைக் கூறும் நூல் ?

     அ) அணி            ஆ) சொல்           இ) பொருள்            ஈ) யாப்பு

     விடை : அ) அணி


25. பாடலில் உவமானம் உவமேயம் உவம உருபு மூன்றும் வெளிப்படையாக   வரும் அணி எது?

    அ) உருவகஅணி                                  ஆ) இயல்பு நவிற்சி அணி 

    இ) உயர்வு நவிற்சி அணி                     ஈ) உவமை அணி

    விடை : ஈ) உவமை அணி


26. இடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்ட இலக்கண நூல் எது?

     அ) தண்டியலங்காரம்                       ஆ) மாறனலங்காரம் 

     இ) தொல்காப்பியம்                            ஈ) குவலயானந்தம்

     விடை : இ) தொல்காப்பியம்


27. உவமையின் தன்மையை உவமேயத்தில் ஏற்றி கூறும் அணி எது?

     அ) உருவக அணி                                ஆ) உவமை அணி 

     இ) உயர்வு நவிற்சி அணி                    ஈ) இவற்றில் எதுவுமில்லை

     விடை : அ) உருவக அணி


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095 .


28. தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே 

      நாவினால் சுட்ட வடு- இப்பாடலின் அணி என்ன?

     அ) உவமை அணி                               ஆ) உருவக அணி 

     இ) ஏகதேச உருவகஅணி                   ஈ) வேற்றுமை அணி

     விடை : ஈ) வேற்றுமை அணி


29. அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது என்ன தொடை?.

     அ) இயைபு         ஆ) மோனை         இ) எதுகை          ஈ) முரண்

     விடை : இ) எதுகை


30.அடிதோறும் அல்லது சீர் தோறும் ஈற்று எழுத்து ஒன்று போல் வருவது 

     என்ன தொடை?

    அ) இயைபு         ஆ) மோனை         இ) எதுகை          ஈ) முரண்

    விடை : அ) இயைபு


31.தமிழ் இலக்கியத்தில் உள்ள சுவைகள் எத்தனை?

    அ) ஆறு               ஆ) ஏழு                   இ) ஐந்து              ஈ) எட்டு

    விடை : ஈ) எட்டு


32.வெண்பாவின் ஓசை என்ன?

     அ) துள்ளல்                                    ஆ) அகவல்               

     இ) தூங்கல்                                     ஈ) இவற்றில் எதுவுமில்லை

     விடை : ஈ) இவற்றில் எதுவுமில்லை


 33.அகவற்பா என்று எதைக் கூறுகிறோம்?

     அ) ஆசிரியப்பா                             ஆ) கலிப்பா 

     இ) வெண்பா                                     ஈ) வஞ்சிப்பா

     விடை : அ) ஆசிரியப்பா


34.சிந்துப்பா என்ன ஓசை பெற்று வரும்?

    அ) அகவல் ஓசை                                        ஆ) துள்ளல் ஓசை 

     இ) செப்பல் ஓசை                                        ஈ) தூங்கல் ஓசை 

     விடை : இ) செப்பல் ஓசை


 35.அணி என்பதன் பொருள் என்ன?

    அ) சிறப்பு               ஆ) நடை         இ) இலக்கணம்                   ஈ) அழகு 

    விடை : ஈ) அழகு


 36. உள்ளதை உள்ளவாறு கூறும் அணியின் பெயர் என்ன?

     அ) உருவகஅணி                                  ஆ) இயல்பு நவிற்சி அணி 

    இ) உயர்வு நவிற்சி அணி                     ஈ) உவமை அணி

    விடை : ஆ) இயல்பு நவிற்சி அணி


 37.தன்மை அணி என்று எந்த அணியைக் கூறுவர்?

     அ) உருவகஅணி                                  ஆ) இயல்பு நவிற்சி அணி 

    இ) உயர்வு நவிற்சி அணி                     ஈ) உவமை அணி

    விடை : ஆ) இயல்பு நவிற்சி அணி


 38.மருட்கை என்றால் என்ன பொருள்?

    அ) ஆச்சரியம்          ஆ) சந்தேகம்         இ) மாற்றம்             ஈ) வியப்பு

    விடை : ஈ) வியப்பு


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095 .


39. மிகைப்படுத்திக் கூறும் அணியின் பெயர் என்ன?

     அ) ஏகதேச உருவகஅணி         ஆ) இல்பொருள் உவமைஅணி

     இ) உயர்வு நவிற்சி அணி           ஈ) தற்குறிப்பேற்றணி 

     விடை : இ) உயர்வு நவிற்சி அணி


40.‘கம்பெனி’ இச்சொல்லின் தமிழ் பெயர் என்ன?

     அ) நிறுவனம்             ஆ) நிர்வாகம்              இ) குழுமம்               ஈ) கூட்டமைப்பு 

    விடை : இ) குழுமம்


41.கூரை வேய்ந்தார். இச்சொற்றொடர் என்ன மரபு வகையைச் சார்ந்தது?

    அ) இட மரபு                ஆ) வினை மரபு           இ) காலமரபு            ஈ) சினை மரபு

    விடை : ஆ) வினை மரபு


42.’பசுத்தோல் போர்த்திய புலி’ -  இது என்ன வகை உவமை?

    அ) பயன் உவமை                              ஆ) பெயர் உவமை 

     இ) தொழில் உவமை                          ஈ) பண்பு உவமை 

     விடை : இ) தொழில் உவமை 


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095 .


43.பயன் உவமைக்குச் சான்று ஒன்று தருக

    அ) மாரி போன்ற கை                     ஆ) பசுத்தோல் போர்த்திய புலி

     இ) அடியற்ற மரம் போல                ஈ) இலவு காத்த கிளி போல

     விடை : அ) மாரி போன்ற கை


 44.‘இலவு காத்த கிளி போல’ இந்த உவமைத் தொடரின் பொருள் என்ன?

     அ) பொறுமை                                                   ஆ) எதிர்பார்ப்பு         

     இ) காத்திருந்து ஏமாறுதல்                              ஈ) காத்திருப்பது 

    விடை :  இ) காத்திருந்து ஏமாறுதல்


45.கீழ்க்காண்பவற்றுள் தவறான  சொல்லைத் தேர்ந்தெடு.

  அ) ஊரினர்       ஆ) உறுப்பினர்        இ)நடத்துநர்                 ஈ) இயக்குனர் 

    விடை : ஈ) இயக்குனர் 


46. முத்துவீரியம் என்பது என்ன நூல்?

    அ) வாழ்க்கை வரலாற்று நூல்                    ஆ) புராண நூல்  

     இ) காப்பிய நூல்                                              ஈ) இவற்றில் எதுவுமில்லை

     விடை : ஈ) இவற்றில் எதுவுமில்லை


47.’காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே’ இப்பாடலின் ஆசிரியர் யார்?

     அ)நரிவெரூஉத்தலையார்                ஆ) பிசிராந்தையார்  

     இ) நக்கீரனார்                                        ஈ) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

    விடை : ஆ) பிசிராந்தையார்


48.பாண்டியன் அறிவுடை நம்பியை நெறிப்படுத்திய புலவர் யார்?

     அ) மோசிகீரனார்                                ஆ) பிசிராந்தையார்  

     இ) நக்கீரனார்                                        ஈ) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

     விடை : ஆ) பிசிராந்தையார்


  49.புறப்பொருள் வெண்பாமாலையில் கூறப்பட்டுள்ள திணைகள் எத்தனை?

      அ) 12                        ஆ) 11                             இ) 7                             ஈ) 8 

      விடை :  அ) 12


   50.பொருண்மொழிக் காஞ்சித் துறை எந்தத் திணையில் வரும்?

    அ) வஞ்சித் திணை                                   ஆ) பாடாண்திணை 

    இ) பொதுவியல் திணை                            ஈ) காஞ்சித் திணை

    விடை : இ) பொதுவியல் திணை


  51.”உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்; இந்தப் புணர்ச்சி விதி 

     எந்தப் புணர்ச்சிக்கு உரியது?

     அ) மெய்யீற்றுப் புணர்ச்சி            ஆ) உயிரீற்றுப் புணர்ச்சி 

     இ) மகர ஈற்றுப்புணர்ச்சி                ஈ) குற்றியலுகரப் புணர்ச்சி

     விடை : ஈ) குற்றியலுகரப் புணர்ச்சி


52.உடம்படு மெய் புணர்ச்சி என்ன வகை புணர்ச்சி?

     அ) மெய்யீற்றுப் புணர்ச்சி            ஆ) உயிரீற்றுப் புணர்ச்சி 

     இ) மகர ஈற்றுப்புணர்ச்சி                ஈ) குற்றியலுகரப் புணர்ச்சி

    விடை : ஆ) உயிரீற்றுப் புணர்ச்சி


53.’உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ இந்தப் புணர்ச்சி விதி 

      எந்தப் புணர்ச்சிக்கு உரியது?

     அ) மெய்யீற்றுப் புணர்ச்சி            ஆ) உயிரீற்றுப் புணர்ச்சி 

     இ) மகர ஈற்றுப்புணர்ச்சி                ஈ) குற்றியலுகரப் புணர்ச்சி

     விடை : அ) மெய்யீற்றுப் புணர்ச்சி


 54. இறந்த காலத்தை உணர்த்தும் இடைநிலைகள்

     அ) த், ட், ற்           ஆ) ப், வ்              இ) அல், இல்            ஈ) கிறு, கின்று, ஆநின்று

விடை : அ) த், ட், ற்


 55.‘ஓடு’ என்ற வினைச்சொல்லை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாக மாற்றுக

விடை :  ஓடா


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095 .


56.‘அறி’ என்ற வினைச்சொல்லை வினையாலணையும் பெயராக மாற்றுக்க

விடை : அறிந்தவன்


57. சாரியை இடம்பெறும் ஒரு பகுபதத்தைக் கூறுக

விடை : பார்த்தனன்


58.திருவளர்செல்வன் , திருவளர்ச்செல்வன் இவற்றுள் எது சரி?

விடை : திருவளர்செல்வன்


59. மருந்து கடை மருந்துக் கடை இவற்றுள் எது சரி?

விடை : மருந்துக் கடை


60. அரம், அறம் பொருள் வேறுபாடு தருக

விடை : அரம் -ஒரு கருவி ; அறம் - தர்மம்


 61. தலை தளை தழை இச் சொற்களை வைத்து ஒரு வாக்கியம் எழுதுக

விடை : கயிற்றால் தளையிடப்பட்ட மாடு தழையைக்கண்டதும் தலையை   அசைத்தது.


62.எகனை மொகனையாய் பேசுகிறான் - இச் சொற்றொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக

விடை : எதுகை மோனையாய்ப் பேசுகிறான்


63. பாடல் இயற்றும் இலக்கணத்தின் பெயர் என்ன?

விடை : யாப்பிலக்கணம்


64. சொற்பொருள் பின்வருநிலையணிக்குச் சான்று ஒன்று தருக.

விடை : நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 

               வாய்நாடி வாய்ப்பச் செயல்


65. நிலைமொழி ஈற்றில் இ ஈ ஐ ஆகிய எழுத்துகள் வரும்போது என்ன 

எழுத்து உடம்படு மெய்யாக வரும்?

விடை : யகரம் / ய்

 66. ‘அத்தி பூத்தாற் போல’ -  இந்த உவமைத் தொடரை வைத்து வாக்கியம் 

ஒன்று எழுதுக


விடை : அமைச்சர் பெருமகனார் ‘அத்தி பூத்தாற்போலத்’ தன் தொகுதிக்கு வருகை தந்தார் 

67.‘அடியற்ற மரம் போல’ -  இந்த உவமைத் தொடரை வைத்து வாக்கியம் 

ஒன்று எழுதுக. 

விடை :கணவன் இறந்த செய்தி கேட்ட கண்ணகி அடியற்ற மரம் போலச் சாய்ந்தாள்


68. உயிரீறு என்பது என்ன?

விடை : நிலைமொழியின் இறுதி எழுத்து உயிரெழுத்தாக இருப்பது


 69.மெய்யீறு என்பது என்ன?

விடை : நிலைமொழியின் இறுதியில் எழுத்து மெய் எழுத்தாக இருப்பது


70.திணை என்பதன் பொருள்?

விடை : ஒழுக்கம்


71.தினை, திணை பொருள் வேறுபாடு தருக

விடை : தினை - ஒரு வகை அரிசி;  திணை -  ஒழுக்கம்


72.தபால்துறை பரிட்சையில் இங்கிலீஷ் வினாக்களுக்கு இம்பார்ட்டெண்ட் கொடுத்து படிக்க வேண்டும். - பிறமொழிச் சொற்களை நீக்கி தமிழில் எழுதுக

விடை : அஞ்சல் துறைத் தேர்வில் ஆங்கில வினாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படிக்க வேண்டும்


73.சொற்பொருள் பின்வருநிலையணிக்குச் சான்று ஒன்று தருக.

விடை : நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் 

               வாய்நாடி வாய்ப்பச் செயல்


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095 .


74. அகத்திணை எதனைப் பற்றியது?

விடை : வாழ்வியல்


75. புறத்திணை எதனைப் பற்றியது?

விடை : உலகியல்


76. சிங்கக்குட்டி அழகாக உள்ளது.  - இச் சொற்றொடரில் உள்ள மரபுப் பிழையை நீக்கி எழுதுக

விடை : சிங்கக் குருளை அழகாக உள்ளது


77.முதல் எழுத்து அளவொத்து இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எத்தொடை ?

விடை : எதுகைத் தொடை


78. செப்பலோசை, அகவலோசை, தூங்கலோசை, துள்ளல் ஓசை,

எந்த ஓசை சிந்தப்பாவிற்கு உரியது ?

விடை :செப்பலோசை


.79.வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை எது?
விடை :தூங்கலோசை

80.உவம உருபு வெளிப்பட்டு நிற்கும் அணியின் பெயர் என்ன?

விடை :உவமையணி


81.இலக்கணத்தில் அணி என்பதன் பொருள் என்ன?

விடை :அழகு


82.பாடலில் கவிஞர் தான் கூறக் கருதிய பொருளை மேலும்

அழகூட்ட பயன்படுத்தும்  நயம் எது?

விடை :அணிநயம்


83.எதனை வைத்துக் மெய்ப்பாடு கண்டறிவர்?

விடை :சுவை நயம்


84.மெய்ப்பாடு ஒவ்வொன்றும் எத்தனை பொருளில் வரும்?

விடை :நான்கு


85.‘இளிவரல்’ சுவை வெளிப்படுத்துவது எதனை ?

விடை :இயலாமை


86.க், ச், ட் ,த்,ப்,ற் -  இதில் சந்தி  எழுத்துகளாகப்பயன்படுத்த

முடியாத எழுத்துகள் எவை?

விடை :ட், ற்


 
87. ஒற்று மிகுவதாலும் குறைவதாலும் சில நேரங்களில் சொற்களில் என்ன வேறுபாடு ஏற்படும்?

பொருள் வேறுபாடு


88.'அ' - என்பது சுட்டெழுத்து என்றால் 'அந்தக்கடை' என்ற சொல்லில்

இடம் பெறும் 'அந்த' என்பதை எவ்வாறு  அழைப்பர்.

விடை : பெயரடை


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095 .


89.அந்தக்கோயில், இந்த மாநிலம், இந்த மனிதன், எந்தப் புத்தகம் இதில் வினாப்பெயரடைச் சொல்லை எழுதுக.

விடை : எந்தப்புத்தகம்.


90.'வாடும்' என்ற இந்தச் செல்லின் ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரச்சச் சொல் என்ன?

விடை : வாடா


91.குடி+தண்ணீர் = குடிதண்ணீர் எந்த விதியின் அடிப்படையில்

இச்சொல்லில் வல்லினம் மிகவில்லை?

விடை : வினைத் தொகையில் வல்லினம் மிகாது


92.படித்த, எழுது, பகிர்ந்து. இவற்றில் தெரிநிலைப் பெயரைச்ச சொல் எழுதுக.

விடை : படித்த


93.வன்தொடர் குற்றியலுகரத்திற்கு ஒரு எடுத்துக் காட்டுத் தருக.

விடை : கொக்கு


94. செடி+ கொடி = செடிகொடி  இதில் வல்லினம் மிகாது ஏனென்றால்  இது_________ தொகை.

விடை : உம்மைத்


95. மயங்கொலிஎழுத்துகள் மொத்தம் எத்தனை?

விடை : 8


96. மயங்கொலி எழுத்துகளை எழுதுக

விடை : ண,ன,ந,ல,ள,ழ,ர,ற


97.மயங்கொலி எழுத்துகளில்  மெல்லின எழுத்துகளை  எழுதுக

விடை : ண,ன,ந


98.மயங்கொலி எழுத்துகளில் இடையின எழுத்துகளை எழுதுக

விடை : ல,ள,ழ,ர


99. மயங்கொலி எழுத்துகளில் வல்லின எழுத்துகளை எழுதுக?

விடை :


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095 .


100. க,ச,ட,த,ப,ற  இதில் மயங்கொலி எழுத்து எது

விடை :


101.'டண்ணகரம்' என்று அழைக்கப்படும் எழுத்து எது?

விடை : ணகரம்


102. தந்நகரம் என்று அழைக்கப்படும் எழுத்து எது?

விடை : ந/ நகரம்


103. ண - ந -ன இவற்றில் றன்னகர எழுத்து எது?

விடை : ன/ னகரம்


104. ‘ல’ என்ற எழுத்தை __________ நோக்கிய ‘லகரம்’ என்கிறோம்.

விடை : மேல்


105.‘ள’ என்ற எழுத்தை __________ நோக்கிய ‘ளகரம்’ என்கிறோம்.

விடை : கீழ்


106. ‘ழ’ என்ற எழுத்தை __________  ‘ழகரம்’ என்கிறோம்.

விடை : சிறப்பு


107. நாக்கு மேலண்ணத்தின் மையப்பகுதியை உரசுமாறு ஒலித்தால்.

என்ன எழுத்துப் பிறக்கும்.

விடை : ற/ றகரம்


108.நாக்கு மேலண்ணத்தின் அடிப்பகுதியைத் தொட்டு ஒலிக்கும் போது.

பிறக்கும் எழுத்து

விடை : ழ/ ழகரம்


109. நாக்கு மேலண்ணத்தின் நடுப்பகுதியைத் தொட்டு உச்சரிப்புதால் பிறக்கும் எழுத்து யாது?

விடை : ற,ன/ றகரமும், னகரமும்


110.நாக்கு மேலண்ணத்தின் மையப்பகுதியைத் தொட்டு ஒலிக்க, பிறக்கும் எழுத்து யாது?

விடை : ள/ ளகரம்


111.நாக்கு மேலண்ணத்தைத் தொட்டு வருடுமாறு ஒலிக்க, பிறக்கும் எழுத்து யாது?

விடை : ர / ரகரம்.


112.நாக்கு மேலண்ணத்தின் மையப்பகுதியை உரசுமாறு ஒலிக்க  பிறக்கும் எழுத்து யாது?

விடை : ற/ றகரம்


113. அணல் - அனல் பொருள் தருக

விடை : அணல் - தாடி, கழுத்து ,

               அனல் - நெருப்பு


114. ஊண், ஊன் - பொருள் தரு.க.

விடை : ஊண்- உணவு

               ஊன்  - மாமிசம்.


115. காண், கான்   பொருள் தருக

விடை : காண் -  பார்.

              கான்  - வனம் ,காடு


116.தினை, திணை - பொருள் தருக.

விடை : திணை- ஒழுக்கம், குலம்.

              தினை -  தானியம், ஒருவகை புன்செய் பயிர்


117.. அலகு, அளகு, அழகு - பொருள் தருக.

விடை : அலகு - பறவையின் மூக்கு,அளவு,  ஆண் பனை

              அளகு  - சேவல்

              அழகு -  வனப்பு


118.அரம், அறம் பொருள் தருக.

விடை : அரம் - ஒரு கருவி

              அறம்-  தருமம், நீதி, கற்பு, கடமை, புண்ணியம்


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095 .


119. இரத்தல், இறத்தல் - பொருள் தருக

விடை : இரத்தல் - யாசித்தல்

               இறத்தல் - இறந்து போதல், சாதல்


120.ஏரி, ஏறி பொருள் தருக.

விடை : ஏரி      -   நீர்நிலை, குளம்.

               ஏறி      -  உயர்ந்த, மேலே ஏறி


121. அளகு - அலகு - அழகு  மயங்கொலிச் சொற்களை ஒரே

தொடரில் அமைத்து எழுதுக.

விடை : அளகின் அலகு அழகாக உள்ளது.


122. ஏரி - ஏறி - மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில்

அமைத்து எழுதுக.

விடை : ஏரியில் நீர்மட்டம் ஏறிஉள்ளது.


123.பணி - பனி மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில்

அமைந்து எழுதுக 

விடை : பணியில் பணி செய்வது கடிணமாக உள்ளது.


125.’பாஸ்போர்ட்’ - சரியான தமிழ்ச்சொல் என்ன? 

விடை : கடவுச்சீட்டு


126. ‘விசா’ - சரியான தமிழ்ச்சொல் என்ன? 

 விடை : நுழைவு இசைவு


127. ‘பிசினஸ்’ - சரியான தமிழ்ச்சொல் என்ன? 

விடை : தொழில்


128. ‘வருடம்’ - சரியான தமிழ்ச்சொல் என்ன? 

விடை : ஆண்டு


129. ‘நஷ்டம்’ - சரியான தமிழ்ச் சொல் எழுதுக

விடை : இழப்பு


130. சம்பளம் சரியாகத் தராத காரணத்தால் கம்பெனிக்கு எதிராக

ஒர்க்கர்ஸ் எல்லோரும் தர்ணாவில் ஈடுபட்டனர். - இத்தொடரில்

காணப்படும் பிறமொழிச் சொற்களை எடுத்து எழுதுக..

விடை : சம்பளம், கம்பெனி, ஓர்க்கர்ஸ், தர்ணா


131."மழையில் நனைவதால் உற்சாகம் அடைந்து

பிளே கிரவுண்டில் விளையாடினான் இராமன்." இத்தொடரில் காணப்படும்

பிறமொழிச் சொற்களை எடுத்து எழுதுக.

விடை : உற்சாகம், பிளேகிரவுண்ட்


132.'பஸ்' - சரியான தமிழ்ச்சொல் எழுதுக.

விடை : பேருந்து


133. 'போட்டோ'   - சரியான தமிழ்ச்சொல் எழுதுக.

விடை : நிழற்படம்


134.'ஸ்டாப்'   -  சரியான தமிழ்ச்சொல் எழுக.

நிறுத்தம்


135.'பர்த்டே'  -  சரியான தமிழ்ச் சொல் எழுதுக.

பிறந்த நாள்


136.'குரு'    -   சரியான தமிழ்ச்சொல் எழுதுக.

விடை : ஆசான்


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095 .


137.'அபூர்வம்'  - சரியான தமிழ்ச்சொல் எழுதுக

விடை : புதுமை


138.‘அக்கினி’   - சரியான தமிழ்ச்சொல் எழுதுக

விடை : நெருப்பு

139. ‘அர்ச்சனை’ -  சரியான தமிழ்ச் சொல் எழுதுக.

விடை : போற்றி

140. குறிஞ்சி புஷ்பம் அபூர்வமாகப் பூக்ககூடியது ஆகும்  - இத்தொடரில்

காணப்படும் பிறமொழிச் செற்களை எடுத்து எழுதுக.

விடை : புஷ்பம், அபூர்வம்.


விடைக் குறிப்பு pdf download செய்ய கீழ்க்காணும் download button click செய்யவும்👇👇👇👇👇👇












Photo by Paul Green on Unsplash

Post a Comment

Previous Post Next Post