Loading ....

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 2021 2022 வகுப்பு : 12 ஒரு மதிப்பெண் வினா விடை : பகுதி - 2 கொள்குறி வகை வினாக்கள் ( பலவுள் தெரிக ) 75 One Word Question & Answers

 புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்    2021 2022

வகுப்பு : 12



ஒரு மதிப்பெண் வினா விடை  : பகுதி - 2

கொள்குறி வகை வினாக்கள் ( பலவுள் தெரிக )

75 One Word Question & Answers



1.பதம் என்பதன் பொருள்

 அ) பகுப்பு          ஆ) பிரிவு         இ) சொல்            ஈ) கிழவி

 விடை : இ) சொல்


2. பகுபதத்தில் சுட்டப் பெறாத  உறுப்பு எது?

அ) சந்தி          ஆ) விகாரம்        இ) இடைநிலை      ஈ) எழுத்துப்பேறு 

 விடை :ஈ) எழுத்துப்பேறு


3. 'ஆ’ என்ற இடைநிலையின் பெயர் என்ன?

அ) எதிர்மறை    ஆ) இறந்தகால        இ) எதிர்கால         ஈ)உடன்பாட்டு

   விடை : அ) எதிர்மறை


4. காலம்கரந்தபெயரெச்சம் என்பது?

அ) பெயரெச்சம்.             ஆ) வினைமுற்று    இ)வினையெச்சம்        ஈ) வினைத்தொகை

    விடை :  ஈ) வினைத்தொகை


5. எவ்உயிரெழுத்தில்   யகரமும் வகரமும்  உடம்படுமெய்யாக வரும் 

 அ)ஈ              ஆ) ஐ              இ) ஏ         ஈ) இ 

      விடை : இ) ஏ


6.நரகர் எந்த திணையில் அடங்குவர்.

அ) அஃறிணை            ஆ)உயர்திணை        இ) பொதுத்திணை     ஈ) இவற்றில் எதுவுமில்லை

    விடை : ஆ)உயர்திணை


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095


 

7.புறநானூற்றில் சொல்லப்படாத திணை எது?

அ) வெட்சி       ஆ) நொச்சி        இ) உழிஞை        ஈ) வஞ்சி

    விடை : இ) உழிஞை


8.காய் நெல் அறுத்து கவளம் கொளினே இப்பாடலின் துறை என்ன?

அ) செவியறிவுறூஉ            ஆ) பரிசில்    இ) இயன்மொழித்துறை        ஈ)பொருண்மொழிக்காஞ்சி

     விடை :   அ) செவியறிவுறூஉ


9.புகழெனின் உயிரும் கொடுக்குவர் இப்பாடலைப் பாடியவர் யார்

அ) நரிவெரூஉத்தலையார்      ஆ) மோசிகீரனார்     

இ) நக்கீரனார்   ஈ) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

    விடை : ஈ) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி


10. தண்டியலங்காரம் கூறும் இலக்கணம் எது?

அ) சொல்லிலக்கணம்        ஆ) யாப்பிலக்கணம்     

இ) அணிஇலக்கணம்         ஈ) இவற்றில் எதுவுமில்லை

     விடை : இ) அணிஇலக்கணம்


11. தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே 

      நாவினால் சுட்ட வடு- இப்பாடலின் அணி என்ன?

அ) உவமை அணி        ஆ) உருவக அண     இ) ஏகதேச உருவகஅணி    ஈ) வேற்றுமை அணி

     விடை : ஈ) வேற்றுமை அணி


12.தமிழ் இலக்கியத்தில் உள்ள சுவைகள் எத்தனை?

அ) ஆறு    ஆ) ஏழு          இ) ஐந்து    ஈ) எட்டு

    விடை : ஈ) எட்டு


13.அகவற்பா என்று எதைக் கூறுகிறோம்?

அ) ஆசிரியப்பா      ஆ) கலிப்பா      இ) வெண்பா    ஈ) வஞ்சிப்பா

விடை : அ) ஆசிரியப்பா


14.சிந்துப்பா என்ன ஓசை பெற்று வரும்?

அ) அகவல் ஓசை        ஆ) துள்ளல் ஓசை    இ) செப்பல் ஓசை        ஈ) தூங்கல் ஓசை 

     விடை : இ) செப்பல் ஓசை


15.தன்மை அணி என்று எந்த அணியைக் கூறுவர்?

 அ) உருவகஅணி                          ஆ) இயல்பு நவிற்சி அணி 

 இ) உயர்வு நவிற்சி அணி             ஈ) உவமை அணி

    விடை : ஆ) இயல்பு நவிற்சி அணி


16.‘கம்பெனி’ இச்சொல்லின் தமிழ் பெயர் என்ன?

 அ) நிறுவனம்       ஆ) நிர்வாகம்         இ) குழுமம்       ஈ) கூட்டமைப்பு 

    விடை : இ) குழுமம்


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095


17.கூரை வேய்ந்தார். இச்சொற்றொடர் என்ன மரபு வகையைச் சார்ந்தது?

 அ) இட மரபு       ஆ) வினை மரபு       இ) காலமரபு       ஈ) சினை மரபு

விடை : ஆ) வினை மரபு


    

18.’பசுத்தோல் போர்த்திய புலி’ -  இது என்ன வகை உவமை?

 அ) பயன் உவமை      ஆ) பெயர் உவமை    இ) தொழில் உவமை    ஈ) பண்பு உவமை 

     விடை : இ) தொழில் உவமை


 

19. உவமையின் தன்மையை உவமேயத்தில் ஏற்றி கூறும் அணி எது?

 அ) உருவக அணி                           ஆ) உவமை அணி    

 இ) உயர்வு நவிற்சி அணி             ஈ) இவற்றில் எதுவுமில்லை

     விடை : அ) உருவக அணி


20. இடைச் சங்க காலத்தில் இயற்றப்பட்ட இலக்கண நூல் எது?

அ) தண்டியலங்காரம்     ஆ) மாறனலங்காரம்       இ) தொல்காப்பியம்       ஈ) குவலயானந்தம்

     விடை : இ) தொல்காப்பியம்


21.”வாயிலோயே வாயிலோயே” இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

அ) அகநானூறு             ஆ) நற்றிணை     இ) புறநானூறு                ஈ) ஐங்குறுநூறு

    விடை : இ) புறநானூறு

22.தொல்காப்பியர் குறிப்பிடும் புறத்திணைகள் எத்தனை?

அ) 8         ஆ) 11             இ) 12              ஈ ) 7

     விடை : ஈ ) 7


23.அகவற்பா என்று எதைக் கூறுகிறோம்?

அ) ஆசிரியப்பா     ஆ) கலிப்பா     இ) வெண்பா              ஈ) வஞ்சிப்பா

     விடை : அ) ஆசிரியப்பா


24.பாண்டியன் அறிவுடை நம்பியை நெறிப்படுத்திய புலவர் யார்?

அ) மோசிகீரனார்                                 ஆ) பிசிராந்தையார்  

இ) நக்கீரனார்                                         ஈ) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

     விடை : ஆ) பிசிராந்தையார்


25.கீழ்க்காண்பவற்றுள் தவறான சொல்லைத் தேர்ந்தெடு

 அ) ஊரினர்             ஆ) உறுப்பினர்      இ) நடத்துநர்                     ஈ) இயக்குனர்

     விடை : ஈ) இயக்குனர்


26.”உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்; இந்தப் புணர்ச்சி விதி 

     எந்தப் புணர்ச்சிக்கு உரியது?

அ) மெய்யீற்றுப் புணர்ச்சி                    ஆ) உயிரீற்றுப் புணர்ச்சி 

இ) மகர ஈற்றுப்புணர்ச்சி                        ஈ) குற்றியலுகரப் புணர்ச்சி

விடை : ஈ) குற்றியலுகரப் புணர்ச்சி


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095


 27.பொருண்மொழிக் காஞ்சித் துறை எந்தத் திணையில் வரும்?

அ) வஞ்சித் திணை        ஆ) பாடாண்திணை    இ) பொதுவியல் திணை       ஈ) காஞ்சித் திணை

    விடை : இ) பொதுவியல் திணை


28. இறந்த காலத்தை உணர்த்தும் இடைநிலைகள்

அ) த், ட், ற்             ஆ) ப், வ்               இ) அல், இல்                ஈ) கிறு, கின்று, ஆநின்று

விடை : அ) த், ட், ற்


 29.உடம்படு மெய் புணர்ச்சி என்ன வகை புணர்ச்சி?

அ) மெய்யீற்றுப் புணர்ச்சி                      ஆ) உயிரீற்றுப் புணர்ச்சி 

இ) மகர ஈற்றுப்புணர்ச்சி                          ஈ) குற்றியலுகரப் புணர்ச்

விடை : ஆ) உயிரீற்றுப் புணர்ச்சி


30.‘ஓடு’ என்ற வினைச்சொல்லை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமாக மாற்றுக

அ) ஓடா      ஆ) ஓடிய      இ) ஓடா          ஈ) ஓடாது

விடை : இ)  ஓடா


31. நிலைமொழி ஈற்றில் இ ஈ ஐ ஆகிய எழுத்துகள் வரும்போது என்ன 

எழுத்து உடம்படு மெய்யாக வரும்?

அ) யகரம்             ஆ) வகரம்                  இ) யகரமும் வகரமும்        ஈ) தகரம்

விடை : அ) யகரம்


 

32. அகத்திணை எதனைப் பற்றியது?

அ) உலகியல்       ஆ) நடப்பியல்        இ) வாழ்வியல்          ஈ) கற்பியல்

விடை :  இ) வாழ்வியல்


33. புறத்திணை எதனைப் பற்றியது?

அ) உலகியல்        ஆ) நடப்பியல்      இ) வாழ்வியல்           ஈ) கற்பியல்

விடை :  அ) உலகியல்


34.மெய்ப்பாடு ஒவ்வொன்றும் எத்தனை பொருளில் வரும்?

அ) ஐந்து               ஆ) நான்கு              இ) மூன்று                     ஈ) எட்டு

விடை : ஆ) நான்கு


35.க், ச், ட் ,த்,ப்,ற் -  இதில் சந்தி  எழுத்துகளாகப்பயன்படுத்த முடியாத எழுத்துகள் எவை?

அ) க்,ச்                 ஆ) ட்,ப்              இ) ற் ,க்                ஈ) ட்,ற்

விடை : ஈ) ட், ற்


36. 'அ' - என்பது சுட்டெழுத்து என்றால் 'அந்தக்கடை' என்ற சொல்லில்

இடம் பெறும் 'அந்த' என்பதை எவ்வாறு  அழைப்பர்?

அ) வினையடை           ஆ) பெயரடை      இ) முன்னடை         ஈ) சுட்டடை

விடை :  ஆ)பெயரடை


37.அந்தக்கோயில், இந்த மாநிலம், இந்த மனிதன், எந்தப் புத்தகம் இதில் வினாப்பெயரடைச் சொல்லை எழுதுக.

அ) அந்தக்கோயில்         ஆ) இந்த மாநிலம்        இ) இந்த மனிதன்         ஈ) எந்தப் புத்தகம்

விடை :  ஈ) எந்தப்புத்தகம்.


38. செடி+ கொடி = செடிகொடி  இதில் வல்லினம் மிகாது ஏனென்றால்  இது_________ தொகை.

அ) பண்புத்                      ஆ) உவமைத்                    இ) உம்மைத்                  ஈ) வேற்றுமைத்

விடை : ஆ)  உம்மைத்


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095


39. ‘TYPHOID’ என்பதன் தமிழ்ச்சொல் 

அ) குடற்காய்ச்சல்       ஆ) மலேரியா              இ) தலைவலி காய்ச்சல்         ஈ) மூளைக்காய்ச்சல்

விடை : அ) குடற்காய்ச்சல்


 

40.  ஊடுகதிர் என்பதன் ஆங்கிலச்சொல்

அ) XEROX              ஆ) X - RAY              இ) SCAN            ஈ) C T SCAN

விடை : ஆ) X - RAY


 

41.’ ROUGH NOTEBOOK’ - என்பதன் தமிழ்ச்சொல் 

அ) குறிப்புச் சுவடி           ஆ) சுவடி             இ) விளக்கச் சுவடி          ஈ) பொதுக் குறிப்புச் சுவடி

விடை :ஈ) பொதுக் குறிப்புச் சுவடி


42. ‘ART CRITIC’ -  என்பதன் தமிழ்ச்சொல் 

அ) கலை விமர்சகர்           ஆ) புலம்பெயர்பவர்       இ) மெய்யியலாளர்        ஈ) இதழாளர்

விடை :அ) கலை விமர்சகர்


43.  ‘HARVESTING’ - என்பதன் தமிழ்ச்சொல் 

அ) ஒட்டு விதை              ஆ) உரம் இடுதல்                    இ) அறுவடை               ஈ) களை பறித்தல்

விடை : இ) அறுவடை


 

44.  ‘செந்தமிழ்ச் செம்மல்’ என்று அழைக்கப்பட்டவர் யார்? 

அ) கால்டுவெல்         ஆ) ஜி. யு. போப்        இ) வீரமாமுனிவர்          ஈ) ஹீராஸ் பாதிரியார்

விடை : ஆ) ஜி. யு. போப்


45. ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல் எது?  

அ) திருவாசகம்          ஆ) பெரியபுராணம்       இ) திருவிளையாடல் புராணம் ஈ) சிவபுராணம்

விடை : அ) திருவாசகம்

46.  கடிதத்தின் வகைகளாக  நமது பாடப்பகுதி குறிப்பிடுபவை எத்தனை? 

அ) 13     ஆ) 14       இ) 12     ஈ) 8

விடை ; அ) 13


47.  “SMART PHONE” - என்பதன் தமிழாக்கம் 

அ) அலைபேசி       ஆ) மின்பேசி       இ) திறன்பேசி      ஈ) கைபேசி

விடை ; இ) திறன்பேசி


48.  “CARROM” - என்பதன் தமிழாக்கம் 

அ) பல்லாங்குழியாட்டம்       ஆ) நாலாங்குழியாட்டம்       இ) சதுரங்கம்      ஈ) துளையாட்டம்

விடை ;  ஆ) நாலாங்குழியாட்டம்


 

49.  ;/ இந்தக் குறியீடு உணர்த்துவது எதனை 

அ) முற்றுப்புள்ளி இடவும்      ஆ) அரைப்புள்ளி சேர்த்தல்   

இ) கால் புள்ளி சேர்த்தல்        ஈ) இவற்றில் ஏதும் இல்லை

விடை ; ஆ) அரைப்புள்ளி சேர்த்தல்


50. மொய்ப்புத் திருத்தக்  குறியீடட்டில் I.C என்ற  இந்தக் குறியீடு உணர்த்துவது எதனை? 

அ) சொற்களை எழுத்துக்களை  மாற்றுக          ஆ) எழுத்துருவைச்  சிறியதாக ஆக்குக 

இ) எழுத்துருவைப்  பெரியதாக ஆக்குக               ஈ) இடம் விட்டு எழுதுக

விடை : ஆ) எழுத்துருவைச்  சிறியதாக ஆக்குக


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095


 

51. மொய்ப்புத் திருத்தக்  குறியீடட்டில் # என்ற இந்தக் குறியீடு உணர்த்துவது 

அ) இடைவெளி விடுதல்           ஆ) பத்தியை நீக்குதல்       

இ) சொற்களைச் சேர்த்தல்       ஈ) சொற்களை நீக்குதல்

விடை : அ) இடைவெளி விடுதல்


 

52.  இரண்டாம் வேற்றுமைக்கு வழங்கும் வேறு பெயர் என்ன? 

அ) விளி வேற்றுமை                                 ஆ) எழுவாய் வேற்றுமை 

இ) செயப்படுபொருள் வேற்றுமை       ஈ) செய்வினை வேற்றுமை

விடை : இ) செயப்படுபொருள் வேற்றுமை


 

53. ’ குமரன் சினத்தை விடுத்தான்’ இதில் வரும் இரண்டாம் வேற்றுமை உருபு குறிப்பிடும்   பெயர்  தரும் பொருள் என்ன ?  

அ) ஆக்கல்            ஆ) அழித்தல்            இ) அடைதல்         ஈ) நீத்தல்

விடை : ஈ) நீத்தல்


54.  ‘கோயில்  அரசனால் கட்டப்பட்டது’ - இதில் வரும் மூன்றாம் வேற்றுமை உருபு என்ன பொருளில் வந்துள்ளது 

அ) கருவி              ஆ) உடன் நிகழ்ச்சி       இ) கருத்தா        ஈ) முறை

விடை : இ) கருத்தா


55.  ‘கூலிக்கு வேலை’ இதில் வரும் நான்காம் வேற்றுமை உருபு என்ன பொருளில் வந்துள்ளது அ)  தகுதி            ஆ) எல்லை                        இ) கொடை         ஈ) பொருட்டு

விடை : ஈ) பொருட்டு


56.  ஏழாம் வேற்றுமைக்கு  வழங்கும் இன்னொரு பெயர் 

அ) விளி வேற்றுமை                                       ஆ) எழுவாய் வேற்றுமை 

இ) செயப்படுபொருள் வேற்றுமை             ஈ) இட வேற்றுமை

விடை : ஈ) இட வேற்றுமை


57. அகநானூறு எத்தனை பிரிவுகளை உடையது 

அ) 2                  ஆ) 4                      இ) 3                ஈ) 5

விடை : இ) 3


58.  10, 20,  30 என்ற வரிசை உடைய அகநானூற்றுப் பாடல்கள் உணர்த்தும் திணை 

அ) பாலை             ஆ) நெய்தல்               இ) குறிஞ்சி               ஈ) முல்லை

விடை : ஆ) நெய்தல்


 

59.  திருக்குறளின் மொத்த இயல்கள் 

அ) 7                            ஆ) 6                            இ) 5                                ஈ) 9

விடை : ஈ) 9


60.  அறத்துப்பால் மொத்த அதிகாரங்கள் 

அ) 38                          ஆ) 25                         இ) 72                                ஈ) 70

விடை : அ) 38


61. மணிமேகலையின் மொத்த காதைகள் 

அ) 20                       ஆ) 30                         இ) 18                                   ஈ) 16

விடை : ஆ) 30


 

62.  இவற்றுள் எது சிறுகாப்பியம்  இல்லை 

அ) குண்டலகேசி           ஆ) சூளாமணி         இ) நீலகேசி             ஈ) யசோதர காவியம்

விடை : அ) குண்டலகேசி


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095


 

63.  சிலப்பதிகாரம் கூறும் உண்மைகள் எத்தனை? 

அ) 5                 ஆ) 4               இ) 3                       ஈ) 6

விடை : இ) 3


 

64. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை உடையது 

அ) 6                    ஆ) 3                   இ) 2                       ஈ) 4

விடை : ஆ) 3


65.  ‘புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம்’ என்றவர் 

அ) அண்ணா       ஆ) வீரமாமுனிவர்       இ) ராஜாஜி        ஈ) கண்ணதாசன்

விடை : இ) ராஜாஜி


66.  உலகின் முதல் சிறுகதை எங்கே தோன்றியது 

அ) அமெரிக்கா        ஆ) இங்கிலாந்து         இ) ஜெர்மனி       ஈ) இத்தாலி

விடை : அ) அமெரிக்கா


67.  உலக சிறுகதையின்  தந்தை என்று அழைக்கப்படுபவர் 

அ) ரவீந்திரநாத் தாகூர்      ஆ) ஸ்டிபன் சுமித்       இ) ராபின் உட்      ஈ) செகாவ்

விடை : ஈ) செகாவ்


68.  தமிழ் சிறுகதையின் தந்தை எனப் பாராட்டப்படுபவர் 

அ) ராஜாஜி       ஆ) அண்ணா        இ) வ. வே. சு. ஐயர்       ஈ) புதுமைப்பித்தன்

விடை : இ) வ. வே. சு. ஐயர்


 

69.  “தமிழ்நாட்டின் மாப்பாசான்” எனப் போற்றப்படுபவர் 

அ) வ.வே.சு.ஐயர்      ஆ) ராஜாஜி      இ) புதுமைப்பித்தன்        ஈ) தாண்டவராய முதலியார்

விடை : இ) புதுமைப்பித்தன்

70.   பாடப் புத்தகம் குறிப்பிட்டுள்ள கட்டுரை வகைகள் 

அ) 8                    ஆ) 10                   இ) 12                   ஈ) 14

விடை : ஆ) 10


 

71. பொதுவாக எத்தனை தலைப்பின்கீழ் நேர்காணல் வகைப்படுத்தப்படுகிறது 

அ) 11                   ஆ) 12                  இ) 10                   ஈ) 13

விடை : அ) 11


72. ‘STRAW’ - என்பதன் தமிழாக்கம்

அ) புல்                 ஆ) வைக்கோல்              இ) சருகு                    ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை : ஆ) வைக்கோல்


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095


73. ‘CEILING’ -  என்பதன் தமிழாக்கம்               

அ) தரைத்தளம்               ஆ) கான்கிரீட் தளம்                இ) உச்சவரம்பு              ஈ) இறுதி நிலை

விடை : இ) உச்சவரம்பு


74.. மா  பலா  வாழை -  எண்ணும்மையாக  மாற்றுக

அ) மாபலாவாழை                                        ஆ) மாவும்   பலாவும்  வாழையும்

இ) மாமரம் பலாமரம் வாழை மரம்          ஈ) மாவும் பலாவும் மரம் 

விடை : ஆ) மாவும்   பலாவும்  வாழையும்


75.புறப்பொருள் வெண்பாமாலை என்ற நூலின் ஆசிரியர் யார்

 அ) கபிலர்       ஆ) ஐயனாரிதனார்     இ) நக்கீரர்       ஈ) இளம்பூரனார்

 விடை : ஆ) ஐயனாரிதனார்






விடைக் குறிப்பு pdf download செய்ய கீழ்க்காணும் download button click செய்யவும்👇👇👇👇👇👇



Follow us on (click the below icons to follow)


      


Want our latest news??

View our blog for latest news (click the icon below to visit our blog)


Tamilamuthu 2020 



Keep Supporting Tamilamuthu 2020



Photo by Toa Heftiba on Unsplash




Post a Comment

Previous Post Next Post