Loading ....

12 ஆம் வகுப்பு ,தமிழ் ,இயல் -2 ,நால்வகைப் பொருத்தங்கள் ,இலக்கணம் ,பலவுள் தெரிக, 60 One word questions

 


 © எம்.ஏ.ஜெலஸ்டின்,

முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095.                              



12 ஆம் வகுப்பு

தமிழ்


இயல் -2


நால்வகைப் பொருத்தங்கள் 


இலக்கணம்


புத்தகம் மற்றும் சிறப்புப் பலவுள் தெரிக வினாக்கள்






பலவுள் தெரிக:

60 One word questions


1). தமிழில் திணைப்பாகுபாடு அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

அ) பொருட்குறிப்பு

ஆ) சொற்குறிப்பு

இ) தொடர்க்குறிப்பு

ஈ) எழுத்துக் குறிப்பு


விடை : அ) பொருட்குறிப்பு


2. "உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே 

    அஃறிணை என்மனார் அவரல பிறவே" -

    இந்நூற்பா இடம்பெற்ற இலக்கண நூல்___________

அ) நன்னூல்

ஆ) அகத்தியம் 

இ) தொல்காப்பியம்

ஈ) இலக்கணவிளக்கம்


விடை : இ) தொல்காப்பியம்


3. யார்? எது? ஆகிய வினாச்சொற்கள் பயனிலையாய் அமைந்து உணர்த்தும்   திணைகள் முறையே

அ) அஃறிணை , உயர்திணை

ஆ) உயர்திணை, அஃறிணை

இ) விரவுத்திணை ,அஃறிணை

ஈ ) விரவுத்திணை, உயர்திணை


விடை : ஆ) உயர்திணை, அஃறிணை

4. பொருத்தி விடை தேர்க.


அ) அவன் அவள் அவர் - 1) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை


ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் -  2) உளப்பாட்டுத் தன்மைப்பன்மை


இ) நாம் முயற்சி செய்வோம் - 3) தன்மைப் பன்மைப் பெயர்கள்:


ஈ) நாங்கள் நாம் - 4) பதிலிடு பெயர்கள்


அ)4 1 2 3

ஆ) 2 3 4 1

இ) 3 4 1 2

ஈ) 4 3 1 2


விடை : அ)4 1 2 3


5 . இருதிணைக்கும் பொதுவாக வரும் சொற்கள்.


அ) குழந்தை, கதிரவன்

ஆ) மரம், மனிதர்கள்

இ) சீதா,இராமன்

ஈ) நாம், நாங்கள்


.விடை : அ) குழந்தை, கதிரவன்



6 . உலக மொழிகள் அனைத்திலும்___________ ச் சொற்களே மிகுதி என்பர்.

அ) பெயர்

ஆ) இடை 

இ) வினை

ஈ) உரி


.விடை : அ) பெயர்

                       

7. ‘மக்கள் என்று சுட்டப்படுவோர் உயர்திணை; அவரல்லாத பிற அஃறிணை' என்று கூறும் நூல் 

அ) அகத்தியம்

ஆ) தொல்காப்பியம்

இ) நன்னூல்

ஈ) இலக்கண விளக்கம்

                       

.விடை : ஆ) தொல்காப்பியம்



8 . அவன், அவள், அவர், அது, அவை முதலியன _________பெயர்கள்.

அ) தன்மை ஒருமைப் பெயர்கள்

ஆ) தன்மைப் பன்மைப் பெயர்கள்

இ) உளப்படுத்தா தன்மைப் பன்மை

ஈ) பதிலிடு பெயர்கள்

.விடை : ஈ) பதிலிடு பெயர்கள்



9 . பேசுபவர் முன்னிலையாகவும் தன்னுடன்சேர்த்துக் கொண்டு பேசுவது__________ ஆகும்


அ) உளப்படுத்தா தன்மைப் பன்மை

ஆ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை

இ)பதிலிடு பெயர்கள்

ஈ தன்மைப் பன்மைப் பெயர்கள்


.விடை : ஆ) உளப்பாட்டுத் தன்மை பன்மை


 எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095.                              



10 . பேசுபவர் முன்னிலையாரைத் தவிர்த்துத் தன்மைப் பன்மையில் பேசுவது ___________ ஆகும்


அ) உளப்படுத்தா தன்மைப் பன்மை

ஆ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை

இ) பதிலிடு பெயர்கள்

ஈ) தன்மைப் பன்மைப் பெயர்கள்


விடை : அ) உளப்படுத்தா தன்மைப் பன்மை

        

11. படர்க்கை இடத்தில் பயனிலை விகுதிகளான ஆள், ஆள், ஆர், அது, அன் ஆகியவை ____________ பகுப்பைக் காட்டுகின்றன.

அ) எண் 

ஆ) திணை 

இ) பெயர் 

ஈ) பால்


விடை : ஈ) பால்


12 . சரியா ? தவறா ?


கருத்து  1:பெயர்ச்சொற்களைத் திணை அடிப்படையில் உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர் என்று இருவகையாகப் பிரிப்பர்


கருத்து 2: உயர்திணைப் பெயர், அற்றிணைப் பெயர் என பாகுபடுத்தும் முறை எல்லா மொழிகளிலும் ஒரே மாதிரியாக அமையும்.


 அ) கருத்து 1, 2.தவறு

ஆ) கருத்து 1 தவறு , கருத்து 2 சரி 

இ)  கருந்து 1, 2 சரி கருத்து 2 தவறு

ஈ)  கருத்து 1 சரி கருத்து 2 தவறு


விடை : ஈ)  கருத்து 1 சரி கருத்து 2 தவறு



13 . சரியா ? தவறா ?


கருத்து  1: திணை,பால்,எண், இதம் ஆகியவை மொழியின் அடிப்படைப் பண்புகள்

       கருத்து 2: தமிழ்மொழியில் பெயர்ச்சொற்களும்  திணை,பால்,எண் ஆகியவற்றை உணர்துகின்றன.


அ) கருத்து 1 சரி கருத்து 2 தவறு

ஆ) இரண்டு கருத்துகளும் சரி


இ) இரண்டு கருத்துகளும் தவறு

ஈ)  கருத்து 1 தவறு , கருத்து 2 சரி


விடை : ஆ) இரண்டு கருத்துகளும் சரி


14. சரியா ? தவறா ?


கருத்து 1 : பெயர்ச்சொற்களைத் திணை அடிப்படைரயில் உயர்திணைப் பெயர், அஃறிணைப்பெயர்  என்று இருவகையாகப் பிரிப்பர், up


கருத்து: 2, உயர்தினைப் பெயர், கஅஃறிணைப்பெயர் என ப் பாகுபடுத்தும் முறை எல்லா 

மொழிகளிலும் ஒரே மாதிரியாக அமையும்,


அ) கருத்து 1, 2 சரி 

ஆ) கருத்து 1 சரி கருத்து 2 தவறு

இ) கருத்து 1, 2 தவறு

ஈ) சுருத்து 1 தவறு கருத்து 2 சரி


விடை : ஆ) கருத்து 1 சரி கருத்து 2 தவறு


15.  மக்கள் என்று சுட்டப்படுவோர் உயர்திணை, ; அவரல்லாத பிற அஃறிணை" என்று கூறும் நூல்


அ) நன்னூல்

ஆ) இலக்கண விளக்கம்

இ) அகத்தியம்

ஈ) தொல்காப்பியம்


விடை : ஈ) தொல்காப்பியம்


16. பெரும்பாலான தொடர்களில் எழுவாயை வைத்துக் கொண்டே வினைமுற்றின் _________ ஆகியவற்றைச் சொல்லிவிடலாம்.


அ) திணை, எண்

ஆ)திணை, பால், எண்

இ) பால், எண்

ஈ) திணை, பால்


விடை  :ஆ) திணை, பால்,எண்]

 எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095.                              


17. . தமிழில் பொருட்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு___________ பாகுபாடு அமைந்துள்ளது.


அ) இடப்

ஆ) பால்

இ) இருதிணைப்

ஈ) எண்


விடை  : இ) இருதிணைப்







18 . தற்போது தமிழில் தாங்கள் என்பது __________ இடத்திலும் வரும்


அ) தன்மை

ஆ) முன்னிலை

இ) படர்க்கை

ஈ) எதுவுமில்லை


விடை  : ஆ) முன்னிலை



19.  'அவர்கள்' என்னும் சொல் பன்மைப் பொருளை உணர்த்தும் _________


அ) பதிலிடு வினைச்சொல் 

ஆ) பதிலிடு பெயர்ச்சொல் 

இ) பெயர்ச்சொல்

ஈ) வினைச்சொல்


விடை  : ஆ) பதிலிடு பெயர்ச்சொல்


20. சரியானதைத் தேர்க


அ) யார்? எது ?   - பால் வேறுபாடு

ஆ) அவர் வந்தார் - - பன்மைப் பொருளை உணர்த்துகிறது

இ) தங்கமணி பாடினாள்  - பெண்பால் விகுதி பெற்றுள்ளது

ஈ) ஆசிரியர் வந்தார்  -  பலர்பால் விகுதி உயர்வு கருதி வராது


விடை  : இ) தங்கமணி பாடினாள்  - பெண்பால் விகுதி பெற்றுள்ளது




21.  சரியானதைத் தேர்க


அ) பதிலிடு வினைச்சொல்   - அவர்கள்

ஆ) நாங்கள் முயற்சி செய்வோம்   _ - உளப்படுத்தாத் தன்மைப் பன்மை

இ) பத்துமரம் வீழ்ந்தது.  _ ஒருமை பன்மை வேறுபாடு எழுவாயில் வெளிப்படவில்லை

ஈ) யார் ? எது ?  _ விரவுத்திணை, அஃறிணை


விடை  : ஆ) நாங்கள் முயற்சி செய்வோம்   _ - உளப்படுத்தாத் தன்மைப் பன்மை

 எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095.                              


22.  சரியானதைத் தேர்க


 அ) ஒவ்வொரு பள்ளிகளிலும் நூலகம் உள்ளது.

ஆ) ஒவ்வொரு பள்ளிகளிலும் நூலகம் உள்ளன.

இ) ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம் உள்ளன.

ஈ) ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம் உள்ளது.


விடை  : ஈ) ஒவ்வொரு பள்ளியிலும் நூலகம் உள்ளது


23. பொருத்தி விடை தேர்க.


 அ) அஃறிணை பன்மை விகுதி கட்டாயமில்லை - 1.தங்கமணி

 ஆ) பலர்பால்சொல்  -2. பத்துத்தேங்காய்

 இ) ஆண்பால் பெண்பால் பொதுப்பெயர் - 3, பேசுபவன், கேட்பவன், பேசப்படும்பொருள்                                                                         ஈ) தன்மை, முன்னிலை, படர்க்கை - 4. மாணவர் வந்தனர்


அ)2 1 4 3

ஆ) 2 4 1 3

இ)2 3 4 1

ஈ) 1234


விடை  : ஆ) 2413]


24. ஒன்றுக்கொன்று  மிக நெருக்கமானவை எவை ? 

அ)மொழி வளர்ச்சி

ஆ) இலக்கணத் தேவை

இ)இலக்கணத் தழுவல்

ஈ) மொழி வளர்ச்சி, இலக்கணத் தேவை


விடை  : ஈ) மொழி வளர்ச்சி, இலக்கணத் தேவை


25. பெரும்பாலான தொடர்களில் எழுவாயை வைத்துக்கொண்டே வினைமுற்றின்_________ஆகியவற்றைச்  சொல்லிவிடலாம்


அ)திணை, எண் 

ஆ)திணை, பால், எண்

இ) பால்,எண் 

ஈ) திணை, பால்

விடை  : ஆ)திணை, பால், எண்



26. தமிழில்  பொருட்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு ___________ பாகுபாடு அமைந்துள்ளது.


அ) இருதிணைப்

இ.இடப் 

இ)காலப்

ஈ) படர்க்கைப்


விடை  : அ) இருதிணைப்


 எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095.                              


27. தமிழ் மொழியில் திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் சொற்கள்


அ) பெயர்ச்சொல், இடைச்செல் 

ஆ) பெயர்ச்சொல், உரிச்சொல் 

இ) பெயர்ச் சொல், திசைச் சொல் 

ஈ) பெயர்ச்சொல், வினைச்சொல்


விடை  : ஈ) பெயர்ச்சொல், வினைச்சொல்


28. எது? என்ற பயனிலை உணர்த்தும் திணை 


அ)அஃறிணை 

ஆ) உயர்திணை


விடை  : அ) அஃறிணை 


29. இருதிணைக்கும் பொதுவாக வரும் பெயர்கள்

 

அ) குழந்தை, அமுதா 

ஆ)கதிரவன்,இராமன்

இ) கதிரவன், குழந்தை 

ஈ) இவற்றில் எதுவுமில்லை..


விடை  : இ) கதிரவன், குழந்தை 


30. தமிழில் உள்ள பெயர்கள் தன்மை முன்னிலை இடத்தைத் தவிர ___________ இடத்திலும் வரும்


அ படர்க்கை. 

ஆ) ஆண்பால்

இ) பலர்பால் 

ஈ)  இம்மூன்றிலும்


விடை  :  அ) படர்க்கை. 



31. இக்காலத்  தமிழில் பலர்பாலை உணர்த்தும் சொல். பண்மைப் பொருளை

உணர்த்தாமல் ஒருமைப் பொருளை உணர்த்தும் சொல் எது? 


அ) அது 

ஆ) அவை 

இ) அவர் 

ஈ) அவர்கள்


விடை  : இ) அவர் 


32. தமிழில் உயர்திணை ஆண்பால் பெண்பாலுக்குரிய பொதுப்பெயர்கள் எதைப் பொறுத்தே பால் அறியப்படும்.

 

அ) எழுவாய்

ஆ) வினைமுற்று 

இ)செயப்படுபொருள் 

ஈ)தொழிற்பெயர்


விடை  : ஆ) வினைமுற்று 


 எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095.                              


33. ‘ஆசிரியர் வந்தார்’ இது எது கருதி ஒருமையில் வந்துள்ளது


அ) வினைமுற்று 

ஆ) பன்மை

இ) மரியாதை 

ஈ) உயர்வு 


விடை  : ஈ) உயர்வு 


34.. எது இன்றியும் உயர்திணைப் பெயர்சொற்கள் தத்தம் பால் உணர்த்தும்


அ) பால் காட்டும் பெயர்

 ஆ) பால் காட்டும் வினை

இ) பால்காட்டும்சொல்

ஈ) பால்காட்டும் விகுதி


விடை  : ஈ) பால்காட்டும் விகுதி


 35. அஃறிணையில்  ஒன்றன்பால் பலவின்பால் எதன் அடிப்படையில் அறியப்படும்


அ) பால் பகுப்பு மரபில் 

ஆ)பால்காட்டும் விகுதிகன் 

இ) ஒருமைப் பன்மை

ஈ) இவற்றில் எதுவுமில்லை


விடை  : இ) ஒருமைப் பன்மை



36. சரியானதைத் தேர்க


அ) பசுகள் பால் தந்தது

ஆ) காளை உழுதின.

இ) பசு பால் தந்தன

ஈ) பசு பால் தந்தது


விடை  : ஈ) பசு பால் தந்தது



37 . தற்காலத்தில்  அஃறிணை ________ மாற்றம் அடைந்துள்ளது.


அ) பயனிலை

ஆ) செயப்படுபொருள்

இ) துணைவினை

ஈ) இவற்றில் எதுவுமில்லை


விடை  : ஈ) இவற்றில் எதுவுமில்லை


38 . இவற்றில் பால்காட்டும் விகுதி இன்றி உயர்திணைப் பெயர்ச்சொல்லாக இல்லாத சொல்   எது ?


அ) காளை 

ஆ)தந்தை

இ) தாய்

ஈ) அம்மா 


அ) காளை 


 எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095.                              


39. தமிழில் பால்பகுப்பு __________ அடிப்படையிலேயே அமைந்துள்ளது.


அ) எழுவாய் 

ஆ) வினை 

இ) இலக்கண

ஈ) தொழில்


விடை  : இ) இலக்கண



40 . இவற்றில் பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெறாமல் வந்தள்ள சொல்  எது?


அ) மனிதர் வந்தார்.

ஆ) இரண்டு மனிதர் 

இ) இரண்டு மனிதன்

ஈ) இரண்டு மனிதர்கள்


விடை  : ஈ) இரண்டு மனிதர்கள்



41 . தற்காலத் தமிழில் எதற்கென தனிவினைமுற்று இல்லை.


அ) அஃறிணைஒருமை

ஆ) அஃறிணை

இ) அஃறிணை பன்மை

ஈ) அஃறிணைமுன்னிலை.


விடை  :.இ) அஃறிணை பன்மை


42. அஃறிணையில்  ஒருமை, பன்மை வேறுபாடு எங்கு வெளிப்படும். 


அ) எழுவாய்

ஆ) வினை

இ) பயனிலை

ஈ) விகுதி 


விடை  : அ) எழுவாய்


 எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095.                              


43. சரியானதைத் தேர்க


அ) யார்? எது?  -பால்வேறுபாடு . 

ஆ) அவர் வந்தார் - பன்மைப் பொருளை உணர்த்துகிறது.

இ) தங்கமணி பாடினாள் - பெண்பால் விகுதி பெற்றுள்ளது

(ஈ) ஆசிரியர் வந்தார் - பலர்பால் விகுதி உயர்வு கருதி வராது


விடை  : இ) தங்கமணி பாடினாள் - பெண்பால் விகுதி பெற்றுள்ளது.



44 . சரியானதைத் தேர்க


அ)ஒவ்வொரு பள்ளிகளிலும் நூலகம் உள்ளது. 

ஆ)ஒவ்வொரு பள்ளிகளிலும்  நூலகம் உள்ளன.

இ) ஒவ்வொரு பள்ளியிலும்  நூலகம் உள்ளன. 

ஈ) ஒவ்வொரு பள்ளியிலும்நூலகம் உள்ளது.


விடை  : ஈ) ஒவ்வொரு பள்ளியிலும்நூலகம் உள்ளது.


45. ‘ஒருமை’ பொருளை உணர்த்தும் சொல் 


அ) ஒவ்வொரு 

ஆ) ஒரு, 

இ) ஒன்று

ஈ) இவற்றில் எழுவுமில்லை



விடை  : அ) ஒவ்வொரு 




46. அ ஃறிணை ப் பன்மைப் பெயர்கள் _________ விகுதி பெறுவது கட்டாய மில்லை.


அ) பன்மை, ஒருமை 

ஆ ) பன்மை 

இ) குறிப்பு 

ஈ) எச்ச 


விடை  : ஆ ) பன்மை 


47 .தற்காலத் தமிழில் உயர்திணை__________- பெயர்கள் பன்மை விகுதி பெற்று வருகின்றன


அ) வினைப் 

ஆ)) இடம்

இ)காலப்

ஈ) பன்மைப்


விடை  : ஈ) பன்மைப்


48.  ‘ஒவ்வொரு வீடுகளிலும் நூலகம் உள்ளது’ - இத் தொடரில்

பிழையான சொல்


அ ) வீடுகளிலும்

ஆ) ஒவ்வொரு

இ) உள்ளது

 ஈ) உலகம்


விடை  :   அ ) வீடுகளிலும்


49. அஃறிணை பன்மைக்கென தனி _____________ இல்லை


அ) பெயர்

ஆ) இடம்

இ) வினைமுற்றுகள்

ஈ) தொடர்


விடை  :  இ) வினைமுற்றுகள்


50.  . தற்போது தமிழில் ‘தங்கள்’ என்பது  __________ இடத்திலும் வரும்.

 

அ) தன்மை 

ஆ) முன்னிலை. 

இபர்க்கை 

ஈ)எதுவுமில்லை


விடை  : ஆ) முன்னிலை





 எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095.                              



51 ‘ அவர்கள்' என்னும் சொல் பன்மைப் பொருளை உணர்த்தும்_____________


அ) பதிலிடு வினைச் சொல் 

ஆ) பதிலிடு பெயர்ச்சொல் 

இ) பெயர்சொல் 

ஈ) வினைச்சொல்


விடை  : ஆ) பதிலிடு பெயர்ச்சொல்


52 .  சரியானதைத் தேர்க


அ)பதிலிடு வினைச்சொல் -  அவர்கள்

ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் - உளப்படுத்தாத் தன்மைப் பன்மை.

இ) பத்துமரம் வீழ்ந்தது  - ஒருமைப் பன்மை வேறுபாடு எழுவாயில் வெளிப்படவில்லை.

ஈ) யார்? எது - விரவுத்திணை, அஃறிணை

 

விடை  : ஆ) நாங்கள் முயற்சி செய்வோம் - உளப்படுத்தாத் தன்மைப் பன்மை.


53. இடம் எத்தனை வகைப்படும்.


அ) 3

ஆ) 5

இ) 2

ஈ) 4


விடை  : அ) 3


54. 'பேசுபவன்' என்பது எந்த இடத்தைக் குறிக்கும்


அ) முன்னிலை 

ஆ) படர்க்கை 

இ) தன்மை 

ஈ ) இவற்றில் எதுவுமில்லை


விடை  : இ) தன்மை 


55. தன்மை  மற்றும் முன்னிலை இடங்களில் என்ன வேறுபாட்டை அறிய முடியாது.


அ) திணை

ஆ) எண்

இ) இடம்

ஈ) பால்


விடை  : ஈ) பால்


56. “நாம் முயற்சி செய்வோம்" - என்பது 


அ) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை 

ஆ) உளப்பாட்டுத் தன்மைப்பன்மை

இ) பதிலிடு பெயர் 

ஈ] தன்மைப் பன்மை பெயர்கள்


விடை  : ஆ) உளப்பாட்டுத் தன்மைப்பன்மை


57.  எந்த நான்கினை உள்ளடக்கியது மொழியின் இலக்கணமாகும் என்று

       தமிழ் நடைக்கையேடு குறிப்பிடுகின்றது.

 

அ)திணை, பால், எண், இடம் 

ஆ) பெயர், வினை, பெயரடை, வினையடை

இ) எழுத்து, சொல், பொருள், யாப்பு 

ஈ) எழுத்து, சொல், பொருள், வாக்கிய அமைப்பு


விடை  :  ஈ) எழுத்து, சொல், பொருள், வாக்கிய அமைப்பு


58. பெயர்ச்சொற்களில் எப்பாகுபாடு வெளிப்படாது 


அ) இட

ஆ) எண்

இ) திணை 

ஈ) இவற்றில் எதுவுமில்லை .


விடை  : அ) இட


59. கீழ்க்காண்பவற்றுள் எவ்வாறு எழுதுவது   சரியானது.


அ) பத்துத் தேங்காய்கள்

ஆ) பத்துத் தேங்காய்

இ) ஒரு மரம் வீழ்ந்தன

ஈ) காளை உழுதன


விடை  : ஆ) பத்துத் தேங்காய்


60. தமிழில் பால்பகுபாட்டை அறிய முடியாத இடங்கள எவை ?


அ) முன்னிலை , தன்மை

ஆ) தன்மை, படர்க்கை

இ) முன்னிலை, படர்க்கை

ஈ) தன்மை, முன்னிலை


விடை  : ஈ) தன்மை, முன்னிலை


 எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095.                              


விடைக் குறிப்பு pdf download செய்ய கீழ்க்காணும் download button click செய்யவும்👇👇👇👇👇👇



Post a Comment

Previous Post Next Post