Loading ....

12th Tamil - Public Exam (2021-2022) -REVISION TEST - DECEMBER 2021-Model Question Paper -திருப்புதல் தேர்வு - டிசம்பர் 2021-மாதிரி வினாத்தாள்


12th Tamil - Public Exam (2021-2022) 
REVISION TEST - DECEMBER 2021,
Model Question Paper -1 


 அரசுப்பொதுத்தேர்வில் எதிர்பார்க்கப்படும் வினா விடைகள்


திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி


திருப்புதல் தேர்வு - டிசம்பர் 2021


 மாதிரி வினாத்தாள்-1 


நேரம்: 3:மணி   வகுப்பு-12     மதிப்பெண்:90

                                                                           

                                    பொதுத்தமிழ்



              

பகுதி-1


அனைத்து வினாக்களுக்கும் விடை தருக                     14 x 1 = 14


1.படத்துக்குப்  பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடித்து 

எழுதுக. (பக் : எண் : 77)



அ) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

       பண்பும் பயனும் அது. 

ஆ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 

       தெய்வத்துள் வைக்கப் படும். 

இ)  சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் 

       ஏமப் புணையைச் சுடும். 


2.சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன அவை __________  (பக் : எண் : 68)


3."உவா உற வந்து கூடும்

உடுபதி, இரவி ஒத்தார்" – யார் யார்?

    அ) சடாயு, இராமன் ஆ) இராமன், சுக்ரீவன்

   இ) இராமன், குகன் ஈ) இராமன், சவரி

4.பொருத்துக  (பக் : எண் : 78)


அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்         - 1. சேர்ந்தாரைக் கொல்லி 

ஆ) பயன்தூக்கார் செய்த உதவி                       - 2. ஞாலத்தின் மாணப் பெரிது 

இ) சினம்                                                                  - 3. தெய்வத்துள் வைக்கப்படும் 

ஈ) காலத்தினால் செய்த நன்றி                          - 4. நன்மை கடலின் பெரிது

  அ) 4 3 2 1                   ஆ) 3 4 1 2                 இ) 1 2 3 4                          ஈ) 2 3 4 1

5. பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தேர்க (பக் : எண் : 17 )

   அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லா தெரியும். 

   ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. 

    இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.  

    ஈ) மயில்கள்  போல் ஆடுகின்றனபோல் ஆடுகின்றன.

6.'உரிமைத்தாகம்' என்னும் சிறுகதையின் ஆசிரியர்

   அ) உத்தமச் சோழன் ஆ) புதமைப்பித்தன்

    இ) ஜெயகாந்தன்                               ஈ) பூமணி

7.பொருத்துக  : (பக் : எண் : 18) 

     அ) தமிழ் அழகியல்                      -          1.பரலி சு நெல்லையப்பர் 

     ஆ) நிலவுப்பூ                                  -          2. தி சு நடராசன் 

     இ) கிடை                                         -          3. சிற்பி பாலசுப்ரமணியம்               

     ஈ)  உய்யும் வழி                             -          4. கி ராஜநாராயணன

    அ) 4 3 2 1              ஆ) 1 4 2 3             இ)  2 4 1 3                  ஈ) 2 3 4 1 

8. இலக்கியத்தையும் மொழியையும் ஒரு சேரப் பேசும் இலக்கணநூல்

      அ) யாப்பருங்கலக்காரிகை ஆ) தண்டியலங்காரம்

      இ) தொல்காப்பியம் ஈ) நன்நூல்

9. நரம்புக்குள் வீணை மீட்டி கொண்டிருக்கிறது என்று 

       அய்யப்பமாதவன்   குறிப்பிடுவது.   (பக் : எண் : 42)

      அ) சூரிய ஒளிக்கதிர்                               ஆ) மழை மேகங்கள் 

       இ) மழைத்துளிகள்                                    ஈ)நீர்நிலைகள்

10. ' Metro Train’ -என்பதன் தமிழாக்கம்

     அ) மகா தொடர்வண்டி ஆ) மெகா தொடர்வண்டி

     இ) மாநகரத் தொடர்வண்டி ஈ) பெருநகரத் தொடர்வண்டி

11.தமிழில் திணைபாகுபாடு ………….. அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது

   அ) பொருட்குறிப்பு ஆ) சொற்குறிப்பு

   இ) தொடர்க்குறிப்பு ஈ) எழுத்துக்குறிப்பு




12.பொருத்தி  விடை தேர்க  (பக் : எண் : 41)

     அ) அவன் அவள் அவர்                     1.  உளப்படுத்தாத  தன்மைப் பன்மை 

    ஆ) நாங்கள் முயற்சி செய்வோம்   2.   உளப்பாட்டுத் தன்மைப் பன்மை 

     இ) நாம் முயற்சி செய்வோம்          3.   தன்மைப் பன்மைப் பெயர்கள் 

      ஈ) நாங்கள்,  நாம்                              4.  பதிலிடு பெயர்கள்

13. ’தாழ்கடல்’  - என்பதன் இலக்கணக்குறிப்பு

    அ) வேற்றுமைத்தொகை ஆ) வினைத்தொகை

    இ) பண்புத்தொகை               ஈ) உவமைத்தொகை

14.பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க

   அ) உரிமைத்தாகம் - 1. பாரசீசக் கவிஞர்

   ஆ) அஞ்ஞாடி               - 2. பூமணி

  இ) ஜலாலுத்தீன் ரூமி            - 3. பக்தவச்சல பாரதி

   ஈ) தமிழர் குடும்ப முறை         - 4. சுதித்திய அகாதெமி

  அ) 2,3,4,1           ஆ) 3,4,1,2

   இ) 2,4,1,3 ஈ) 2,3,4,1


பகுதி - 2

 

 பிரிவு – 1


இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக               3 x 2 = 6


எவையேனும் மூன்றனுக்கு விடைதருக


15.கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை 

    வேண்டும் என்கிறார்?

16.’ நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது’ - விளக்கம் தருக.

17.நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது? 

18.எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுதீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

 

பிரிவு – 2


எவையேனும் இரண்டனுக்கு விடைதருக                        2 x 2 = 4


19."புக்கில், தன்மனை" – சிறுகுறிப்பு எழுதுக

20. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக

21. ‘மணந்தகம்’ என்றால் என்ன?

பிரிவு – 3


எவையேனும் ஏழனுக்கு விடைதருக                                             7 x 2  = 14    

22. உவமைத்தொடர் களைச் சொற்றொடரில் அமைத்து எழுதுக

 அ) அச்சாணி இல்லாத தேர் போல

ஆ)  கிணற்றுத்தவளை போல


23.மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக

 கலை, களை, கழை


24. வல்லின மெய்கள் இட்டும் நீக்கியும் எழுதுக


 மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்


25.ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக

அ) தந்தனன் ஆ) வந்து


26.கலைச் சொற்களுக்கேற்ற தமிழ்ச்சொல் எழுதுக

அ) Bibliography                           ஆ) Aesthetics 


27.கீழ்க்காணும் சொல்லுருபுகள் ஐ பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடர்களை அமைக்க

அ)  தானே                                            ஆ) முன்   <

28.ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக

அ) வெங்கதிர் ஆ)உன்னையல்லால்


29.பொருத்தமான வேற்றுமை உருபுகளை சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக

அ)  அனைவர் அன்பு அழைத்தவன் துன்பம் தர யார் மனம் வரும்

ஆ)  போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன

30.தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?

 

பகுதி – 3


பிரிவு-1


ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக         2 x 4 = 8


எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக


31.'ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்' - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

32.’செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடம் 

       வானமெல்லாம்’ - தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.

33.குகனோடு ஐவராகி வீடணனோடு எழுவரான  நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டு

34.சடாயுவைத் தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக


                                                                                        பிரிவு-2


எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக                             2 x 4 = 8

35.சங்கப் பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் - விளக்குக.

36.பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் - விளக்கம் எழுதுக.

37.’கலை முழுமை’ - விளக்குக.

38.தந்தையும் தாயும் பணிக்குச் செல்லும் இன்றைய சூழலில் குடும்ப உறுப்பினர் 

      என்ற முறையில் நீங்கள் குடும்பத்துக்குச் செய்யும் உதவிகள் யாவை?


பிரிவு-3


எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக                 3 x 4 = 12

39.கீழ்க்ணும் பகுதியைப் படித்து அறிவிப்புப் பலகைக் கான செய்தியை உருவாக்கு 

                     வேர்களை விழுதுகள் சந்திக்கும் விழா, மே -  5, 2019

                                                  திருச்சிராப்பள்ளி 

          வேலை காரணமாக வெளிநாடுகளில் பிரிந்து வாழும் உறவினர்கள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

               திருச்சி உறையூர் அன்பு நகரில் வசிக்கும் தங்கவேல் -  பொன்னம்மாள் இணையரின் மூன்று தலைமுறை வழித்தோன்றல்கள் சந்திக்கும் நிகழ்வு மே - 5 ஆம் தேதி இனிதே நடைபெற உள்ளது.

             உறவினர் கூட்டத்தில் தங்கவேல் பொன்னம்மாள் அவர்களின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள், கொள்ளுப்பேரன்கள், கொள்ளுப்பேத்திகள், சந்தித்துப் பெரியோர்களிடம் வாழ்த்து பெறுகிறார்கள். இந்நிகழ்ச்சியைத் தங்கவேல் அவர்களின் கொள்ளுப்பேத்தி செல்வி கண்மணி அவர்கள் ஒருங்கிணைக்கிறார்.


40. அ) பொருள் வேற்றுமைஅணி         (அல்லது)


      ஆ) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

             பண்பும் பயனும் அது - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக


41.தமிழாக்கம் தருக

அ) A New language is a new life.

ஆ) Knowledge of language is the doorway to wisdom.

இ) The limits of my language one the limits of my world.

ஈ)  Learning is a treasure that will follow its owner everywhere.


42.பா நயம் பாராட்டுக: மையக்கருத்தை எழுதி ஏதேனும் மூன்று நயங்களை எழுதுக.

                   பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி 

                            பிறமொழிக்குச் சிறப்பளித்த  பிழையை நீக்க 

                 ஊற்றெடுத்தே  அன்புரையால்  உலுங்க  வைத்திவ் 

                            உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ?

                 கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய் என்று 

                            கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக்காட்டித் 

                தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட 

                            தெய்வக்கவி பாரதி ஓர் ஆசான் திண்ணம்

                                                                                          -நாமக்கல் கவிஞர்


43.பின்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் எட்டு வரிகளில் கவிதை புனைக

     அ) நட்பு         (அல்லது)             ஆ) இயற்கை


பகுதி –  4


  பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் 

  விடை தருக                                                                             3 x 6 = 18

44.அ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக

                                       (அல்லது)

ஆ) செய்ந்நன்றியறிதலே அறம் என்பதை வாயுறை வாழ்த்தின் துணைகொண்டு நிறுவுக.


45.அ) குடும்பம் என்னும் சிறிய அமைப்பிலிருந்தே மனித சமூகம் என்னும் பரந்த அமைப்பு கட்டமைக்கப்படுகிறதுல -  எவ்வாறு? விளக்குக.

                                           (அல்லது)

ஆ) கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.


46.அ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.

                                         (அல்லது)

ஆ)’உரிமைத்தாகம்’ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்.... கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.

பகுதி- 5


அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக               4 + 2 = 6

47.அ) ‘குகனோடும் ஐவர்....... எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடல்

      ஆ)   ‘வரும்’      என முடியும் திருக்குறளை எழுதுக.


குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேல்நிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4,  9843448095


இயல் - 1


Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here


மொழிப்பயிற்சி


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here


இயல்  1 - 8 ( REDUCED SYLLABUS)

 

 1 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

2 மதிப்பெண் வினா விடைகள்  : click here

4 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

12 ஆம் வகுப்பு தமிழ்ப்பாடம் சார்ந்த Study materials தேவைப்பட்டால் எது தொடர்பான Study materials வேண்டும் என்பதை Comment Box இல் பதிவிடுங்கள்.



டிசம்பர் 2021,

திருப்புதல்  தேர்வு - மாதிரி வினாத்தாள் - 1

MODEL QUESTION PAPER Pdf DOWNLOAD👇👇👇




 



2 Comments

  1. இதற்கான பதிலை தயவு செய்து உள்ளீடு செய்யுங்கள் ஐயா

    ReplyDelete
Previous Post Next Post