Loading ....

12th Standard- +2Tamil - Tamil -Study Material - NOTES OF LESSON -தமிழ் -12 ஆம் வகுப்பு-பாடக் குறிப்பேடு -இயல் 5- மதராசப்பட்டினம்-தெய்வமணிமாலை-தேவாராம்-உரைநடை-செய்யுள்-

12th Standard- +2Tamil - Tamil -Study Material - NOTES OF LESSON -தமிழ் -12 ஆம் வகுப்பு-பாடக் குறிப்பேடு -இயல் 5- மதராசப்பட்டினம்-தெய்வமணிமாலை-தேவாராம்-உரைநடை-செய்யுள்-


                                                                                                                            இயல் - 5

உரைநடை  -  மதராசப்பட்டினம் 

   செய்யுள்      தெய்வமணிமாலை , தேவாரம்                                                                  

NOTES OF LESSON ( பாடக் குறிப்பேடு )  



வகுப்பு XII                                          

பாடம் : தமிழ் 

நாள்

பருவம் : முதல் பருவம்

இயல் :

அலகு : உரைநடை , செய்யுள்  

பாடத்தலைப்பு : உரைநடை 

மதராசப்பட்டினம் 

செய்யுள்  

  தெய்வமணிமாலை

இராமலிங்க அடிகள்

தேவாரம்

திருஞானசம்பந்தர்           

பாடவேளை : 4

பக்க எண் : 105  முதல் 114  வரை

கற்பித்தலின் நோக்கம்

ஆற்றங்கரை நகரங்கள் கடற்கரை  நகரங்கள் பற்றிய தகவல்களை அறிதல். 

சென்னை பற்றிய எல்லா தகவல்களையும்  முழுமையாக அறிதல். 

சென்னையில் வாழ்ந்த இராமலிங்க அடிகளார் கூறும் ஆன்மநேய ஒருமைப்பாடு, 

சமய ஒருமைப்பாடு இவற்றைப் புதிய வைத்தல். 

மயிலாப்பூரில் நடைபெற்ற விழாக்கள் பற்றிய செய்திகளையும், திருமயிலைப் 

பற்றிய செய்திகளையும்  தகவல்களையும்  அறிதல்.

கற்பித்தல் திறன்கள்

மதராசப்பட்டினம், தெய்வமணிமாலை, தேவாராம் என்னும் பாடப்பகுதிகளை

1.  விரிவுரைத்திறன் 

2.  அறிமுகப்படுத்தல் திறன்

3.  எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குதல் திறன்

4.  கேள்விகள் கேட்டுப் புரிய வைத்தல் திறன்

5.  கலந்துரையாடல் மூலம் பெறப்படும் அறிக்கைகள் தரும் திறன்  

6.  விளக்கக் காட்சித் திறன்

7.  வலுவூட்டுதல் திறன் 

8.  வினாடி வினா முறையில் கேள்விகள் கேட்டு ஆயத்தப்படுத்துதல்   திறன் 

9.  புதிர்கள் மூலம் பாடப்பொருளை விளக்குதல் திறன் 

10.  சிக்கலற்ற மற்றும் சுருக்கமான பாட இலக்கை அடையும் திறன் 

11.  வகுப்பில் விவாதம் செய்து பாடப்பொருளை விளக்குதல்  திறன்

ஆகிய கற்பித்தல் திறன்களைப் பயன்படுத்திப் பாடப்பகுதியில்

கூறப்பட்டுள்ள செய்திகளுபன், பாடப்பகுதிக்குத் தேவையான பிற

செய்திகளையும் கூறி பாடப்பொருளை மிகவும் தெளிவாகவும் சுவையாகவும்

கற்பிக்க வேண்டும்.

கற்பித்தல் நுண்திறன்                    மாணவர்கள் கற்றலில் முழு அடைவு அடையவும்,  பாடப்பொருள்கள்

அனைத்தையும் முழுமையாகப் புரிந்து கொள்ளவும் ,பாடப்பகுதியில்

கூறப்பட்டுள்ள செய்திகளையும் பாடப்பொருளின் பொருண்மைகளையும் 

முழுமையாகப் புரிந்து கொள்ள,

1.  தூண்டல் தொடங்குதல் நுண்திறன்

2.  பல்வகை தூண்டல் வினாக்கள் கேட்டல் நுண்திறன்

3. பாடப்பொருள் சார்ந்த மறைமுக வினாக்கள் கேட்டல் நுண்திறன்

4. பாடம் தொடர்பான விரி சிந்தனையைப் பெற விரிசிந்தனையைத்

தூண்டும் வினாக்களைக் கேட்டல்'நுண்திறன்

 5.  சரளமான வினாக்களைக் கேட்டல் நுண்திறன்

6. பகுத்தறிவை ஊக்குவித்தல் நுண்திறன்

7. படைப்பாற்றலை வளர்த்தல் நுண்திறன்

8. திரும்ப கூறவேண்டியவற்றைத் திட்டமிடல் நுண்திறன்

9.  தகவல் பரிமாற்றதை நிறைவு செய்தல் நுண்திறன்

10. பாடப் பொருளை  முடித்தல் நுண்திறன்

ஆகிய நுண்திறன்கள் மூலம் பாடப்பகுதியின் அனைத்துச்

செய்திகளையும் மாணவர்கள் புரியும் விதத்தில் கற்பித்தல் வேண்டும்.

அறிமுகம் 

சென்னை தோன்றிய வரலாறு பற்றிய செய்திகள் அதை அடங்கிய

காணொகி மற்றும் சென்னையின் வளர்ச்சி சர்ந்த செய்திகளைப் பற்றியும்,

நகரம் உருவாகிய வரலாறு. நகராட்சி, மாகாணம், சென்னை அறிவின் நகரம்

பண்பாட்டு அடையாளங்கள் சுர்ந்த செய்திகளை கூறி உரைநடையை

அறிமுகம் செய்தல். வடலூர் வல்லலாரின் சுத்த சன்மார்க்கம் பற்றியும்

ஒளி வழியாடு பற்றிய செய்திகளையும்

வடலூர் வள்ளலாரின் சுத்தசன்மார்க்கம் பற்றியும் ஒளி வழிபாடு பற்றிய

செய்திகளையும்  கூறி தெய்வமணிமாலை பாடத்தை அறிமுகம் செய்தல்.

விழாக்கள் தரும் குதுகலம் பற்றியும் மயிலாப்பூரில் நடைபெற்ற

விழாக்களின் தன்மையையும் கூறி தேவாரம் பாடப்பகுதியை

அறிமுகம் செய்தல்.

ஆயத்தப்படுத்தல்

சென்னை என்னும் மதராசப்பட்டினம்  உருவான வரலாறுகளைக் கதை போலக்

கூறி மாணவர்களிடம் கற்றல் ஆர்வத்தை ஏற்படுத்துல்.

சென்னப்பரின்  மகன்களிடம் இருந்து பெற்ற இடம் இன்று மக்களின்

வாழ்வாதரத்தை அதிகரிக்கின்ற ஒரு மாபெரும் நகரமாக மாறிய

செய்திகளை எடுத்துக்கூறி உரைநடை பாடத்தைக் கற்கும் ஆர்வத்தை

ஏற்படுத்துதல்.

வள்ளலாரின் ஜீவ காருண்யா ஒழுக்கம், சமரச சன்மார்க்கம் சார்ந்த

செய்திகளையும் இராமலிங்க அடிகளின் செய்திகளையும் கூறி

தெய்வமணிமாலை பாடத்தைக் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்துதல்.

மலிவிழா,கலிவிழா, பலிவிழா, ஒலிவிழா நடைபெறுகின்ற சென்னை

மயிலாப்பூரின் செய்திகளையும், திருஞான சம்பந்தர் இப்பதிகத்தைப்

பாடக் காரணமான  செய்திகளையும் கூறி தேவாரம் பாடத்தைக் கற்கும்

ஆர்வத்தை ஏற்படுத்துதல். 

துணைக் கருவிகள் 

i)  பாடம் சார்ந்த  QR CODE காணொலி 

ii) சென்னை வரலாறு சர்ந்த காணொலிய 

iii) மதராசப்பட்டினம் பாடம் சார்ந்த PPT

iv) தெய்வமணிமாலை மனப்பாடப் பாடல் காணொலி 

v) தெய்வமணிமாலை பாடம் சார்ந்த PPT

vi) தேவாரம் தரும் செய்திகளைத் தொகுத்து உருவாக்கப்பட்ட செயல்திட்டத்தில்

மயிலாப்பூர் பற்றிய சிறப்புகளை உள்ளடக்கிய காணொலி

கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்


ஆசிரியர் செயல்பாடு

கற்பிக்க இருக்கும் பாடப் பகுதிகளான மதராசப்பட்டினம், தெய்வமணிமாலை,

தேவாரம் ஆகிய பாடப் பகுதிகளை  நன்றாகப் புரிந்து கொண்டு அதில்

கூறப்பட்டுள்ள செய்திகளை நன்குப் புரிந்து கொண்டு, அதன் பிறகு கற்பிக்க

இருக்கும் பாடப்பகுதிகளை மாணவர்கள்  புரியும் வண்ணம் வாய்விட்டுத்

தெளிவாக ஏற்ற குரல் நயத்துடன் உரைநடை மற்றும் செய்யுள் பகுதிகளை

வாசித்துப் புரிய வைத்தல் வேண்டும். 

மாணவர்கள் அனைவரையும் தனித்தனியாக உரத்த குரலில் பாடப்பகுதியில்

உள்ள பகுதியை வாசிக்க வைத்தல் வேண்டும் .  தடுமாறினால்

மாணவர்களுக்கு வாசிப்புப் பயிற்சி வழங்குதல் வேண்டும் இதனால்

வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாசித்தல் திறன்

அதிகமாகும்..

பாடப் பகுதிகள் 

இயல் 5: 

உரைநடை   -   மதராசாபட்டினம்

தென்னிந்தியாவின் நுழைவாயில் - தமிழர்களின் பண்பாட்டு அடையாளம்

சென்னை.

சென்னையின் தொன்மை 

ஒரு இலட்சம் ஆண்டுக்கு முற்பட்ட மனித நாகரிகம் - குடியம் -

அத்திரம்பாக்கம் அகழ்வாய்வு - பல்லாவரம் கல்கோடாரி , மானுட எச்சம் -

கூடுவாஞ்சேரி, பல்லாவரம், புழல் - கி.பி 2 ஆம் நூற்றாண்டில் தாலமி

குறிப்பிடும் மல்லியர்பா' - திருவொற்றியூர், திருவான்மியூர், மயிலாப்பூர்,

திருமுல்லைவாயில் கோயில்கள், முதலாம் மகேந்திர வர்மன் காலப்

பல்லவர் குடைவரை மற்றும் கல்வெட்டு, திருவல்லிக் கேணி நந்தவர்மன்

கல்வெட்டு.

குப்பம் நகரமாதல்

1647 - இல் எழுதப்பட்ட, “ தொண்ட மண்டலத்துப் புழல் கோட்டத்து

ஞாயிறு நாட்டுச் சென்னப் பட்டினம்” பத்திரம்

சென்னை உருவாக்கம்

செயின்ட் ஜார்ஜ் கோட்டைப் பகுதி- வெள்ளையர் ' நகரம்', 'கருப்பர் நகரம்'

எனப் பட்ட வடசென்னை - இணைந்த மதராசப் பட்டினம்' தென்சென்னை - 

சென்னைப் பட்டினம்' என அழைக்கப்படல் ஆங்கிலேயர் இண்டையும்

இணைத்து 'மதராஸ்'- பின்பு `மெட்ராஸ்' -இன்று சென்னை. 

அறிவின் நகரம்

1715 - புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி, 1812-சென்ண கோட்டை கல்லூரி,

1837- கிறிஸ்தவக் கல்லூரி , 1840- பிரசிடென்சி பள்ளி,

1857- சென்னைப் பல்கலைக் கழகம். 1914- இராணி மேரி கல்லூரி,

பச்சையப்பன் கல்லுரி.

பண்பாட்டு அடையாளங்கள் 

எழும்பூர் அருங்காட்சியகம்-  கோட்டை அருங்காட்சியகம் -

பொதுநூலகம்- கன்னிமாரா - சேப்பாக்கம் அரண்மனை -

மத்திய தொடர்வண்டி நிலையம் - தென்னகத் தொடர்வண்டித் தலைமையகம் .

எழும்பூர் தொடர்வண்டி நிலையம் - பொது அஞ்சல் அலுவலகம் -

உயர்நீதிமன்றம் - சென்னைப் பல்கலைக் கழகம் .

ரிப்பன் கட்டடம் விக்டோரியா அரங்கு - இந்திய சாரனிக் கட்டடக்கலை.

நம்பிக்கை மையம்

நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு -கணினி மென்பொருள், வன்பொருள்,

வாகன உற்பத்தி. மென்பொருள் ஏற்றுமதியில் முதலிடம் -

வெறும் நகரம் மட்டுமல்ல - நம்பிக்கை மையம் .

தெய்வமணிமாலை    -   இராமலிங்க அடிகள்

சமரச சன்மார்க்க நெறி - பசிப்பிணி - கவிபாடும் ஆற்றல்

ஆன்ம நேய ஒருமைப்பாடு - உண்மை நெறி - வாடிய பயிரைக் கண்டபோது

வாடியவர்- திருவருட்பா

இறைவனை நினைக்கின்றவர் உறவு - இறைவன் புகழைப் பேச -

வாழ்வியல் நெறி- இறைவனை மறவாதிருத்தல் - அறியும் இறைவனின்

கருணை , செல்வம் வேண்டும் - உள்ளத்தில் ஒன்று புறத்தில்

ஒன்றுமாகப்  பேசும் வஞ்சகர் உறவு வேண்டாம். பொய்' - மதமான பேய் -

பெண்ணாசை வேண்டாம்.

தேவாராம் –  திருஞானசம்பந்தர்

சமுதாயத்தின் பொருளாதாரக் கலை பண்பாட்டு நிலைகள் -

தமிழுக்கு இருந்த உயர்நிலை - இசை, தத்துவம் - சயக்கோட்பாடுகள்

இவை எல்லாம் சம்பந்தர் பாடலில் விரவி இருப்பவை

எழுச்சிதரும் விழா - கலிவிழா 

ஆராவார விழா - ஒலிவிழா

பங்குனி உத்திர பூசையிடும்விழா   -  பலிவிழா

  மலிவிழா  -  விழாக்கள் மிகுந்த ஊர்.

திருவிழாக்கள் மிருந்த பெரிய வீதிகளையுடைய ஊர் திருமயிலை - எழுச்சிவிழா -

பூசையிடும் பங்குனி உத்திரம் விழா - இவையெல்லாம் காணாமல்

போவது முறையா ? என்கிறார் சம்பந்தர். 

மாணவர் செயல்பாடுகள்

பாடப்பகுதிகளை வாய்விட்டு உரத்தகுரலில் வாசித்து வாசித்தல் திறனை

மேம்படுத்தல் வேண்டும். 

சென்னையின் பண்பாட்டு வளர்ச்சியை அறிவதுடன் அதன் பண்பாட்டு

அடையாளங்களை அறிந்து, சென்னைப் பற்றிய செய்திகளை

முழுமையாக அறிந்து, சென்னைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தல்.

தெய்வமணி மாலை உணர்துவதை அறிந்து இறைவனோடு

கொள்ள வேண்டிய நல்ல ஒழுக்கங்களை வாழ்வில் பின்பற்றுதல்.

தேவாரம் கூறும் மயிலாப்பூர் செய்திகளை அறிவதுடன் , அன்று

வழக்கில் இருந்த திருவிழாக்களைப் பற்றிய செய்திகளை அறிந்து ,

ஊர் விழாக்களில் பின்பற்ற வேண்டிய விழா நடைமுறைகளை அறிந்து

செயல்படுதல் . 

வலுவூட்டும் செயல்பாடுகள் 

சென்னை சார்ந்த செய்திகளையும், சென்னை நகர  வளர்ச்சிகளையும்

இறைவனை வணங்கும் முறை - விழாக்கள் . பற்றிய செய்திகளையும்

எடுத்துக் கூறி வலுவூட்டும் செய்திகள் மூலம், பாடப்பகுதியின்

பொருட்களை  வலுவூட்டும்

செயல்பாடுகள்  மூலம் புரிய வைத்தல். 

குறைதீர் கற்பித்தல்

பாடப் பகுதியின் உட்பொருளைப் புரிந்து கொண்டு கற்றவில் முழு அடைவைப் பெற இயலாத குறைந்த திறன் கொண்ட மெல்ல கற்கும் மாணவர்களுக்குப் புரியும் விதத்தில் மதராசப் பட் டினம். தெய்வமணிமாலை, தேவாரம் பாடப்பகுதிகளின் முக்கியப் பகுதிகளான அறிவின் நகரம், சாராசனிக்  கட்டடக்கலை, பண்பாட்டு நகரம், முக்கிய ஆறுகள் , வள்ளலாரின்  வேண்டுகோள், சம்பந்தர் -மயிலாப்பூர் கோவில் பற்றிக் கூறும்செய்திகள் ஆகியவற்றை மீண்டும் மீண்டும் விளக்கிக் கூறிப் பாடப் பகுதிகளைப் புரிய வைத்தல்.

கற்றல் விளைவுகள்

சென்னை நகரின் வரலாற்றை அறிந்த பிறகு தாங்கள்  வாழும்

நகரங்களின் வரலாற்றையும் அறிந்து கொள்வர்.

சென்னையின் பண்பாடு, கல்வி ,  போக்குவரத்து வளர்ச்சிகளை

அறிந்த பின்பு ஒரு நகரின் வளர்ச்சிக்கான பங்களிப்பை அறிந்து கொள்வர்.

ஊர்களின் வரலாறு குறித்த தகவல்களைத் திரட்டிக் கட்டுரையாக எழுதும்

திறன் பெற்றுக் கொள்வர். 

திருவருட்பா வழியாக நேர்மறைச் சிந்தனைகளை அறிந்து பின்பற்றும்

திறன் பெற்றுக் கொள்வர். 

இடைக் காலத்தில் கொண்டாடப்பட்ட திருவிழாக்கள் வழி மக்களின்

நாகரிகக் கூறுகளை அறிந்து அவற்றின் இன்றைய தொடர்ச்சியை

அறிவார்கள். 

மதிப்பீடு 

எளிய சிந்தனை வினாக்கள்                                 LOT QUESTIONS 

1. ‘கருப்பர் நகரம்' - விளக்கம் தருக.

2. வள்ளலார் என்று அழைக்கப்படுபவர் யார்?

நடுத்தர சிந்தனை வினாக்கள் MOT QUESTIONS 

1.  சென்னையின் கல்வி நிலையங்கள் குறித்து எழுதுக?

2. மயிலாப்பூரில் நடைபெற்ற விழாக்கள் யாவை? 

உயர்தர சிந்தனை வினாக்கள் HOT QUESTIONS

1. சென்னையின் தொன்மையை விளக்குக. 

2.வள்ளலார் விரும்பிய உறவு குறித்து விளக்குக.

தொடர் பணி 

1. ஒரு திட்டமிட்ட பெருநகரம் உருவாவதற்கு நீவிர் தரும் பரிந்துரைகள,

‘கனவு நகரம்' என்னும் தலைப்பில் ஒப்படைவாக உருவாக்கு..  

2. தெய்வமணிமாலைப் பாடல் கருத்துகளுக்கு இணையான

திருக்குறள்களைத் தொகுத்தல். 

3. மாணவர்கள் தங்களது பகுதியில் கொண்டாடப்படும் திருவிழாக்கள்

பற்றிய தகவல்களைத் திரட்டி நாளிதழ் ஒன்றின் செய்திப்பிரிவிற்கு அளிக்கும்.

வகையில் செய்தியாக எழுத வைத்தல்.

குருசடி      எம். ஏ. ஜெலஸ்டின்

கார்மல் மேனிலைப் பள்ளி ,முதுகலைத் தமிழாசிரியர் ,நாகர்கோவில்  .98434480985

தமிழ் |12 ஆம் வகுப்பு|பாடக் குறிப்பேடு |இயல் 5|உரைநடை|செய்யுள்|மதராசப்பட்டினம்|தெய்வமணிமாலை|தேவாரம்| FREE DOWNLOAD CLICK HERE

Post a Comment