இயல் 1
கவிதைப்பேழை
தண்டியலங்காரம்
(தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்)
தன்னேர் இலாத தமிழ்
வானம் அளந்து அனைத்தையும் அளக்கும் வலிமை மிக்கது தமிழ். நிலத்தினும்
பெரிது, வானினும் உயர்ந்தது, கடலினும் ஆழமானது என்றெல்லாம்
தமிழின் பரப்பபையும் விரிவையும் ஆழத்தையும் புலவர் போற்றுவர். நிகரற்ற
ஆற்றல்கொண்ட கதிரவனுக்கு ஒப்பவும் அதற்கு மேலாகவும் தமிழைப்
போற்றுகிறது புலவரின் பாடல் ஒன்று.
ஓங்கலிடை வந்து உயர்ந்ததோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்! *
- தண்டி
பா வகை : நேரிசை வெண்பா
பாடலின் பொருள்:
உயர்ந்த மலைகளுக்கு இடையே தோன்றி, மக்களால் போற்றப்பட்டு, கடலால் சூழப்பட்ட உலகத்தின் புற இருளை அகற்றுவது ஒன்று. பொதிகை மலையில் தோன்றி, சான்றோரால் தொழப்பட்டு, மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்கி ஒப்புவமை இல்லலாது இருப்பது இன்னொன்று. இருளைப் போக்கும் இவ்விரண்டில் ஒன்று ஒளிர்கின்ற கதிரவன்; இன்னொன்று தனக்கு நிகரில்லாத தமிழ்.
இப்பாடத்தின் POWER POINT PERENTATION ( PPT ) ஐ
PDF வடிவில் பெற - Click Here