Loading ....

12th Standard- +2Tamil - Tamil -Study Material - QUARTERLY EXAM QUESTION PAPER - SEPTEMBER 2023- MODEL QUESTION PAPER - ANSWER KEY - தமிழ் - காலாண்டுத் தேர்வு - மாதிரி வினாத்தாள் - செப்டம்பர் 2023-

 12th Standard- +2Tamil - Tamil -Study Material - QUARTERLY EXAM QUESTION PAPER  - SEPTEMBER  2023- MODEL QUESTION PAPER 1 - ANSWER KEY  - தமிழ் - காலாண்டுத் தேர்வு - மாதிரி வினாத்தாள் 1 - செப்டம்பர் 2023-


காலாண்டுத் தேர்வு - செப்டம்பர்  2023                                                                                      மாதிரி வினாத்தாள்- 1


    நேரம்: 3:மணி                                       வகுப்பு-1 2                   மதிப்பெண்:90

                                                                             பொதுத்தமிழ்



அறிவுரைகள் :   

i) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரி பார்த்துக்கொள்ளவும் அச்சுப் பதிவில் குறை இருப்பின் அறைகண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும். 

ii) நீலம் அல்லது கருப்பு மை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும். 

குறிப்பு   :

  i) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும்,  சொந்த நடையிலும்   அமைதல் வேண்டும். 

 ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையிணையும் சேர்த்து எழுதுக.

பகுதி-1

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக                                                14 x 1 = 14

1. பொருத்தி விடை தேர்சு,

அ) தமிழ் அழகியல் - 1. பரலி சு.நெல்லையப்பர்

ஆ) நிலைப்பூ - 2. தி.சு.நடராசன்

இ) கிடை - 3. சிற்பி பாலசுப்பிரமணியம்

ஈ) உய்யும்வழி - 4.கி.நாராயணன்

அ) 4, 3, 2 ,1 ஆ) 1, 4 ,2 ,3  இ) 2 , 4 , 1 , 3   ஈ) 2 ,3 , 4 , 1 

2. வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்.

அ) பருவநிலைமாற்றும் ஆ) பாறைகள் இல்லாமை

இ மணல் அள்ளுதல் ஈ) நிலத்தடிநீர் உறிஞ்சப்படுதல்

3. வையகமும் வானகமும் ஆற்றலரிது - எதற்கு?

அ) செய்யாமல் செய்த உதவி ஆ) பாறைகள் இல்லாமை 

இ) பயன் தூக்கார் செய்த உதவி  ஈ)செய்ந்தன்றி

4. கவிஞர் காதாவின் இயற்பெயர்?

அ) கோபாலன் ஆ) கோபால் இ) இராமகோபாலன்  ஈ)  இராசகோபாலன்

5. மதராசப்பட்டினம் என்று அழைக்கப்பட்ட பகுதிகள்...

அ) வடசென்னைப் பகுதிகள் ஆ) தென்சென்னைப் பகுதிகள் 

இ) மத்திய சென்னைப் பகுதிகள் ஈ)  இவை மூன்றும்

6. பிறகொருநாள் கோடை' இடம் பெற்ற நூல்

அ) நீர்வெளி ஆ) மழைக்குப் பிறகு மழை

இ) அய்யப்ப மாதவன் கவிதைகள் ஈ) நானென்பது வேறொருவன் 

7. “எங்கள் தந்தையர் நாடு என்ற பேச்சினிலே 

     ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே” - என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது.

அ) தனிக்குடும்ப முறை  ஆ) தாய்வழிச் சமூக முறை

இ) விரிந்த குடும்ப முறை ஈ) தந்தைவழிச் சமூக முறை 

8. 2014 இல் சாகித்திய அகாதெமி விருது பெற்ற 'அஞ்ஞாடி' புதினத்தின் ஆசிரியர்.

அ) உத்தமசோழன் ஆ) பூமணி

இ) தோப்பில் முகமது மீரான் ஈ) சாந்தா தத்

9. பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தேர்க.

அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும். 

ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.

ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.

10. "உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே

அஃறிணை என்மனார் அவரல பிறவே" - இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல். 

அ) நன்னூல் ஆ) தொல்காப்பியம்

இ) அகத்தியம் ஈ) இலக்கணவிளக்கம் 

11. பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க.

அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல். 

ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல். 

இ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்.

ஈ) வல்லினமெய்களைத் தேவையற்ற இடங்களில் இடாமல் எழுதுதல்.

12. பொருத்துக.

அ) மாச்சீர் - கருவிளம், கூவிளம்

ஆ)காய்ச்சீர் - நாள், மலர்

இ) விளச்சீர்தேமாங்காய் - புளிமாங்காய்

(ஈ) ஓரசைச்சீர் - தேமா, புளிமா

(அ) 1, 2, 4, 3 ஆ) 4, 3, 1, 2 இ) 2, 3, 1, 4 ஈ) 3, 4, 2, 1

13. வெண்பாவிற்குரிய ஓசை

அ) செப்பலோசை ஆ) அகவலோசை இ) துள்ளலோசை ஈ) தூக்கலோசை

14. செம்பரிதி - இச்சொல்லில் புணர்ந்து வரும் புணர்ச்சி விதி

அ) ஈறுபோதல் ஆ) இனமிகல்

இ) மவ்வீறு ஒற்றழிதல் ஈ) இனையவும்

பகுதி - 2

 பிரிவு – 1

இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக.

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக                   3x2 =6

15. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது - விளக்குக.

16. கம்பராமாயணத்தின் காண்டங்கள் எத்தனை? அவை யாவை?

17. இடையீடு எவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது?

18. செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன யாவை?

 பிரிவு – 2

 எவையேனும் இரண்டனுக்கு விடை தருக                                2 × 2 = 4

19. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்துகளைக் குறிப்பிடுக.

20. மணந்தகம் என்றால் என்ன?

21. அக்காலத்துக் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?

பிரிவு - 3

எவையேனும் ஏழனுக்கு விடை தருக                               7 X 2 =14

22. பொருளுணர்ந்து சொற்றொடரில் அமைத்தெழுதுக.

ஊண்  -   ஊன்

23. காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தருக.

24. வெண்பாவிற்குரிய தளைகள் யாவை?

25. 'பெருந்தேர்' - பிரித்துப் புணர்ச்சிவிதி கூறுக.

26. 'விம்முகின்ற' - உறுப்பிலக்கணம் தருக.

27. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.

நிலத்தக் கௌறணும்டா, அப்பதான் வகுறு நிறையும்.

28. தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.

எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது.

29. ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் கலைச்சொல்லை எழுதுக.

அ) Arrival ஆ) Lobby

30. இலக்கணக் குறிப்புக் கண்டறிக.

அ) வெங்கதிர் ஆ) மறத்தல்

பகுதி- 3

பிரிவு - 1


எவையேனும் இரண்டனுக்கு விடைதருக                        2 x 4 = 8

31. வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்? 

32குகளோடு ஐவராகி வீடணளோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுக. 

33. 'எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது' - குறள்வழி விளக்குக.

34. வெண்பாவின் இலக்கணம் யாது?

பிரிவு-2

எவையேனும் இரண்டனுக்கு விடை தருக.             2 x 4 = 8

35. சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் - விளக்குக. 

36. நீர் நிலைகளில் உள்ள மணலை எடுப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை? 

37. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் விளக்கம்

எழுதுக. 

38.நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில்

நெறிப்படுத்துவீர்கள்?

பிரிவு-3

எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3×4=12

குறிப்பு : காதுகேளாத மாணவர்களுக்கு மட்டும் வினா எண் 41-க்கு மாற்று வினா

வழங்கப்பட்டுள்ளது.

39. பொருள் வேற்றுமை அணியை சான்றுடன் விளக்குக.

(அல்லது) 

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக. 

40.இலக்கிய நயம் பாராட்டுக. (ஏற்புடைய நயங்கள் நான்கனைச் சுட்டுக). 

பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளிப்

பிறமொழிக்குச் சிறப்பளித்த பிழையை நீக்க 

ஊற்றெடுத்தே அன்புரையால் உலுங்க வைத்திவ்

உலகத்தில் தமிழ்மொழிக்கு நிகரும் உண்டோ? 

கற்றுணர்ந்தே அதன்இனிமை காண்பாய் என்று

கம்பனொடு வள்ளுவனைச் சுட்டிக் காட்டித் 

தெற்றெனநம் அகக்கண்ணைத் திறந்து விட்ட

தெய்வக்கவி பாரதிஓர் ஆசான் திண்ணம். - நாமக்கல் கவிஞர்

41. அ) தமிழாக்கம் தருக.

1. Learning is a treasure that will follow its owner everywhere. 

2. A new language is a new life.

3. If you want people to understand you, speak their language.

4. Knowledge of languages is the doorway to wisdom.

42. பின்வரும் பழமொழியை வாழ்க்கை நிகழ்வோடு பொருத்தி எழுதுக.

'எறும்பு ஊரக் கல்லும் தேயும்'.

43. மழைக்காலப் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு உங்கள் பள்ளித் தலைமையாசிரியருக்குக் கடிதம் எழுதுக. 


குறிப்பு : கோது கேளாதவர்களுக்கான மாற்று வினா.

கீழ்க்காணும் பத்தியைப் படித்து ஐந்து வினாக்களை உருவாக்குக. 

         மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை. மொழியே மக்களின் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது. பெற்றதாயின் முதல் வேட்கை  அதன் குழந்தையுடன் பேசுதல். அவள் முதலில் அடையும் பெரிய மகிழ்ச்சி குழந்தையின் பேச்சைக் கேட்பதே ஆகும். குழந்தையின் மன வளர்ச்சியோடு தொடர்புடையது மொழி வளர்ச்சியே ஆகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது. மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும்.

பகுதி -4

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 3x 6 = 18

44. அ) தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.   (அல்லது)

ஆ) செய்ந்நன்றியறிதலே அறம்' என்பதை வாயுறை வாழ்த்தின் துணைக்கொண்டு நிறுவுக

45. அ) கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகளை எடுத்துக்காட்டி விளக்குக.   (அல்லது)

ஆ) பண்டைக்கால கல்வி முறையில் ஆசிரியர் - மாணவர்களுக்குகிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.

46. அ) பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்து கொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க. (அல்லது)

ஆ) சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு -இக்கூற்றை நனவாக்க நாம் செய்ய வேண்டியன

யாவை?

பகுதி - 5

47. அடிபிறழாமல் செய்யுள் வடிவில் விடை தருக               4+2=6

47. அ) “துன்பு உளது" எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக. 

ஆ) “எந்நன்றி” எனத் தொடங்கும் குறளை எழுதுக.


குருசடி      எம். ஏ. ஜெலஸ்டின்

கார்மல் மேனிலைப் பள்ளி ,முதுகலைத் தமிழாசிரியர் ,நாகர்கோவில்  .98434480985


12th தமிழ்|காலாண்டுத் தேர்வு|மாதிரி வினாத்தாள் 1|செப்டம்பர் 2023| QUESTION PAPER|FREE DOWNLOAD CLICK HERE

Post a Comment