Loading ....

12 ஆம் வகுப்பு,இயல் 1 ,ஒரு மதிப்பெண் வினா விடைகள்,One word questions,TRB

12 ஆம் வகுப்பு

 

இயல் 1 






ஒரு மதிப்பெண் வினா விடைகள்

One word questions (50 question)


1. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேரப் பேசுகின்ற இலக்கண நூல் 

    அ) யாப்பருங்கலக்காரிகை   இ) தண்டியலங்காரம்

    இ)தொல்காப்பியம்                   ஈ) நன்னூல்

    விடை : இ)தொல்காப்பியம்


2. கருத்து 1: இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய் பயனிலை என்றே வருவது மரபு

    கருத்து 2: தொடரமைப்பு சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது

   அ) கருத்து 1 சரி      ஆ)கருத்து  2 சரி     

இ) இரண்டு கருத்தும் சரி       ஈ) கருத்து 1 சரி, 2 தவறு

   விடை : இ) இரண்டு கருத்தும் சரி


 3. பிழையான தொடரைக் கண்டறிக

    அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்

    ஆ) மலையீது ஏறி கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.

    இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது

     ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.

    விடை : இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது


4. பொருத்தித் தேர்க 

   அ) தமிழ் அழகியல்            -1. பரவி சு. நெல்லையப்பர்

   ஆ) நிலவுப்பூ                        -2.தி.சு. நடராசன்

   இ) கிடை                                -3. சிற்பி. பாலசுப்பிரமணியம்.

   ஈ) உய்யும் வழி                    - 4.கி. ராஜநாராயணன்

 

  அ) 4 3 2 1         ஆ) 1 4 2 3              இ)  2 4 1 3              ஈ) 2 3 4 1

  விடை : ஈ) 2 3  4 1


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095 .


5. பாடலின் தளத்தைப்  பாத்திக்கட்டி  வரப்புயரத்தும் பணியைச் செய்வது

   அ) தொடரியல் வடிவம்        ஆ) ஒலிக்கோலம்     

இ) சொற்றொடர்நிலை        ஈ) சொற்புலம்

   விடை : அ) தொடரியல் வடிவம்


6. கவிஞர் சிற்பி எழுதிய எந்தப் படைப்பிலக்கிய நூலுக்குச் சாகித்திய 

   அகாதமி விருதுகிடைத்தது.

   அ) ஒரு கிராமத்தின் கதை                      ஆ) இரு கிராமமே அழுதது

   இ) ஒருகிராமத்தின் நதி                             ஈ) ஒரு புளியமரத்தின் கதை

   விடை :  இ) ஒருகிராமத்தின் நதி       


7. ’இளந்தமிழே' என்னும் நம் பாடப்பகுதி இடம்பெற்றள்ள நூல்

அ) ஒளிப்பறவை           ஆ) நிலவுப்பூ         இ) சூரியநிழல்              ஈ) சூரியகாந்தி

  விடை : ஆ) நிலவுப்பூ


  

8. வம்சமணி தீபிகை' என்னும் நூலை எழுதியவர்

    அ) பாரதியார்                                      ஆ) இளசை மணி 

    இ) கவிகேசரி சாமி தீட்சிதர்              ஈ)கவிமணி

    விடை :  இ) கவிகேசரி சாமி தீட்சிதர்      


9. சரியானதைத் தேர்க

    அ)வீரசோழியம்             - நாவல்

    ஆ) முத்து வீரியம்          - சிறுகதை

    இ) குவலயானந்தம்       - அணியிலக்கணம்.

    ஈ) மாறனலங்காரம்     - சொல்லிலக்கணம்.

   விடை : இ) குவலயானந்தம்     - அணியிலக்கணம்


10. ‘வியந்து’  என்பதன் சரியான  பகுபத உறுப்பிலக்கணப் பிரிப்பு முறை

      அ) விய+த்(ந்)+த்+உ         ஆ) வியத்து + உ        

இ) விய+த்+த்+உ           ஈ) வியந்த+அ

      விடை : அ) விய+த்(ந்)+த்+உ 


11. ‘புணரின் புணராது பொருளே; பொருள்வயின்

      பிரியின் புணராது புணர்வே’ - என்னும் அடிகள் இடம் பெற்ற நூல்

      அ) கலித்தொகை         ஆ) அகநானூறு            

இ) புறநானூறு           ஈ) நற்றிணை

      விடை : ஈ) நற்றிணை


 12. பொருந்தாததைத் தேர்க

      அ) கன்னி விடியல்              -       தொகைமொழி

      ஆ) பொய்படுசொல்           -       மறித்தாக்கம்

      இ) சங்கப்பாடல்கள்           -        மறுதலைத்தொடர்

      ஈ) கி.ராஜநாராயணன்      -        கிடை

      விடை :  ஆ) பொய்படுசொல்    -   மறித்தாக்கம்


13.‘ஈறுபோதல்,’  ‘முன்னின்ற மெய் திரிதல்' இச்சொல்லுக்குரிய புணர்ச்சி விதி

      அ) நெடுந்தேர்         ஆ) முதுமரம்         இ) கருங்குயில்                ஈ) வெங்கதிர்

      விடை : ஈ) வெங்கதிர்


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095 .


14. பொருத்தித் தேர்க.

     அ) வெங்கதிர்                                  1. இடைக்குறை

    ஆ) இலாத                                          2. வினையெக்

     இ) வந்து                                            3. வினையாலணையும் பெயர்

     ஈ) உயர்ந்தோர்                               4. பண்புத்தொகை

    

     அ) 4 2 3 1             ஆ) 4 1 3 2                  இ) 4 1 2 3                       ஈ) 2 3 1 4

    விடை :  இ) 4 1 2 3


 15. எவ்வெழுத்துகளின் வேறுபாடு அறிந்து வாய்விட்டு ஒலித்துப் பழகுவது நல்லது

      இ) ந, ண, ன            ஆ) ற,ர                     இ) ல, ள, ழ                  ஈ) இவை அனைத்தும் 

      விடை :  ஈ) இவை அனைத்தும் 


16. 'எது வளர்க' என்று பாரதி கூறுகிறார் ? 

      அ) கல்வி                         ஆ) விவசாயம்       இ) யந்திரம்                 ஈ) வியாபாரம்

     விடை : ஈ) வியாபாரம்


17.  ‘இலாத'- இச்சொல்லின் இலக்கணக் குறிப்பு

அ)பண்புத்தொகை       ஆ) பெயரெச்சம்       இ) இடைக்குறை         ஈ) மரூஉ 

      விடை : இ) இடைக்குறை


18. ‘மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு’ கவிஞர் குறிப்பிடும் பழமை நலம்

     அ) பாண்டியரின் சிங்கத்தில் கொலுவிருந்தது.               

ஆ) பொதிகையில் தோன்றியது

     இ) வள்ளல்களைத் தந்தது

1) அ மட்டும் சரி       2) அ,ஆ  இரண்டும் சரி 

3) இ மட்டும் சரி     4) அ,இ இரண்டும் சரி 

        விடை : 4) அ,இ இரண்டும் சரி 


19.‘செம்பரிதி மலை மேட்டில் தலையைச் சாய்ப்பான்

      செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்' - இவ்வடியில் இடம் பெறும். தொடை நயம்

     அ) மோனை               ஆ) இயைபு                   இ)எதுகை                           ஈ)முரண்

    விடை : அ) மோனை


20. ‘தமிழ் மொழியின் நடை அழகியல்' என்ற நூலின் ஆசிரியர் 

      அ) பக்தவத்சல பாரதி                                  ஆ) உ.வே.சா 

      இ) தி.சு.நடராசன்                                            ஈ) உத்தமசோழன் 

      விடை : இ) தி.சு.நடராசன்   


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095 .


21. 'ஏங்கொலி நீர்' பொருள்தருக.

      அ) ஆகாயம்              ஆ) கடல்                இ) பூ                      ஈ) மலை

     விடை :  ஆ) கடல்


22. பொருத்தித் தேர்க

    அ) ஓங்கல்                          1. தன்னிகரில்லாத

    ஆ) தொடுதல்                    2.  உலகம்

    இ) ஞாலம்                           3. வணங்குதல்

    ஈ)  தன்னேர்                       4. மலை


   அ)  4  3  2  1 ஆ) 3  2  4  1     இ) 4  2  1  3    ஈ) 2  3   4  1

    விடை :  அ)  4  3  2  1


23. ‘உய்யும் வழி' என்ற கவிதை நூலின் ஆசிரியர்

      அ)சிற்பி           ஆ) சு. நெல்லையப்பர்            

இ) குத்திகேசவர்                    ஈ) பாரதியார்

       விடை : ஆ) சு. நெல்லையப்பர்


 24. வல்லின மெய்களில் ஈ.ரொற்றாய் வராத எழுத்துகள் 

      அ) க், ச்         ஆ) த், ப்              இ) ச், ட்                 ஈ) ட், ற்

      விடை :  ஈ) ட், ற்


25. தொகைநிலை பற்றிப் பேசும் தொல்காப்பிய இயல் எது ?

      அ) எச்சவியல்         ஆ) மரபியல்      

இ) சொல்லியல்                                ஈ) பொருளியல் 

      விடை :  அ) எச்சவியல்


26. பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தேர்க

     அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்   

     ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

     இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.

     ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றனர். 

     விடை : அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்


 27. சரியானதைத் தேர்க

      அ) பாவகை.                    -    ஐந்து

     ஆ) வஞ்சி                          -    வெண்பா, நடைத்தே

      இ) பனிநீர்                       -     தொகைமொழி

      ஈ) காமனர் வனப்பு      -     தொடரியல் போக்கு

      விடை :  இ) பனிநீர்    -  தொகைமொழி


28. கருத்து 1 :  மக்களின் அறியாமையை அகற்றுவது தமிழ்மொழியாகும்

      கருத்து 2 :  புற  இருனளப் போக்க கதிரவன் உதவும். 

      அ) இரண்டு கருத்தும் சரி                      ஆ) கருத்து 1 சரி, 2 தவறு

      இ) கருத்து 1 தவறு, 2 சரி                       ஈ) இரண்டு கருத்தும் தவறு

      விடை :   அ) இரண்டு கருத்தும் சரி


 29. ‘ஓங்கவிடை வந்து’ - இப்பாடலில் இடம் பெற்றுள்ள அணி 

      அ) உவமையணி                                    ஆ) பொருள்வேற்றுமையணி 

      இ) உருவக அணி                                     ஈ) இவற்றில் எதுவுமில்லை

      விடை : ஆ) பொருள்வேற்றுமையணி  


30 .'Fiction'  - என்பதன் தமிழ்ச் சொல்

      அ) காப்பகம்               ஆ) நூலகம்          இ) நிகழ்வு            ஈ) புனைவு

     விடை :   ஈ) புனைவு


31.‘ணகர’ ஒற்றினை அடுத்து எவ்வெழுத்து வராது

     அ) டகரம்                      ஆ) ககரம்            இ)தகரம்               ஈ) றகரம்

     விடை :  ஈ) றகரம்


32.  தவறானதைக் கண்டுபிடி

     அ) பல்+ துளி - பல்துளி                                                ஆ)பல்+நூல் - பன்னூல்

     இ) சொல் +துணை - சொற்றுணை                            ஈ) நாள் + மீன்- நாண்மீன்

     விடை :   அ) பல்+ துளி - பல்துளி  


33. அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் நூல்

      அ) தொல்காப்பியம்                                                    ஆ) முத்து வீரியம்  

      இ) இலக்கணவிளக்கம்                                                ஈ) இவற்றில் எதுவுமில்லை.

      விடை : ஈ) இவற்றில் எதுவுமில்லை.


34. ‘வியர்வை வெள்ளம்'- இலக்கணக் குறிப்பு 

       அ)உவமையாகுபெயர்                                            ஆ)கருவியாகுபெயர் 

       இ) உருவகம்                                                                 ஈ) உவமைத்தொகை 

       விடை :  இ) உருவகம்


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095 .


35. சரியானதைத் தேர்க

     அ)வீரசோழியம்              -   எழுத்திலக்கணம்

     ஆ) முத்து வீரயம்            -    பொருளிலக்கணம்

      இ) மாறனலங்காரம்     -    யாப்பிலக்கணம்

      ஈ)குவலயானந்தம்       -    அணியிலக்கணம்

      விடை : ஈ)குவலயானந்தம்       -    அணியிலக்கணம்


36.  கருத்து 1: ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றார் பாரதி.

       கருத்து 2: பரலிசு. நெல்லையப்பர் பாரதியின் பாப்பாப்  பாட்டைப் பதிப்பித்தார்.

      அ) இரண்டு கருத்தும் தவறு                     ஆ) இரண்டு கருத்தும் சரி  

      இ) கருத்து 1 தவறு 2 சரி                              ஈ)  கருத்து 1 சரி 2 தவறு

      விடை : ஆ) இரண்டு கருத்தும் சரி  


37. தண்டியலங்கரம் எழுத காரணமான நூல் 

      அ)தொல்காப்பியம்           ஆ)காவியதர்சம்        இ)  முத்துவீரியம்       ஈ) இவற்றில் எதுவுமில்லை

      விடை : ஆ)காவியதர்சம்


38. கீழ்க்காண்பவற்றுள்  அரிதாக உள்ள சொல் 

      அ)பாய்                                     ஆ) உறிஞ்                     இ)பொருந்                   ஈ) கரை

      விடை : இ)பொருந்   


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095 .


39. கீழ்வருவனவற்றுள் தவறான சொல் எது ?

    அ) உறுப்பினர்                       ஆ) இயக்குனர்            இ) குழுவினர்              ஈ) ஊரினர். 

    விடை : ஆ) இயக்குனர் 


40. தண்டியலங்கார ஆசிரியரின்  காலம் 

      அ) கி.பி.13.                             ஆ)கி.பி. 10                 இ) கி.பி. 12                       ஈ) கி.பி. 9

      விடை : இ) கி.பி. 12


41. கீழ்க்காண்பவற்றுள் வினையாலணையும் பெயர் எது?

      அ) உயர்ந்தோர்                   ஆ) வந்தான்                இ) நடப்பான்                  ஈ) உயர்ந்து 

      விடை : அ) உயர்ந்தோர்


42. பாரதியார் நடத்திய இதழ்கள்

      அ) சூரியோதயம்,தேசபக்தன்              ஆ) சூரியோதயம், நெல்லையப்பருக்க

      இ) லோகோபகாரி, கர்மயோகி             ஈ) சூரியோதயம்,  கர்மயோகி 

      விடை : ஈ) சூரியோதயம்,  கர்மயோகி


43. பாரதியை விட நெல்லையப்பர் எத்தனை ஆண்டுகள் இளையவர் 

      அ) 6                                 ஆ) 8                            இ) 7                                      ஈ) 9

      விடை : இ) 7   


44. பல்+முகம் = ?

.     அ) பலமுகம்                ஆ) பல்முகம்              இ) பன்னுகம்                   ஈ) பன்முகம்

      விடை : ஈ) பன்முகம்


45. ட்,ற் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளுடன் எந்த வரிசை எழுத்துகளும் வரும்

      அ) க,ப,த                    ஆ) க,ச,ப                       இ) க, ட, த                        ஈ) க, ப, ற

      விடை :  ஆ) க,ச,ப


46. ‘Artistic whole’ என்பதன் தமிழ்ச் சொல்

      அ) ஓவியம்               ஆ) ஓவியப் புனைவு     

இ)கலைப்புலம்            ஈ) கலை முழுமை 

      விடை : ஈ) கலை முழுமை


47. பாடலின் தளத்தை ஏர்நடத்திப் பண்படுத்திப் போகின்றவை எவை?

      அ) ஒலிக்கோலம்                                          ஆ) சொற்புலம் 

      இ) சொற்றொடர்நிலை                                ஈ) இவை அனைத்தும்

      விடை : ஈ) இவை அனைத்தும்


48. ‘கவிதை யெனும் மொழி' - யாருடைய நூல்

       அ) சிற்பி பாலசுப்பிரமணியம்                    ஆ) கி.ராஜநாராயணன் 

        இ) தி.சு. நடராசன்                                            ஈ) இளசை மணி

        விடை : இ) தி.சு. நடராசன்


49. ‘Archive’ என்பதன் தமிழ்ச் சொல்

      அ) வில்வித்தை                ஆ)காப்பகம்          இ)  இல்லம்                    ஈ) இவற்றில் எதுவுமில்லை.

      விடை : ஆ)காப்பகம்


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095 .


50. கடிதங்கள் எழுதுகையில் மாறுபடுவது எது?

      அ) மொழியாட்சி           ஆ) உறவு                இ) நடையழகியல்          ஈ) உரிமை

விடை :  அ) மொழியாட்சி



விடைக் குறிப்பு pdf download செய்ய கீழ்க்காணும் download button click செய்யவும்👇👇👇👇👇👇







Photo by Sunil Naik on Unsplash

Post a Comment

Previous Post Next Post