Loading ....

11 ஆம் வகுப்பு,இயல் - 1, மொழிமுதல், இறுதி எழுத்துகள்,இலக்கணம்,புத்தக வினாக்கள்,Book back Question

                                        11 ஆம் வகுப்பு 

இயல் - 1, மொழிமுதல், இறுதி எழுத்துகள்



வினாக்கள்



இலக்கணத் தேர்ச்சிகொள்

1.தவறான இணையைத் தேர்வு செய்க 

அ) மொழி +  ஆளுமை -  உயிர்+ உயிர்      

ஆ)  தமிழ் + உணர்வு  - மெய் + உயிர் 

இ) கடல் + அலை           -  உயிர் +  மெய்      

ஈ) மண்+ வளம்          - மெய் + மெய்

விடை :  இ) கடல் + அலை           -  உயிர் +  மெய்

  

 2. கீழ்க்காணும் குறிப்புகளில் பொதிந்துள்ள மேடைப்பேச்சில் சிறந்து விளங்கிய தமிழ்    அறிஞர்களின் பெயர்களைக் கண்டறிக.    

   அ) சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த முதல்வர்(3) 

    விடை : அண்ணா 

   ஆ) தொழிலாளர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர்(10) 

   விடை :  கல்யாண சுந்தரனார்  

   இ)உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே என்று பாடியவர்(6) 

   விடை : பாரதிதாசன் 

   ஈ)பொதுவுடைமைக் கொள்கையின் முன்னோடிகளில் ஒருவர்(2) 

   விடை : ஜீவா


 எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095


3. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக. 

    அ) காலங்காத்தால எந்திரிச்சுப் படிச்சா ஒரு தெளிவு கெடைக்கும். 

          விடியற்காலையில் எழுந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும். 

    ஆ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராமப் போவாது. 

           முயற்சி செய்தால் அதற்கேற்ற பலன் வராமல் போகாது. 

    இ) காலத்துக்கேத்த மாரிப் புதுசுபுதுசா மொழி வடிவத்தை மாத்தனும். 

          காலத்திற்கேற்ற படி புதிதுபுதிதாக மொழி வடிவத்தை மாற்ற வேண்டும். 

    ஈ) ஒவ்வொருத்தரும் பேசிக்கிட்டிருக்கும்போது எல்லாத்தையும் கவனமாப் பதியவைக்கனும்.            

         ஒவ்வொருவரும்  பேசிக் கொண்டிருக்கும் போது எல்லாவற்றையும் கவனமாகப் பதிய 

         வைக்க வேண்டும். 

   உ) தேர்வெழுத வேகமாப் போங்க, நேரங்கழிச்சு போனாப் பதட்டமாயிரும். 

         தேர்வெழுத வேகமாகப் போக வேண்டும், நேரம் கழித்துச் சென்றால் பதற்றம் ஆகிவிடும்.


4.வினாக்கள்

 

அ) மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் எத்தனை? அவை யாவை? 

            மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் மொத்தம் இருபத்தி இரண்டு. 

அவை, 

        i) உயிர் 12 -அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ

       Ii ) மெய் 10  - க் ங் ச் ஞ் த் ந் ப் ம் ய் வ (10 மெய்களின் வரிசை)

ஆ) மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் எத்தனை? எடுத்துக்காட்டு தருக. 

             மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் 24. 

 அவை, 

                  i)  உயிர் 12 -அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ  மொழிக்கு இறுதியில் வரும். 

                      எ.கா:  வரவு ( வு =வ் + உ ) ‘உ’ உயிர் 

                  ii) மெய்களில் ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்  என்னும் 11 எழுத்துக்களும் சொல்லின் 

                      இறுதியில் வரும்.

                      எ.கா: மண் (ண் > மெய் )

                 iii) குற்றியலுகரம் ஒன்று ஆக 24 ஆகும்.

                     எ.கா : ஆறு (‘று’ > குற்றியலுகரம்)  

                 iv)  ஞ் ந் வ்  மூன்றும் பழைய இலக்கிய வழக்கில் சொல்லின் இறுதி எழுத்தாக வந்துள்ளன,    ஆயினும், இன்றைய வழக்கில் இவை சொல்லுக்கு இறுதி எழுத்தாக வருவதில்லை.


 இ) உயிரீறு, மெய்யீறு - விளக்குக.

 உயிரீறு:

          மணி(ண் + இ) + மாலை =  மணிமாலை ( ண் + இ )

நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் மெய்யாக இருந்தாலும்(ணி) அதன் இறுதியில் நிற்கும் வடிவம் (இ) உயிர் என்பதால் அஃது ‘உயிரீறு’ எனப்படும்.

மெய்யீறு:  

         பொன் + வண்டு =  பொன்வண்டு( பொன் > ‘ன்’ - மெய் )

நிலைமொழியின் இறுதி எழுத்து  மெய்யாக இருந்தால் அது மெய்யீறு  எனப்படும்.


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095


ஈ) உயிர் முதல், மெய்ம்முதல் எடுத்துக்காட்டுடன் விவரிக்க. 

உயிர்முதல்: 

        வாழை + இலை = வாழை இலை. ( லை - வருமொழி, முதலெழுத்து ‘இ’ > உயிர் 

வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருந்தால் அது உயிர் முதல் எனப்படும்.   

மெய்ம்முதல்:

       தமிழ்+  நிலம்  = தமிழ்நிலம் ( நிலம் - வருமொழி; நி > ந் + இ = ந் > மெய் ) 

வருமொழியின் முதலெழுத்து உயிர் மெய்யாக இருந்தாலும் அதன் முதலில் நிற்கும் வடிவம் மெய் என்பதால், அது மெய்ம்முதல் எனப்படும்.


 
உ) குரங்குக்குட்டி -  புணர்ச்சியை  விளக்குக.  

          “ சில மென்றொடர் குற்றியலுகரத்திற்குப் பின்னர் வல்லினம் மிகும்”  என்ற விதியின் படி குரங்குக்குட்டி என்று புணர்ந்தது.

( வல்லினம் மிகவில்லை  என்றால் குரங்கு குட்டி என வரும் .அவ்வாறு வந்தால் குரங்கும் குட்டியும் என்று வந்து உம்மைத்தொகையாக மாறிவிடும்.  வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் மிகுந்ததால் குரங்கின் குட்டி என்ற பொருளைத் தருகின்றது.)


 
ஊ) மொழி முதல் எழுத்துக்களின் அடிப்படையில் முறையானதைக்  கண்டுபிடிக்க.

அ)  அன்னம், கிண்ணம்                           ஆ) டமாரம், இங்ஙனம் 

இ) ரூபாய், லட்சாதிபதி                             ஈ) ரெக்கை, அங்ஙனம் 

விடை : அ) அன்னம், கிண்ணம்


   

எ) உயிரெழுத்து,பன்னிரண்டு,  திருக்குறள், நாலடியார் -  இச்சொற்களில்  எவ்வகை ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன?

    உயிரெழுத்து    - குற்றியலுகர ஈறு

    பன்னிரண்டு    -  குற்றியலுகர ஈறு  

    திருக்குறள்       -  மெய்யீறு 

    நாலடியார்        -  மெய்யீறு


 
ஏ) மொழி முதல், இறுதி எழுத்துகள் யாவை? ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுத் தருக. 

மொழி முதல் எழுத்துக்கள் -  22.

அவை,

                 1.உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும். எ.கா:  - ம்மா 

                 2. மெய்யெழுத்துக்கள் தனிமெய்  வடிவில் சொல்லுக்கு அவை உயிரெழுத்துகளோடு  சேர்ந்து உயிர்மெய்  வடிவிலேயே மொழிக்கு முதலில் வருகின்றன. எ.கா:குறள் 

                3. மெய்களில்  10  - க் ங் ச் ஞ் த் ந் ப் ம் ய் வ்  என்னும் 10 மெய்களின் வரிசைகள் உயிர்மெய்  வடிவங்களாகச்  சொல்லின் முதலில் வரும். 

                  ( ஙனம் எனும் சொல்லில் மட்டுமே ங வரும் )  

               4. ட் ண் ர் ல் ழ் ள் ற் ன் என்னும் எட்டு மெய் வரிசைகள் சொல்லின் முதலில் வருவது இல்லை. 

               5. ஆயுத எழுத்து சொல்லின் முதலில் வராது.

 மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் 24. 

 அவை, 

                  i)  உயிர் 12 -அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ  மொழிக்கு இறுதியில் வரும். 

                      எ.கா:  வரவு ( வு =வ் + உ ) ‘உ’ உயிர் 

                  ii) மெய்களில் ஞ் ண் ந் ம் ன் ய் ர் ல் வ் ழ் ள்  என்னும் 11 எழுத்துக்களும் சொல்லின்  இறுதியில் வரும்.

                      எ.கா: மண் (ண் > மெய் )

                  iii) குற்றியலுகரம் ஒன்று ஆக 24 ஆகும்.

                     எ.கா : ஆறு (‘று’ > குற்றியலுகரம்)  

                  iv) க் ச் ட் த் ப் ற்  என்ற  வல்லின மெய் ஆறும் ,ங் எனும் மெல்லினமெய் சொல்லின் இறுதியில் வருவது இல்லை

                 v) பழைய இலக்கண நூலார் மொழி இறுதிக் குற்றியலுகர எழுத்தையும் சேர்த்துக் கொள்வர்.ஞ் ந் வ்  மூன்றும் பழைய இலக்கிய வழக்கில் சொல்லின் இறுதி எழுத்தாக வந்துள்ளன, ஆயினும், இன்றைய வழக்கில் இவை சொல்லுக்கு இறுதி எழுத்தாக வருவதில்லை.


 
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095


விடைக் குறிப்பு pdf download செய்ய கீழ்க்காணும் download button click செய்யவும்👇👇👇👇👇👇



Post a Comment

Previous Post Next Post