12th Standard -Tamil -Study Material - FIRST REVISION EXAM -February 2022-14 mark - one word - பலவுள் தெரிக
தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான முதல் திருப்புதல் தேர்வில்12 th standard- First Revision exam - February 2022 இடம்பெற இருக்கின்ற பலவுள் தெரிக - One word பகுதிக்கான வினா-விடைகள் இங்குத் தொகுத்து Study Material ஆக தரப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளே நீங்கள் இந்த ஒரு தொகுப்பினை Study Material ஐ முழுவதுமாகப் படிப்பதன் மூலமாக தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான முதல் திருப்புதல் தேர்வில் 12 th standard- First Revision exam - February 2022 நிச்சயமாக பலவுள் தெரிக - One word பகுதியில் 14 மதிப்பெண்களை( 14 Mark) உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஒரு கேள்வித் தொகுப்பினைப்( Study Material )பதிவிறக்கம் செய்து நீங்கள் முழுவதுமாக படித்துப் புரிந்து தேர்வு எழுதினால் போதுமானது. இந்த ஒரு பகுதியை மட்டும் நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12 ஆம் வகுப்பிற்கான முதல் திருப்புதல் தேர்வில் 12 th standard- First Revision exam - February 2022 நீங்கள் நிச்சயமாக 14 மதிப்பெண்களைப் ( 14 Mark ) பெற முடியும்.
இந்த பதினான்கு மதிப்பெண்களைப் பெறுவதன் மூலமாகத் தமிழ்த்தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்ணைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற முதல் திருப்புதல் தேர்வில் 12 th standard- First Revision exam - February 2022 நிச்சயமாக இடம்பெற இருக்கின்ற இந்த பலவுள் தெரிக - One word கேள்விகளை நன்றாகப்ப் படித்து சிறப்பாக தேர்வை எழுத உங்களுக்கு இந்த Study Material உதவும். வெற்றி பெற வாழ்த்துகின்றேன். Kurusady M.A.Jelestin
12 ஆம் வகுப்பு
திருப்புதல் தேர்வு - பிப்ரவரி 2022
பலவுள் தெரிக
இயல் - 1
இலக்கணம்
1.பிழையான தொடரைக் கண்டறிக (பக் : எண் : 17 ) PTA : 2, 6
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ) மலைமீது ஏறி கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மணம் வீசியது.
ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
விடை : இ) காளையில் பூத்த மல்லிகை மணம் வீசியது.
2. பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தேர்க (பக் : எண் : 17 )
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லா தெரியும்.
ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
ஈ) மயில்கள் போல் ஆடுகின்றனபோல் ஆடுகின்றன.
விடை : அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லா தெரியும்.
செய்யுள் , உரைநடை
3. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசுகின்ற
இலக்கண நூல்(பக் : எண் : 18)
அ) யாப்பருங்கலக்காரிகை
ஆ) தண்டியலங்காரம்
இ) தொல்காப்பியம்
ஈ) நன்னூல்
விடை : இ) தொல்காப்பியம்
4. ‘மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு’ கவிஞர் குறிப்பிடும் பழமைநலம் (பக் : எண் : 18)
க) பாண்டியரின் சங்கத்தில் இருந்தது
உ) பொதிகையில் தோன்றியது
ங) வள்ளல்களை தந்தது
அ) க மட்டும் சரி
ஆ) க , உ இரண்டும் சரி
இ) ங மட்டும் சரி
ஈ) க ,ங இரண்டும் சரி
விடை : ஈ) க ,ங இரண்டும் சரி
5. “மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்” - இவ்வடிகளில் பயின்று
வந்துள்ள தொடை நயம் (பக் : எண் : 18) PTA : 1
அ)அடிமோனை ,அடி எதுகை
ஆ) சீர்மோனை, சீர் எதுகை
இ) அடி எதுகை , சீர் மோனை
ஈ) சீர் எதுகை
விடை : இ) அடி எதுகை , சீர் மோனை
6. கருத்து 1 : இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய்
பயனிலை என்று வருவதே மரபு
கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில்
பிறழ்ந்து வருகிறது (பக் : எண் : 18)
அ) கருத்து 1 சரி
ஆ) கருத்து 2 சரி 1 தவறு
இ) இரண்டு கருத்தும் சரி
ஈ) கருத்து 1 சரி 2 தவறு
விடை : ஆ) கருத்து 2 சரி 1 தவறு
7. பொருத்துக : (பக் : எண் : 18)
அ) தமிழ் அழகியல் - 1.பரலி சு நெல்லையப்பர்
ஆ) நிலவுப்பூ - 2. தி சு நடராசன்
இ) கிடை - 3. சிற்பி பாலசுப்ரமணியம்
ஈ) உய்யும் வழி - 4. கி ராஜநாராயணன
அ) 4 3 2 1
ஆ) 1 4 2 3
இ) 2 4 1 3
ஈ) 2 3 4 1
விடை : ஈ) 2 3 4 1
இயல்2
இலக்கணம்
8. தமிழில் திணை பாகுபாடு_________ அடிப்படையில்
பகுக்கப்பட்டுள்ளது. (பக் : எண் : 41) PTA : 4
அ) பொருட் குறிப்பு
ஆ) சொற்குறிப்பு
இ) தொடர் குறிப்பு
ஈ) எழுத்து குறிப்பு
விடை : அ) பொருட் குறிப்பு
9. “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவர் அல்ல பிறவே “இந் நூற்பா
இடம்பெற்றுள்ள இலக்கண நூல். (பக் : எண் : 41)
அ) நன்னூல்
ஆ) அகத்தியம்
இ) தொல்காப்பியம்
ஈ)இலக்கண விளக்கம்
விடை : இ) தொல்காப்பியம்
10. யார்? எது? ஆகிய வினாச் சொற்கள் பயனிலையாய்
அமைந்து உணர்த்தும் திணைகள் முறையே (பக் : எண் : 41)
அ) அஃறிணை, உயர்திணை
ஆ) உயர்திணை, அஃறிணை
இ) விரவுத்திணை ,அஃறிணை
ஈ) விரவுத்திணை உயர்திணை
விடை : ஆ) உயர்திணை, அஃறிணை
11.பொருத்தி விடை தேர்க (பக் : எண் : 41)
அ) அவன் அவள் அவர் 1. உளப்படுத்தாத தன்மைப் பன்மை
ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் 2. உளப்பாட்டுத் தன்மைப் பன்மை
இ) நாம் முயற்சி செய்வோம் 3. தன்மைப் பன்மைப் பெயர்கள்
ஈ) நாங்கள், நாம் 4. பதிலிடு பெயர்கள்
அ) 4 1 2 3
ஆ) 2 3 4 1
இ) 3 4 1 2
ஈ) 4 3 1 2
விடை : அ) 4 1 2 3
செய்யுள்
12. நரம்புக்குள் வீணை மீட்டி கொண்டிருக்கிறது என்று
அய்யப்பமாதவன் குறிப்பிடுவது. (பக் : எண் : 42)
அ) சூரிய ஒளிக்கதிர்
ஆ) மழை மேகங்கள
இ) மழைத்துளிகள்
ஈ)நீர்நிலைகள்
விடை : இ) மழைத்துளிகள்
இயல் - 3
இலக்கணம்
13. பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய
காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க. (பக் : எண் : 67)
அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்.
ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்.
இ) நிறுத்தக் குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்.
ஈ) வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் விடாமல் எழுதுதல்.
விடை : இ) நிறுத்தக் குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்.
14. வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின்
பொருளறிந்து பொருத்துக. (பக் : எண் : 67)
அ) பாலை பாடினான் - தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்
ஆ) பாலைப் பாடினான் - தேரினைப் பார்த்தான்
இ) தேரை பார்த்தான் - பாலினைப் பாடினான்
ஈ) தேரைப் பார்த்தான் - பாலைத்திணை பாடினான்
அ) 4 1 3 2
ஆ) 2 3 1 4
இ) 4 3 1 2
ஈ) 2 4 1 3
விடை : இ) 4 3 1 2
செய்யுள், உரைநடை, துணைப்பாடம்
15. சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன அவை __________ (பக் : எண் : 68)
அ) அறவோர், துறவோர்
ஆ) திருமணமும், குடும்பமும்
இ) மன்றங்களும், அவைகளும்
ஈ) நிதியமும் ,சுங்கமும்
விடை : ஆ) திருமணமும், குடும்பமும்
16. பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்க (பக் : எண் : 68)
அ) உரிமைத்தாகம் - 1. பாரசீக கவிஞர்
ஆ) அஞ்ஞாடி - 2. பூமணி
இ) ஜலாலுதீன் ரூமி - 3. பக்தவச்சல பாரதி
ஈ) தமிழர் குடும்ப முறை - 4.சாகித்திய அகாதெமி
அ) 2 4 3 1
ஆ) 3 4 1 2
இ) 2 4 1 3
ஈ) 2 3 4 1
விடை : இ) 2 4 1 3
17. இவற்றை வாயிலுக்குச் சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என்று ஜலாலுதீன் ரூமி குறிப்பிடுவது யாது? (பக் : எண் : 68)
அ) வக்கிரம் ஆ) அவமானம்
இ) வஞ்சனை ஈ) இவை அனைத்தும்
விடை : ஈ) இவை அனைத்தும்
18. “உவா உறவந்து கூடும்
உடுபதி இரவி ஒத்தார்” யார் ?யார் ? (பக் : எண் : 68)
அ) சடாயு, இராமன்
ஆ) இராமன், குகன்
இ) இராமன், சுக்ரீவன்
ஈ) இராமன், சபரி
விடை : இ) இராமன், சுக்ரீவன்
19.”எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே” - என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது (பக் : எண் : 68)
அ) தனிக் குடும்ப முறை
ஆ) விரிந்த குடும்ப முறை
இ) தாய்வழிச் சமூக முறை
ஈ) தந்தைவழிச் சமூக முறை
விடை : ஈ) தந்தைவழிச் சமூக முறை
வாழ்வியல் : திருக்குறள்
20. படத்துக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடித்து
எழுதுக. (பக் : எண் : 77)
அ) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
ஆ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
இ) சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
விடை : இ) சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
21. கடலின் பெரியது (பக் : எண் : 77)
அ) உற்ற காலத்தில் செய்த உதவி
ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
இ) தினையளவு செய்த உதவி
விடை : ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
22. பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக. (பக் : எண் : 77)
நல்லார் நயவர் இருப்பநயம் இலாக்
கல்லார்க் கொன்றாகிய காரணம் - தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்
அ) இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு
ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு
இ) ஊழில் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
விடை : இ) ஊழில் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்
23. வையகமும் வானகமும் ஆற்றல் அரிது - எதற்கு? (பக் : எண் : 78)
அ) செய்யாமல் செய்த உதவி
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி
இ) தினைத்துணை நன்றி
ஈ) காலத்தினால் செய்த நன்றி
விடை : அ) செய்யாமல் செய்த உதவி
24. பொருத்துக (பக் : எண் : 78)
அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - 1. சேர்ந்தாரைக் கொல்லி
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி - 2. ஞாலத்தின் மாணப் பெரிது
இ) சினம் - 3. தெய்வத்துள் வைக்கப்படும்
ஈ) காலத்தினால் செய்த நன்றி - 4. நன்மை கடலின் பெரிது
அ) 4 3 2 1
ஆ) 3 4 1 2
இ) 1 2 3 4
ஈ) 2 3 4 1
விடை : ஆ) 3 4 1 2
25. ஞாலத்தின் மாணப் பெரிது எது?
அ) செய்யாமல் செய்த உதவி ஆ) காலத்தினால் செய்த உதவி
இ) பயன்தூக்கார் செய்த உதவி ஈ) திணையளவு உதவி
விடை : ஆ) காலத்தினால் செய்த உதவி
26. இலக்கணக்குறிப்புத் தருக
அன்பும் அறனும் - எண்ணும்மை
நன்கலம் - பண்புத்தொகை
மறத்தல் - தொழில்பெயர்
உலகு - இடவாகுபெயர்
27. பொருள் கூறுக
வெகுளி - சினம் ;புணை - தெப்பம் ; ஏமம் - பாதுகாப்பு ; திரு - செல்வம்
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்
முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப் பள்ளி ,நாகர்கோவில்-4,9843448095
11 ஆம் வகுப்பு
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
11 ஆம் வகுப்பு
Unit Test - இயல் - 1 : Click Here
Unit Test - இயல் - 2 : Click Here
11 ஆம் வகுப்பு
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click Here
11 ஆம் வகுப்பு
இயல் - 5
சீறாப்புராணம்
1 Mark questions
சீறாப்புராணம்
1 Mark questions (75) Pdf : Click Here
12 ஆம் வகுப்பு
இயல் - 1 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
Slip Test 4 : click here
12 ஆம் வகுப்பு
இயல் - 2 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : Click here
Slip Test 2 : Click here
Slip Test 3 : Click here
Slip Test 4 : CLICK HERE
மொழிப்பயிற்சி
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here
12 ஆம் வகுப்பு
இயல் 1 - 8 ( REDUCED SYLLABUS)
1 மதிப்பெண் வினா விடைகள் : Click here
2 மதிப்பெண் வினா விடைகள் : click here
4 மதிப்பெண் வினா விடைகள் : Click here
6 மதிப்பெண் வினா விடைகள் : Click here
12 ஆம் வகுப்பு
ஜனவரி 2022 ( REDUCED SYLLABUS)
முதல் திருப்புதல் தேர்வு - JANUARY 2022
மாதிரி வினாத்தாள்-1 : click here
மாதிரி வினாத்தாள்-2 : Click here
மாதிரி வினாத்தாள்-3 : Click Here
மாதிரி வினாத்தாள்-4 : Click Here
மாதிரி வினாத்தாள்-5 : Click Here
பாநயம் பாரட்டல்
12 ஆம் வகுப்பு
மொழிப்பயிற்சி
2 mark QUESTIONS
இயல் 1,2,3 : Click Here