கன்னயாகுமரி மாவட்டப் பொதுத் தேர்வுகள்
சிறு தேர்வு - 2 July 2025 வகுப்பு - 11
பொதுத் தமிழ் வினாத்தாள் - Click Here
11T ST 2 A - July 2025 tamilamuthu2020official.blogspot.com
கன்னயாகுமரி மாவட்டப் பொதுத் தேர்வுகள்
சிறு தேர்வு - 2 July 2025
பொதுத் தமிழ்
வகுப்பு : 11 மதிப்பெண்கள் : 30
விடைகள்
சரியான விடையைத் தேர்தெடுத்து எழுதுக 1 x 5 = 5
1. இ) இவை மூன்றும்
2. இ) மொட்டு
3. ஆ) மனோன்மணீயம்
4. இ) யானை டாக்டர் - குறும்புதினம்
5. i)அ - மட்டும்
II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக 3 x 2 = 6
6.ஐங்குறுநூறு
ஐந்து + குறுமை + நூறு ஐங்குறுநூறு . 3 அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லைக் கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் . திணைக்கு 100 பாடல்கள் வீதம் 500 பாடல்களை உடையது.தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார்.
தொகுப்பித்தவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்.
7.தமிழ்நாட்டின் மாநிலமரம்
தமிழ்நாட்டின் மாநில மரம் பனைமரமாகும். பனை மரத்தை ஏழைகளின் கற்பக விருட்சம் என்றும் அழைப்பர். நிலத்தடி நீர்மட்டத்தைக் குறையாமல் சேமித்து வைத்துக்கொள்ளும் தன்மை உடையது. சிறந்த காற்றுத் தடுப்பானாகவும் உள்ளது.பனை வளரத் தண்ணீர் தேவையில்லை.
ஏழு ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும். நுங்கு, பதநீர் கிடைக்கும். பதநீரிலிருந்து கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்ற மதிப்புக்கூட்டுப் பொருள்களையும் உருவாக்கலாம்.
8."உழுவோர்க்கெல்லாம் விழுமிய வேந்து நீ" - தொடரின் பொருள்
எவ்வகை மண்ணாக இருந்தாலும் அதனை உண்டு, செரித்து, வளம் பொருந்திய நன் மண்ணாக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வரும் நாங்கூழ்ப்புழுவை உழவுத்தொழில் புரியும் உழவர்க்கு வேந்தன் என நடராசன் குறிப்பிடுகிறான்.
தொடரின் பொருள்: உழவுத்தொழில் புரியும் உழவர்க்கு வேந்தனைப் போன்றது நாங்கூழ்ப்புழு (மண்புழு)
9.ஐந்து வேளாண்மை மந்திரங்கள்
1.உழப்படாத நிலம்
2.வேதியியல் உரம் இல்லாத உற்பத்தி
3.பூச்சிக் கொல்லி தெளிக்கப்படாத பயிர்ப்பாதுகாப்பு
4.தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி
5.ஒட்டுவிதை இல்லாமல் உயர் விளைச்சல்
III. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக 2 x 4 = 8
10. இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம்
பெ. சுந்தரனார் இயற்றிய 'மனோன்மணியம்' நூலில் நடராசன் தனிமொழியில் 'புல்லின் பிரிவு' என்னும் பகுதியில் இவ்வடிகள் இடம் பெற்றுள்ளது.
பொருள்
"ஒரே இடத்தில் விழுந்து முளைத்தால் நன்றாகத் தழைத்து வளர இடமில்லை"
விளக்கம்
புல்லானது சிறு பூவை உயரத்தூக்கி மலரச் செய்து தேனீக்களை அழைத்து அதன் மூலம் மகரந்தப் பொடியைப் பரப்பி, சிறுகாய்களைத் தோற்றுவிக்கிறது. காய்த்த காய்கள் ஒரே இடத்தில் விழுந்து நெருக்கமாக முளைத்தால் அவை நன்றாகத் தழைத்து வளர முடியாது எனக் கருதி கணைகளையும் முட்களையும் உருவாக்கி ஆடு, மாடுகளின் மீது ஒட்டச்செய்து வேறிடங்களுக்குச் சென்று தன் இனத்தை நன்கு வளரச் செய்கிறது.
11. வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா?
வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியம் ஆகும்.
நம் முன்னோர்கள் வாழ்ந்த அந்தக் காலத்தில் எந்தவிதமான இரசாயனப் பூச்சிக் கொல்லியையும் பயன்படுத்தவில்லை. இயற்கை முறையான மாட்டுச் சாணத்திலிருந்து பெறப்பட்ட சாம்பல், நொச்சி, பிரண்டை வேப்பந்தழை, கோமியம் இவற்றால் உருவாக்கப்பட்ட பூச்சிக்கொல்லியைத் தான் பயன்படுத்தினார்கள்.
அதனால் விவசாயத்தில் பெறப்பட்ட உணவுப் பொருட்களால் எவ்விதப் பாதிப்புகளும் இல்லாமல் நலமுடன் வாழ்ந்தார்கள். வேதிக்கலப்பில்லாத பூச்சிக் கொல்லியால் மண்ணும், நுண்ணுயிரியும் பாதுகாக்கப்படும் என்பதை மனிதனுக்கு உணர்த்த வேண்டும்.மனிதர்கள் உணர்ந்து மீண்டும் இயற்கைக்குத் திரும்புவார்கள்.
இனிவரும் காலங்களில் வேதிக்கலப்பிலாத பூச்சிக்கொல்லி நடை முறைக்குச் சாத்தியமே என்பது எனது கருத்தாகும்.
12. குறித்த காலத்திற்கு முன்பாக ஊர் திரும்பிய தலைவன் கூற்று
தலைவன் வருவதாகச் சொன்ன கார்காலத்திற்கு முன்பே வந்துவிட்டான்.அதை உணர்த்த தலைவியிடம்,
அழகிய பெரிய கண்களை உடையவளே! அழகிய மாலை நேரத்தில், நம் முல்லை நிலத்தில் மலர்கின்ற கார்கால மலர்களான காயா, கொன்றை, நெய்தல், முல்லை, தளவம்(செம்முல்லை ,பிடவம் போன்ற மலர்கள் பூத்திருக்கின்றன. அப்பூக்களைப் பார்த்து மகிழ்ந்து ஆட 'விரைந்துவா' என்று தலைவியை அழைக்கிறான்.
IV. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடை தருக
13. இலக்கணக் குறிப்புத் தருக. ( ஒன்றனுக்கு) 1 x 1 = 1
அ) நன்மண் - பண்புத்தொகை ஆ) ஆடுகம் - தன்மைப் பன்மை வினைமுற்று
14. உறுப்பிலக்கணம் தருக. ( ஒன்றனுக்கு) 1 x 2 = 2
அ) அலர்ந்து - அலர் + த் (ந்) + த் + உ
அலர் - பகுதி
த் - சந்தி, (ந் ஆனது விகாரம் )
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி.
ஆ) ஏகுமின் - ஏகு + மின்
ஏகு - பகுதி
மின் - ஏவல் வினைமுற்று விகுதி.
15. புணர்ச்சி விதி தருக ( ஒன்றனுக்கு) 1 x 2 = 2
அ) உழுதுழுது - உழுது + உழுது
விதி: 'உயிர் வரின் உக்குறள் மெய் விட்டோடும்'- உழுத்+ உழுது
விதி: 'உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே - உழுதுழுது.
ஆ) பேரழகு - பெருமை + அழகு
விதி: ஈறு போதல் - பெரு + அழகு
விதி: 'ஆதி நீடல் - பேரு + அழகு
விதி: 'இனையவும் (உகரம் கெட்டது) -பேர் + அழகு
விதி: 'உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - பேரழகு
V. மொழமொழிப்பயிற்சி
16. தமிழாக்கம் 2
இயற்கையை உற்றுப் பார் . அனைத்தையும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் .
17 மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக. 2
மனுஉளைச்சல் தீரவும் வீட்டில் உலை கொதிக்கவும் உழைக்க வேண்டும்.
18. கலைச் சொல் தருக 2
Harvesting - அறுவடை ( அல்லது ) Farmyard Manure - தொழு உரம்
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
Click Here to download the document.