12th Standard - Weekly Test (2021)| Question Paper & Answer key |
Unit 4
திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் 2021 - 2022
மேனிலை இரண்டாமாண்டு.
தமிழமுது 2020 - பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.
வாரத் தேர்வு
பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்
வகுப்பு : 12 தமிழ் இயல் : 4
Time :25 minutes Mark : 30
விடைகள்
I.பலவுள் தெரிக 15 X = 15
1.இ) கடுக்காய்
2.இ) மூன்று ஆண்டுகள்
3.இ) அரிச்சுவடி
4.ஆ) கணிதம்
5.ஆ) மடங்கள் ,பாடசாலைகள்
6.ஆ) சிந்தாமணி
7. ஆ) ஊசி
8.அ) எழுத்துப் பயிற்சி - வித்தியாரம்பம்
9.இ)’ குழிமாற்று’ எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்.
10.இ) கதைப்பாடல்கள்
11.இ) தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார்
12.இ) பேராசிரியர் அ. கா. பெருமாள்
13.ஈ) பட்டி நடேசனார் திண்ணைப்பள்ளி - மா. இராசமாணிக்கனார்
14.அ) 3 1 4 2
15.ஆ) சர்வசிவ பண்டிதர்
II. குறுவினா 3 x 2 = 6
16. முறை வைப்பது:
உபாத்தியார் நெடுங்கணக்கைச் சொல்லிக்கொடுக்க மாணாக்கர் அதனைப் பின்பற்றிச் சொல்வான். இப்படி உபாத்தியார் ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை ‘முறை வைப்பது’ என்று கூறுவார்கள்.
17. அக்காலத்து கல்வி முறையில் மனப்பயிற்சி உதவிய நூல்கள்:
நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள்.
கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல் மேல்வாயிலக்கம்,
குழிமாற்று முதலிய பலவகை வாய்ப்பாடுகள்.
ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்றவை அக்காலத்து
கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் ஆகும்.
18. ‘மையாடல் விழா’
சுவடியில் உள்ள எழுத்துக்கள் தெளிவாகத் தெரிய வசம்பு, மஞ்சள், மணத்தக்காளி இலைச்சாறு அல்லது ஊமத்தை இலைச்சாறு மாவிலை கரி, தர்ப்பைக்கரி ஆகியவற்றைக் கலந்து செய்த மையினைத் தடவினார்.
அந்த மை எழுத்துக்களை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும். இங்ஙனம் மை தடவி சுவடியை வாசிக்க தொடங்கும் நிகழ்வை ‘மையாடல் விழா’ என்று சொல்வார்கள்.
III. சிறுவினா 1 x 4 = 4
19. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்:
ஆசிரியர்கள் முதலில் மாணாக்கர்களின் வலக்கை ஆள்காட்டி விரலைப் பிடித்துத் தட்டில் பரப்பி வைத்துள்ள அரிசி அல்லது தானியங்களில் எழுதி காட்டுவர்.
மணலில் எழுத்தின் வரிவடிவை எழுதுவர் மாணாக்கர் ஒலி வடிவை நன்றாகச் சொல்ல தெரிந்த பின்புதான் வரிவடிவை ஓலையில் வரைந்து காட்டுவர்.
ஓலையை இடக்கையில் பிடித்து வலக்கையால் எழுத்தாணி கொண்டு எழுதி பழகுவர். எழுத்தாணி பிடித்து எழுதும்போது ஓலையைதான் நகர்த்துவார்கள்.
எழுத்தாணி பிடித்த இடத்திலிருந்தே வரையும். ஓலையில் வரிவரியாக எழுத்தின் மீது மற்றோர் எழுத்து படாமலும் ஒருவரியின் மீது மற்றோர் வரி இணையாமலும் போதிய இடம்விட்டு எழுதுவார்கள்.
கல்வெட்டுகளில் கல் தச்சர்களால் சிற்றுளி கொண்டு எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
களிமன் பலகையிலும் எழுத்தாணி கொண்டு எழுதினார்கள்.
எழுத்துக்களின் உருவம் பலகாலமாக மாறாமல் இருந்தது.
காலம் செல்லச் செல்ல எழுதுகோலைப் பயன்படுத்திக் காகிதங்களில் எழுதும் முறைகளைக் கற்றுக் கொண்டனர். காகிதங்களில் எழுதும்போது கையை நகர்த்தி எழுதுவர்.
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095