Loading ....

11 ஆம் வகுப்பு,தமிழ்,Slip Test 2,இயல் 1,சிறுத்தேர்வு,

 திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம்  2021 - 2022

மேனிலை முதலாமாண்டு

 

தமிழமுது 2020 -  பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.


 SLIP TEST - 2

வகுப்பு : 11                                   தமிழ்                                             இயல் : 1


நேரம் : 40 நிமிடங்கள்                                                                  மதிப்பெண் : 30



விடைகள்

I . பலவுள் தெரிக.                                                                                                         6 x 1 = 6

1. அ) அன்னம், கிண்ணம்

2.  iii) ஆ , ஈ     

3. ஆ) 1 4 2 3     

4. இ) மனோரமா பிஸ்வாஸ்    

5. இ) மென்தொடர்க் குற்றியலுகரம்      

6. இ) வருடம்

II.குறுவினா                                                                          3 x 2 = 6  

7. வினையாலணையும் பெயர்கள்:

      தொழுதவர், உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்

8. உயிர்முதல்: 

        வாழை + இலை = வாழை இலை. ( லை - வருமொழி,

முதலெழுத்து ‘இ’ > உயிர்) வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாக

இருந்தால் அது உயிர் முதல் எனப்படும்.   

மெய்ம்முதல்:

       தமிழ்+  நிலம்  = தமிழ்நிலம் ( நிலம் - வருமொழி;

நி > ந் + இ = ந் > மெய் ) வருமொழியின் முதலெழுத்து உயிர் மெய்யாக

இருந்தாலும் அதன் முதலில் நிற்கும் வடிவம் மெய் என்பதால்,

அது மெய்ம்முதல் எனப்படும்.

9. பேச்சுமொழி கவிதை,எழுத்துமொழி கவிதை குறித்து இந்திரன் கூறுவது:

        பேச்சுமொழியில் செய்யப்படுகிற கவிதைச் சொற்கள் உடம்பின்

மேல்தோல்போல் இயங்குகின்றன. 

       எழுத்துமொழியில் அதே சொற்கள் கவிதையின் உணர்வை,

“உணர்ச்சியற்ற ஆடையால் மூடிப் போர்த்தி விடுகின்றன”

என, இந்திரன் கூறுகிறார்.

III.சிறுவினா                                                                       1  x 4 = 4

10. குறியீட்டுக் கவிதை என்பது அந்த வேளையில்  கண்டதன் 

நுண் பொருளைச்  சிந்திக்க தூண்டும் எண்ணத்தைப் பதிவு செய்வதாகும்.

பறவைகளைக் கூட்டில் அடைத்து வைத்து ஜோதிடம் பார்ப்பதை

அனைவரும் அறிவர். பூட்டைத் திறப்பது பறவைக்குச் சுதந்திரம்

தருவதற்காக அன்று.

அது சிறகசைத்துப் பறப்பதை மறக்க அடித்து, அடிமைப்படுத்தி விடுகிறார்கள்.

அதற்கென ஒரு கொத்தடிமை தொழிலை முடிவு செய்கிறார்கள்.

இந்தக் குறியீடு சமூக அவலத்தை வெளிப்படுத்தும்  கருத்தைச் 

சுட்டிக்காட்ட உதவுகின்றது.

IV . அனைத்திற்கும் விடை தருக.                                                 3 x 4 = 12

11. தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி  இரண்டு 

சொற்றொடர்களாக்குக:

அ)  i) ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடம் போகவேண்டும். 

       ii ) கலைகள் எல்லாம் மகிழ்ச்சி தருபவை.

ஆ) i ) கோசலநாடு ஒரு சிறந்த நாடு. 

       ii ) மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

12. கீழ்க்காணும் வேர்ச்சொல்லை வினைமுற்று, பெயரெச்சம்,

வினையெச்சம், வினையாலணையும் பெயராக மாற்றித்

தொடரை உருவாக்குக.

அ) தா

i) அண்ணன் தந்தான்.( வினைமுற்று)

ii) அண்ணன் தந்த பரிசு. ( பெயரெச்சம்)

iii) அண்ணன்  தந்து சென்றான். ( வினையெச்சம் )

iv) அண்ணனிடம் தந்தவன் அவன்.  ( வினையாலணையும் பெயர் )

ஆ) ஓடு

i) நான் வேகமாக ஓடினேன்.  (வினைமுற்று)

ii) வேகமாக ஓடிய பையன் யார்? ( பெயரெச்சம்)

iii) அவன் ஓடிக் களைத்தான். ( வினையெச்சம் )

iv)  அங்கே ஓடியவனைப்  பார்த்தாயா? ( வினையாலணையும் பெயர் )

13. கலைச்சொல் தருக:

அ) Aesthetics              -   அழகியல்                      

ஆ) Art critic              -    கலை விமர்சகர் 

இ) Symbolism             -    குறியீட்டியம்        

ஈ) Migration               -    புலம்பெயர்த்தல் 

V . அனைத்திற்கும் விடையளி.                                                2 x 1 = 2

14.தமிழாக்கம் தருக.

அ) A picture is worth a thousand words

       ஓர் ஓவியம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம்.

15.பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்க. 

அ)  தருணம்                         -   உரிய வேளை                      

ஆ)  பாஸ்போர்ட்               -  கடவுச்சீட்டு 



எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095



You have to wait 15 seconds.

Download Timer

Post a Comment