Loading ....

12th Standard -Tamil -Study Material - FIRST REVISION EXAM -February 2022-10 mark - குறுவினா - செய்யுள் - உரைநடை

 12th Standard -Tamil -Study Material -  FIRST REVISION EXAM -February 2022-10  mark - குறுவினா - செய்யுள் - உரைநடை




தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான முதல் திருப்புதல் தேர்வில்12 th standard- First Revision exam - February 2022  இடம்பெற இருக்கின்ற குறுவினா பகுதிக்கான வினா-விடைகள் இங்குத்  தொகுத்து  Study Material ஆக தரப்பட்டுள்ளன.  மாணவ,  மாணவிகளே நீங்கள் இந்த  ஒரு தொகுப்பினை Study Material ஐ  முழுவதுமாகப்  படிப்பதன் மூலமாக தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான முதல் திருப்புதல் தேர்வில் 12 th standard- First Revision exam - February 2022 நிச்சயமாக குறுவினா பகுதியில் 10 மதிப்பெண்களை( 10 Mark) உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்.

 

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஒரு கேள்வித்   தொகுப்பினைப்( Study Material )பதிவிறக்கம் செய்து நீங்கள் முழுவதுமாக படித்துப்  புரிந்து தேர்வு எழுதினால் போதுமானது.  இந்த ஒரு பகுதியை மட்டும் நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12 ஆம் வகுப்பிற்கான முதல் திருப்புதல் தேர்வில் 12 th standard- First Revision exam - February 2022 நீங்கள் நிச்சயமாக 10 மதிப்பெண்களைப் (10 mark) பெற முடியும்.

 

இந்த 10 Mark பெறுவதன்  மூலமாகத்  தமிழ்த்தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்ணைப்  பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே,  தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற முதல் திருப்புதல் தேர்வில் 12 th standard- First Revision exam - February 2022 நிச்சயமாக இடம்பெற இருக்கின்ற குறுவினா கேள்விகளை நன்றாகப் படித்துச் சிறப்பாகத் தேர்வை எழுத உங்களுக்கு இந்த Study Material உதவும். வெற்றி பெற வாழ்த்துகின்றேன். Kurusady M.A.Jelestin 

12 ஆம் வகுப்பு 

முதல் திருப்புதல் தேர்வு - பிப்ரவரி 2022

குறுவினா - 10 மதிப்பெண்


செய்யுள்

இயல் -1


1.கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

தமிழின் துணை வேண்டும்:

செந்நிறத்து வானம்போலத் தங்கள் கைகள் சிவந்திட உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வை வெள்ளம் அவர்களின் திரண்ட தோள்மீது முத்துமுத்தாய் வீற்றிருக்கும். இந்த அழகினை வியந்து பாடச் செந்தமிழின் துணை வேண்டுமெனக் கவிஞர் சிற்பி கூறுகின்றார். 


2.விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க.

விடியலில் உதிக்கும் கதிரவனின் தோற்றம் இயற்கையின் வனப்பை எடுத்துரைக்கும்.


இயல் - 2

3.'நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' – விளக்கம் தருக.

  நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது

மழைக்காலப் பகற்பொழுதில் சூரியனின் வெளிச்சம் இல்லாமல் நகரமானது மழைமேகத்தால் இருள் சூழ்ந்து காணப்படும்.

மழை பெய்து ஓய்ந்த பின்பு, மழைக்கான சுவடுகள் அழிந்த பின்பு சூரியன் திடீரென தன் முகத்தைக் காட்ட மழை மேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கின்றது. 

இன்னும் உறிஞ்சப்படாமல் இருக்கும் ஒரு சில மழைத் துளிகளின் மீது விழுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கின்றது.


இயல் - 3

4.நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?

நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து

பொய்யான உலகப்பற்று அழிந்து போகக் கூடியதாகும். உலகத்தின் மீது பற்றுக் கொள்வது வீணாகும். 

என் மண்ணுலகப் பிறவி ஒழிந்தது. 

ஏனெனில் நிலையாமை என்பது உலக வாழ்வு நிலை இல்லாதது என்பதைக் குறிப்பதாகும். 


5.எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

ஜலாலுத்தீன் ரூமி உருவகப்படுத்துபவை

மனித வாழ்க்கையில் நடக்கின்ற எதிர்பாராத நிகழ்வுகளான, 

ஓர் ஆனந்தம் 

சற்று மனச்சோர்வு 

சிறிது அற்பத்தனம் 

நொடிப்பொழுதேயான விழிப்புணர்வு 

ஆகியவற்றை எல்லாம் நமது இல்லத்திற்கு வரும் எதிர்பாராத விருந்தாளிகளாக உருவகப்படுத்தியிருக்கின்றார். 


6."துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது"? என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்?

   அ. நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

   ஆ. சிறு துரும்பும் பல்குத்த உதவும். 

'துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது'? என்ற இராமனின் கூற்று, "நிழலின் அருமை வெயிலில் தெரியும்" என்னும் பழமொழிக்குப் பொருந்தும். 


திருக்குறள் - வாழ்வியல்

7.முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?

முயல்வாருள் எல்லாம் தலை

அறத்தின் வழியாக இல்லறவாழ்க்கை வாழ்பவர்கள் முயற்சி செய்து புகழடைய விரும்பும் எல்லாரை விடவும் தலையானவர் என வள்ளுவர் கூறுகிறார்.


8.ஞாலத்தின் பெரியது எது?

ஞாலத்தின் பெரியது

ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும், அவ்வுதவி இந்த உலகைவிடப் பெரியதாகும்.


9.மறக்கக் கூடாதது, மறக்கக் கூடியது எவற்றை?

மறக்கக் கூடாதது

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது.

  மறக்கக் கூடியது

ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும்.


 10.செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன எவை?

செல்வம் இருப்பதற்கான வழி

செல்வம் ஒருவரிடம் குறையாமல் இருக்க வேண்டுமென்றால், அவர் பிறருடைய கைப்பொருளைத் துளியளவும் விரும்பாமல் இருத்தல் வேண்டும். 


11.சினத்தை ஏன் காக்க வேண்டும்?

சினத்தை காக்க

ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள விரும்பினால் அவன், சினத்தைக் காக்க வேண்டும். 

ஏனெனில், சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்துவிடும்.


உரைநடை

இயல் -1

1.நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.

நடை அழகியல்

கவிதையின் இயங்காற்றல்தான் நடை எனப்படும். தொல்காப்பியமும் இதனையே கூறுகின்றது. 'நடைபெற்றியலும்', 'நடை நவின்றொழுகும்' என்னும் சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டுள்ளது. 

ஒவ்வொரு பாவும் இவ்வாறே அமைய வேண்டும் என்று தொல்காப்பியம் கூறுகிறது


.2."படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்

 கடாஅ யானைக் கலிமான் பேக"

இச்சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை நயமிக்க சொற்களையும் அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுதுக.

ஓசை நயமிக்கச் சொற்கள்

படாஅம் ஈத்த, கெடாஅ , கடாஅ யானை, 

இலக்கணக்குறிப்புகள்

படாஅம் ஈத்த

கெடாஅநல்லிசை}   இசைநிறையளபெடை(அ)செய்யுளிசையளபெடை

கடாஅ யானை


இயல் - 3

3.புக்கில், தன்மனை – சிறுகுறிப்பு எழுதுக.

புக்கில்:

புக்கில் என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிக்கும்.

  தன்மனை:

திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம

'தன்மனை' என அழைக்கப்பட்டது.


4.சங்ககாலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?

சங்ககாலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள்

பெண்களே குலத்தொடர்ச்சிக்கு உரியவர்களாக இருந்தனர். 

தாய்வழிமுறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன. 


12th Standard -Tamil -Study Material
FIRST REVISION EXAM -February 2022
48 Mark பெற - ONE WORD- பலவுள் தெரிக-மொழிப்பயிற்சி-இலக்கணம்- மனப்பாடல்
PDF DOWNLODE 👇👇👇👇👇





















Image by Szabolcs Molnar from Pixabay 

Post a Comment

Previous Post Next Post