12th Tamil - Public Exam (2021-2022)
REVISION TEST - DECEMBER 2021,
Model Question Paper -2
12th Tamil - Public Exam 2021 - 2022
REVISION TEST - DECEMBER 2021
Model Question Paper -2
அரசுப்பொதுத்தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினா விடைகள்
திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி
திருப்புதல் தேர்வு - டிசம்பர் 2021
மாதிரி வினாத்தாள்-2
நேரம்: 3:மணி வகுப்பு-12 மதிப்பெண்:90
பொதுத்தமிழ்
அறிவுரைகள் :
i) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா
என்பதனைச் சரி பார்த்துக்கொள்ளவும் அச்சுப் பதிவில்
குறை இருப்பின் அறைகண்காணிப்பாளரிடம்
உடனடியாகத் தெரிவிக்கவும்.
ii) நீலம் அல்லது கருப்பு மை மட்டுமே எழுதுவதற்கும்
அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு :
i) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும்,
சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும்
ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன்
விடையிணையும் சேர்த்து எழுதுக.
பகுதி-1
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக 14 x 1 = 14
1.பொருந்தாத இணையைத் தேர்க
அ) கம்பர் யார் ? - வ. சுப. மாணிக்கம்
ஆ) சிறை - அனுராதா ரமணன்
இ) ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
ஈ) இயற்கைக்குத் திரும்பும் பாதை - நம்மாழ்வார்
2.வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்றவர்
அ) பாரதிதாசன்
ஆ) பாரதியார்
இ) கவிமணி
ஈ) கம்பர்
3. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க
அ) உரிமைத்தாகம் - 1. பாரசீசக் கவிஞர்
ஆ) அஞ்ஞாடி - 2. பூமணி
இ) ஜலாலுத்தீன் ரூமி - 3. பக்தவச்சல பாரதி
ஈ) தமிழர் குடும்ப முறை - 4. சாகித்திய அகாதெமி
அ) 2 3 4 1
ஆ) 3 4 1 ,2
இ) 2 4 1 3
ஈ) 2 3 4 1
4.பொருத்துக
அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - 1. சேர்ந்தாரைக் கொல்லி
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி - 2. ஞாலத்தின் மாணப் பெரிது
இ) சினம் - 3. தெய்வத்துள் வைக்கப்படும்
ஈ) காலத்தினால் செய்த நன்றி - 4. நன்மை கடலின் பெரிது
அ) 4 3 2 1
ஆ) 3 4 1 2
இ) 1 2 3 4
ஈ) 2 3 4 1
5. பிழையான தொடரைக் கண்டறிக (பக் : எண் : 17)
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ) மலைமீது ஏறி கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
ஈ) நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின.
6. சிற்பி பாலசுப்ரமணியத்தின் பன்முகத் தன்மையில் அடங்காத ஒன்று.
அ) பேராசிரியர்
ஆ) இதழாசிரியர்
இ) கட்டுரையாளர்
ஈ) மொழிபெயர்ப்பாளர்
7.பொருத்துக
அ) தமிழ் அழகியல் - 1.பரலி சு நெல்லையப்பர்
ஆ) நிலவுப்பூ - 2. தி சு நடராசன்
இ) கிடை - 3. சிற்பி பாலசுப்ரமணியம்
ஈ) உய்யும் வழி - 4. கி ராஜநாராயணன
அ) 4 3 2 1
ஆ) 1 4 2 3
இ) 2 4 1 3
ஈ) 2 3 4 1
8.தவறானதைக் கண்டுபிடி
அ) பல் + துளி = பல்துளி
ஆ) சொல் + துணை = சொற்றுணை
இ) பல்+ நூல் = பன்னூல் நூல்
ஈ) நாள்+ மீன் = நாண்மீன்
9. சரியானதைத் தேர்க
அ) யார்? எது? -பால்வேறுபாடு .
ஆ) அவர் வந்தார் - பன்மைப் பொருளை உணர்த்துகிறது.
இ) தங்கமணி பாடினாள் - பெண்பால் விகுதி பெற்றுள்ளது
ஈ) ஆசிரியர் வந்தார் - பலர்பால் விகுதி உயர்வு கருதி வராது
10. பொருத்தித் தேர்க
அ) Lobby - 1. புனைவு
ஆ) Checkout - 2. ஓய்வறை
இ) Fiction - 3. காப்பகம்
ஈ) Archive - 4. வெளியேறுதல்
அ) 2 1 4 3
ஆ) 2 4 3 1
இ) 2 3 1 4
ஈ) 2 4 1 3
11.தமிழில் திணைபாகுபாடு ………….. அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது
அ) பொருட்குறிப்பு
ஆ) சொற்குறிப்பு
இ) தொடர்க்குறிப்பு
ஈ) எழுத்துக்குறிப்பு
12. ‘நெல்லை தென்றல்’ என்னும் நூல்
அ) கவிதை நூல்
ஆ) உரைநடை நூல்
இ) கடித இலக்கிய நூல்
ஈ) வரலாற்று நூல்
13. அன்பும் அறமும் - என்பதன் இலக்கணக்குறிப்பு
அ) உம்மைத்தொகை
ஆ) வினைத்தொகை
இ) பண்புத்தொகை
ஈ) எண்ணும்மை
14.தவறானதைத் தேர்க
அ) வெகுளி - சினம்
ஆ) புணை - தெப்பம்
இ) ஏமம் - பாதுகாப்பு
ஈ) திரு - உயர்வு
பகுதி - 2
பிரிவு – 1
இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக 3 x 2 = 6
எவையேனும் மூன்றனுக்கு விடைதருக
15.நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?
16.சினத்தை ஏன் காக்க வேண்டும் ?
17.நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது - விளக்கம்தருக.
18.மறக்கக் கூடாத்து, மறக்கக் கூடியது எவற்றை?
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு விடைதருக 2 x 2 = 4
19. ‘ விரிந்த குடும்ப முறை ‘ என்றால் என்ன ?
20. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக
21. மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக
மாற்றுபவை எவை ?
பிரிவு – 3
எவையேனும் ஏழனுக்கு விடைதருக 7 x 2 = 14
22. உவமைத்தொடர் களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக
அ) அச்சாணி இல்லாத தேர்போல
ஆ) தாமரை இலை நீர்போல
23.மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக
விலை , விளை, விழை
24. வல்லின மெய்கள் இட்டும் நீக்கியும் எழுதுக
நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின்
தரத்தை பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது
கூர்ந்த கவனம் அறிவை பெறுவதற்கும் வளர்ப்பதற்குமான
அடிப்படை தேவையாகும்.
25.ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக
அ) உயர்ந்தோர் ஆ) இருந்தாய்
26.கலைச் சொற்களுக்கேற்ற தமிழ்ச்சொல் எழுதுக
அ) Platform ஆ) Ticket Inspector
27.கீழ்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும்
இருவேறு தொடர்களை அமைக்க
அ) முதல் < ஆ) படி <
28.ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக
அ) அருங்கானம் ஆ) செல்லிடத்து
29.பொருத்தமான வேற்றுமை உருபுகளை சேர்த்து முறையான
தொடர்களாக ஆக்குக
அ) சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம்.
ஆ) மாறன் பேச்சு திறன் யார் வெல்ல முடியும்.
30.காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும்
பொருள் மயக்கத்திற்குச் சான்று தருக.
பகுதி – 3
பிரிவு-1
ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக 2 x 4 = 8
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக
31.எவற்றையெல்லாம்விட நன்றி உயர்ந்தது ?
குறள் வழி விளக்குக.
32.”வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து” - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
33. இல்வாழ்க்கை சிறப்புற அறநெறியோடு வாழ்தலின்
முக்கியத்துவத்தை வள்ளுவர் வழி நின்று விளக்குக.
34.சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக
.
பிரிவு-2
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
35.சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் - விளக்குக.
36.பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே
இன்றைய கூட்டுக் குடும்பம் - விளக்கம் எழுதுக.
37.’கலை முழுமை’ - விளக்குக.
38.தாய்வழிக் குடும்பம் குறித்துச் சங்க இலக்கியத்தில் குறிப்பிடும் செய்திகள் யாவை ?
பிரிவு-3
எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக 3 x 4 = 12
39.கீழ்க்காணும் பத்தியைப் படித்து நான்கு வினாக்களை உருவாக்குக.
மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை.
மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய
கருவியாகவும் உள்ளது. பெற்ற தாயின் முதல் வேட்கை
தன் குழந்தையுடன் பேசுதல். அவள் முதலில் அடையும்
பெரிய மகிழ்ச்சி குழந்தையின் பேச்சைக் கேட்பதே ஆகும்.
குழந்தையின் மனவளர்ச்சியோடு தொடர்புடையது
மொழி வளர்ச்சியே ஆகும். மனம் என்பது பெரும்பாலும்
மொழியால் வளர்ந்து அமைந்தது. மனதின் வளர்ச்சிக்கு
ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும்.
மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் உள்ளனர்;
மாணவராகவும் உள்ளனர்; மொழியை வளர்ப்பவர்களும் மக்களே;
மொழியால் வளர்பவரும் மக்களே.
40. அ) “சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்” - குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
( அல்லது )
ஆ) பொருள்வேற்றுமையணியை சான்றுடன் விளக்குக.
41.தமிழாக்கம் தருக.
In terms of Human Development objectives, education is an end
in itself, not just a means to an end. Education is a basic human right.
It is also the key which opens many economic, social and political
doors for people. It increases access to income and employment opportunities.
While economists generally analyze the importance of education largely as a
means for better opportunities in life. Educating people is a worthy goal in itself,
irrespective of the economic rates of return.
42.பா நயம் பாராட்டுக: மையக்கருத்தை எழுதி ஏதேனும் மூன்று நயங்களை எழுதுக.
வெட்டி யடிக்குது மின்னல் - கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது ;
கொட்டி யிடிக்குது மேகம் - கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று
சட்டச்சட சட்டச்சட டட்டா - என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
எட்டுத்திசையும் இடிய - மழை
எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா !
- பாரதியார்
43.எண்ணங்களை எழுத்தாக்குக.
பகுதி – 4
பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல்
விடை தருக 3 x 6 = 18
44.அ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்
கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
(அல்லது)
ஆ) சினத்தைக் காத்தல் வாழ்வை மேம்படுத்தும் - இக்கூற்றை முப்பால்
வழி விரித்துரைக்க.
45.அ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும்
பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறதுல - எவ்வாறு? விளக்குக.
(அல்லது)
ஆ) கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை
எடுத்துக்காட்டி விளக்குக.
46.அ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட
மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
(அல்லது)
ஆ)’உரிமைத்தாகம்’ கதையில் சகோதரர்கள் இருவரும்
ஒன்றிணையாமல் இருந்திருந்தால்.... கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
பகுதி- 5
அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக 4 + 2 = 6
47.அ) ‘துன்பு உளது....... எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல்
ஆ) ‘பொருள்’ என முடியும் திருக்குறளை எழுதுக.
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேல்நிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4, 9843448095
Follow us on (click the below icons to follow)
Want our Latest Posts?
View Our Blogger(Click The Icon Below)
Tamilamuthu 2020 Official
இயல் - 1 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : click here
Slip Test 2 : click here
Slip Test 3 : click here
Slip Test 4 : click here
இயல் - 2 ( REDUCED SYLLABUS)
Slip Test 1 : Click here
Slip Test 2 : Click here
Slip Test 3 : Click here
Slip Test 4 : CLICK HERE
மொழிப்பயிற்சி
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here
இயல் 1 - 8 ( REDUCED SYLLABUS)
1 மதிப்பெண் வினா விடைகள் : Click here
2 மதிப்பெண் வினா விடைகள் : click here
4 மதிப்பெண் வினா விடைகள் : Click here
டிசம்பர் 2021 ( REDUCED SYLLABUS)
திருப்புதல் தேர்வு
மாதிரி வினாத்தாள்-1 : click here
டிசம்பர் 2021,
திருப்புதல் தேர்வு - மாதிரி வினாத்தாள் - 2
MODEL QUESTION PAPER Pdf DOWNLOAD👇👇👇
Photo by David Brooke Martin on Unsplash