©Tamilamuthu2020official.blogspot.com
திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் 2021 - 2022
மேனிலை இரண்டாமாண்டு.
தமிழமுது 2020 - பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.
SLIP TEST -4
வகுப்பு : 12 தமிழ் இயல் : 1
நேரம் : 40 நிமிடங்கள் மதிப்பெண் : 30
ஒரு மதிப்பெண் தேர்வு ( ONE WORD TEST)
I.அனைத்திற்கும் விடையளி. 30 x 1 = 30
1.”Artistic Whole” என்பதன் தமிழ்ச்சொல்
அ) ஓவியம்
ஆ) ஓவிய புனைவு
இ) கலை புலம்
ஈ) கலை முழுமை
2. கீழ்க்கண்டவற்றுள் தவறான சொல் எது?
அ) உறுப்பினர்
ஆ) இயக்குனர்
இ) குழுவினர்
ஈ) ஊரினர்.
3. பல்+ முகம் = ?
அ) பலமுகம்
ஆ)பல் முகம்
இ) பன்முகம்
ஈ)பன்னுகம்.
4.ட் ,ற் மெய்களுக்குப் பிறகு அவ்வெழுத்து வரிசைகளுடன் எந்த வரிசை எழுத்துக்கள் வரும்.
அ) க,ப,த,
ஆ) க, ச, ப
இ) க, ட, த
ஈ) க, ப, ற
5. கவிதை என்னும் மொழி யாருடைய நூல்
அ) சிற்பி பாலசுப்பிரமணியம்
ஆ) கி. ராஜநாராயணன்
இ) தி. சு. நடராசன்
ஈ) இளசைமணி
6. “Archive” -என்பதன் தமிழ்ச்சொல்
அ) வில்வித்தை
ஆ) காப்பகம்
இ) இல்லம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
7. கடிதங்கள் எழுதுகையில் மாறுபடுவது எது?
அ) மொழியாட்சி
ஆ) உறவு
இ) நடையழகியல்
ஈ) உரிமை
8. சரியானதை தேர்க
அ) பாவகை - ஐந்து
ஆ) வஞ்சி - வெண்பா நடைத்தே
இ) பனிநீர் - தொகை மொழி
ஈ) காமர் வனப்பு - தொடரியல் போக்கு
9. ணகர ஒற்றினை அடுத்து எழுத்து வராது
அ) டகரம்
ஆ) அகரம்
இ) தகரம்
ஈ) றகரம்
10.தவறானதைக் கண்டுபிடி
அ) பல் + துளி = பல்துளி
ஆ) சொல் + துணை = சொற்றுணை
இ) பல்+ நூல் = பன்னூல் நூல்
ஈ) நாள்+ மீன் = நாண்மீன்
11. அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் நூல்
அ) தொல்காப்பியம்
ஆ) முத்துவீரியம்
இ) இலக்கண விளக்கம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
12. இந்தப் பேரண்டத்தின் செய்தி
அ) அறிவு
ஆ) அழகு
இ) உணர்வு
ஈ) உண்மை
13. தி. சு. நடராசன் எழுதிய நூல்
அ) பண்பாட்டு அசைவுகள்
ஆ)மொழியென்னும் பெருவரம்
இ) தமிழின் பண்பாட்டு வெளிகள்
ஈ) தமிழர் பண்பாடு
14. மொழியின் செறிவாக்கப்பட்ட ஒரு வடிவமைப்பு இது
அ) மறுதலைத் தொடர்
ஆ) சொல் விளையாட்டு
இ) தொடர் மொழி
ஈ) தொகை மொழி
15. கலையும் பண்பாடும் வரலாறும் அரசியலும் பொதிந்து கிடக்கும் இடம்
அ) சொல்
ஆ) பயன்
இ) சூழல்
ஈ) இசை
16. ஓசையும் பொருளும் இணைந்து உருவாகும் கலை வடிவத்தின் பெயர்
அ) கவிதைத்தனம்
ஆ) மொழியின் இயல்பு
இ) ஒலிப்பின்னல்
ஈ) தொடரியல் பிறழ்வு
17. காளைகளில் பல இனங்களைக் காட்டுகிற சொற்கள் நிரம்பிக் கிடக்கும் நூல்
அ) கிடை
ஆ) தொல்காப்பியம்
இ) குறிஞ்சிக்கலி
ஈ) முல்லைக்கலி
18. பொருத்தமற்றதைத் தேர்வு செய்க
அ) மாறனலங்காரம்
ஆ) வீரசோழியம்
இ) தண்டியலங்காரம்
ஈ) குவலயானந்தம்
19. இவற்றுள் நிகழ்கால இடைநிலை பயின்று வரும் சொல்
அ) இருந்தாய்
ஆ) விம்முகின்ற
இ) சாய்ப்பான்
ஈ) தந்தாய்
20. தமிழின் விரிவை உணர்த்த புலவர் கையாளும் தொடர்
அ) நிலத்தினும் பெரிது
ஆ) வானினும் உயர்ந்தன்று
இ) கடலினும் ஆழமானது
ஈ) ஓங்கலிடை வந்து
21. பகலும் இரவும் சந்திக்கும் அந்தி அழகு இத்தொடர் காட்டும் உண்மை
அ) இருவேறு பொருள்களிடையே உள்ள ஒற்றுமையைக் காட்டுகிறது
ஆ) இருவேறு பொருள்களிடையே உள்ள வேற்றுமையைக் காட்டுகிறது
இ) மொழிக்கும் ஒரு வலிமைமிக்க ஆற்றலை வெளிப்படுத்துகிறது
ஈ) மாறுபட்ட இரண்டு இணைகிற போது புலப்படும் புது அழகை வெளிப்படுத்துகிறது
22. ‘நெல்லை தென்றல்’ என்னும் நூல்
அ) கவிதை நூல்
ஆ) உரைநடை நூல்
இ) கடித இலக்கிய நூல்
ஈ) வரலாற்று நூல்
23. எழுதும் போது ஏற்படும் பிழைகளை வகைப்படுத்துவதில் தவறான ஒன்றை தேர்க
அ) எழுத்துப் பிழை
ஆ) சொற்பொருள் பிழை
இ) சொற்றொடர் பிழை
ஈ) மொழி பற்றிய ஆழ்ந்த அறிவு
24. எழுத்துப் பிழைக்கு முதன்மையான காரணம்
அ) எழுதுவது போல பேசுவது
ஆ) பேசுவது போல எழுதுவது
இ) மனப்பாடம் செய்வது
ஈ) அதிக மொழியறிவு
25. பின்வருவனவற்றுள் தமிழ் மரபுக்கு ஏற்ற சரியான சொல்
அ) கர்மம்
ஆ) கற்மம்
இ) கருமம்
ஈ) கர்மன்
26. உலக மொழிகள் அனைத்திலும் மிகுந்திருக்கும் சொற்கள்
அ) பெயர்ச் சொற்கள்
ஆ) வினைச் சொற்கள்
இ) இடைச்சொற்கள்
உ) உரிச்சொற்கள்
27. இக்காலத் தமிழில் தனி வினைமுற்றுகள் இல்லாதது
அ) அஃறிணை பன்மை
ஆ) அஃறிணை ஒருமை
இ) உயர்திணை பன்மை
ஈ) உயர்திணை ஒருமை
28. தமிழில் திணைப்பாகுபாடு அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.
அ)பொருட் குறிப்பு
ஆ) சொற்பகுப்பு
இ) தொடர்க்குறிப்பு
ஈ) எழுத்துக் குறிப்பு
29. பால் காட்டும் விகுதிகள் இன்றியும் உயர்திணை பெயர்ச்சொற்கள் தத்தம் பால் உணர்த்துகின்றன என்பதற்குப் பொருத்தமில்லாதது
அ) ஆண் - பெண்
ஆ) அப்பா - அம்மா
இ) தம்பி - தங்கை
ஈ) கடுவன் - மந்தி
30.மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன
அ) திணை
ஆ) பால்
இ) எண், இடம்
ஈ) மேற்கண்டவை அனைத்தும்
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
இயல் -1
SLIP TEST - ற்கான ANSWER KEY ,Pdf வடிவில்
FREE DOWNLOAD செய்ய CLICK THE BUTTON BELLOW👇👇👇👇👇
Image by Couleur from Pixabay