12th Standard -Tamil -Study Material - SECOND REVISION EXAM - MARCH 2022- ONE WORD QUESTIONS - ANSWER KEY
தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில்12th standard- Second Revision exam -March 2022 இடம்பெற இருக்கின்ற தேர்விற்கான One Word Question Paper with Answer key இங்குத் தொகுத்து Study Material ஆக தரப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளே நீங்கள் இந்த ஒரு தொகுப்பினை Study Material ஐ முழுவதுமாகப் படிப்பதன் மூலமாக தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான முதல் திருப்புதல் தேர்வில் 12th standard- Second Revision exam -March 2022 இல் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஒரு கேள்வித் தொகுப்பினைப்( Study Material )பதிவிறக்கம் செய்து நீங்கள் முழுவதுமாக படித்துப் புரிந்து தேர்வு எழுதினால் போதுமானது. இந்த ஒரு பகுதியை மட்டும் நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12 ஆம் வகுப்பிற்கான இரண்டாம் திருப்புதல் தேர்வில்12th standard- Second Revision exam -March 2022 நீங்கள் நிச்சயமாக அதிக மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த Study Material ஐ நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்த்தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்ணைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற இரண்டாம் திருப்புதல் தேர்வில் 12th standard- Second Revision exam -March 2022 நிச்சயமாக இடம்பெற இருக்கின்ற இந்தக் கேள்விகளை நன்றாகப்ப் படித்து சிறப்பாக தேர்வை எழுத உங்களுக்கு இந்த Study Material உதவும். வெற்றி பெற வாழ்த்துகின்றேன். Kurusady M.A.Jelestin
12 ஆம் வகுப்பு - இரண்டாம் திருப்புதல் தேர்வு - மார்ச் 2022
ஒரு மதிப்பெண் வினாக்கள்
பகுதி-1
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக
1.படத்திற்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க
அ) எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின் (பக் : எண் : 160)
ஆ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து
இ) வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
2.நெடுங்கணக்கு என்பது
அ) நீண்ட கணக்கு
ஆ) கணிதம்
இ) பெருக்கல் கணக்கு
ஈ ) அரிசுவடி
3. பொருத்துக
அ) மாச்சீர் - 1. கருவிளம், கூவிளம்
ஆ) காய்ச்சீர் - 2. நாள், மலர்
இ) விளச்சீர் - 3. தேமாங்காய், புளிமாங்காய்
ஈ) ஓரசைச்சீர் - 4. தேமா, புளிமா
அ) 1 2 4 3
ஆ) 4 3 1 2
இ) 2 3 1 4
ஈ) 3 4 2 1
4.‘உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்’ இத்தொடர் உணர்த்தும் பண்பு
அ) நேர்மறைப் பண்பு
ஆ) எதிர்மறைப் பண்பு
இ) முரண் பண்பு
ஈ) இவை அனைத்தும்
5.பொருத்துக
அ) பாம்போடு உடன் உரைந்தற்று - 1. தீக்காய்வார்
ஆ) செத்தார் - 2. சீர் அழிக்கும் சூது
இ) வறுமை தருவது - 3. கள் உண்பவர்
ஈ) இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார் - 4. உடம்பாடு இலாதவர்
அ) 1 2 3 4
ஆ) 2 3 4 1
இ) 4 1 2 3
ஈ) 4 3 2 1
6. நடுங்கும்படியான துன்பம் இல்லாதவர் (பக் : எண் : 161)
அ) வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர்
ஆ) மனத்திட்பம் உடையவர்
இ) அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர்
ஈ) சூதாடும் இடத்தில் காலம் கழிப்பவர்.
7. . “ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழல்கழல் மன்னற்குக் காட்டல்” - தொடர்களில் வெளிப்படும் செய்திகள்.
கூற்று 1 : மாதவி 7 ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.
கூற்று 2 : ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.
அ) 1 சரி 2 தவறு
ஆ) 1 தவறு 2 சரி
இ) 1 தவறு 2 தவறு
ஈ) 1 சரி 2 சரி
8. பொருந்தாதைத் தேர்க
அ) மயிலாப்பூர் - சென்னை
ஆ) திருமுறைகள் - பன்னிரண்டு
இ) திருஞானசம்பந்தர் - தேவாரம்
ஈ) மாசி - ஆரவாரவிழா
9. “ தொழுதனர்” - இச்சொல்லில் வரும் பகுபத உறுப்புகள்
அ) பகுதி , சந்தி , சாரியை , விகுதி
ஆ) பகுதி , இடைநிலை , விகுதி
இ) பகுதி , சந்தி ,இடைநிலை , விகுதி
ஈ) பகுதி ,இடைநிலை , சாரியை , விகுதி
10. சரியான எழுத்து வழக்கைத் தேர்ந்தெடுக்கவும்
அ) இப்ப எனக்குப் புரிஞ்சிச்சி நீயும் புரிஞ்சிக்க
ஆ) இப்போ எனக்குப் புரிஞ்சிருச்சி நீயும் புரிஞ்சிக்கோ
இ) இப்போ எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்.
ஈ) இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்.
11. ‘குழிமாற்று’ எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்
அ) இலக்கியம்
\ஆ) கணிதம்
இ) புவியியல்
ஈ) வேளாண்மை
12. பொருத்தித் தேர்க
அ) அரங்கின் நீளம் - 1. நான்கு கோல்
ஆ) அரங்கின் அகலம் - 2. ஒரு கோல்
இ) அரங்கின் உயரம் - 3. ஏழு கோல்
ஈ) உத்திரப்பலகை இடைவெளி - 4. எட்டுக்கோல்
அ) 3 2 1 4
ஆ) 2 1 4 3
இ) 2 1 3 4
ஈ) 4 3 2 1
13. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
அ) வசம்பு
ஆ) மணத்தக்காளியிலைச்சாறு
இ) கடுக்காய்
ஈ) மாவிலைக்கரி
14. பொருத்துக
அ) ஆமந்திரிகை - 1. பட்டத்து யானை
ஆ) அரசு உவா - 2. மூ ங்கில்
இ) கழஞ்சு - 3. இடக்கை வாத்தியம்
ஈ) கழை - 4. எடை அளவு
அ) 3 1 4 2
ஆ) 4 2 1 3
இ ) 1 2 3 4
ஈ) 4 3 2 1
15..’வளர் தலமோங்கு கந்தவேளே!’ - இலக்கணக்குறிப்பு
அ பண்புத்தொகை
ஆ) உம்மைத்தொகை
இ) வினைத்தொகை
ஈ) முற்றெச்சம்
16 .பொருத்தித்தேர்க
அ) ஆமந்திரிகை - 1. பட்டத்து யானை
ஆ) அரசு உவா - 2. மூங்கில்
இ) கழஞ்சு - 3. இடக்கை வாத்தியம்
ஈ) கழை - 4. எடை அளவு
அ) 3 1 4 2
ஆ) 4 2 1 3
இ) 1 2 3 4
ஈ) 4 3 2 1
17. எளியது , அரியது என்பன
அ) தீயினத்தின் துணை - நல்லினத்தின் துணை
ஆ) சொல்வது - சொல்லியபடி செய்வது
இ) சிறுமை பலசெய்து - பகைவர் தொடர்பு
ஈ) மெய்ப்பொருள் காண்பது - உருவுகண்டு எள்ளாததுது
18. வாதம் செய்தல் பற்றிக் கூறும் நூல்
அ) மதுரைக்காஞ்சி
ஆ) சிந்தாமணி
இ) தமிழ்விடு தூது
ஈ) நன்னூல்
19. ‘குழிமாற்று’ எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்
அ) இலக்கியம்
ஆ) கணிதம்
இ) புவியியல்
ஈ) வேளாண்மை
20.பொருந்தாததைத் தேர்க
அ) மா முன் நேர் - இயற்சீர் வெண்டளை
ஆ) விளம்முன் நேர் - இயற்சீர் வெண்டளை
இ) காய்முன் நேர் - வெண்சீர் வெண்டளை
ஈ) நாள் - ஓரசைச்சீர்
21. சுவடி யோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
அ) வசம்பு
ஆ) மணத்தக்காளியிலைச்சாறு
இ) கடுக்காய்
ஈ) மாவிலைக்கரி
22. அல்லல் படுப்பதூஉம் இல் எவரோடு பழகினால் ?
அ) வாள்போல் பகைவர்
ஆ) மெய்ப்பொருள் காண்பவர்
இ) எண்ணியாங்கு எய்துபவர்
ஈ) தீயினத்தார்
23. . எழுத்தாணிக்கு வழங்கும் வேறு பெயர்
அ) எழுதுகோல்
ஆ) ஊசி
இ) தூவல்
ஈ) பேனாகத்தி
24. பொருத்தித் தேர்க
அ) மாச்சீர் - 1. கருவிளம் , கூவிளம்
ஆ) காய்ச்சீர் - 2. நாள், மலர்
இ) விளச்சீர் - 3. தேமாங்காய், புளிமாங்காய்
ஈ) ஓரசைச்சீர் - 4. தேமா , புளிமா
அ) 1 2 4 3
ஆ) 4 3 1 2
இ) 2 3 1 4
ஈ) 3 4 2 1
25. ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார்’ - இத்தொடர் உணர்த்தும் பண்பு
அ) நேர்மறை பண்பு
ஆ) எதிர்மறை பண்பு
இ) முரண்பண்பு
ஈ) இவை அனைத்தும்
26. நடுங்கும்படியான துன்பம் இல்லாதவர்
அ) வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர்
ஆ) மனத்திட்பம் உடையவர்
இ) அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர்
ஈ) சூதாடும் இடத்தில் காலம் கழிப்பவர்
27. ‘பூம்பாவாய்’ - இச்சொல்லில் பயின்று வரும் புணர்ச்சி விதி
அ) ஈறு போதல், இனமிகல்
ஆ) தன்னொற்று இரட்டல்
இ) பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும்
ஈ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
28. சுரதா நடத்திய கவிதை இதழ்
அ) இலக்கியம்
ஆ) காவியம்
இ) ஊர்வலம்
ஈ) விண்மீன்
29. தலைமை வகிக்கும் மாணவனை அழைக்கும் சொல்
அ) பெரியவன்
ஆ) வேத்தான்
இ) சட்டாம்பிள்ளை
ஈ) சட்டம்பி
30. சீதாள பத்திரம் என்பது
அ) தாழைமடல்
ஆ) நெல்தாள்
இ) கம்பன் தட்டை
ஈ) பனையோலை
31. பொருத்தித் தேர்க
அ) ஓலைச்சுவடி - 1. நெடுங்கணக்கு
ஆ) அரிச்சுவடி - 2. சாசனம்
இ) வகுப்புத் தலைவன் - 3. தூக்கு
ஈ) அரசாணை - 4. சட்டாம்பிள்ளை
அ) 3 4 2 1
ஆ) 3 1 4 2
இ) 4 3 2 1
ஈ) 3 4 1 2
32. இரண்டு சீர்களுக்கு இடையில் வருவதை இவ்வாறு அழைப்பர்
அ) மோனை
ஆ) முரண்
இ) தளை
ஈ) அசை
33. கூற்று : எதுகை, மோனை சேர்க்காமல், அடி அளவை அறிந்திடாமல் வார்க்கின்ற வடிவம்தான் வசனம்
காரணம் : எளிய மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவதே உரைநடை.
அ) கூற்று சரி காரணம் சரி
ஆ) கூற்று தவறு காரணம் தவறு
இ)கூற்று சரி காரணம் தவறு
ஈ) கூற்று தவறு காரணம் சரி
34. ‘ஆல்கடனீர்’ - இச்சீருக்குரிய வாய்ப்பாடு
அ) கூவிளங்காய்
ஆ) புளிமாங்காய்
இ) கருவிளங்காய்
ஈ) தேமாங்காய்
35. கீழ் வருவனவற்றுள் எவையெல்லாம் ஈரசைச் சீர்கள்
அ) விளச்சீர் , கனிச்சீர்
ஆ) கனிச்சீர்,விளச்சீர்
இ) காய்ச்சீர், மாச்சீர்
ஈ) மாச்சீர், விளச்சீர்
36. ‘ தந்தம் விதியின் ‘ சீர்களுக்கு இடையே வரும் தளை என்ன?
அ) இயற்சீர் வெண்டளை
ஆ) வெண்சீர் வெண்டளை
இ) கலித்தளை
ஈ) ஆசிரியத்தளை
37. சரியானதைத் தேர்க
அ) இரண்டடி வெண்பா சிந்தியல் வெண்பா
ஆ) நான்கடி வெண்பா குறள் வெண்பா
இ) 13 அடிக்கு மேல் கலிவெண்பா
ஈ) தனிச்சொல் பெற்று வந்தால் இன்னிசை வெண்பா
38. திருவருட்பா எத்தனை திருமுறைகளாகப் பகுக்கப்பட்டு உள்ளது
அ) 7
ஆ) 5
இ) 4
ஈ) 6
39. ‘நினைக்கின்ற’ இச்சொல்லின் சரியான பகுபத பிரிப்பு முறை
அ) நினைக்கின்று + அ
ஆ) நினை+ க் + கின்ற
இ) நினை+ க் + கின்று+ அ
ஈ) நினைக்கும்+ கின்ற + அ
40. திருமயிலாப்பூர் பதிகம் அமைந்துள்ள திருமுறை
அ) ஒன்றாம்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) நான்காம்
41. ‘ கண்டான் ‘ - இச்சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கணப் பிரிப்பு முறை
அ) கண் + ட் +ஆன்
ஆ) காண் ( கண் ) + ட் + ஆன்
இ) கண்டு + ஆன்
ஈ) காண் + ஆன்
42. வட்டார எழுத்திற்கு , ‘ கரிசல் இலக்கியம்’ என்று பெயரிட்டவர்..
அ) கண்ணதாசன்
ஆ) ஆறுமுகம்
இ) கி. ராஜநாராயணன்
ஈ) நடராசன்
43. தோப்பில் முகமது மீரான் எழுதிய தமிழக அரசின் விருது பெற்ற நூல்
அ) குட்டி தீவு
ஆ) துறைமுகம்
இ) சாய்வு நாற்காலி
ஈ) கூனன் தோப்பு
44. ‘ அல்லல் படுப்பதூஉம் இல்’ எவரோடு பழகினால் ?
அ) வாள்போல் பகைவர்
ஆ) மெய்ப்பொருள் காண்பவர்
இ) எண்ணியாங்கு எய்துவர்
ஈ) தீயினத்தார்
45. ‘அரசு உவா ‘ என்பது
அ) போர் முரசு
ஆ) கொடை முரசு
இ) பட்டத்து யானை
ஈ) அரச சிம்மாசனம்
46. 21 நரம்புகள், 17 நரம்புகள் குறிக்கும் யாழ்
அ) சகோட யாழ் ,செங்கோட்டியாழ்
ஆ) செங்கோட்டி யாழ், சகோட யாழ்
இ ) பேரியாழ், மகரயாழ்
ஈ) மகர யாழ் பேரியாழ்
47. சின்னையா கணேசனுக்கு ‘சிவாஜி’ என்று பெயர் சூட்டியவர்
அ)அண்ணா
ஆ) பெரியார்
இ) கருணாநிதி
ஈ) எம்ஜிஆர்
48. ‘என்னை போல் சிவாஜி நடிப்பார். ஆனால், என்னால்தான் சிவாஜி போல் நடிக்க முடியாது’ என்று கூறியவர்
அ) ரீகன்
ஆ) ஜாக்கிசான்
இ) மார்லன் பிராண்டே
ஈ) பிரேம் நசீர்
49. ‘இந்திர சிறுவன்’ என்று அழைக்கப்படுபவர் யார் ?
அ) சீவகன்
ஆ) சயந்தன்
இ ) சீவகன்
ஈ) சனகன்
50. ‘பரசினர்’ என்றால் என்ன பொருள்?
அ) பரிசு பெற்றனர்
ஆ) முழங்கினர்
இ) வாழ்த்தினர்
ஈ) வருகை தந்தனர்
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின், கார்மல் மேல்நிலைப் பள்ளி , நாகர்கோவில் - 4, 9843448095
12 ஆம் வகுப்பு - இரண்டாம் திருப்புதல் தேர்வு - மார்ச் 2022
ஒரு மதிப்பெண் வினாக்கள்
1.ஆ) உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து
2. ஈ ) அரிசுவடி
3. ஆ) 4 3 1 2
4. இ) முரண் பண்பு
5. ஈ) 4 3 2 1
6. அ) வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர்
7. ஈ) 1 சரி 2 சரி
8. ஈ) மாசி - ஆரவாரவிழா
9. ஈ) பகுதி ,இடைநிலை , சாரியை , விகுதி
10. ஈ) இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்.
11. ஆ) கணிதம்
12. ஈ) 4 3 2 1
13. இ) கடுக்காய்
14. அ) 3 1 4 2
15.இ) வினைத்தொகை
16. அ) 3 1 4 2
17.ஆ) சொல்வது - சொல்லியபடி செய்வது
18. அ) மதுரைக்காஞ்சி
19. ஆ) கணிதம்
20. அ) மா முன் நேர்- இயற்சீர் வெண்டளை
21. இ) கடுக்காய்
22. ஈ) தீயினத்தார்
23. ஆ) ஊசி
24. ஆ) 4 3 1 2
25. இ) முரண் பண்பு
26.. அ) வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளக் கூடியவர்
27. இ) பூப்பெயர் முன் இன மென்மையும் தோன்றும்
28. ஆ) காவியம்
29. இ) சட்டாம்பிள்ளை
30. அ) தாழைமடல்
31. ஆ) 3 1 4 2
32. இ) தளை
33. அ) கூற்று சரி காரணம் சரி
34. அ) கூவிளங்காய்
35. ஈ) மாச்சீர், விளச்சீர்
36. அ) இயற்சீர் வெண்டளை
37. இ) 13 அடிக்குமேல் கலிவெண்பா
38. ஈ) 6
39. இ) நினை+ க் + கின்று+ அ
40.ஆ) இரண்டாம்
41. ஆ) காண் ( கண் ) + ட் + ஆன்
42. இ) கி. ராஜநாராயணன்
43. ஆ) துறைமுகம்
44. ஈ) தீயினத்தார்
45. இ) பட்டத்து யானை
46 . இ ) பேரியாழ், மகரயாழ்
47. ஆ) பெரியார்
48. இ) மார்லன் பிராண்டே
49. ஆ) சயந்தன்
50. இ) வாழ்த்தினர்
12 ஆம் வகுப்பு -
இரண்டாம் திருப்புதல் தேர்வு - மார்ச் 2022
ஒரு மதிப்பெண் வினாக்கள் ( இயல் 4,5,6 )
வினா விடைகள் PDF DOWNLOAD👇👇👇👇👇👇👇👇
Image by Erik Karits from Pixabay