Loading ....

12 ஆம் வகுப்பு,தமிழ்,இயல் - 1,இலக்கணம்,தமிழாய் எழுதுவோம்,ONE WORD QUESTIONS,

                                    12 ஆம் வகுப்பு

தமிழ்

இயல் - 1

                                                           இலக்கணம்

தமிழாய் எழுதுவோம்   





சிறப்புப் பலவுள் தெரிக

ONE WORD QUESTIONS (30 ONE WORD)


1. எல்லா இடங்களிலும் எந்தத் தமிழை எழுத முடியாது

     அ) எழுத்துத் தமிழ்                              ஆ) உச்சரிப்புத் தமிழ்

    இ) பேச்சுத் தமிழ்                                   ஈ) இயல் தமிழ்

           விடை : இ) பேச்சுத் தமிழ்


2. பேசுவதைப் போல எழுதுவது எதற்கு முதன்மையான காரணம்

    அ) மதிப்பெண் பெற                          ஆ) பிழையில்லாமல் எழுத

    இ) பிழைக்கு                                           ஈ) இவற்றில் எதுவுமில்லை

     விடை : இ) பிழைக்கு


3. குறில்,நெடில் வேறுபாடு அறியாமல் இருப்பதால் தோன்றுவது

   அ) ஒலி வேறுபாடு                                 ஆ) எழுத்து அதிகமாவது

   இ) சொல்லில் தெளிவு                            ஈ) பிழைகள்

    விடை : ஈ) பிழைகள்


© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,

கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095 


4.எவ்வெழுத்துகளின் வேறுபாடு அறிந்து வாய்விட்டு ஒலித்துப் பழகுவது நல்லது

  அ) ந,ண,ன                  ஆ) ற,ர                 இ) ல,ள,ழ            ஈ) இவை அனைத்தும்

    விடை : ஈ) இவை அனைத்தும்


5.இலக்கணத்தை எவ்வாறு கற்க வேண்டும்

  அ) கசடற               ஆ) எழுதி         இ) சொல்லிப் பார்த்து       ஈ) தெளிவாக

    விடை : அ) கசடற


6.சொல்லின் தொடக்கமாக வரும் மயங்கொலி எது

 அ) ண                 ஆ) ன                       இ) ந                ஈ) இவற்றில் எதுவுமில்லை

    விடை : இ) ந


7. இவற்றில் எது சரியான சொல்

அ) நன்டு            ஆ) கன்டு             இ) கன்று               ஈ) கற்ரு

       விடை : இ) கன்று


8. மயங்கொலிகளான ந,ண,ன/ற,ர/ல,ள,ழ ஆகியவை சொற்களில் எங்கெல்லாம் வரும்

  அ) முதல்         ஆ) முதல்,இடை      இ) இடை           ஈ) முதல், இடை,கடை

    விடை : ஈ) முதல், இடை,கடை


9. பிழைகள் மலிய காரணங்களுள் ஒன்று

  அ) எழுத்துகள் வரும் முறையில் வருவது          

  ஆ) எழுத்துகள் வரும் முறையில் தெளிவு

  இ) எழுத்துகள் வரும் முறையில் வராது

  ஈ) எழுத்துகள் வரும் முறையில் தெளிவற்று இருப்பது

    விடை : ஈ) எழுத்துகள் வரும் முறையில் தெளிவற்று இருப்பது


10.மயங்கொலிகள் எத்தனை?

    அ) 10             ஆ) 8                      இ) 7                 ஈ) 6

    விடை : ஆ) 8


© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,

 கார்மல் மேனிலைப்பள்ளி, நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095 


11. தமிழில் சொல்லின் தொடக்கமாக எவ்வெழுத்துகள் வராது

   அ) மெய்யெழுத்து                                           ஆ) உயிரெழுத்து  

   இ) உயிர்மெய்யெழுத்து                                  ஈ) குறிலெழுத்து

    விடை : அ) மெய்யெழுத்து


12. வல்லின மெய்யோடு முடியும் தமிழ்மொழி அல்லாத சொல்

   அ) பார்க்க       ஆ) நிற்க          இ) பார்க்       ஈ) க்ரீடம்

    விடை : இ) பார்க்


13. இதில் பிழையான சொல் எது?

     அ) முயற்சி        ஆ) முயற்ச்சி        இ) பயிற்சி            ஈ) பெயர்ச்சி

    விடை : ஆ) முயற்ச்சி


14. ட்,ற் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளுடன் எந்த வரிசை எழுத்துக்கள் வரும்

   அ) க, ப ,த          ஆ) க ,ட, த             இ) க, ப, ற               ஈ) க, ச ,ப

    விடை : ஈ) க, ச ,ப


15. காக்கை,பச்சை,பத்து, உப்பு இவற்றில் எவ்வெழுத்து வரிசைகள் வந்துள்ளன

    அ) க,ச,ட,த,ப,ற        ஆ) க,ச,த

    இ) க,ப,த                      ஈ) க,ச,த,ப

    விடை : ஈ) க,ச,த,ப


16. ஆய்த எழுத்து சொல்லின் எவ்விடத்தில் வரும்

     அ) இடை      ஆ) முதல்        இ) இறுதி            ஈ) இடை, இறுதி

    விடை : அ) இடை


17. சொல்லின் தொடக்கமாக வராத மெல்லின எழுத்துகள்

    அ) ம,ந         ஆ) ங,ஞ            இ) ண,ன             ஈ) ன, ம

    விடை : இ) ண,ன


© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,

 கார்மல் மேனிலைப்பள்ளி, நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095 


18. ணகர ஒற்றினை அடுத்து எவ்வெழுத்து வராது

    அ) ட கரம்    ஆ) க கரம்      இ) த கரம்         ஈ) ற கரம்

    விடை : ஈ) ற கரம்


19. கீழ்க்காண்பவற்றுள் அரிதான சொல்

     அ) பாய்ந்      ஆ) கரைஞ்       இ) பொருந்      ஈ) உரிப்

    விடை : இ) பொருந்


20. தனிக்குறிலை அடுத்து எந்த ஒற்றுகள் வராது

    அ) ர, ழ          ஆ) ற, ழ             இ) ற , ள           ஈ) ர , ள

    விடை : அ) ர, ழ


21. வேற்றுமைப் புணர்ச்சியில் லகரத்தைத் தொடர்ந்து வல்லினம்வரின் லகரம் எவ்வாறு திரியும் 

     அ) றகரமாய்         ஆ) டகரமாய்       இ) லகரமாய்           ஈ) னகரமாய்

    விடை : அ) றகரமாய்


22. பல் + முகம் = ? 

    அ) பல்முகம்         ஆ) பன்முகம்         இ) பலமுகம்            ஈ) பன்னுகம்

    விடை : ஆ) பன்முகம் 


23. லகரம் னகரமாய் எப்போது திரியும்? 

     அ) வல்லினம் வரின்                           ஆ) இடையினம் வரின் 

      இ) வேற்றுமை வரின்                          ஈ) மெல்லினம் வரின்

         விடை : ஈ) மெல்லினம் வரின்


24. மக்கள் + பேறு  = ?

அ) மக்கள்பேறு

ஆ) மக்கற்பேறு 

இ) மக்கள்பேற்று 

ஈ) இவற்றில் எதுவுமில்லை

    விடை : ஈ) இவற்றில் எதுவுமில்லை


25. நாள் + மீன் =நாண்மீன் ஆகக் காரணம் 

     அ) ளகரம் டகரமாவதால்                  ஆ) ளகரம் லகரமாவதால் 

     இ) ளகரம் ணகரமாவதால்                 ஈ) லகரம் னகரமாவதால்

    விடை : இ) ளகரம் ணகரமாவதால்


26. வருமொழி தகரமாயின் லகரம் எவ்வாறு மாறும் ?

    அ) றகரமாய்         ஆ) தகரமாய்        இ) ளகரமாய்          ஈ) னகரமாய்

    விடை : அ) றகரமாய்


27. பல்+  நூல் = ? 

    அ) பல்நூல்         ஆ) பன்னூல்             இ) பன்நூல்             ஈ) பலநூல்

    விடை : ஆ) பன்னூல் 


© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,

 கார்மல் மேனிலைப்பள்ளி, நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095 


28. தவறானதைக் கண்டுபிடிக்க

      அ) பல்+துளி = பல்துளி                                 ஆ) பல்+நூல் = பன்னூல்

       இ) சொல்+துணை = சொற்றுணை            ஈ) நாள்+மீன் = நாண்மீன்

    விடை : அ) பல்+துளி = பல்துளி


29. கீழ்வருபவற்றுள் தவறானது எது?

     அ) உறுப்பினர்          ஆ) குழுவினர்        இ) இயக்குனர்          ஈ) ஊரினர்

       விடை : இ) இயக்குனர் 


30. ஓட்டுநர்- என்பதில் வரும் ‘ந்’ என்பது (ந்+அர்=நர்) என்ன?

    அ) மெய்யெழுத்து     ஆ) நகரம்          இ) உயிர்மெய்            ஈ) பெயரிடைநிலை

    விடை : ஈ) பெயரிடைநிலை



விடைக் குறிப்பு pdf download செய்ய கீழ்க்காணும் download button click செய்யவும்👇👇👇👇👇👇







































Photo by Akul Kumar Bhatt on Unsplash

         


Post a Comment