11 - காலாண்டுத் தேர்வு 11 T QTY 1 / 3 - Model - 2025
மாதிரி வினாத்தாள் - 1
காலாண்டுப் பொதுத்தேர்வு - 2025
வகுப்பு - 11
பொதுத்தமிழ்
கால அளவு : 3.00 மணிநேரம் மதிப்பெண் : 90
அறிவுரைகள் : 1. அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளதா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப் பதிவில் குறையிருப்பின் அறைக்கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்
2. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடி இடுவதற்கும் பயன்படுத்த வேண்டும்.
குறிப்பு : விடைகள் தெளிவாகவும் குறிப்பிட்ட அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி - 1
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக 14 x 1 = 14
1. இன்குலாபின் கவிதைகள் ___________________ என்னும் பெயரில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
அ) உயிர்த்தெழும் காலத்துக்காக
ஆ) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
இ) ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
ஈ) கூவும் குயிலும் கரையும் காகமும்
2. "கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும்
காலத்தால் சாகாததொல் கனிமங்கள்" அடி மோனையைத் தெரிவு செய்க.
அ) கபாடபுரங்களை - காவு கொண்ட
ஆ) காலத்தால் - கனிமங்கள்
இ) கபாடபுரங்களை - காலத்தால்
ஈ) காலத்தால் - சாகாத
3. 'போது' என்ற சொல் உணர்த்தும் பொருள் ______________
அ) போதும்
ஆ) காடு
இ)மொட்டு
ஈ) மேகம்
4. தமிழின் முதல் பாவடிவ நாடகநூல்
அ) இரகசிய வழி
ஆ) மனோன்மணீயம்
இ) நூல்தொகை விளக்கம
ஈ) திருவிதாங்கூர் அரசர் வரலாறு
5. காவடிச் சிந்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
அ) பாரதிதாசன்
ஆ) அண்ணாமலையார்
இ) முருகன்
ஈ) பாரதியார்
6. ‘மொழிதான் ஒரு சுவிஞரை நிகழ்காலத்தவரா அல்லது இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது" எனக் கூறியவர்
அ) வால்ட் விட்மன்
ஆ) எர்னஸ்ட் காசிரா
இ) ஆற்றூர் ரவிவர்மா
ஈ) பாப்லோ நெருடா
7.மனித இனத்தின் ஆதி அடையாளம்
அ) எழுத்து
ஆ) பேச்சு
இ)மொழி
ஈ) பாட்டு
8.பொருத்தமான இலக்கிய வடிவத்தைத் தேர்க
அ) ஒற்றை வைக்கோல் புரட்சி - மரபுக் கவிதை
ஆ) மனோன்மணீயம் - சிறுகதை
இ) யானை டாக்டர் - குறும் புதினம்
ஈ) ஐங்குறுநூறு - புதுக்கவிதை
9. "புல்லின் இதழ்கள்" எனும் நூலின் ஆசிரியர்
அ) வால்ட் விட்மன்
ஆ) ஸ்டெஃபான் மல்லார்மே
இ) பாப்லோ நெரூடா
ஈ) எர்னஸ்ட் காசிரர்
10 கூற்று : கோடு என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
விளக்கம் : கோடு என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்னும் பொருள்களும் உண்டு.
அ) கூற்று சரி; விளக்கம் தவறு
ஆ ) கூற்றும் சரி, விளக்கமும் சரி
இ) கூற்று தவறு; விளக்கம் சரி
ஈ) கூற்றும் தவறு; விளக்கமும் தவறு
11.தவறான இணையைத் தேர்வு செய்க
அ) மொழி + ஆளுமை - உயிர் உயிர்
ஆ) தமிழ் உணர்வு - மெய் உயிர்
இ) கடல் + அலை - உயிர் + மெய்
ஈ) மண் + வளம் - மெய் + மெய்
12.'கல்லதர்" என்னும் சொல்லிற்குரிய புணர்ச்சி விதிகளைத் தேர்வு செய்க.
அ) ஈறுபோதல், தன்னொற்றிரட்டல்
ஆ) இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்
இ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்
ஈ) தனிக்குறில் முன் ஒற்று, உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
13. 'வாடிவாசல் ' சிறுகதையின் ஆசிரியர்
அ) ஜெயமோகன்
ஆ)நர்தகிநடராஜ்
இ) ஜெயகாந்தன்
ஈ) எவற்றில் எதுவுமில்லை.
14.யானைகளை எவ்வாறு அழைப்பர் ?
அ) காட்டின் மூலவர்
ஆ) காட்டின் அரசன்
இ) காட்டின் காவலர்
ஈ) காட்டின் பெரியவர்
பகுதி 2
பிரிவு -1
எவையேனும் மூன்றனுக்கு விடை எழுதுக. 3 x 2 = 6
15. சீர்தூக்கி ஆராய வேண்ய ஆற்றல்கள் யாவை ?
16. சு.வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்?
17. காவடிச்சிந்து என்பது யாது?
18. “உழுவோர்க்கெல்லாம் விழுமிய வேந்து நீ” - தொடரின் பொருள் யாது?
பிரிவு -2
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக. 2 x 2 = 4
19. ஐந்து வேளாண்மை மந்திரங்கள் யாவை ?
20. கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம் -குறிப்பு வரைக
21. பேச்சு மொழி எழுத்து மொழியைக்காட்டினும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?
பிரிவு-3
எவையேனும் ஏழனுக்கு விடை தருக 7 x 2 = 14
22. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
குரை, குறை
23. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக,
அ) தேர்வெழுத வேகமாப் போங்க நேரங்கழிச்சி போனாப் பதட்டமாயிரும்.
ஆ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராமப் போவாது,
24. ஏதேனும் ஒன்றனுக்குப் புணர்ச்சி விதி தருக.
அ) அருவினை ( அல்லது ) ஆ) பூங்கொடி
25. ஏதேனும் ஒன்றனுக்குப் பகுபத உறுப்பிலக்கணம் தருக.
அ) முளைத்த ( அல்லது ) ஆ) விடுத்தனை
26. கலைச்சொல் தருக.
அ) Harvesting ஆ ) Art Critic
செவிமாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா
தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர்களாக்குக
நிலவு வீசுவதால் தெற்கிலிருந்து மாலை தென்றல் மகிழ்விக்கும் எனப்படுகிறது மனதை.
27. பிறமொழிச் சொற்களுக்குத் தமிழாக்கம் தருக
அ) விசா ஆ) தேசம்
28.வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக
கல்வி கேள்விகளில் சிறந்தவர் நன்மைத் தீமைகளை புரிந்து பேசுவார்.
29. விகுதிகள் எவற்றை உணர்த்தும்?
30. உயிரீறு, மெய்யீறு விளக்குக.
பகுதி 3
பிரிவு - 1
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக 2 x 4 = 8
31. குறித்த காலத்திற்கு முன்பாக ஊர் திரும்பிய தலைவன் கூறுவனவற்றை ஐங்குறுநூறு கொண்டு விளக்குக.
32. புல், நாங்கூழ்ப்புழுவை நோக்கி நடராசன் உரைப்பனவற்றைத் தொகுத்து எழுதுக.
33. பாடத்தான் வேண்டும் என சு. வில்வரத்தினம் எவற்றைக் குறிப்பிடுகிறார்?
34. கமுகுமலைத் தலத்தின் சிறப்புகளைக் காவடிச் சிந்து கொண்டு விளக்குக.
பிரிவு - 2
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக 2 x 4 = 8
35. வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா? நும் கருத்தை எழுதுக.
36. ‘என்னுயிர் தமிழ்மொழி என்பேன்’ என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப் பற்றினை எழுதுக
37. கவிதை ஒரு படைப்புச் செயல்பாடு என்பதை விளக்குக.
38. திராவிடப் பழங்குடிகளின் இனக்குழுப் பெயர்களுக்கும் மலைக்கும் உள்ள தொடர்பிற்கு எடுத்துக்காட்டுத் தருக.
பிரிவு-3
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக 3 x 4 = 12
39.அ) ’தீயனால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு’ - இக்குறட்பாவில் வரும் அணியை விளக்குக.
அல்லது
ஆ ) உவமை அணியைச் சான்றுடன் விளக்குக.
40. இலக்கிய நயம் பாராட்டுக.
பாடலின் மையக் கருத்தோடு எவையேனும் மூன்று நயங்களையும் எழுதுக.
“தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளைகண்விழித்து நோக்க,
தெண்திரை எழுனி காட்ட ,தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, மருதம் வீற்றிருக்கும் மாதோ”
கம்பர்
41. அ) குறிஞ்சித் திணையைச் சான்று தந்து விளக்குக.
அல்லது
ஆ) கார்காலம் குறித்துப் பிரிந்த தலைமகன் அப்பருவத்திற்கு முன்னே வந்தமையை உணர்த்த, தலைவிக்கு உரைத்த. துறையை விளக்குக
41. தமிழாக்கம் தருக.
1.The pen is mightier than the sword.
2. A picture is worth a thousand words.
3.People without the knowledge of their fast history and Culture are like trees without roots.
4. Culture does not make people. People make culture…
செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா
43. கீழ்க்காணும் வேர்ச்சொல்லை வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம், வினையாலணையும் பெயர் தொடர்களாக மாற்றுக.
அ) வா ( அல்லது ) ஆ) பேசு
பகுதி 4
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 3 x 6 = 18
44. அ) ஒவ்வொரு புல்லையும்' கவிதையில் வெளிப்படும் சமத்துவச் சிந்தனைகளைப் புலப்படுத்துக.
அல்லது
ஆ) புல், நாங்கூழ்ப்புழுவை நோக்கி நடராசன் உரைப்பனவற்றைத் தொகுத்து எழுதுக.
45.அ) நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சு மொழியையும் எழுத்து மொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க.
அல்லது
ஆ) இயற்கையோடு இயைந்து வாழ்ந்த தமிழர்களின் இருப்பிடப் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தன - கூற்றினை மெய்ப்பிக்க
46. அ) ‘யானை டாக்டர்’ கதை வாயிலாக இயற்கை, உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக.
அல்லது
ஆ) வாடிவாசல் கதை வாமிலாக நீங்கள் உணர்ந்த கருத்துகளை விளக்குக
பகுதி - 5
47. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடைதருக 4 + 2 = 6
அ) ஏடு தொடக்கி..... எனத் தொடங்கும் யுகத்தின் பாடல்
ஆ) ‘செயல் ’ - என முடியும் திருக்குறளை அடிமாறாமல் எழுதுக
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
Click Here to download the document.