12 ஆம் வகுப்பு - தமிழ்
இயல் - 1
இளந்தமிழே
HOT QUESTIONS
(Higher Order Thinking Questions)
உயர்நிலை வகை மற்றும் சிந்தனையைத் தூண்டும் வினாக்கள்
1.சிற்பி பாலசுப்ரமணியத்தின் பன்முகத் தன்மையில் அடங்காத ஒன்று.
அ) பேராசிரியர் ஆ) இதழாசிரியர் இ) கட்டுரையாளர் ஈ) மொழிபெயர்ப்பாளர்
விடை : இ) கட்டுரையாளர்
2. சிற்பி எழுதியுள்ள உரைநடை நூல்
அ) சூரிய நிழல் ஆ) ஒரு கிராமத்து நதி இ)ஒளிப்பறவை ஈ) மலையாளக் கவிதை
விடை : ஈ) மலையாளக் கவிதை
3. 'ஈறுபோதல்', 'முன் நின்ற மெய் திரிதல்' விதிகளின்படி புணரும் சொல் எது?
அ) செந்தமிழ் ஆ) செம்பரிதி இ)நெடுந்தேர் ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடை : அ) செந்தமிழ்
4. இவற்றுள் சிற்பி எழுதாத நூல்
அ) அக்கினி சாட்சி ஆ)ஒரு கிராமத்து நதி இ)கவிதையெனும் மொழி ஈ)நிலவுப்பூ
விடை : இ)கவிதையெனும் மொழி
எம்.ஏ.ஜெலஸ்டின்,
முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
5.பொருத்தித் தேர்க
அ)அலையும் சுவடும் - 1. படைப்பிலக்கிய விருதுகள்
ஆ)ஒரு கிராமத்து நதி - 2. மொழிபெயர்ப்பு விருது நூல்
இ) அக்கினி சாட்சி - 3. கவிதை நூல்
ஈ) ஒளிப்பறவை - 4. உரை நடை நூல்
அ) 4 1 2 3 ஆ) 4 2 1 3 இ) 4 3 1 2 ஈ) 4 3 2 1
விடை : அ) 4 1 2 3
6. கவிஞர் சிற்பி சாகித்திய அகாதமி விருது பெற்ற வருடங்கள்
அ) 2002,2003 ஆ) 2003, 2004 இ) 2001, 2003 ஈ) 2002, 2004
விடை : இ) 2001, 2003
7.கீழ்க்ண்டவற்றுள் நிகழ்கால இடைநிலை இடம்பெற்றுள்ள சொல்
அ) வியந்து ஆ) விம்முகின்ற இ) இருந்தாய் ஈ) சாய்ப்பான்
விடை : ஆ) விம்முகின்ற
8. வினையெச்ச விகுதி இருக்கும் சொல் எது?
அ) விம்முகின்ற ஆ) சாய்ப்பான் இ) வியந்து ஈ) செந்தமிழே
விடை : இ) வியந்து
9. ‘பொதிகை’ என்பது எந்த மலையைக் குறிக்கும்
அ) குற்றால மலை ஆ) விந்திய மலை இ) இமயமலை ஈ) சாமி மலை
விடை : அ) குற்றால மலை
எம்.ஏ.ஜெலஸ்டின்,
முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
10. கவிஞர் சிற்பியின் நூல்கள் மொழி பெயர்க்கப்படாத மொழி எது?
அ) மராத்தி ஆ) குஜராத்தி இ) மலையாளம் ஈ) இந்தி
விடை : ஆ) குஜராத்தி
11.சிற்பி எம்மொழியில் உள்ள புதினத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்
அ) ஆங்கிலம் ஆ) ஹிந்தி இ) மலையாளம் ஈ) மராத்தி
விடை : இ) மலையாளம்
12. கவிஞர் சிற்பியின் ‘இளந்தமிழே’ பாடலில் கூறப்படும் அரசர்
அ) சோழன் ஆ) பாண்டியன் இ) சேரன் ஈ) கரிகாலச்சோழன்
விடை : ஆ) பாண்டியன்
13. சரியான நிறுத்தற்குறியுடைய பாடல் வரியைத் தேர்க.
அ) மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா!
ஆ) மெய்சிலிர்க்கத் ‘தமிழ்க்குயிலே’ கூவிவாவா
இ) ‘மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே, கூவி வா வா’
ஈ) மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே கூவி வா, வா!
விடை : அ) மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா!
14. கீழ்க்காணும் சொற்களில் உருவகச் சொல் எது?
அ) குளிர்பொதிகை ஆ) தமிழ்க்குயில் இ) முத்துமுத்தாய் ஈ) செம்பரிதி
விடை : ஆ) தமிழ்க்குயில்
15.’விம்முகின்ற தோள்மீது முத்துமுத்தாய்
வீற்றிருக்கும் அவையெல்லாம் வியந்து பாட’
இப்பாடல் வரியில் இடம்பெற்றுள்ள நயம்
அ) அடி எதுகை, சீர் மோனை ஆ) சீர்மோனை, சீர் எதுகை இ) சீர் மோனை ஈ) அடிமோனை
விடை : இ) சீர் மோனை
Follow us on (click the below icons to follow)
Want our latest news??
View our blog for latest news (click the icon below to visit our blog)
Tamilamuthu 2020
Keep Supporting Tamilamuthu 2020
Photo by Aaron Burden on Unsplash