12 /இயல் 4 -அலகுத் தேர்வு 12- 1/4 UT/25
அக்டோபர் மாதத் தேர்வு
பாடம் : தமிழ் வகுப்பு : 12
நேரம் : 1.30 மணி மதிப்பெண் : 50
பலவுள் தெரிக 8 X 1 = 8
1.பொருத்தி விடை தருக
அ) ஆமந்திரிகை - 1) முத்து
ஆ) நித்திலம் - 2) மூங்கில்
இ) கழஞ்சு - 3) இடக்கை வாத்தியம்
ஈ) கழை - 4) எடை அளவு
அ) 2 1 3 4 ஆ) 3 4 2 1
இ) 3 1 4 2 ஈ) 1 3 4 2
2.சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
அ) வசம்பு ஆ) மணத்தக்காளியிலைச் சாறு
இ) கடுக்காய் ஈ) மாவிலைக்கரி
3.கண்ணாடியாகும் கண்கள்' என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
அ) நகுலன் ஆ) பிரமிள்
இ) அய்யப்ப மாதவன் ஈ) சிற்பி
4. நடுங்கும்படியான துன்பம் இல்லாதவர்
அ) வரப்போவதை முன்னரே அறிந்து காத்துக்கொள்ளக் கூடியவர்.
ஆ) மனத்திட்பம் உடையவர்.
இ) அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர்.
ஈ) சூதாடுமிடத்தில் காலம் கழிப்பவர்.
5. அல்லல் படுப்பதூஉம் இல் எவரோடு பழகினால்?
அ) வாள்போல் பகைவர் ஆ) மெய்ப்பொருள் காண்பவர்
இ) எண்ணியாங்கு எய்துபவர் ஈ) தீயினத்தார்
6.'நகை என்னும் மெய்ப்பாடு தோன்றும் நிலைக்களன்களுள் ஒன்று
அ) கொடை ஆ) பிணி
இ) பேதைமை ஈ) செல்வம்
7.'குழிமாற்று' என்னும் சொல்லோடு தொடர்புடைய துறை
அ) இலக்கியம் ஆ) கணிதம்
இ) புவியியல் ஈ) வேளாண்மை
8. சூரியனைப் பிரசவிக்கும் பாறை - சிறுகதை இடம்பெற்ற சிறுகதை தொகுப்பு
அ) வேர்களின் பேச்சு ஆ) சாய்வு நாற்காலி
இ) துறைமுகம் ஈ) கூனன் தோப்பு
குறுவினா ( எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ) 3 X 2 = 6
9.சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
10. காற்றின் தீராத பக்கங்களில் எதனை, எது எழுதிச் சென்றது?
11. நஞ்சுண்பவர் என வள்ளுவர் யாரை இடித்துரைக்கிறார்?
12. எண்வகை மெய்ப்பாடுகள் யாவை?
சிறுவினா ( எவையேனும் இரண்டனுக்கு மட்டும்) 2 X 4 = 8
13. மனத்திட்பம் அவசியமான பண்பு என்பதைக் குறள்நெறி நின்று விளக்குக.
14.ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி - விளக்குக.
15. கவிதை என்பது கண்முன் நிகழ்வதையும் மனதில் நிகழ்வதையும் தொடர்புபடுத்திச் சொற்சிமிழில் அடைக்கும் முயற்சியே என்பதை நகுலன் கவிதையைக் கொண்டு நிறுவுக.
நெடுவினா ( ஏதேனும் ஒன்று மட்டும் ) 1 X 6 = 6
16. பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.
17. 'சூரியனைப் பிரசவிக்கும் பாறை எனும் சிறுகதை உணர்த்தும் கருத்துகளைச் சுவை குன்றாமல் சுருக்கி வரைக.
அனைத்திற்கும் விடை தருக 7 X 2 = 14
18. உறுப்பிலக்கணம் தருக
தொழுதனர்
19. புணர்ச்சி விதி தருக.
தலைக்கோல்
20. இலக்கணக்குறிப்புத் தருக
அ) ஆடலும் பாடலும் ஆ) பெருந்தேர்
21. தொடரில் இடம்பெற்றுள்ள மரபுப் பிழைகளை நீக்கி எழுதுக.
அ) வாழைக்காட்டில் குயில்கள் அலறிக்கொண்டும் காகங்கள்
கூவிக்கொண்டும்இருந்தன.
ஆ) ஆட்டுத் தொழுவத்தைச் சுற்றிலும் எலிகள் பொந்துகள்
அமைத்திருந்தன.
22.தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
அ) நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.
ஆ) இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும்.
23.சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க
அ) தாமரை ஆ) தலைமை
24. கலைச்சொல் தருக.
அ) Value Education ஆ) Traffic signal
ஏதேனும் ஒன்றனுக்கு விடை தருக 1 X 4 = 4
25. “அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்” - இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
26. பழமொழியை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
அடி மறாமல் எழுதுக. 1 X 4 = 4
26. “ குழல்வழி நின்றது......” எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடல்
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
Click Here to download the document.