12 ஆம் வகுப்பு
தமிழ்
இயல் - 1
இளந்தமிழே
சிற்பி பாலசுப்பிரமணியம்
பலவுள் தெரிக
ஒரு மதிப்பெண் வினாக்கள்
எம் ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில் - 4. 9843448095
1.பொதிகை என்பது எந்த மலையை குறிக்கும்.
அ) குற்றால மலை ஆ) விந்திய மலை இ) இமயமலை ஈ) சாமி மலை
விடை : அ) குற்றால மலை
2. சிற்பி பாலசுப்பிரமணியம் எந்நூலை மொழிபெயர்த்த மைக்காக சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
அ) அக்கினி ஆ) ஒளிப்பறவை இ) அக்கினி சாட்சி ஈ) சூரிய நிழல்
விடை : இ) அக்கினி சாட்சி
3. கவிஞர் சிற்பி எழுதிய எந்த படைப்பிலக்கிய நூலுக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.
அ) ஒரு கிராமத்தின் கதை ஆ) ஒரு கிராமமே அழுதது
இ) ஒரு கிராமத்து நதி ஈ) ஒரு புளியமரத்தின் கதை
விடை : இ) ஒரு கிராமத்து நதி
4. சிற்பி எத்தனை முறை சாகித்திய அகாதமி பரிசு பெற்றவர்.
அ) ஒரு முறை ஆ) இரு முறை இ) நான்கு முறை ஈ) மூன்று முறை
விடை : ஆ) இரு முறை
5. சிற்பியின் கவிதைகள் ஆங்கிலம் இந்தி,கன்னடம், மராத்தி, மற்றும்-------- மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அ) மலையாளம் ஆ) ஹிந்தி இ) தெலுங்கு ஈ) வங்காளம்
விடை : அ) மலையாளம்
6. இவற்றில் எது கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய நூல்.
அ) சூரியகாந்தி ஆ) சூரிய பார்வை இ) ஒளிப்பூ ஈ) சூரிய நிழல்
விடை : ஈ) சூரிய நிழல்
7. கருத்து 1: பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்து தமிழ் தாய் கருத்து2:விம்முகின்ற தோள்கள் செந்நிறத்து பூக்காடானது.
அ) கருத்து ஒன்று சரி ஆ) கருத்து இரண்டு சரி
இ) இரண்டு கருத்தும் தவறு ஈ) கருத்து 1 சரி 2 தவறு
விடை : ஈ) கருத்து 1 சரி 2 தவறு
8. இளந்தமிழே என்னும் நம் பாடப்பகுதி இடம் பெற்றுள்ள நூல்.
அ) ஒளிப்பறவை ஆ) நிலவுப்பூ இ) சூரிய நிழல் ஈ) சூரியகாந்தி
விடை : ஆ) நிலவுப்பூ
9. கவிஞர் சிற்பி எந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
அ) காமராசர் பல்கலைக்கழகம் ஆ) அழகப்பா பல்கலைக்கழகம்
இ) தமிழ்ப் பல்கலைக்கழகம் ஈ) பாரதியார் பல்கலைக்கழகம்
விடை : ஈ) பாரதியார் பல்கலைக்கழகம்
10. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் இளந்தமிழே பாடல் இடம் பெற்ற நூல்.
அ) மஸ்னவி ஆ) நிலவுப்பூ இ) காவிய தர்ஷன் ஈ) துறைமுகம்
விடை : ஆ) நிலவுப்பூ
11. " மீண்டு மந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு” கவிஞர் குறிப்பிடும் பழமைநலம்
1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்து 2) பொதிகையில் தோன்றியது
3) வள்ளல்களைத் தந்தது.
அ) 1 மட்டும் சரி ஆ)1,2 இரண்டும் சரி இ) 3 மட்டும் சரி ஈ) 1,3 இரண்டும் சரி,
விடை : ஈ) 1,3 இரண்டும் சரி
எம் ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில் - 4. 9843448095
12. 'சாய்ப்பான்' என்பதன் சரியான பகுபத பிரிப்பு முறை
அ) சாய்ப்பு + ஆன் ஆ) சாய் + ப் + ஆன்
இ) சாய் + ப் + ப் + அன் ஈ) சாய் + ப் + ப் +ஆன்
விடை : ஈ) சாய் + ப் + ப் +ஆன்)
13. 'வியந்து' என்பதன் சரியான பகுபத உறுப்பிலக்கணப் பிரிப்பு முறை
அ) வியந்து + உ ஆ) விய + த் + த் + உ
இ) விய + த்(ந்) + த் + உ ஈ) வியந்த + அ
விடை : இ) விய + த்(ந்) + த் + உ
14. ‘வியர்வை வெள்ளம்' - இலக்கணக்குறிப்பு
அ) உவமையாகுபெயர் ஆ) கருவியாகு பெயர்.
இ) உருவகம் ஈ) உவமைத்தொகை
விடை : இ) உருவகம்
15. 'செந்தமிழ்' - எந்தப் புணர்ச்சி விதிகளின் அடிப்படையில் சரியாகப் புணரும்.
அ) ஈறுபோதல், இனமிகல் ஆ) ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்
இ) ஈறுபோதல், தன்னொற்றிரட்டல் ஈ) ஈறுபோதல்
விடை : ஆ) ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல்
16. கருத்து 1 : பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தவள் தமிழ்தாய்.
கருத்து 2 : விம்முகின்ற தோள்கள் செந்நிறத்துப் பூக்காடானது.
அ) கருத்து 1 சரி ஆ) கருத்து 2 சரி
இ) இரண்டு கருத்தும் தவறு ஈ) கருத்து 1 சரி, 2 தவறு]
விடை : ஈ) கருத்து 1 சரி, 2 தவறு]
13. "மூண்டுவரும் கவிதைவெறிக் குணவாய் எங்கள்
முத்தமிழே! நீயுள்ளாய்; முன்னம் ஓர்நாள்' - இப்பாடல் வரியில் பயின்று வந்துள்ள தொடை நயம்
அ) அடி மோனை ஆ) சீர் மோனை
இ) சீர் எதுகை ஈ) அடி எதுகை
விடை : அ) அடி மோனை
14. பொருத்துக.
அ) அலையும் சுவடும். - 1. படைப்பிலக்கிய விருது நூல்
ஆ) ஒரு கிராமத்து நதி - 2. மொழிபெயர்ப்பு விருது நூல்
இ) அக்கினி சாட்சி - 3. கவிதை நூல்
ஈ) ஒளிப்பறவை - 4. உரைநடை நூல்
அ) 4 1 2 3 ஆ) 4 2 1 3 இ) 4 3 1 2 ஈ) 4 3 2 1
விடை : அ) 4 1 2 3
எம் ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில் - 4. 9843448095
சிற்பி பாலசுப்பிரமணியத்தின் இயற்பெயர் - பொ. பாலசுப்பிரமணியம்
சிற்பி பாலசுப்பிரமணியம் பிறந்த ஊர் - ஆத்துப் பொள்ளாச்சி
சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பெற்றோர் - கி.பொன்னுசாமி, கண்டியம்மாள்
பாரதியார் பல்கலைக்கழகத்தில் சிற்பி பாலசுப்பிரமணியம் பணியாற்றிய காலம் - 1989, 1997
சிற்பி பாலசுப்பிரமணியம் பெற்றுள்ள ஒருசில விருதுகள் - தமிழக அரசின் பாவேந்தர் விருது, குன்றக்குடி ஆதினம் கபிலர் விருது, திருவனந்தபுரம் தமிழ்ச்சங்க மகாகவி உள்ளூர் விருது, மூத்த எழுத்தாளருக்கான
லில்லி தேவ சிகாமணி விருது.
சாகித்திய அகாதமி பரிசு பெற்ற மொழிபெயர்ப்பு நூல் - அக்கினி சாட்சி
(நாவல்)
மொழிப்பெயர்ப்பு நூலுக்காககச் சாகித்திய அகாதமி விருது பெற்ற வருடம் - 2001.
படைப்பிலக்கியம் ஒரு கிராமத்து நதி நூலுக்காகச் சாகித்திய அகாதமி விருது பெற்ற வருடம் -2003.
தமிழக அரசின் பரிசு பெற்ற கவிஞர் சிற்பியின் நூல் - பூஜ்யங்களின் சங்கிலி.
விளக்கமான வகுப்பிற்கான pdf மற்றும் விடைக் குறிப்பு pdf download செய்ய கீழ்க்காணும் download button click செய்யவும்👇👇👇👇👇👇