Loading ....

12 ஆம் வகுப்பு ,தமிழ்,தமிழ் மொழியின் நடை அழகியல்,ஒரு மதிப்பெண் வினா விடை

   12 ஆம் வகுப்பு - தமிழ்


                   இயல் - 1


              உரைநடை



        தமிழ் மொழியின் நடை   அழகியல்


        பலவுள் தெரிக 



            



1.காளைகளின் பல இனங்களைக் காட்டும் நூல்

      அ) தொல்காப்பியம்    ஆ) முல்லைக்கலி 

       இ)புறநானூறு                        ஈ) பதிற்றுப்பத்து

                                       விடை  : ஆ) முல்லைக்கலி


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர், 

கார்மல் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4,  98 43 44 80 95 .


2 . பாடலின் தளத்தைப் பாத்திகட்டி வரப்பு உயர்த்தும் பணியை செய்வது.

      அ) தொடரியல் வடிவம்              ஆ) ஒலி கோலம்

       இ) சொற்றொடர் நிலை               ஈ) சொற்புலம்

                                              விடை  : அ) தொடரியல் வடிவம்


3. பாட்டு அல்லது கவிதையின் நடையியல் கூறுகளில் மிக முக்

அ) ஒலி கோலம்    ஆ)சொற்களின் புலம்                                                                     இ)ஒலி கோலமும் சொற்களின் புலமும்        

 ஈ)ஒலிக்கோலம் சொற்களின்புலமும் தொடரியல் போக்கும்                                                             

                       விடை  :  ஈ)ஒலிக்கோலம் சொற்களின் புலமும் தொடரியல் போக்கும்


4. நம்பி நெடுஞ்செழியன் குறித்து பாடியவர். 

அ) கபிலர்     ஆ) அவ்வையார்      இ)பேரெயின் முறுவலார்     ஈ) நக்கண்ணையார்

                                               விடை  : இ)பேரெயின் முறுவலார்


5.  "ஆசிரிய நடைத்தே வஞ்சி; ஏனை 

  வெண்பா நடைத்தே கலி"

 என்று கூறும் நூல்.

          அ)அகநானூறு       ஆ) புறநானூறு       இ)கலித்தொகை       ஈ)தொல்காப்பியம் 

                                               விடை  : ஈ)தொல்காப்பியம்

6. 'தமிழ் மொழியின் நடை அழகியல்' என்ற பாடப்பகுதி தி. சு. நடராசனின் எந்த நூலின் சில பகுதிகள். 

     அ)கவிதையெனும் மொழி                              ஆ)திறனாய்வுக் கலை 

     இ)தமிழின் பண்பாட்டு வெளிகள்           ஈ)தமிழ் அழகியல் 

                                                      விடை  : ஈ)தமிழ் அழகியல் 


7."படுவழிபடுக,இப்புகழ் வெய்யோன் தலையே"- இப்பாடல் வரி இடம் பெற்ற நூல் 

     அ)நற்றிணை     ஆ)குறுந்தொகை     இ)புறநானூறு     ஈ)அகநானூறு

                                               விடை  : இ)புறநானூறு


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர், 

கார்மல் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4,  98 43 44 80 95 .


8. கவிதையின் இயற்றல் எவ்வாறு அழைக்கப்படுகிறது. 

      அ)இசை                       ஆ)ஒலி                 இ)நடை               ஈ)இசையும் நடையும் 

                                                விடை  : இ)நடை


9. 'நீர்படு பசுங்கலம்' இதில் 'பசுங்கலம்' என்ற சொல்லின் இலக்கண குறிப்பு

      அ)தொகைநிலை                ஆ)பண்புத்தொகை       

       இ)உவமைத்தொகை      ஈ)வினைத்தொகை

                                                   விடை  :  ஆ)பண்புத்தொகை


10. ஓசையும் பொருளும் இணைந்து பெறும் வடிவம் 

        அ)ஓசை          ஆ)சிற்பம்        இ)கலை       ஈ) இவற்றில் எதுவுமில்லை

                                                   விடை  :  இ)கலை 


11. கி. ராஜநாராயணன் எழுதிய குறுநாவல்.

       அ)  செம்மரி       ஆ) கடா      இ)  கிடை      ஈ) மறி

                                                 விடை  :  இ)  கிடை


 12. "புணரின் புணராது பொருளே; பொருள்வயின்

           பிரியின் புணராது புணர்வே" -  என்னும் அடிகள் இடம் பெற்ற நூல்.

         அ)  புறநானூறு       ஆ)  நற்றிணை      இ) அகநானூறு          ஈ)  கலித்தொகை

                                                      விடை  :   ஆ)  நற்றிணை


13.  சங்கப்பாடல்களில் முக்கியமான ஒரு பண்பு எது? 

       அ) சொற்புலம்                       ஆ) தொடரியல் போக்கு

        இ) ஒலிக்கோலம்                  ஈ) இவற்றில் எதுவுமில்லை 

                                                       விடை  :  இ) ஒலிக்கோலம்


14. "நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை" - இப்பாடல் அடி இடம் 

         பெற்ற நூல். 

        அ) நற்றிணை       ஆ) புறநானூறு       இ) அகநானூறு       ஈ) கலித்தொகை 

                                                    விடை  :   ஆ) புறநானூறு


15.சரியா? தவறா?

      கருத்து 1 : சொல்லில் தான் உணர்வும் பொருளும் பொதிந்து கிடக்கின்றன.

      கருத்து 2 : தமிழ் அழகியலை கட்டமைப்பதற்குச் சங்க 

                                     இலக்கியமே  முதன்மை ஆதாரம்.

       அ) கருத்து 1 சரி                             ஆ) கருத்து 2 சரி      

       இ) கருத்து 1 சரி 2 தவறு         ஈ)  இரண்டு கருத்தும் சரி

                                         விடை  :   ஈ)  இரண்டு கருத்தும் சரி

16.  உணர்வும் பொருளும் எதில் பொதிந்து கிடக்கின்றன.

         அ) வாக்கியத்தில்      ஆ)  கட்டுரையில்

         இ) பாடலில்                          ஈ) சொல்லில்

                                            விடை  :  ஈ) சொல்லில்


17. சொல்வளம் எதன் அடையாளமாகவும் இருக்கின்றது.

      அ) மொழியின்                        ஆ) பண்பாட்டின்

      இ)  வாக்கியத்தின்                ஈ)  இவற்றில் எதுவுமில்லை 

                                                விடை  :   ஆ) பண்பாட்டின்


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர், 

கார்மல் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4,  98 43 44 80 95 .


18. சரியா? தவறா?

       கருத்து 1 : முல்லைக்கலியில் ஆடுகளின் பல இனங்களைக்காட்டும் 

                                    சொற்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

      கருத்து 2 : சொல் வளம் ஒரு நாட்டின் அடையாளமாகவும் இருக்கிறது.

     அ)  கருத்து 1 தவறு                                 ஆ) கருத்து 1  சரி 2 தவறு

     இ)  கருத்து இரண்டும் தவறு       ஈ)  கருத்து 1 தவறு 2  சரி

                                                         விடை  :   இ)  கருத்து இரண்டும் தவறு


19. சரியானதைத்  தேர்க

       அ) பாவகை  -  ஐந்து

      ஆ)  வஞ்சி -  வெண்பா நடைத்தே

       இ)  பனிநீர் -  தொகை மொழி 

        ஈ) காமர் வனப்பு - தொடரியல் போக்கு

                                                       விடை  : இ)  பனிநீர் -  தொகை மொழி 

20. பேரெயின் முறுவலார் யாரைக் குறித்துப் பாடிய சாவு சடங்கு 

        பாடல் சர்ச்சைக்கு உள்ளானது.

      அ) கரிகால் சோழன்                                               ஆ) இராஜராஜன் 

      இ) நம்பி நெடுஞ்செழியன்                               ஈ) சேரன் செங்குட்டுவன்

                                                           விடை  : இ) நம்பி நெடுஞ்செழியன்


 21. சரியா? தவறா?

       கருத்து 1     :  தொன்மையான மொழி சமிக்ஞையிலிருந்தும் 

                                          இசையில் இருந்தும் தான் தொடங்குகிறது. 

      விளக்கம்  :  மொழி தோன்ற அடிப்படையாக இருப்பது ஒலியே 

                                          ஒலியை   வெவ்வேறு வடிவங்களில் உச்சரிக்கும்போது 

                                         மொழித் தோன்றுகிறது.

      அ) கருத்து சரி விளக்கம் தவறு                    ஆ) கருத்தும் விளக்கமும் சரி 

      இ) கருத்து தவறு விளக்கமும் தவறு        ஈ) கருத்து தவறு விளக்கம் சரி

                                           விடை  :  ஆ) கருத்தும் விளக்கமும் சரி 


22. சரியானதை தேர்க

       அ) கடாஅ யானைக் கலிமான் பேக -  முல்லைக்கலி 

      ஆ)புணரின் புணராது பொருளே -  தொல்காப்பியம் 

       இ)இவன் தந்தை தந்தை - நற்றினை 

       ஈ)யாமும் பாரியும் உளமே - புறநானூறு 

                                விடை  :    ஈ)யாமும் பாரியும் உளமே - புறநானூறு 


23. தமிழ் அழகியலை கட்டமைப்பதற்கு முதன்மை ஆதாரமாக 

       இருக்கும்  இலக்கியம்.

     அ) சிலப்பதிகாரம்                                        ஆ) மணிமேகலை      

      இ) சங்க இலக்கியம்                                    ஈ) பக்தி இலக்கியம்

                                                       விடை  :  இ) சங்க இலக்கியம்


24. பொருந்தாததைத் தேர்க

        அ)கன்னி விடியல் -  தொகை மொழி

       ஆ) பொய்படுசொல் -  மறித்தாக்கம்

        இ)சங்கப்பாடல்கள் -  மறுத்தலைத் தொடர் 

        ஈ)கி. ராஜநாராயணன் -  கிடை 

                                        விடை  :   ஆ) பொய்படுசொல் -  மறித்தாக்கம்


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர், 

கார்மல் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4,  98 43 44 80 95 .


25. பேரெயின் முறுவலார் எத்தனை பண்புகளை வரிசைப்படுத்தித்

     தொகுத்துச் சொல்கின்றார்.

      அ) 18              ஆ) 20          இ) 22              ஈ) 16

                                                         விடை  :  ) 18 


26. திறனாய்வு கலையைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்

      அ)கி. ராஜநாராயணன்                         ஆ)புதுமைப்பித்தன் 

      இ) தி.சு.நடராசன்                                     ஈ)தொல்காப்பியர் 

                                           விடை  :   இ) தி.சு.நடராசன்


27. தி.சு.நடராசன் பணிபுரியாத பல்கலைக்கழகம் 

       அ)மதுரை காமராசர் பல்கலைக்கழகம்     ஆ)சென்னைப் பல்கலைக்கழகம் 

       இ)வர்ஷா பல்கலைக்கழகம்                 ஈ)மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 

                                         விடை  :   ஆ) சென்னைப் பல்கலைக்கழகம்


28. 'கவிதையெனும் மொழி','திறனாய்வுக் கலை', 'கிடை' 'தமிழின் பண்பாட்டு வெளிகள் 

       இவற்றுள் தி.சு. நடராசன் எழுதாத நூல்

      அ) கவிதையெனும் மொழி                      ஆ)திறனாய்வு கலை

       இ) கிடை                                                         ஈ)தமிழின் பண்பாட்டு வெளிகள்

                                                 விடை  :  இ) கிடை


29. பா வகைகள் எத்தனை என்று தொல்காப்பியம் கூறுகிறது 

      அ) 2   ஆ) 3    இ) 5     ஈ) 4  

                                          விடை  :  ஈ) 4  


30. அழகியலை உருவாக்குவதற்குத் தளம் அமைத்துத் தருகின்ற நூல்

      அ) தொல்காப்பியம்                                    ஆ)யாப்பருங்கலக்காரிகை 

      இ)தமிழ் மொழியின் நடை அழகியல்      ஈ)நன்னூல்

                                       விடை  :  அ) தொல்காப்பியம்


31.இவற்றில் எவை எல்லாம் மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையில் 

     வழக்குகளாக மாற்றுபவை 

     அ)உவமம்                                           ஆ)உவமம், குறிப்பு உள்ளுறை 

     இ)உவமம், உருவகம், எச்சம், குறிப்பு, உள்ளுறை உவமை, இறைச்சி

      ஈ) உருவகம் உள்ளுறை 

             விடை  :  இ) உவமம், உருவகம், எச்சம், குறிப்பு, உள்ளுறை உவமை, இறைச்சி


32. அகன் ஐந்திணைகளை இன்பம்,பொருள், அறம் ஆகிய அறவியல் 'லட்சியப்' 

       பொருள்களோடு இரண்டற இணைத்து கூறுகின்ற நூல்

      அ) புறநானூறு    ஆ) அகநானூறு    இ)தொல்காப்பியம்        ஈ)நற்றிணை 

                                           விடை  :   இ) தொல்காப்பியம்


33. அறிவியல் சார்ந்த கருத்து நிலைகளை கலை உருவாக்கத்தின் போதே சரிவர 

      இணைந்திருக்க வேண்டும் என்று கூறும் நூல்

      அ) கலித்தொகை     ஆ)புறநானூறு     இ)தொல்காப்பியம்      ஈ)அகநானூறு 

                                        விடை  :   இ) தொல்காப்பியம்


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர், 

கார்மல் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4,  98 43 44 80 95 .


34. அகத்திணை சார்ந்த செய்திகளையும் புறத்திணை சார்ந்த செய்திகளையும் 

      பாடல் பொருள்களாக வடிவமைத்துள்ள நூல்

      அ)தொல்காப்பியம்     ஆ)சங்க இலக்கியம்     இ)சிலப்பதிகாரம்    ஈ) ஐம்பெரும் காப்பியம் 

                                           விடை  :   ஆ) சங்க இலக்கியம்


35. தமிழ் மொழியின் நடை அழகியல் என்ற பாடப்பகுதியை எழுதியவர்

      அ)கி. ராஜநாராயணன்                             ஆ)புதுமைப்பித்தன் 

      இ)தொல்காப்பியர்                                       ஈ)தி.சு. நடராசன் 

                                            விடை  :  ஈ) தி.சு. நடராசன் 


36. குறிப்பிட்ட சில அழகியல் பரிமாணங்களை வரித்துக் கொண்டு கூறும் இலக்கியம்

      அ)தொல்காப்பியம்     ஆ)சங்க இலக்கியம்    இ)பக்தி இலக்கியம்     ஈ)காப்பிய இலக்கியம் 

                                            விடை  :  அ) தொல்காப்பியம்


37. இலக்கியத்தின் பயன் எது? 

      அ)அறம்     ஆ)அறம், பொருள்       இ)அறம், பொருள், இன்பம்        ஈ)இவற்றில் எதுவுமில்லை

                                            விடை  :  இ) அறம், பொருள், இன்பம்


38.  இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசுகின்ற இலக்கண நூல்

       அ) முத்துவீரியம்        ஆ)நன்னூல்     இ)வீரசோழியம்        ஈ)தொல்காப்பியம் 

                                           விடை  :  ஈ) தொல்காப்பியம்


39. தொல்காப்பியம் எதனையும் ஓர் அமைப்பாக கருதுகிறது 

     அ)செய்யுள்            ஆ)உரைநடை         இ)இலக்கணம்          ஈ)செய்யுளும் இலக்கணமும்

                                             விடை  :  அ) செய்யுள் 


40. எழுத்துக்களைப் பற்றி பேசுகிற போதே எதன் வழக்கும் தொல்காப்பியத்தில் பேசப்பட்டு வருகிறது

      அ) உரைநடை       ஆ)கதை                   இ)செய்யுள்                 ஈ)இவற்றில் எதுவுமில்லை

                                               விடை  :  இ) செய்யுள் 


41.இந்தப் பேரண்டத்தின் செய்தி எது?

      அ) இயற்கை         ஆ) மழை                 இ)அழகு                       ஈ)இவற்றில் எதுவுமில்லை

                                                 விடை  :  இ) அழகு 


42. போலந்து நாட்டின் வார்சா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர் 

       அ) தி. சு. நடராசன்    ஆ) தேவதேவன்   இ) கிருஷ்ணசாமி      ஈ) தி. ஜானகிராமன்

                                                       விடை  : அ) தி. சு. நடராசன் 

43. கீழ்க்கண்டவற்றுள் தொகைமொழியைத் தேர்க

      அ) நெடுநீர்              ஆ) கடல்                   இ) குளம்                  ஈ) ஆறு        

                                                     விடை  : அ) நெடுநீர்

44. தொகை நிலை பற்றி பேசும் தொல்காப்பிய இயல்  எது?

     அ) அகத்திணையியல்       ஆ) இடையியல்       இ) எச்சவியல்        ஈ) மரபியல்

                                                விடை  :  இ) எச்சவியல்  


45. தீங்கவிகளைச் செவியாரப் பருக செய்து கற்போர் இதயம் கனியும் வண்ணம் படைப்பது 

      அ) கலை உணர்வு     ஆ) பண்பாட்டு உணர்வு      இ) இலக்கிய உணர்வு      ஈ) அழகியல் உணர்வு

                                                     விடை  :   ஈ) அழகியல் உணர்வு  


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர், 

கார்மல் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4,  98 43 44 80 95 .


46. தமிழ் அழகியலின் நெடும் பரப்பு

     அ) கலை முழுமை        ஆ)மொழி            இ) கவிதை        ஈ) ஒலிக்கோலங்கள்

                                        விடை  : அ) கலை முழுமை            


47. ஓசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் கொள்வது 

      அ) கலை முழுமை             ஆ) அழகியல்        இ) ஒலிப்பின்னல்      ஈ)இசை

                                               விடை  :   இ) ஒலிப்பின்னல்    


48. எவை தவறானவை?

      1. உணர்வும் பொருளும் சொல்லில் தான் பொதிந்து கிடக்கின்றன. 

      2. ஒலிக்கோலம் சங்கப் பாடலில் முக்கியமான ஒரு பண்பு ஆகும். 

      3. சொல்வளம் என்பது பல சூழல்களுக்கும் பல புனைவுகளுக்கும்  பொருந்தி வராது. 

      4. சங்க இலக்கியத்தில் சொற்புலம் மலர்ந்தும் கனிந்தும் கிடக்கிறது.

     அ) 1,2               ஆ) 4 மட்டும்             இ) 3,4               ஈ) 3 மட்டும்

                                           விடை  :  ஈ) 3 மட்டும்


விடைக் குறிப்பு pdf download செய்ய கீழ்க்காணும் download button click செய்யவும்👇👇👇👇👇👇







Photo by Karthik S R on Unsplash

Post a Comment

Previous Post Next Post