Loading ....

12th Tamil - Study Material - Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST - January 2022- Model Question Paper - Answer key

 

12th Tamil - Study Material - Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST - January 2022- Model Question Paper - ANSWER KEY

12th Tamil - Study Material - Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST - January  2022-   Model Question Paper  - ANSWER  KEY



12th Tamil - Public Exam   2021 - 2022 


REVISION TEST - DECEMBER 2021

                                               Model Question Paper  


 அரசுப்பொதுத்தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினா விடைகள்

                                        திருப்புதல் தேர்வு - ஜனவரி  2021

( இயல் - 1, 2, 3 )

 மாதிரி வினாத்தாள்-1 


நேரம்: 3:மணி   வகுப்பு-1 2     மதிப்பெண்:90

                                                                           

பொதுத்தமிழ்


அறிவுரைகள் :

i) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரி பார்த்துக்கொள்ளவும் அச்சுப் பதிவில் குறை இருப்பின் அறைகண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும். 

ii) நீலம் அல்லது கருப்பு மை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும். 

குறிப்பு   :

  i) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும்,  சொந்த நடையிலும்   அமைதல் வேண்டும். 

 ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையிணையும் சேர்த்து எழுதுக.

பகுதி-1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக                                                       14 x 1 = 14

1. தமிழில்   திணை பாகுபாடு_________ அடிப்படையில் 

    பகுக்கப்பட்டுள்ளது.   (பக் : எண் : 41) PTA : 4 

அ) பொருட் குறிப்பு                                           

ஆ) சொற்குறிப்பு  

இ) தொடர் குறிப்பு                                            

ஈ) எழுத்து குறிப்பு

2. நரம்புக்குள் வீணை மீட்டி கொண்டிருக்கிறது என்று  அய்யப்பமாதவன்   குறிப்பிடுவது.   (பக் : எண் : 42)

 அ) சூரிய ஒளிக்கதிர்                              

ஆ) மழை மேகங்கள் 

 இ) மழைத்துளிகள்                                   

ஈ)நீர்நிலைகள்






3. வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின்  பொருளறிந்து பொருத்துக.  (பக் : எண் : 67)

அ) பாலை பாடினான்               -  தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்               

ஆ) பாலைப் பாடினான்           -   தேரினைப் பார்த்தான் 

இ) தேரை பார்த்தான்               -   பாலினைப் பாடினான்

4. சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன அவை __________  (பக் : எண் : 68)

அ) அறவோர், துறவோர்                  

ஆ) திருமணமும், குடும்பமும் 

இ) மன்றங்களும்,  அவைகளும்    

ஈ) நிதியமும் ,சுங்கமும்

5. பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தேர்க (பக் : எண் : 17 )

அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லா தெரியும்.

ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. 

இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.  

ஈ) மயில்கள்  போல் ஆடுகின்றனபோல் ஆடுகின்றன.

6. வையகமும் வானகமும் ஆற்றல் அரிது -  எதற்கு?  (பக் : எண் : 78)

அ) செய்யாமல் செய்த உதவி 

ஆ) பயன்தூக்கார் செய்த உதவி 

இ) தினைத்துணை நன்றி 

ஈ) காலத்தினால் செய்த நன்றி 

7.“உவா  உறவந்து கூடும் 

       உடுபதி இரவி ஒத்தார்” யார் ?யார் ?   (பக் : எண் : 68)

அ) சடாயு, இராமன்                    

ஆ) இராமன், குகன் 

இ) இராமன்,  சுக்ரீவன்               

ஈ)  இராமன், சபரி




8. இவற்றை வாயிலுக்குச்  சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக  என்று ஜலாலுதீன் ரூமி குறிப்பிடுவது யாது?  (பக் : எண் : 68)

அ) வக்கிரம்                                    

ஆ) அவமானம்  

இ) வஞ்சனை                                   

ஈ) இவை அனைத்தும் 

9. கடலின் பெரியது  (பக் : எண் : 77)

அ) உற்ற காலத்தில் செய்த உதவி 

ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி 

இ) தினையளவு செய்த உதவி 

10. ‘வெங்கதிர்’ என்பதன்  இலக்கணக்குறிப்பு

அ) பண்புத்தொகை                                                           

ஆ) வினைத்தொகை

இ) உம்மைத்தொகை                                                         

ஈ) உவமைத்தொகை

11. ‘மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு’ கவிஞர் குறிப்பிடும்  பழமைநலம் (பக் : எண் : 18)

க) பாண்டியரின் சங்கத்தில் இருந்தது                     

உ) பொதிகையில் தோன்றியது 

ங) வள்ளல்களை தந்தது 

அ) க மட்டும் சரி                           

ஆ) க , உ இரண்டும் சரி 

இ) ங மட்டும் சரி                            

ஈ) க ,ங இரண்டும் சரி

12. “Tips” -  என்பதன் கலைச்சொல்

அ) ஈகை                    ஆ) சிற்றுணவு 

இ) உதவி                   ஈ) சிற்றீகை

13.  கருத்து  1 :  இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய் 

                          பயனிலை என்று வருவதே  மரபு

   கருத்து  2 :   தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் 

                          பிறழ்ந்து வருகிறது  (பக் : எண் : 18)

அ) கருத்து 1  சரி                                    

ஆ) கருத்து 2 சரி 

இ) இரண்டு கருத்தும் சரி                      

ஈ) கருத்து 1  சரி 2  தவறு

14. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசுகின்ற இலக்கண நூல்(பக் : எண் : 18) 

அ) யாப்பருங்கலக்காரிகை                             

ஆ) தண்டியலங்காரம் 

இ) தொல்காப்பியம்                                             

ஈ) நன்னூல்




பகுதி - 2

 

 பிரிவு – 1


இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக 

              

எவையேனும் மூன்றனுக்கு விடைதருக                                               3 x 2 = 6

15. மறக்கக் கூடாதது, மறக்கக் கூடியது எவற்றை?

16. நகரம் பட்டை  தீட்டிய வெள்ளை வைரமாகிறது - விளக்கம்தருக.

17. நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?

18. அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்கள் யாவை ? 


பிரிவு – 2


எவையேனும் இரண்டனுக்கு விடைதருக                        2 x 2 = 4

19. புக்கில், தன்மனை – சிறுகுறிப்பு எழுதுக.

20. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக

21. ‘மணந்தகம்’ என்றால் என்ன ?


பிரிவு – 3


எவையேனும் ஏழனுக்கு விடைதருக                                             7 x 2  = 14

22. உவமைத்தொடர் களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக

அ) நகமும் சதையும் போல 

ஆ) தாமரை இலை நீர்போல

23.மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக

        அலை , அளை , அழை

24. வல்லின மெய்கள் இட்டும் நீக்கியும் எழுதுக

நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தை பொறுத்திருக்கிறது.

புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்த கவனம் அறிவை பெறுவதற்கும்

வளர்ப்பதற்குமான அடிப்படை தேவையாகும்.

25.ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக

அ) உயர்ந்தோர் ஆ) இருந்தாய் 

26.ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக

அ) அருங்கானம் ஆ) செல்லிடத்து

27.கலைச் சொற்களுக்கேற்ற தமிழ்ச்சொல் எழுதுக

அ) Checkout                                               ஆ) Green Belt Movement

28.கீழ்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர்களை அமைக்க

அ)  தானே                                             ஆ) முன்   <

29.பொருத்தமான வேற்றுமை உருபுகளை சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக

அ)  காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.

ஆ)  மாறன் பேச்சு திறன் யார் வெல்ல முடியும். 

30.காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தருக.




 பகுதி – 3

பிரிவு-1


ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக.

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக                                              2 x 4 = 8

31. ‘ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்’ - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

32.குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுக.

33. எல்லாவற்றையும் விட நன்றி உயர்ந்தது ? - குறள்வழி விளக்குக.

34. “செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்

                 செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்!”

        தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

பிரிவு-2


எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக                             2 x 4 = 8

35.சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் - விளக்குக.

36.பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் - விளக்கம் எழுதுக.

37.’கலை முழுமை’ - விளக்குக.

38.தாய்வழிக் குடும்பம் குறித்துச் சங்க இலக்கியத்தில் குறிப்பிடும் செய்திகள் யாவை ?

பிரிவு-3


எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக                 3 x 4 = 12

39.  பொருள் வேற்றுமை அணியைச்  சான்று தந்து விளக்குக.

                                    அல்லது

      “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

       பண்பும் பயனும் அது”    -  குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.

40.பா நயம் பாராட்டுக: மையக்கருத்தை எழுதி ஏதேனும் மூன்று நயங்களை எழுதுக.

          வெட்டி  யடிக்குது மின்னல்   -   கடல் 

                    வீரத் திரைகொண்டு விண்ணை  யிடிக்குது ; 

          கொட்டி  யிடிக்குது மேகம்     -  கூ 

                    கூவென்று விண்ணைக் குடையுது காற்று 

           சட்டச்சட சட்டச்சட டட்டா  - என்று 

                   தாளங்கள் கொட்டிக் கனைக்குது  வானம் 

          எட்டுத்திசையும் இடிய -  மழை 

                    எங்ஙனம் வந்ததடா தம்பி வீரா !

                                             - பாரதியார்




41.தமிழாக்கம் தருக.

          In terms of Human Development objectives, education is an end in itself, not just a means to an end. Education is a basic human right. It is also the key which opens many economic, social and political  doors for people. It increases access to income and employment opportunities. While economists generally analyze the importance of education largely as a means for better opportunities in life. Educating people is a worthy goal in itself, irrespective of the economic rates of return.


42. கீழ்க்காணும் பத்தியைப் படித்து நான்கு வினாக்களை உருவாக்குக. 

                   மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை. மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்ற தாயின் முதல் வேட்கை தன் குழந்தையுடன் பேசுதல். அவள் முதலில் அடையும் பெரிய மகிழ்ச்சி குழந்தையின் பேச்சைக் கேட்பதே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு தொடர்புடையது மொழி வளர்ச்சியே ஆகும்.  மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது. மனதின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் உள்ளனர்; மாணவராகவும் உள்ளனர்; மொழியை வளர்ப்பவர்களும்  மக்களே; மொழியால் வளர்பவரும் மக்களே.


43. கீழ்க்காணும் பகுதியைப் படித்து அறிவிப்புகளை காண செய்தியை உருவாக்குக. 

                                வேர்களை விழுதுகள் சந்திக்கும் விழா,  மே -5 ,2019 

                                                      திருச்சிராப்பள்ளி 

        வேலை காரணமாக வெளிநாடுகளில் பிரிந்து வாழும் உறவினர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. 

         திருச்சி உறையூர் அன்பு நகரில் வசிக்கும் தங்கவேல் - பொன்னம்மாள் இணையரின் மூன்று தலைமுறை வழித்தோன்றல்கள் சந்திக்கும் நிகழ்வு மே 5ஆம் தேதி இனிதே நடைபெற உள்ளது. 

        உறவினர் கூட்டத்தில் தங்கவேல் - பொன்னம்மாள் அவர்களின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேரன்கள்,கொள்ளுப்  பேத்திகள் சந்தித்துப் பெரியோர்களிடம் வாழ்த்துப் பெறுகிறார்கள். இந்நிகழ்ச்சியைத் தங்கவேல் அவர்களின் கொள்ளுப்பேத்தி செல்வி கண்மணி அவர்கள் ஒருங்கிணைக்கிறார்.


பகுதி –  4


பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் 

விடை தருக                                                                                                                  3 x 6 = 18

44.அ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து  எழுதுக.

                                       (அல்லது)

ஆ) சினத்தைக்  காத்தல் வாழ்வை மேம்படுத்தும் -  இக்கூற்றை முப்பால் வழி விரித்துரைக்க.

45.அ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறதுல -  எவ்வாறு? விளக்குக.

                                           (அல்லது)

ஆ) கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.




46.அ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.

                                         (அல்லது)

ஆ)’உரிமைத்தாகம்’ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்.... கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.

பகுதி- 5

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக                                                                   4 + 2 = 6

47. அ) ‘துன்பு உளது..... - எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல்

        ஆ) ‘சினம்’ -   என முடியும் திருக்குறளை எழுதுக.


குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேல்நிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4,  9843448095


12 ஆம் வகுப்பு

பொது மாதிரி திருப்புதல் தேர்வு - ஜனவரி 2022.

TAMIL QUESTION PAPER Pdf

download 👇👇👇👇👇 - model questin paper - 1








12th Tamil - Public Exam   2021 - 2022 


REVISION TEST - DECEMBER 2021

                                               Model Question Paper  


 அரசுப்பொதுத்தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினா விடைகள்

                                        திருப்புதல் தேர்வு - ஜனவரி  2021

( இயல் - 1, 2, 3 )

 மாதிரி வினாத்தாள்-1 


நேரம்: 3:மணி   வகுப்பு-1 2     மதிப்பெண்:90

                                                                           

பொதுத்தமிழ்


விடைகள்

பகுதி-1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக                                                      14 x 1 = 14


1. அ) பொருட் குறிப்பு

 2. இ) மழைத்துளிகள்

3. இ) 4 3 1 2  

4.  ஆ) திருமணமும், குடும்பமும் 

5. அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லா தெரியும்.

6. அ) செய்யாமல் செய்த உதவி 

7.  ஆ) இராமன், குகன் 

8. ஈ) இவை அனைத்தும் 

9. ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி         

10. அ) பண்புத்தொகை

11. ஈ) க ,ங இரண்டும் சரி

12.   ஈ) சிற்றீகை

13.  ஆ) கருத்து  1 தவறு 2 சரி 

14.    இ) தொல்காப்பியம்     


பகுதி - 2

 

 பிரிவு – 1


இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக                        

எவையேனும் மூன்றனுக்கு விடைதருக                                                     3 x 2 = 6

15. மறக்கக் கூடாதது:

      ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது.

  மறக்கக் கூடியது;

       ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும்.

16. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது:

  • மழைக்காலப் பகற்பொழுதில் சூரியனின் வெளிச்சம் இல்லாமல் நகரமானது மழைமேகத்தால் இருள் சூழ்ந்து காணப்படும்.

  • மழை பெய்து ஓய்ந்த பின்பு, மழைக்கான சுவடுகள் அழிந்த பின்பு சூரியன் திடீரென தன் முகத்தைக் காட்ட மழை மேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கின்றது. 

  • இன்னும் உறிஞ்சப்படாமல் இருக்கும் ஒரு சில மழைத் துளிகளின் மீது விழுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கின்றது.

17. நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து:

  • பொய்யான உலகப்பற்று அழிந்து போகக் கூடியதாகும். உலகத்தின் மீது பற்றுக் கொள்வது வீணாகும். என் மண்ணுலகப் பிறவி ஒழிந்தது. 

  • ஏனெனில் நிலையாமை என்பது உலக வாழ்வு நிலை இல்லாதது என்பதைக் குறிப்பதாகும். 

 18. அணியிலக்கணத்தை மட்டும் கூறும் இலக்கண நூல்கள் யாவை ? 

             1 . தண்டியலங்காரம்

              2. மாறனலங்காரம்

              3. குவலயானந்தம்




பிரிவு – 2


எவையேனும் இரண்டனுக்கு விடைதருக                        2 x 2 = 4

19.புக்கில்:

          புக்கில் என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிக்கும்.  

  தன்மனை:

            திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் 'தன்மனை' என அழைக்கப்பட்டது.

20. நடை அழகியல்

  • கவிதையின் இயங்காற்றல்தான் நடை எனப்படும்.  

  • தொல்காப்பியமும் இதனையே கூறுகின்றது. 

  • 'நடைபெற்றியலும்', 'நடை நவின்றொழுகும்' என்னும் சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டுள்ளது. 

  • ஒவ்வொரு பாவும் இவ்வாறே அமைய வேண்டும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

21. மணந்தகம்:

  • மணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்க நிலையை மணந்தகம் என்பர்.

  • முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தை இந்நிலை குறிக்கும் .


பிரிவு – 3


எவையேனும் ஏழனுக்கு விடைதருக                                             7 x 2  = 14

22. அ) நகமும் சதையும் போல - இணை பிரியாமை  

               நானும் என் நண்பனும் நகமும் சதையும் போல இருந்தோம்.

        ஆ) தாமரை இலை நீர் போல-  பட்டும்படாமலும் ஈடுபாடு இல்லாமல் இருத்தல்,

               பெற்றோர்களுக்கு நிதிச்சுமை அழுத்துவது தெரிந்தும் சில பிள்ளைகள் 

              தாமரை இலை நீர்போல கண்டுகொள்ளாமல் இருப்பர்.

23. அலை, அளை, அழை 

அலை  -  அலைதல்; கடலில், நீர் நிலைகளில் உண்டாகுதல் 

அளை  -  புற்று, தயிர், பிசை  

அழை  -   கூப்பிடு 

பலமான இடிமழையால் அளை  சிதைவுற்று உள்ளிருந்த பாம்புகள் செல்லுமிடம் அறியாது அலைந்து திரிவதைப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையைத் தாய் பதற்றத்துடன் அழைத்தாள்.

24. நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தைப் பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்த_  கவனம் அறிவைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்கான அடிப்படைத் தேவையாகும்.

25. அ) உயர்ந்தோர் - உயர் + த் ( ந் ) + த் + ஓர் 

                        உயர்    -  பகுதி 

                               த்    -  சந்தி, ‘த்’ , ‘ந்’ ஆனது விகாரம்   

                               த்    -  இறந்தகால இடைநிலை  

                            ஓர்    -  பலர்பால் வினைமுற்று விகுதி

       ஆ) இருந்தாய்  - இரு + த் ( ந் )  + த் + ஆய் 

                         இரு    -    பகுதி

                              த்    -  சந்தி, ‘த்’ , ‘ந்’ ஆனது விகாரம்   

                              த்    -  இறந்தகால இடைநிலை

                         ஆய்   -  முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

26. அ) அருங்கானம்  = அருமை  + கானம்

 விதி 1) : ஈறுபோதல் - அரு + கானம் 

விதி 2) : இனமிகல் - அருங்கானம்


ஆ) செல்லிடத்து  = செல் + இடத்து 

விதி 1) : தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் >  செல் + ல் + இடத்து

விதி 2) : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே > செல்லிடத்து





27. அ) Checkout   - வெளியேறுதல்வெளியேறுதல்

      ஆ) Green Belt Movement - பசுமை வளாக இயக்கம்

28. அ)  தானே   <

1. கண்ணன்தானே படித்தான்.

2. கண்ணன் தானே படித்தான்.

ஆ) முன்   <

1. அவன் முன்வந்து கூறினான்.

2. அவன்முன் வந்து கூறினான்.

29.  அ) காலையில் எழுந்து படித்தால் நமக்கு நன்மை ஏற்படும்.

        ஆ) மாறனை பேச்சுத் திறனில் யார் வெல்ல முடியும்.

30. காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று:

சான்று:

   1. அவள், அக்கா வீட்டிற்குச் சென்றாள்

   2. அவள் அக்கா வீட்டிற்குச் சென்றாள்

  இச்சான்றின் முதல் தொடரில் அந்தப்பெண் தன் அக்காள் வீட்டிற்குச் சென்றாள் என்ற பொருளை உணர்த்துகிறது அத்தொடரில் உள்ள காற்புள்ளி.

  இச்சான்றின் இரண்டாவது தொடரில் உள்ள காற்புள்ளியால் அந்தப் பெண்ணின் அக்காள் அவளது (தனது) வீட்டிற்குச் சென்றாள் என்ற பொருள் வேறுபாட்டைத் தருவதை அறியலாம்.







 பகுதி – 3

பிரிவு-1

ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக.

எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக                                              2 x 4 = 8

31. ‘ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்’ - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம்:

இப்பாடல் வரி தண்டியலங்காரம் என்னும் அணி இலக்கண நூலின் பொருளணியியலில் இடம் பெற்றுள்ள உரை மேற்கோள் பாடலாகும். இதன் ஆசிரியர் தண்டி ஆவார்.

பொருள்:

ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட இவ்வுலகத்தின் இருளை அகற்றுவன இரண்டு. 

ஒன்று சூரியன், மற்றொன்று தனக்கு நிகர் இல்லாத தமிழ்மொழி என்பதே இத்தொடரின் பொருளாகும். 

விளக்கம்:

எப்போதும் ஒலியெழுப்பிக் கொண்டிருக்கும் கடல் சூழ்ந்த இந்த உலகின் இருளை அகற்றும் கதிரவன் மக்களால் போற்றப்பட்டு, உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, சான்றோரால் தொழப்படுகின்ற ஒன்றாகும். தமிழோ, மலையில் தோன்றினாலும் மக்களின் அறியாமை இருளை அகற்றும் சிறப்புடையது.


32..குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வுகள்;.

  • கங்கையைக் கடந்து செல்ல படகு கொண்டு வந்த குகனது அளவற்ற அன்பை உணர்ந்த இராமன் அவனைத் தன் இனிய நண்பனாக ஏற்றுக் கொண்டான். 

  • குகனிடம் நீ கூறும் வேலைகளைச் செய்யும் உன் பணியாளனாய் இருக்கின்றேன் என்று கூறும் குகனிடம், 

  • உன்னையும் என் சகோதரனாக ஏற்றுக் கொண்டேன். “இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்” என்றான்.

  • இராமன் மீது கொண்ட அளவற்ற அன்பால் இலங்கை சென்று இராவணனிடம் போர் புரிந்து திரும்பிய சுக்ரீவனைப் பார்த்து இராமன், “இனி நீ வேறு, நான் வேறு அல்ல” என்று கூறினான்.

  •  ‘நீ என் உயிர் நண்பன்’ என்று கூறி நான்கு பேராக இருந்த நாங்கள் குகனுடன் சேர்ந்து ஐந்து பேரானோம். உன்னையும் என் சகோதரனாக ஏற்றுக் கொண்டேன். ‘இனி ஆறுபேர் ஆனோம்’ என்றான். 

  • சீதையைக் கவர்ந்து வந்த செயல் தவறு என்று கூறியதற்காக இராவணன் வீடணனைக் கடிந்து கொண்டான். 

  • அதனால், வீடணன் இலங்கையை விட்டு வெளியேறி இராமனிடம் அடைக்கலம் வேண்டினான். 

  • அடைக்கலம் கொடுத்த இராமன் அவனுக்கு இலங்கை அரசை ஆளும் உரிமையைக் கொடுத்து, அவனையும் தன் சகோதரனாக ஏற்றுக்கொண்டு, ‘நின்னொடும் ஏழுவர் ஆனோம்’ என்றான். 

33.  எல்லாவற்றையும் விட நன்றி உயர்ந்தது :

  • நன்றியானது, இந்நில உலகம், வானம், கடல், பனை இவற்றை விட உயர்ந்தது. 

  • ஒருவன் பிறருக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமலிருக்கும் நிலையிலும் அவர் நமக்குச் சரியான நேரத்தில் ஏதேனும் உதவி செய்தால், அந்த உதவிக்குக் கைம்மாறாக இந்த நிலவுலகத்தையும் வானுலகத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் ஈடாகாது. 

  • ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும், அவ்வுதவி இந்த உலகைவிடப் பெரியதாகும்.

  • ஒருவர் எந்தப் பயனையும் நம்மிடம் இருந்து எதிர்பார்க்காமல் நமக்குச் செய்த உதவியின் அளவை ஆராய்ந்து பார்த்தால், அதன் நன்மை கடலைவிடப் பெரியதாகும். 

  • ஒருவர் தினையளவு உதவியைச் செய்தாலும், அந்த உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவு உதவியையும் பனையளவாகக் கொண்டு போற்றுவர் எனறு பொய்யாமொழி கூறுகின்றது.


34. தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயம்:

  • மாலை நேரச் சூரியன், மலை முகட்டின் மீது தலையைச் சாய்க்கின்றான்.

  • சூரியனின் செம்மஞ்சள் நிறம், வானம் முழுவதும் பு+க்காடு போலப் பரவிப் படர்ந்துள்ளது.

  • இயற்கை ஓவியன் புனைந்த அழகிய செந்நிறத்துப் பு+க்காடாக வானம் தோன்றுவதற்கு மாலை நேரத்துச் சூரியன் காரணமாக அமைந்துள்ளான் என்பதனை இத்தொடர் அழகாக வெளிப்படுத்துகிறது.

  • அந்தி வானத்தின் சிவந்த நிறமும், அன்றாடம் உழைத்து வாழும் உழைப்பாளிகளின் கை வண்ணமும் ஒன்றே என்பதை கவிஞர் சிற்பியின் இவ்வரிகள் நயமாகக் காட்சிப்படுத்துகின்றன. 

 


பிரிவு-2


எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக                             2 x 4 = 8

35. ஒலிக்கோலம்:

  • இசையோடும் இசைக்கருவியோடும் தான் மொழி சார்ந்த கவிதை பிறக்கும்

  • ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்வதை ஒலிக்கோலம் (ஒலிப்பின்னல்) என்பர்..

  • வண்மை உணர்ச்சியை வெளிப்படுத்த சங்கப்பாடலில் வல்லின மெய்யொலிகள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன.

               சான்று: கடந்தடு தானை…… (புறம்:110)

  • இனிய இசைக்காக நெடில் ஒலிகள் அதிகமாக இடம்பெறும்

              சான்று: படாஅம் ஈத்த…. (புறம்:145)

  • சில ஒலிகளும் சில சொற்களும் திரும்ப திரும்பவரும் தன்மையும் உண்டு.

              சான்று: புணரின் புணராது…..(நற்:16)

  • சொல்விளையாட்டுகளும் சங்கப்பாடல்களில் இடம்பெறுவது உண்டு.

சான்று: நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை….(புறம்:290)

இவையே சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் கொண்டிருந்த குறிப்பிடத்தக்க பண்புகளாகும்.   

36. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் - விளக்கம் 

விரிந்த குடும்பம்:

  • தனிக்குடும்ப அமைப்பில் பெற்றோர் ஒருவரின் தந்தையும் உடன் வாழ்வது விரிந்த குடும்ப அமைப்பு முறையாகும். 

கூட்டுக்குடும்பம்:

  • இந்த விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே கூட்டுக் குடும்பமாக இன்றைய சமூகத்தில் மாற்றம் பெற்றுள்ளது. 

  • கூட்டுக் குடும்பம் என்பது பெற்றோர், அவர்களது மணமாகாத பிள்ளைகள், மணம் முடித்த பிள்ளைகள் அவர்களது துணைவர், அவர்களது பிள்ளைகள் இணைந்து வாழ்வதாகும். 

  • சில நேரங்களில் கூட்டுக்குடும்பங்களில் பெற்றோரின் உடன்பிறந்தவர்கள், பெற்றோர்களின் தாய், தந்தை, இரத்த உறவால் பிணைக்கப்பட்ட நேர்வழி, கிளைவழி உறவினர்கள் என அனைவரும் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்வது கூட்டுக் குடும்பமாகும்.

37. கலை முழுமை :

  • இலக்கியத்தின் நோக்கம்  என்பது அறம், பொருள், இன்பம் பற்றியோ அல்லது   அறவியல் சார்ந்த கருத்து நிலைகளைக்க்   கூறுவதாகவோ அமைய வேண்டும். 

  • அறக்ருத்துகளோ அல்லது  ஓர் உயர்ந்த குறிக்கோளையோ இலக்கியம் கொண்டிருக்க வேண்டும். இவை அனைத்தும் கலை  உருவாக்கத்தின் போதே சரிவர இணைந்திருக்க வேண்டும். 

  • இத்தகைய ஒரு முழுமையைத்தான்  கலை முழுமை என்று அழைக்கின்றார்கள்..

38.தாய்வழிக் குடும்பம் குறித்துச் சங்க இலக்கியத்தில் குறிப்பிடும் செய்திகள் :

  • சங்ககாலத்தில் கண  சமூகத்திற்கும் தாயே தலைமை ஏற்றிருந்தார்.. 

  • பதிற்றுப்பத்து கூறும் சேர நாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச்ச் சிறந்த சான்றாகும்.. 

  • மேலும்,  ‘செம்முது பெண்டின் காதலாஞ்சிறா அன்” ( புறம் : 276 )  “முளரிமருங்கின் முதியோள் சிறுவன்” ( புறம் : 278 )  என்னும் பாடல் வரிகள் மூலம் ‘இவளது மகன்’ என்றே குழந்தைகள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.. 

  • இதன் மூலம் சங்க காலத்தில் காணப்பட்ட தாய்வழிச் சமூகத்தின் அறிந்துகொள்ளமுடியும்.

  • சங்ககாலத்தில் திருமணத்திற்குப்ப் பின் தன் இல்லத்தில் தொடர்ந்து வாழும் ‘தாயமுறை’ வழக்கத்தில் இருந்துள்ளது.  

  • திருமணத்திற்குப்ப் பின் மனைவியின் இல்லத்திற்குச் சென்று கணவன் வாழ்வது நடைமுறையாக இருந்துள்ளது. 

  • பெண் குழந்தையின் பேறு  முதன்மையாக விரும்பப்பட்டது.  

  • தாய்மொழி முறையில் குடும்பத்தின் சொத்தும்  வளங்களும்  பெண்களுக்குச்  சென்று சேர்ந்தன.

  •  தாய்வழி குடும்பங்களில் பெண்களை குல தொடர்ச்சிக்கு உரியவராக இருந்தனர்.


 பிரிவு-3


எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக                 3 x 4 = 12

39.  பொருள் வேற்றுமை அணி

அணி இலக்கணம்: 

       இது வேற்றுமை அணியின் ஒரு பிரிவாகும். செய்யுளில் கவிஞர் இருவேறு பொருட்களுக்கான ஒற்றுமையை முதலில் கூறி பின் ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்தி காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும். 

சான்று: 

        ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி 

        ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் -  ஆங்கவற்றுள் 

        மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது 

        தன்னேர் இல்லாத தமிழ் 

விளக்கம்: 

     எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றும் கதிரவன் உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றும். 

    குளிர்ச்சி பொருந்திய பொதிய மலையில் தோன்றிய தமிழ்மொழி மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றும். தமிழ் மொழிக்கு நிகராக வேறு எந்த மொழியும் இல்லை. 

அணிப்பொருத்தம்: 

      கதிரவனும் தமிழ் மொழியும் மலையில் தோன்றுகின்றன என ஒப்புமையைக் கூறி, கதிரவன் இருளை அகற்றும்; தமிழ்மொழி அக இருளை அகற்றும், அதே நேரத்தில் அதற்கு நிகராக வேறு எந்த மொழியும் இவ்வுலகில் இல்லை என்று வேறுபடுத்திக் காட்டியதால் இப்பாடல் பொருள் வேற்றுமை அணி ஆகும்.


                                             அல்லது

 “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

   பண்பும் பயனும் அது”    -  குறட்பாவில் பயின்று வரும் அணி

இக்குறட்பாவில்பயின்றுவரும் அணி நிரல்நிறை அணி. 

அணி இலக்கணம்: 

ஒரு செய்யுளில் முதலில் ஒரு சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே பொருள்கொள்ளும் முறை நிரல் நிறை ஆகும். அதாவது சிலசொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து அதனோடு

தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறை மாறாமல் சொல்வது நிரல் நிறை அணி ஆகும்.

சான்று :  

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

  பண்பும் பயனும் அது” 

விளக்கம்:  

     இல்வாழ்க்கையில் நாம் அன்பும் அறனும் கொண்டு ஒழுகினால், அதுவே நமக்கு வாழ்க்கையின் பண்பினையும் பயனையும் முழுமையாகத் தரும்.

அணிப்பொருத்தம்:  

      இக்குறட்பாவில் அன்பு, அரண் என்ற சொற்களை முதலில் ஒரு வரிசையில் நிறுத்திய திருவள்ளுவர் அவற்றோடு தொடர்புடைய பண்பு பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்துப் பொருள் கொள்ளுமாறு அமைத்துள்ளார். எனவே, இந்தத் திருக்குறள் நிரல் நிறை அணி ஆகும்.





40.பா நயம் பாராட்டுக

முன்னுரை;

           இப்பாடலைப் பாடியவர் தேசியக்கவி என்று அழைக்கப்பட்ட மகாகவி பாரதியார் ஆவார்.இளமையிலே கவி பாடியதால் பாரதி என்றும்  அழைக்கப்பட்டவர். சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற பாடல் வரிமூலம் எல்லோராலும் அறியப்படும் மகாகவி பாரதியார் அவர்கள் எழுதிய இப்பாடலில் காணப்படும் நயங்களைக் காண்போம்.

யைக்கருத்து :

        பெருங்காற்று, பலத்த இடியோசை, இசைத் தாளத்திற்கு ஏற்ப மண்ணை வந்து அடைகின்ற மழையினைச் சிறப்பித்துக் கூறுவதே இப்பாடலின் கருவாகும்.

.சொல்நயம் :

          பாரதியார் இப்பாடலில் பயன்படுத்தியிருக்கும். சொற்களின் ஒலியும் பொருளும் ஒரு பெரும்புயலையே நம் கண்முன் காட்டுவனவாக உள்ளன. புதிய ஒலியின்பத்தை உடைய சொற்களைப் பாரதியார் இந்தப் பாடலில் பயன்படுத்தியுள்ளார்,

        சான்று:

               கூகூ வென்று;  சட்டச்சட  சட்டச்சட ட்டா

பொருள்நயம் :

           மழை பெய்வதற்கு முன்னால் வானில் நிகழும் நிகழ்வுகளை எல்லாம் நம் மணக்கண்முன் கொண்டுவந்து காட்சிப்படுத்துகிறார் பாரதியார். மின்னல், கடலின் ஆர்ப்பரிப்பு, விண்ணைக் குடையும் காற்று, மழை விழும் ஓசை என தான் கூற விரும்பிய மழையின் சிறப்பை ஏற்ற சொற்களைப் பயன்படுத்தி தான் கூறவந்த கருத்தைச் சிறப்பாக இப்பாடலில் வெளிப் படுத்தியுள்ளார்.

தொடைநயம்:

         பாடலில், மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை ஆகியவற்றைக் கொண்டு தொடுப்பது தொடையாகும்.

மோனைநயம்:

         பாடலில் சீர்களிலோ, அடிகளிலோ முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனையாகும்.

சீர்மோனை:

           இப்பாடலில் சீர்மோனை 

                வெட்டியடிக்குது - வீரத் - விண்ணை 

                கொட்டி - கூவென்று  - குடையுது - காற்று

                ட்டச்சட- ட்டச்சட 

                எட்டுத்திசையும் -ங்ஙனம்

எதுகைநயம் :

             பாடலின் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாவது எழுத்து ஒன்றி வருவது எதுகை  எனப்படும்.  இப்பாடலில் சீர்எதுகை மற்றும் அடிஎதுகை பயின்றுவந்துள்ளது.

சீர்எதுகை:

          சட்டச்சுட - சட்டச்சுட

அடிஎதுகை:


         வெட்யடிக்குது 

        கொட்டி

        சட்டச்சட

        எட் த்திசையும் 

சந்தநயம் :

        இப்பாடலை ஏற்ற இசைக்கருவியுடன் இசைத்துப் பாடினால் பாடுவோர்க்கும், கேட்போருக்கும் மிகுந்த இன்பம் தரும் விதத்தில் தாள நயத்துடன் பாரதியார் இப்பாடலைப் பாடியுள்ளார்.  இப்பாடல் சிந்துப்பா வகையைச் சார்ந்ததாகும்.

சுவைநயம்:

       இப்பாடலில் இயற்கையைக் குறைவில்லாமல் காத்து வரும் மழையானது நிலத்தில் விழுவதற்கு முன்னால் வானில் தோன்றும் நிகழ்வுகளைப் பெருமிதத்துடன்  பாரதியார் கூறியுள்ளதால் இப்பாடலில் பெருமிதச் சுவை பயின்றுவந்துள்ளது. 

முடிவுரை:

        ‘காலம் கவிஞனைக் கொன்றது; ஆனால் அவன் கவிதை காலத்தை வென்றது,’ 

என்ற கூற்றிற்கு எற்ப  கவிஞர் பாரதியார்  இக்கவிதையில்  கவிதைக்குரிய நயங்களை எல்லாம் அமைத்து கவிநயங்களால் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்துள்ளார். 


மாணாக்கரே ! 

கேள்வியைக் கவனித்து எத்தனை  நயங்கள் கேட்கப்பட்டிருக்கின்றதோ அத்தனை நயங்கள் மட்டும்  எழுதினால் போதுமானதாகும்.


41.தமிழாக்கம் தருக.

       கல்வி என்பது மனித வளர்ச்சியின்  அடிப்படையில் ஒன்று.. அதுவே இறுதியானது.. ஆயினும் அது முடிவானது அன்று.. கல்வி என்பது மனித அடிப்படை உரிமை.. இது மக்களின் பொருளாதாரம் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த துறைகளினுளினுடைய கதவுகளைத்த் திறக்க உதவும் திறவுகோல்.. இது வேலைவாய்ப்புகளையும், வருமானத்தையும் உயர்த்துகிறது.. மனிதனுடைய வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளைப்ப் பற்றி பொருளாதார வல்லுநர்கநர்கள் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.. மக்களுக்குக்க் கல்வியறிவு வழங்குவது சிறந்த குறிக்கோளாகும்.. அது எந்தவிதமான பொருள் மதிப்பையும் திருப்பி அளிக்காது.



42. பத்தியைப் படித்து நான்கு வினாக்களை உருவாக்குக. 

1.மக்கள் படைத்துக் காத்து வரும் அரிய கலை எது? அஃது ஆற்றும் செயல் யாது?

2. தாயின் முதல் விருப்பம் என்ன?

3. மொழி வளர்ச்சி எதனோடு தொடர்புடையது?

4. மொழியை வளரர்ப்பவரும்,  வளர்பவரும்  யார்?


43. அறிவிப்புப் பலகைக்கான  செய்தி:

 வேர்களை விழுதுகள் சந்திக்கும் விழா,  மே -5 ,2019 

      திருச்சிராப்பள்ளி

 தங்கவேல் -  பொன்னம்மாள் குடும்பத்தின் வழித்தோன்றல்கள்

25  ஆண்டுகள் கழித்து, சந்திக்கும் விழுதுகள் இணையும் விழா

 மூன்று தலைமுறையினரின் உறவாடும் இனிய விழா!

 நிகழ்விடம்  :          தங்கவேல் - பொன்னம்மாள் இல்லம்

           அன்பு நகர், உறையூர்,

     திருச்சிராப்பள்ளி..

          நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு  :         செல்வி. கண்மணி கொள்ளுப் பேத்தி





பகுதி –  4



பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் 

விடை தருக                                                                                                                  3 x 6 = 18

44. அ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவன:

எனது அருமைச் செந்தமிழே!

  • மாலை நேரத்துச் சிவந்த நிறமுள்ள சூரியன், மலை முகட்டில் தனது தலையைச் சாய்க்கின்றான். அப்போது அவனுடைய செம்மஞ்சள் நிற ஒளிபட்டு வானம் பூக்காடு போலக் காட்சியளிக்கிறது. அதுபோல அன்றாடம் அயராது உழைக்கும் உழைப்பாளர்களின் கரங்கள் சிவந்துள்ளன.

  • அத்தகைய தொழிலாளர்களின் பருத்த தோள்கள் மீது வியர்வைத் துளிகள் முத்துமுத்தாய் அரும்பியுள்ளன. இவற்றையெல்லாம் வியந்து பாடுவதற்கு, உன்னைவிடப் பொருத்தமான துணை வேறில்லை. 

முத்தமிழே!

  • எமது உள்ளத்தில் மூண்டு எழும் கவிதை வெறிக்கு நீயே உணவாக இருக்கிறாய்! முன்னொரு காலத்தில் பாண்டிய மன்னர்கள் அமைத்த தமிழ்ச்சங்கத்தில் நீயே அரசாட்சி புரிந்தாய். 

  • பாரி முதலான கடையெழு வள்ளல்களை எமக்குத் தந்தாய். எமது உடல் சிலிர்ப்படையுமாறு மீண்டும் அத்தகைய பழமைச் சிறப்பைப் புதுப்பிப்பதற்காகத் தமிழ்க் குயிலாக நீ கூவ வேண்டும். 

  • தென்றல் தவழும் பொதிகை மலையில் தோன்றி வளர்ந்த தமிழே! தடைகள் இருந்தால் தாண்டி, கூண்டை உடைத்து வெளிப்படும் சிங்கம்போல நீ சீறிவர வேண்டும். 

இவ்வாறாகத் தமிழின் சீரிளமைத்திறத்தினை வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகிறார்.


  அல்லது

ஆ) சினத்தைக்  காத்தல் வாழ்வை மேம்படுத்தும் 

  • சினமானது மனிதனின் அருள் உள்ளத்தை அழிப்பதுடன் அவனை மெய்யுணர்வை அடையாது செய்துவிடும். ஒருவன் சினத்தைக் காத்தான் என்றால் அவன் வாழ்வு மேன்மையடையும்.

மெலியாரிடம் சினவாமை:

  • எவர் ஒருவர், தன் சினம் செல்லுபடியாகும் இடமான தன்னை விட வலிமை குறைந்தவர்களிடம் சினம் கொள்ளாமல் தன்னுடைய சினத்தைக் காத்துக் கொள்கின்றாரோ, அவரே உண்மையில் சினத்தைக் காப்பவர் ஆவார். 

சினத்தை மறப்பதே நன்று:

  • ஒருவனுக்குத் தீமையான விளைவுகள் அனைத்தும் சினத்தாலேயே ஏற்படும் என்பதால், ஒருவரிடமும் சினம் கொள்ளாமல் அதனை மறந்துவிட வேண்டும்.

சினம் தரும் பகை:

  • சினம் என்னும் பகை நம்மிடமிருக்கும் நம் முகத்திற்கு அழகு தருகின்ற சிரிப்பையும், உள்ளத்தின் அருளுக்கு அழகு தருகின்ற மகிழ்ச்சியையும் நம்மிடமிருந்து அழித்துவிடும்.

சினத்தைக் காக்க வேண்டும்:

  • ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள விரும்பினால் அவன், சினத்தைக் காக்க வேண்டும். ஏனெனில் சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்துவிடும்.

சுற்றம் பேணிட சினத்தை மற:

  • சினமானது தன்னை மட்டுமல்ல தன்னைச் சேர்ந்தவரையும் அழிக்கும் நெருப்பாகும். அதுமட்டுமல்லாமல் தனக்குப் பாதுகாப்பாக இருக்கின்ற தெப்பமான சுற்றத்தாரையும் சுட்டழித்துவிடும். எனவே சுற்றம் பேண சினத்தைக் கை விடவேண்டும்.

         இவ்வாறு சினத்தைக் காத்து வாழ்ந்தால் நம்மைவிடவும் மெலியாரிடம் பகை வராது, யாரிடமும் சினம் கொள்ளமாட்டோம், நம்முடைய முகமலர்ச்சியும், அக மகிழ்ச்சியும் இன்னும் அதிகமாகும், நம்மையே காத்துக் கொள்ளும் ஆயுதமாகும். நம் சுற்றத்தையும் பேணிட வழிவகுக்கும். இதனால் நம் வாழ்வு மேன்மைப்படுத்தப்படும் என்று முப்பால் கூறுகின்றது.


45.அ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது : 

குடும்பம்:

  • தலைவன் தலைவி இணைந்து குழந்தைகளுடனோ, குழந்தைகள் இல்லாமலோ இணைந்து வாழ்ந்து வரும் அமைப்பே குடும்பமாகும்.

  • மனித சமூக அமைப்பை ஒப்பிடும்போது குடும்பம் என்பது மிகவும் சிறிய அமைப்பாகும். 

  • இந்தச் சிறிய அமைப்பில் இருந்துதான் மனித சமூகம் என்ற பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறது. 

  • இவ்வமைப்பிற்கு அதன் இயங்குநிலைக் கருத்தாக்கத்தின் மூலமே 'குடும்பம்' என்ற பெயர் வந்தது. 

மனிதன் ஒரு சமூக உயிரி:

  • மனிதன் ஓர் உயிரியல் விலங்கு மட்டுமல்ல அவன் ஒரு சமுதாய விலங்காவான்.

  • மனிதர்கள் தங்கள் வாழ்வில் பெரும்பகுதியைக் குடும்பத்தில்தான் செலவிடுகின்றனர்.

  • குடும்பமே மக்களின் உயிரியல், உளவியல், வாழ்வியல் சார்ந்த அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்கிறது. 

  • குடும்பத்தில் வாழ்வோர் உயிரியல் பிணைப்புகளை மட்டும் கொண்டவர்களாக இல்லாமல் சமுதாயப் பிணைப்புகளையும் கொண்டவர்களாக இருப்பதே மனித சமூகக் கட்டமைப்பிற்கான அடித்தளமாக இருக்கிறது. 

குடும்பம் சமூகத்திற்கான களம்:

  • குடும்பம் தனிமனிதருக்காகவும் சமுதாயத்திற்காகவும் பெரும் பங்காற்றுகிறது. 

  • மனித சமூகத்தின் அடிப்படைகளான அன்பு செலுத்துதல், பொருளாதாரப் பகிர்வு, பொழுதுபோக்கு, பாதுகாப்பு, சமயச் செயல்கள், கல்வி பெறுதல் ஆகியவை குடும்பத்திலே கற்பிக்கப்படுகின்றன. 

  • சமூகத்தின் பண்பாட்டைக் குழந்தைப்பருவத்திலே குடும்பம் கற்றுக் கொடுக்கின்றது. 

  • சமுதாயத்தின் நெறிமுறைகள் அன்றாட வாழ்வில் பின்பற்றபட வேண்டியப பழக்கவழகங்கள் பொருளாதாரச் செயல்களாகச் செய்யும் முறைகள் சமுதாய சமய வாழ்வில் ஆற்றவேண்டிய கடமைகள் போன்ற எண்ணற்ற வகைகளில் குடும்பம் குழந்தைகளுக்குப் பயிற்சியளிப்பதால் மனித சமூகம் சிறப்பாகக் கட்டமைக்கப்படுகின்றது. 

  • பண்பாட்டு மயமாக்கல் நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் ஒரு மாதிரிக் குழுவாகக் செயல்படுகின்றனர். 

  • குடும்பம் என்பது தனது உறுப்பினர்கள் அனைவருக்கும் பயிற்சிகளை வழங்கி அமைதியும் ஒழுங்கும கொண்ட ஒரு சிறந்த சமூதாயம் அமைய அடிப்படையாக விளங்குகின்றது. 

  • குடும்பம் என்னும் சிறிய அமைப்பில் இருந்துதான் 'மனித சமூகம்' என்னும் பரந்த அமைப்பு உருவாக்கப்படுகிறது. 

  • குடும்பம் என்னும் சிறிய அமைப்பு ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்டாமல் 'மனித சமூகம்' என்ற பரந்த அமைப்பு சிறப்பாகக் கட்டமைக்கப்படும். 


அல்லது

ஆ) கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள் :

கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளில்

ஒலிக்கோலங்கள்

சொற்புலம் 

தொடரியல் போக்குகள்

   ஆகியவை மிக முக்கியமானவையாகும். 

ஓலிக்கோலங்கள்:

  • இசையோடும் இசைக்கருவியோடும்தான் மொழி சார்ந்த கவிதை பிறக்கும்.

  • ஓசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் கொள்வதை ஒலிக்கோலம் (ஒலிப் பின்னல்) என்பர்.

  • வன்மை உணர்ச்சியை வெளிப்படுத்த பாடல்களில் வல்லின மெய்யொலிகள் மிகுதியாக இடம்பெறும். 

  • இனிய இசைக்காக நெடில் ஒலிகள் அதிகமாக இடம்பெறும்.

            சில ஒலிகளும் சில சொற்களும் திரும்ப திரும்ப வரும் 

            தன்மையும்  பாடல்களில் இடம்பெறும். 

சொற்புலம்:

  • உணர்வும், பொருளும், கலையும், பண்பாடும், வரலாறும், அரசியலும் சொற்களில் பொதிந்து கிடக்கின்றன. 

  • ஒரு பொருள் குறித்து வரும் பல சொற்களும், பல பொருள் குறித்து வரும் ஒரு சொல்லும் சொல் வளத்திற்குச் சான்று. 

  • பல்வேறு துறைகள், சூழல்கள், புனைவுகளுக்கும் உரிய வகையில் உணர்வும் தெளிவும் கொண்டதாகச் செழிப்பானதொரு தளத்தைச் சொல் கொண்டிருக்கிறது. 

  • தனிச்சொல்லாகவும், தொகை மொழியாகவும் சொற்கள் இயங்குகின்றன. 

தொடரியல் போக்குகள்:

  • பாடலின் தளத்தை முழுமையடைய செய்வது தொடரியல் போக்காகும்.

  • சொல்பவனுடைய மொழித்திறனை, கேட்பவன் அல்லது வாசிப்பவன் முழுமையாகப் பெற வேண்டும்.

  • சொல்லப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள்

                         i)  நேர் நடந்தும்

                          ii)  ஏறியிறங்கியும்

                          III) திரும்பியும் சுழன்றும் - இயங்கும்

    இவையே கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள் ஆகும்.





46.அ) பாரதியின் கடிதம் வாயிலாக நான்நான் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று :

மொழிப்பற்று:

  • யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதான மொழி எதுவுமில்லை என்று கூறிய பாரதி, சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்திலும் அதனை உறுதிப்படுத்துகின்றார். 

  • நெல்லையப்பரிடம் அவர் கூறும்போது, 'நீ பிறமொழிகளை அறிந்திருந்தாலும் தமிழை வளர்ப்பதைக் கடமையாகக் கொள்ளவேண்டும்' என்று கூறுகின்றார். 

  • புதிய புதிய செய்திகளும் புதிய புதிய உண்மைகளும், புதிய புதிய இன்பமும் தமிழ்மொழியில் ஏற்றம் பெற வேண்டும். 

  • தமிழ்நாட்டில் வீதிகள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் பெருக வேண்டும். அந்தப் பள்ளிகளில் எல்லாம் புதிய புதிய கலைகள் பயிற்சி அளிக்கப் பெற்று வளர வேண்டும். 

  • தாய் மொழியிலே கற்பதால் தமிழ் உணர்வு அதிகமாகும், தாய்நாட்டின் மீது பற்று ஏற்படும். 

  • பிறநாட்டு மொழிகள் எல்லாம் அடைந்துள்ள வளர்ச்சியைப் பார்த்த பின்பாவது நாம் நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் மீது பற்றுக் கொள்ள முயலவேண்டும். 

  • புதிய புதிய சிந்தனைகள் தமிழ்மொழியில் தோன்றல் வேண்டும் என்கிறார்.

சமூகப்பற்று

  • சமூகத்தின் அவலமாக இருக்கின்ற ஆண் பெண் வேறுபாடு முற்றிலுமாக அழிய வேண்டும். 

  • ஆண் உயர்ந்தவன் பெண் அடிமை என்ற நிலை சமூக அவலமாகும்.

  • "ஆணும் பெண்ணும் ஒருயிரின் இரண்டு தலைகள், அவற்றில் ஒன்றிலொன்று தாழ்வில்லை", என்கிறார். 

  • பெண்ணைத் தாழ்த்தினால் சமூகமே சாபக்கேட்டிற்குள்ளாகும் என்பதை உணர்த்த பெண்ணைத் தாழ்த்தினவன், தன் கண்ணைக் குத்தியவனுக்குச் சமம் என்று ஆவேசத்துடன் கூறுகின்றார். 

  • பெண்ணை வீட்டுக்குள்ளே அடைத்தவன் தன் கண்ணை இழந்த குருடன் போலப் பரிதவிப்பான் என்றும் கூறி ஆணும் பெண்ணும் சமம் என்ற சமூக நீதியை வலியுறுத்துகின்றார். 

  • சமூகம் வளர்ச்சி அடையத் தொழில் பெருக வேண்டும், வியாபாரம் சிறக்க வேண்டும் தொழிற்சாலைகள் வளர வேண்டும் என்கிறார்.

  • சமூக மாற்றம் காண சங்கீதம், சிற்பம், இயந்திரம், பு+மி, வானம், இயற்கை சார்ந்த நூல்கள் ஆயிரம் ஆயிரமாகத் தாய்மொழியில் உருவாகிட வேண்டும். 

  • நம் தமிழ்ச்சமூகம் மாற்றம் பெற அனைவரும் எண்ணிட வேண்டும்

  • அதற்குரிய சக்தியை அனைவரும் பெற்றிடவும் வேண்டுமென்று பாரதியார் சு.நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம் மூலம் தன் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துகின்றார்.

                                          அல்லது

ஆ)’உரிமைத்தாகம்’ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்.... 

கதைச்சுருக்கம்:

     பூமணி அவர்கள் இயற்றிய 'உரிமைத்தாகம்' என்னும் கதையில் வெள்ளைச்சாமி தன் அண்ணனுக்குத் தெரியாமல் தன் வேளாண் நிலத்தை, பங்காரு சாமியிடம் இருநூறு ரூபாய்க்கு அடகு வைக்கிறான். அதை அவனது அண்ணன் முத்தையனிடம் அவனது மனைவி மூக்கம்மா கூறுகிறாள். தம்பியிடம் மனவருத்தத்தில் பேசாமல் இருந்தாலும் பாசத்தினால் அவனது நிலத்தை மீட்க பங்காரு சாமியிடம் சென்று நிலத்தை மீட்க இருநூறு ரூபாயைக் கொடுக்கும் போது அவர் நானூறு ரூபாய் என்று பொய் சொல்கிறார். எனவே சகோதரர்கள் இருவரும் இணைந்து பங்காரு சாமியிடம் சண்டையிடுகின்றனர்…..

     இரு சகோதரரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்……

கதை தொடர்கிறது…….

     'என்னத்த சொல்ல உங்க தம்பி நிலத்த அடகு வச்சிருக்காராம்….. வீட்டில் ஒரே சண்டையா இருக்குது…. என்ற மூக்கம்மாவின் பேச்சிற்குக் கொஞ்சமும் காது கொடுக்காமல் முத்தையன் தன் வேலையிலே மும்முரமா இருந்தான். என்னது நான் சொல்லுறது காதுல விழுறதா! என்ற மனைவியின் பேச்சுக்கு இப்ப என்ன கொறஞ்சு போச்சு, நம்ம பேச்சக் கேட்காம போனவன்தானே, அவன் எப்பாடு பட்டா நமக்கென்ன, நமக்கு இருக்கிற க';டத்தில் இது வேறபா?

     இந்த வெள்ளச்சாமி பையன் கொஞ்சமாவது பொறுப்போட நடக்கண்டாமா? அவன் என்ன பத்தியும் உன்ன பத்தியும் ஊருக்குள்ள என்னெல்லாமோ சொல்லிருக்கான்…. பட்டு அனுபவிச்சாத்தான் தெரியும்…. அவன் நிலத்த இழந்திட்டு நம்மகிட்ட திரும்ப வந்தாதான் நம்ம அருமை தெரியுமுன்னு சொன்ன, தன் கணவனைப் பார்த்து மூக்கம்மா பதில் எதுவும் பேசாமல் இருந்தாள். 

     எதிர்வீட்டில் இருந்து வந்த சத்தத்தக் கேட்டு முத்தையன் துண்ட எடுத்துப் போட்டுகிட்டு வயலுக்குக் கிளம்பினான். பங்காருசாமி வெள்ளசாமிகிட்ட பேசியது அவன் காதுல கேட்டுட்டே இருந்தது. டே வெள்ளசாமி நீ கிரயம் எழுதிக்கொடுத்த நாள் முடிஞ்சாச்சி, என்ன பண்ணப் போற ஒண்ணு ரூவாவக் கொடு இல்ல நிலத்த எழுதிக் கொடு' என்ற வார்த்தைகள் எதிரொலித்துக் கொண்டிருந்தன. 

    இரண்டு வாரம் கழிச்சு வெள்ளச்சாமியின் நிலத்த பங்காரு சாமி எழுதிவாங்கிட்டதையும், அதனால வெள்ளச்சாமியின் மனைவி கோபப்பட்டுட்டு அவ அப்பா வீட்டுக்குப் போய் விட்டதாகவும், வெள்ளச்சாமி இப்போது கூலிக்கு எங்கேயோ போவதாக மூக்கம்மா கூறிய வார்த்தைகளக் கேட்ட முத்தையாவின் உள்ளம் துடித்துடித்தது….. அப்படியே வீட்டின் மேற்கூரையை வெறித்துப் பார்த்தபடி முத்தையன் நின்று கொண்டிருந்தான்.






பகுதி- 5

அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக                                                                   4 + 2 = 6

47. அ) ‘துன்பு உளது..... - எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல்

  

அ)                துன்பு உளதுஎனின் அன்றோ 

                           சுகம் உளது? அது அன்றிப் 

                    பின்பு உளது; இடை மன்னும் 

                           பிரிவு உளது என உன்னேல் ; 

                    முன்பு  உளெம் ஒருநால்வேம் 

                           முடிவு உளது என உன்னா 

                    அன்பு உள, இனி, நாம் ஓர் 

                           ஐவர்கள் உளர் ஆனோம்


ஆ) ‘சினம் -   என முடியும் திருக்குறள்

தன்னைத்தான் காக்கின் சினம் காக்க, காவாக்கால் 

தன்னையே கொல்லும் சினம்.






குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்

முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேல்நிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4, 9843448095

12 ஆம் வகுப்பு

பொது மாதிரி திருப்புதல் தேர்வு - ஜனவரி 2022.

TAMIL QUESTION PAPER - ANSWER KEY Pdf

download 👇👇👇👇👇 - model questin paper - 1

ANSWER KEY👇👇👇👇👇












11 ஆம் வகுப்பு

Slip Test 1 : click here

Slip Test 2 : click here

Slip Test 3 : click here


11 ஆம் வகுப்பு

Unit Test - இயல் - 1 : Click Here

Unit Test - இயல் - 2 : Click Here


11 ஆம் வகுப்பு

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click Here

12 ஆம் வகுப்பு

இயல் - 1 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here


12 ஆம் வகுப்பு

இயல் - 2 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : Click here


Slip Test 2 : Click here


Slip Test 3 : Click here


Slip Test 4 : CLICK HERE


மொழிப்பயிற்சி


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here


12 ஆம் வகுப்பு

இயல்  1 - 8 ( REDUCED SYLLABUS)

 

 1 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

2 மதிப்பெண் வினா விடைகள்  : click here

4 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

மதிப்பெண் வினா விடைகள்  : Click here


12 ஆம் வகுப்பு

ஜனவரி 2022 ( REDUCED SYLLABUS)

திருப்புதல் தேர்வு - JANUARY

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click here


மாதிரி வினாத்தாள்-3 : Click Here


12 ஆம் வகுப்பு

பாநயம் பாரட்டல்

இயல்  - 1 :   முச்சங்கங்  கூட்டி  :  கண்ணதாசன்     -   Click Here 
இயல் - 2 :   வெட்டி  யடிக்குது              :   பாரதியார்                     -  Click Here


12 ஆம் வகுப்பு
அணியிலக்கணம்

1. பொருள் வேற்றுமை அணி ,நிரல்நிறை அணி,
ஏகதேச உருவக அணி - Click Here


 Image by Manfred Richter from Pixabay 



 

     



 



 





 



      







 



Post a Comment

Previous Post Next Post