11T 1 MID-MQP 1-2025
மாதிரி வினாத்தாள் - 1 11 ஆம் வகுப்பு
முதல் இடைப் பருவத்தேர்வு - 2025
பொதுத்தமிழ்
காலம்: 1.30 மணி மதிப்பெண்கள்: 45
பலவுள் தெரிக. 7 X 1 = 7
1 பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க.( மே 2022, ஜூன் 2023 )
அ) மல்லாரமே - யுகத்தின் பாடல்
ஆ) இன்குலாப் - ஒவ்வொரு புல்லையும்
இ) ஸ்டெஃபான் மல்லார்மே - புல்லின் இதழ்கள்
ஈ) இந்திரன் - பேச்சுமொழியும் கவிதை மொழியும்
i) அ , ஆ
ii) அ, இ
iii) ஆ , ஈ
iv) அ, இ
2. இன்குலாபின் கவிதைகள் ___________________ என்னும் பெயரில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ( செப் 2020 )
அ) உயிர்த்தெழும் காலத்துக்காக
ஆ) கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்
இ) ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
ஈ) கூவும் குயிலும் கரையும் காகமும்
இ) ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
3. "புல்லின் இதழ்கள்" எனும் நூலின் ஆசிரியர் ( ஜூன் 2019 )
அ) வால்ட் விட்மன்
ஆ) ஸ்டெஃபான் மல்லார்மே
இ) பாப்லோ நெரூடா
ஈ) எர்னஸ்ட் காசிரர்
4. மண்ணுக்கு வளம் சேர்ப்பன ( ஜூன் 2023 )
அ) மண்புழு
ஆ) ஊடு பயிர்
இ) இயற்கை உரங்கள்
ஈ) இவை மூன்றும்
5. Chemical Fertilizers கலைச்சொல் தருக.
அ) வேதி உரங்கள் ஆ) தொழு உரங்கள் இ) அறுவடை ஈ) ஒட்டு விதை
6. மொழி முதல் எழுத்துக்களின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க.
அ) அன்னம் , கிண்ணம்
ஆ) டமாரம் இங்ஙனம்
இ) ரூபாய் , இலட்சாதிபதி
ஈ) றெக்கை அங்ஙனம்
7. தமிழின் முதல் பாவடிவ நாடகநூல் (ஆகஸ்ட் 2022, மார்ச் 2023)
அ) இரக்சிய வழி
ஆ) மனோன்மணீயம்
இ) நூல்தொகை விளக்கம்
ஈ) திருவிதாங்கூர் அரசர் வரலாறு
எவைனும் இரண்டனுக்கு விடையளி. 2 X 2 = 4
8. “உழுவோர்க்கெல்லாம் விழுமிய வேந்து நீ” - தொடரின் பொருள் யாது?
9. இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையைக் குறிப்பிடுக.
( ஆகஸ்ட் 2022, மார்ச் 2023, ஜூன் 2023 )
10."நீளும் கைகளில் தோழமை தொடரும் நீளாத கைகளில் நெஞ்சம் படரும்" தொடை நயங்களை எடுத்தெழுதுக.
எவைனும் இரண்டனுக்கு விடையளி. 2 X 2 =4
11. “தொழு உரம்” என்றால் என்ன ? ( மார்ச் 2020 )
12. பேச்சு மொழி எழுத்து மொழியைக்காட்டினும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்? ( மார்ச் 2024 )
13.ஐந்து வேளாண்மை மந்திரங்கள் யாவை ? (மார்ச் 2019 மார்ச் 2024 , செப் 2020 )
எவையேனும் நான்கனுக்கு விடை தருக. 4 X 2 = 8
14 . மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் எத்தனை? அவை யாவை?
( மார்ச் 2024 )
15. மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
குரை, குறை ( செப் 2021 , மார்ச் 2024 )
16. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக,
அ) தேர்வெழுத வேகமாப் போங்க நேரங்கழிச்சி போனாப் பதட்டமாயிரும்.
( ஜூன் 2019, மே 2022, ஆகஸ்ட் 2022 )
ஆ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராமப் போவாது,
( ஜூன் 2019, செப் 2021, மே 2022, ஆகஸ்ட் 2022
17. தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர்களாக்குக
நிலவு வீசுவதால் தெற்கிலிருந்து மாலை தென்றல் மகிழ்விக்கும் எனப்படுகிறது மனதை.
( மார்ச் 2020 )
18. பிறமொழிச் சொற்களுக்குத் தமிழாக்கம் தருக
அ) விசா ஆ) தேசம்
19. தமிழாக்கம் தருக.
1.The pen is mightier than the sword. ( ஜூன் 2019, ஜூன் 2023 )
2. A picture is worth a thousand words. ( ஜூன் 2019, மே 2022 )
ஏதேனும் இரண்டனுக்கு விடையளி 2 X 4 = 8
20. பாடத்தான் வேண்டும் என சு. வில்வரத்தினம் எவற்றைக் குறிப்பிடுகிறார்? ( மார்ச் 2023 )
21. ‘இவ்வயின் யாமெல்லாம் செவ்விதில் துன்னில் தழைப்பதற்கு இடமில்லை’ இடஞ்சுட்டி பொருள் விளக்குக.
22.ஐங்குறுநூற்று பாடல் சுட்டும் திணை, முதற்பொருள், கருப்பொருள்களை அட்டவணைப்படுத்துக.
ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி 1 X 4 = 4
24 . வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா? நும் கருத்தை எழுதுக.
( மார்ச் 2020, மார்ச் 2023 )
25. கவிதை ஒரு படைப்பு செயல்பாடு என்பதை விளக்குக.
ஏதேனும் ஒன்றனுக்கு விரிவான விடை எழுதவும். 1 x 6 = 6
26. ‘யானை டாக்டர்’ கதை வாயிலாக இயற்கை, உயிரினப் பாதுகாப்பு ஆகியவை குறித்து நீவர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக. ( மே 2022 )
27. நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சு மொழியையும் எழுத்து மொழியையும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க. ( மார்ச் 2020 ,ஜூன் 2019,மே 2022 ,மார்ச் 2024 )
மனப்பாடப் பகுதியை அடிபிறழாமல் எழுதுக. 4
28. ஏடு தொடக்கி..... எனத் தொடங்கும் யுகத்தின் பாடல்
குருசடி எம்.ஏ. ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
Click Here to download the document.