©Tamilamuthu2020official.blogspot.com
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
பகுதி - 1
1. பண்டைத் தமிழர்கள் குடும்பம் எனும் அமைப்புடன் வாழ்ந்த இடங்கள்
பற்றிப் பல குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றது.
பண்டைத் தமிழர்கள் குடும்பம் எனும் அமைப்புடன் வாழ்ந்த இடங்கள்
பற்றிப் பல குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.
2. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் வருகின்றன.
குடும்பம் எனும் சொல் முதன்முதலில் திருக்குறளில்தான் வருகின்றது.
3. தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டன.
தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது.
4. சங்க காலத்தில் ஒவ்வொரு ஆய த்துக்கும் செவிலித்தாயே பொறுப்பேற்றிருந்தார்கள்.
சங்க காலத்தில் ஒவ்வொரு ஆய த்துக்கும் செவிலித்தாயே பொறுப்பேற்றிருந்தாள்.
5. திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று
கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளன.
திருமணத்திற்குப்பின் மனைவியின் இல்லத்துக்குச் சென்று
கணவன் வாழ்வதே நடைமுறையாக இருந்துள்ளது.
6. கோவலன் மதுரைக்குச் சென்றது.
கோவலன் மதுரைக்குச் சென்றான்.
7. பறவைகள் நெல்மணிகளை வேகமாகக் கொ த்தித் தின்றது.
பறவைகள் நெல்மணிகளை வேகமாகக் கொத்தித் தின்றன.
8. குதிரையும் யானையும் வேகமாக ஓடியது.
குதிரையும் யானையும் வேகமாக ஓடின.
9. அவன் வெண்மதியிடம் பேசினாய்.
அவன் வெண்மதியிடம் பேசினான்.
10. சென்னையிலிருந்து நேற்று வருகிறான்.
சென்னையிலிருந்து நேற்று வந்தான்.
11.அதன்மூலம் கண்டுபிடிக்கப்பட்டன.
அதன்மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
12.அவன்கூடக் கொடுத்தார்.
அவன்கூடக் கொடுத்தான்.
13.அவன்பால் கொண்டு சென்றார்.
அவன்பால் கொண்டு சென்றான்.
14.அவன் அல்ல.
அவன் அல்லன்.
15.அங்கே வருவது கோமதி அல்ல.
அங்கே வருவது கோமதி அல்லள்.
16.வீட்டிற்கு வந்தது அவர் அல்ல.
வீட்டிற்கு வந்தது அவர் அல்லர்.
17. தெருவில் ஓடியது குமார் வீட்டு நாய் அல்ல.
தெருவில் ஓடியது குமார் வீட்டு நாய் அன்று.
18.அங்கே ஓடுபவை நாய்கள் அன்று.
அங்கே ஓடுபவை நாய்கள் அல்ல.
19.அங்குத் தெரிவது என் வீடு
அங்குத் தெரிவது எனது வீடு.
20.தொலைவில் தெரிவது அரசனின் மாளிகை.
தொலைவில் தெரிவது அரசரின் மாளிகை.
21. எனது மனைவிக்கு உடல்நலம் சரியில்லை.
என் மனைவிக்கு உடல்நலம் சரியில்லை.
22.என்னுடன் விளையாடியது அரசனது மகன்.
என்னுடன் விளையாடியது அரசனின் மகன்.
23.வண்டிகள் ஓடாது.
வண்டிகள் ஓடா
24. அதுகள் இங்கே உளது.
அவைகள் இங்கே உள.(அல்லது ) அவைகள் இங்கே உளது.
25. அது எல்லாம்.
அவை எல்லாம்.
26. மக்கள் கிடையாது.
மக்கள் இல்லை.
27. வருவதும் போவதும் கிடையாது.
வருவதும் போவதும் கிடையா.
28 ஒன்றோ அல்லது இரண்டோ தருக.
ஒன்றோ இரண்டோ தருக.
29. சென்னை என்ற நகரம்.
சென்னை என்னும் நகரம்.
30. எனது மகன்.
என் மகன்.
31. ஏற்கத்தக்கது அல்ல.
ஏற்கத்தக்கது அன்று.
32. அவளது தந்தை.
அவள் தந்தை.
33. எனக்குப் பல வீடுகள் உள்ளது.
எனக்குப் பல வீடுகள் உள்ளன.
34. பழங்கள் எல்லாம் அழுகிப் போயிற்று.
பழங்கள் எல்லாம் அழுகிப் போயின.
35. கீழே ஒரு பெரிய நாணயம் கிடந்தன.
கீழே ஒரு பெரிய நாணயம் கிடந்தது.
36. எனக்குப் பல வேலைகள் இருக்கிறது.
எனக்குப் பல வேலைகள் இருக்கிறன.
37. என் தாயார் வந்துவிட்டாள்.
என் தாயார் வந்துவிட்டார்.
38. கால்கள் நடுங்குகின்றது.
கால்கள் நடுங்குகின்றன.
39. அவன் பாடகன் அல்ல
அவன் பாடகன் அல்லன்.
40. மாணவர்கள் வந்தனர்
மாணவர்கள் வந்தார்கள்.
Pdf வடிவில் தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக,
பகுதி - 1, FREE DOWNLOAD செய்ய CLICK THE BUTTON BELLOW👇👇👇👇👇
எம்.ஏ.ஜெலஸ்டின்,
முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095