Loading ....

12th Standard -Tamil -Study Material - FIRST REVISION EXAM -February 2022-48 mark - one word - பலவுள் தெரிக - மொழிப்பயிற்சி-இலக்கணம்- மனப்பாடல்-

                                                     





12th Standard -Tamil -Study Material -  FIRST REVISION EXAM -February 2022-48 mark - one word - பலவுள் தெரிக - மொழிப்பயிற்சி-இலக்கணம்- மனப்பாடல்-





தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான முதல் திருப்புதல் தேர்வில்12 th standard- First Revision exam - February 2022  இடம்பெற இருக்கின்ற பலவுள் தெரிக - One word , மொழிப்பயிற்சி-இலக்கணம்- மனப்பாடல்பகுதிக்கான வினா-விடைகள் இங்குத்  தொகுத்து  Study Material ஆக தரப்பட்டுள்ளன.  மாணவ,  மாணவிகளே நீங்கள் இந்த  ஒரு தொகுப்பினை Study Material ஐ  முழுவதுமாகப்  படிப்பதன் மூலமாக தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற பனிரெண்டாம் வகுப்பிற்கான முதல் திருப்புதல் தேர்வில் 12 th standard- First Revision exam - February 2022 நிச்சயமாக பலவுள் தெரிக - One word - மொழிப்பயிற்சி-இலக்கணம்- மனப்பாடல் பகுதியில் 48 மதிப்பெண்களை( 48 Mark) உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்.

 

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்த ஒரு கேள்வித்   தொகுப்பினைப்( Study Material )பதிவிறக்கம் செய்து நீங்கள் முழுவதுமாக படித்துப்  புரிந்து தேர்வு எழுதினால் போதுமானது.  இந்த ஒரு பகுதியை மட்டும் நீங்கள் படிப்பதன் மூலம் தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற 12 ஆம் வகுப்பிற்கான முதல் திருப்புதல் தேர்வில் 12 th standard- First Revision exam - February 2022 நீங்கள் நிச்சயமாக 48 மதிப்பெண்களைப் ( 48 Mark ) பெற முடியும்.

 

இந்த 48 Mark பெறுவதன்  மூலமாகத்  தமிழ்த்தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்ணைப்  பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே,  தமிழ்நாடு அரசு நடத்த இருக்கின்ற முதல் திருப்புதல் தேர்வில் 12 th standard- First Revision exam - February 2022 நிச்சயமாக இடம்பெற இருக்கின்ற இந்த பலவுள் தெரிக - One word- மொழிப்பயிற்சி-இலக்கணம்- மனப்பாடல் கேள்விகளை நன்றாகப் படித்துச் சிறப்பாகத் தேர்வை எழுத உங்களுக்கு இந்த Study Material உதவும். வெற்றி பெற வாழ்த்துகின்றேன். Kurusady M.A.Jelestin 

12 ஆம் வகுப்பு

திருப்புதல் தேர்வு - பிப்ரவரி 2022 


பலவுள் தெரிக

14 மதிப்பெண் 

இயல் - 1


இலக்கணம் 

1.பிழையான தொடரைக் கண்டறிக   (பக் : எண் : 17 ) PTA :  2, 6 

   அ) காளைகளைப்  பூட்டி வயலை உழுதனர். 

   ஆ) மலைமீது ஏறி கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர். 

   இ) காளையில் பூத்த மல்லிகை மணம் வீசியது. 

    ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. 

விடை :  இ) காளையில் பூத்த மல்லிகை மணம் வீசியது. 


2. பேச்சுத் தமிழில் அமைந்த தொடரைத் தேர்க (பக் : எண் : 17 )

   அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லா தெரியும். 

   ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. 

    இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.  

    ஈ) மயில்கள்  போல் ஆடுகின்றனபோல் ஆடுகின்றன.

விடை :  அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லா தெரியும்.


செய்யுள் , உரைநடை

3. இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசுகின்ற 

    இலக்கண நூல்(பக் : எண் : 18) 

   அ) யாப்பருங்கலக்காரிகை                              ஆ) தண்டியலங்காரம் 

    இ) தொல்காப்பியம்                                              ஈ) நன்னூல்

விடை :    இ) தொல்காப்பியம்    


4. ‘மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு’ கவிஞர் குறிப்பிடும்  பழமைநலம் (பக் : எண் : 18)

க) பாண்டியரின் சங்கத்தில் இருந்தது                     

உ) பொதிகையில் தோன்றியது 

ங) வள்ளல்களை தந்தது 

அ) க மட்டும் சரி                            ஆ) க , உ இரண்டும் சரி 

இ) ங மட்டும் சரி                             ஈ) க ,ங இரண்டும் சரி

விடை : ஈ) க ,ங இரண்டும் சரி


5. “மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது 

     தன்னேர் இலாத தமிழ்” -  இவ்வடிகளில் பயின்று 

    வந்துள்ள தொடை நயம்   (பக் : எண் : 18)  PTA : 1                                                    

      அ)அடிமோனை ,அடி எதுகை                ஆ) சீர்மோனை,  சீர் எதுகை 

      இ) அடி எதுகை , சீர் மோனை                 ஈ) சீர் எதுகை

விடை : இ) அடி எதுகை , சீர் மோனை 


6. கருத்து  1 :  இயல்பு வழக்கில், தொடரமைப்பு என்பது எழுவாய் 

                          பயனிலை என்று வருவதே  மரபு

   கருத்து  2 :   தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் 

                          பிறழ்ந்து வருகிறது  (பக் : எண் : 18) 

   அ) கருத்து 1  சரி                                           ஆ) கருத்து 2 சரி  1 தவறு

   இ) இரண்டு கருத்தும் சரி                       ஈ) கருத்து 1  சரி 2  தவறு

விடை :  ஆ) கருத்து 2 சரி  1 தவறு


7. பொருத்துக  : (பக் : எண் : 18) 

     அ) தமிழ் அழகியல்                      -          1.பரலி சு நெல்லையப்பர் 

     ஆ) நிலவுப்பூ                                  -          2. தி சு நடராசன் 

     இ) கிடை                                         -          3. சிற்பி பாலசுப்ரமணியம்               

     ஈ)  உய்யும் வழி                             -          4. கி ராஜநாராயணன

 அ) 4 3 2 1              ஆ) 1 4 2 3             இ)  2 4 1 3                  ஈ) 2 3 4 1

விடை :  ஈ) 2 3 4 1


இயல்2 

இலக்கணம்

8. தமிழில்   திணை பாகுபாடு_________ அடிப்படையில் 

    பகுக்கப்பட்டுள்ளது.   (பக் : எண் : 41) PTA : 4 

    அ) பொருட் குறிப்பு                                            ஆ) சொற்குறிப்பு  

     இ) தொடர் குறிப்பு                                             ஈ) எழுத்து குறிப்பு

விடை :   அ) பொருட் குறிப்பு   


                                                                                                                                                                                                                                                                                                                                                                                 9. “உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே 

    அஃறிணை என்மனார் அவர் அல்ல பிறவே “இந் நூற்பா 

     இடம்பெற்றுள்ள  இலக்கண நூல்.  (பக் : எண் : 41)

     அ) நன்னூல்                                                             ஆ) அகத்தியம் 

     இ) தொல்காப்பியம்                                                ஈ)இலக்கண விளக்கம்

 விடை :     இ) தொல்காப்பியம்      


10. யார்?  எது?  ஆகிய வினாச் சொற்கள் பயனிலையாய் 

      அமைந்து உணர்த்தும் திணைகள் முறையே  (பக் : எண் : 41)

    அ) அஃறிணை,  உயர்திணை                       ஆ) உயர்திணை,  அஃறிணை 

     இ) விரவுத்திணை ,அஃறிணை                    ஈ) விரவுத்திணை உயர்திணை

விடை :   ஆ) உயர்திணை,  அஃறிணை 


 11.பொருத்தி  விடை தேர்க  (பக் : எண் : 41)

     அ) அவன் அவள் அவர்                     1.  உளப்படுத்தாத  தன்மைப் பன்மை 

    ஆ) நாங்கள் முயற்சி செய்வோம்   2.   உளப்பாட்டுத் தன்மைப் பன்மை 

     இ) நாம் முயற்சி செய்வோம்          3.   தன்மைப் பன்மைப் பெயர்கள் 

      ஈ) நாங்கள்,  நாம்                              4.  பதிலிடு பெயர்கள்

அ) 4 1 2 3                    ஆ) 2 3 4 1                   இ) 3 4 1 2                        ஈ) 4 3 1 2 

விடை : அ) 4 1 2 3 


    

செய்யுள்

12. நரம்புக்குள் வீணை மீட்டி கொண்டிருக்கிறது என்று 

       அய்யப்பமாதவன்   குறிப்பிடுவது.   (பக் : எண் : 42)

      அ) சூரிய ஒளிக்கதிர்                               ஆ) மழை மேகங்கள் 

       இ) மழைத்துளிகள்                                    ஈ)நீர்நிலைகள்

விடை :  இ) மழைத்துளிகள்      


இயல் - 3 

இலக்கணம்

13. பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய 

      காரணங்களுள்   பொருந்துவதைத் தேர்க.  (பக் : எண் : 67)

அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல். 

ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல். 

 இ) நிறுத்தக் குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல். 

  ஈ) வல்லின  மெய்களைத் தேவையான இடங்களில் விடாமல் எழுதுதல்.

விடை : இ) நிறுத்தக் குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல். 


 14. வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் 

     பொருளறிந்து பொருத்துக.  (பக் : எண் : 67)

அ) பாலை பாடினான்               -  தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்               

ஆ) பாலைப் பாடினான்           -   தேரினைப் பார்த்தான் 

இ) தேரை பார்த்தான்               -   பாலினைப் பாடினான் 

ஈ) தேரைப்  பார்த்தான்               -  பாலைத்திணை பாடினான்

அ) 4 1 3 2    ஆ) 2 3 1 4     இ) 4 3 1 2      ஈ) 2  4 1 3

விடை : இ) 4 3 1 2  


செய்யுள், உரைநடை, துணைப்பாடம் 

15. சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்ககாலச் சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன அவை __________  (பக் : எண் : 68)

அ) அறவோர், துறவோர்                   ஆ) திருமணமும், குடும்பமும் 

இ) மன்றங்களும்,  அவைகளும்     ஈ) நிதியமும் ,சுங்கமும் 

விடை :  ஆ) திருமணமும், குடும்பமும் 


16. பொருத்தமான விடையை தேர்ந்தெடுக்க  (பக் : எண் : 68)

அ) உரிமைத்தாகம்                  - 1. பாரசீக கவிஞர் 

ஆ) அஞ்ஞாடி                              - 2. பூமணி 

இ) ஜலாலுதீன் ரூமி                   - 3. பக்தவச்சல பாரதி 

ஈ) தமிழர் குடும்ப முறை         - 4.சாகித்திய அகாதெமி

அ) 2 4 3 1              ஆ) 3 4 1 2              இ) 2 4 1 3                   ஈ) 2 3 4 1

விடை : இ) 2 4 1 3   


 17. இவற்றை வாயிலுக்குச்  சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக  என்று ஜலாலுதீன் ரூமி குறிப்பிடுவது யாது?  (பக் : எண் : 68)

அ) வக்கிரம்                                     ஆ) அவமானம்  

இ) வஞ்சனை                                    ஈ) இவை அனைத்தும் 

விடை :   ஈ) இவை அனைத்தும்




 18. “உவா  உறவந்து கூடும் 

       உடுபதி இரவி ஒத்தார்” யார் ?யார் ?   (பக் : எண் : 68)

அ) சடாயு, இராமன்                     ஆ) இராமன், குகன் 

இ) இராமன்,  சுக்ரீவன்                ஈ)  இராமன், சபரி

விடை : இ) இராமன்,  சுக்ரீவன்


19.”எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே -  ஒரு 

      சக்தி பிறக்குது மூச்சினிலே” -  என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது  (பக் : எண் : 68)

அ) தனிக் குடும்ப முறை              ஆ) விரிந்த குடும்ப முறை

இ) தாய்வழிச் சமூக முறை          ஈ) தந்தைவழிச் சமூக முறை 

விடை :  ஈ) தந்தைவழிச் சமூக முறை 


வாழ்வியல்   :  திருக்குறள் 

20. படத்துக்குப்  பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடித்து 

எழுதுக. (பக் : எண் : 77)



அ) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

       பண்பும் பயனும் அது. 

ஆ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 

       தெய்வத்துள் வைக்கப் படும். 

இ)  சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் 

       ஏமப் புணையைச் சுடும். 

விடை : இ)  சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் 

                       ஏமப் புணையைச் சுடும். 


21. கடலின் பெரியது  (பக் : எண் : 77)

அ) உற்ற காலத்தில் செய்த உதவி 

ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி 

இ) தினையளவு செய்த உதவி 

விடை : ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி


22. பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.  (பக் : எண் : 77)


          நல்லார் நயவர் இருப்பநயம் இலாக் 

          கல்லார்க் கொன்றாகிய காரணம்  -  தொல்லை 

          வினைப்பயன் அல்லது வேல்நெடுங்   கண்ணாய் 

          நினைப்ப வருவதொன் றில்

  அ) இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு 

      தெள்ளிய ராதலும் வேறு 

ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும் 

       நல்லவாம் செல்வம் செயற்கு 

இ)  ஊழில் பெருவலி யாவுள மற்றொன்று 

      சூழினும் தான்முந் துறும் 

விடை :  இ)  ஊழில் பெருவலி யாவுள மற்றொன்று 

                        சூழினும் தான்முந் துறும்


 23. வையகமும் வானகமும் ஆற்றல் அரிது -  எதற்கு?  (பக் : எண் : 78)

அ) செய்யாமல் செய்த உதவி 

ஆ) பயன்தூக்கார் செய்த உதவி 

இ) தினைத்துணை நன்றி 

ஈ) காலத்தினால் செய்த நன்றி

விடை :  அ) செய்யாமல் செய்த உதவி 


24. பொருத்துக  (பக் : எண் : 78)

அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்         - 1. சேர்ந்தாரைக் கொல்லி 

ஆ) பயன்தூக்கார் செய்த உதவி                       - 2. ஞாலத்தின் மாணப் பெரிது 

இ) சினம்                                                                  - 3. தெய்வத்துள் வைக்கப்படும் 

ஈ) காலத்தினால் செய்த நன்றி                          - 4. நன்மை கடலின் பெரிது

அ) 4 3 2 1                   ஆ) 3 4 1 2                 இ) 1 2 3 4                          ஈ) 2 3 4 1

விடை : ஆ) 3 4 1 2    


25. ஞாலத்தின் மாணப் பெரிது எது?

அ) செய்யாமல் செய்த உதவி                                  ஆ) காலத்தினால் செய்த உதவி 

இ) பயன்தூக்கார் செய்த உதவி                                ஈ) திணையளவு உதவி

விடை : ஆ) காலத்தினால் செய்த உதவி 

26. இலக்கணக்குறிப்புத்  தருக 

அன்பும் அறனும்               -   எண்ணும்மை 

நன்கலம்                               -  பண்புத்தொகை 

மறத்தல்                                 -  தொழில்பெயர்

உலகு                                     -  இடவாகுபெயர்


 27. பொருள் கூறுக 

வெகுளி  - சினம் ;புணை -  தெப்பம் ; ஏமம் - பாதுகாப்பு ;  திரு  - செல்வம்


2 மதிப்பெண் வினாக்கள்

14 மதிப்பெண்கள்

மொழிப்பயிற்சி,இலக்கணம் ,உறுப்புலக்கணம், புணர்ச்சி

 இயல் : 1,  2 ,  3

இயல் - 1 

  1 . தமிழாக்கம் தருக ( புத்தகம் பக்கம் எண் - 20 )  

1. Learning is a Trissur that will follow its owner everywhere.

    கற்றோருக்குச்  சென்ற இடமெல்லாம் சிறப்பு

 2. A new language is a new life.

     புதிய மொழி புதிய வாழ்க்கை.

 3. If you want people to understand you, speak their language.

     பிறர் உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர் மொழியில் பேசு.

 4. Knowledge of languages is the doorway to wisdom.

     மொழிகளில் அறிவு ஞானத்தின் திறவுகோல்.

 5. The limits of my language are the limits of my world.

     என் மொழியின் எல்லை என் உலகத்தில் எல்லை.


2. உவமை தொடர்களைச்  சொற்றொடரில் அமைத்து எழுதுக 

             ( புத்தகம் பக்கம் எண் - 20 )

1. தாமரை இலை நீர் போல-  பட்டும்படாமலும் ஈடுபாடு இல்லாமல் இருத்தல்,

பெற்றோர்களுக்கு நிதிச்சுமை அழுத்துவது தெரிந்தும் சில பிள்ளைகள் தாமரை இலை நீர்போல கண்டுகொள்ளாமல் இருப்பர்.

2. கிணற்று தவளை போல -  வெளி உலகம் தெரியாத நிலை 

இன்னும் சில கிராமங்களில் மக்கள் கிணற்றுத்தவளைப்  போல வாழ்கின்றனர்.

3. எலியும் பூனையும் போல _ எதிரியாக 

ரகுவும், ரவியும் எலியும் பூனையும் போலச் சண்டையிட்டுக் கொண்டனர். 

4. அச்சாணி இல்லாத தேர் போல - சரியான வழிகாட்டி இல்லாத  

நாட்டை வழிநடத்தும் சரியான  தலைவன் இல்லாததால்அச்சாணி இல்லாத தேர் போல நாட்டு மக்கள் சரிவர இயங்க முடியாமல் தவிக்கின்றனர்.

 5. உள்ளங்கை நெல்லிக்கனி போல -  வெளிப்படையாக, தெளிவாக                                                                                                                                             தமிழ் ஆசிரியர் கற்பித்த புணர்ச்சி இலக்கணம் எங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாக விளங்கியது.

 6.நகமும் சதையும் போல - இணை பிரியாமை  

நானும் என் நண்பனும் நகமும் சதையும் போல இருந்தோம்.


3. குறிப்புகளில் மறைந்திருக்கும் தமிழறிஞர்களைக் கண்டுபிடிப்போம்.

                               ( புத்தகம் பக்கம் எண் - 21 )

   எ.கா : கவிஞர்; ஈற்றிரு  சொல்லால் அணிகலன் செய்யலாம் 

   விடை : கவிமணி 

1.தமிழறிஞர்; முதல் இரு எழுத்துகளால் மறைக்கலாம்.

விடை : மறைமலைஅடிகள்

2.  தாய் மொழி ; ஈற்றிரு எழுத்துக்கள் வெளிச்சம் தரும்.

விடை : தமிழ் ஒளி

3.  சிறுகதை ஆசிரியர்;  முதல் பாதி நவீனம். 

விடை : புதுமைப்பித்தன்

4. முன்னெழுத்து அரசன்;  பின்னெழுத்து தமிழ்மாதம்.

 விடை : கோதை

 (தமிழ் ஒளி, அம்பை, கோதை, அசோகமித்திரன், புதுமைப்பித்தன், சூடாமணி, ஜெயகாந்தன், மறைமலைஅடிகள்)


4. படிப்போம் பயன்படுத்துவோம் (  நூலகம் ) 

                           ( புத்தகம் பக்கம் எண் - 22 )

Subscription            -  உறுப்பினர் கட்டணம்

Fiction                       - புனைவு

Biography                - வாழ்க்கை வரலாறு

Archive                     - காப்பகம்

Manuscript              - கையெழுத்துப் பிரதி

Bibliography            - நூல் நிரல்


 குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்

முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப் பள்ளி ,நாகர்கோவில்-4,9843448095


 இயல் - 2

மயங்கொலி சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக

                 ( புத்தகம் பக்கம் எண் - 44 )

1.தலை, தளை, தழை, 

2. கலை, களை, கழை 

3. அலை, அளை, அழை

 

எ.கா :விலை, விளை,  விழை 

கார் பருவத்தில் நன்றாக விளைந்ததால் தானியங்களின் விலை குறையாமல் இருக்க ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள விழைவதாக  அரசு அறிவித்தது.


1.தலை, தளை, தழை 

தலை  - முதன்மை ,சிரசு

தளை  - விலங்கு, கட்டுதல்

தழை  –  புல், இலை

தளை  இடப்பட்டிருந்த ஆடு தழையைக் கண்டதும் தன் தலையை ஆட்டியது.


2.  கலை, களை, கழை 

கலை  - நுட்பம், ஆடை, கல்வி, கலைமான்

களை  - நீக்கு, அழகு

கழை  - மூங்கில் 

களை காட்டில் தீ பிடித்ததால் களைச்செடிகளுடன் சேர்ந்து கலைமான்களும் தீக்கிரையாகின.


3. அலை, அளை, அழை

 

அலை  -  அலைதல்; கடலில், நீர் நிலைகளில் உண்டாகுதல் 

அளை  -  புற்று, தயிர், பிசை  

அழை  -   கூப்பிடு


 

பலமான இடிமழையால் அளை  சிதைவுற்று உள்ளிருந்த பாம்புகள் செல்லுமிடம் அறியாது அலைந்து திரிவதைப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தையைத் தாய் பதற்றத்துடன் அழைத்தாள்.


2. புதிர்க்கேற்ற விடையை அறிக.    ( புத்தகம் பக்கம் எண் - 45 )

அ) அடைமழை பெய்த அடுத்த நாள் 

       படைபடையாய்  வந்ததாம் 

       பரங்கி நாட்டு விமானம் 

       எதிரி  சுடாமலேயே 

       இறகொடிந்து இறந்ததாம் - என்ன ? 

             விடை : ஈசல் 


ஆ)  தண்ணீரும் மழையும் இல்லாமல் 

         பயிர் பச்சையாய் இருக்கிறது 

         பாக்கு வெற்றிலை போடாமல் 

         வாய் சிவப்பாய் இருக்கிறது? - என்ன ?

               விடை : பச்சைக் கிளி

4. படிப்போம் பயன்படுத்துவோம் (தொடர்வண்டி நிலையம்) 

                           ( புத்தகம் பக்கம் எண் - 46 )

1. Platform                                -  நடைமேடை

2.Train Track                           -  இருப்புப் பாதை

3.Railway signal                     -  தொடர்வண்டி வழிக்குறி

4.Ticket Inspector                 -  பயணச்சீட்டு ஆய்வர்

5. Level crossing                    -  இருப்புப்பாதையைக் கடக்குமிடம்

6. Metro train                          -  மாநகரத் தொடர்வண்டி


குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்

முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப் பள்ளி ,நாகர்கோவில்-4,9843448095



 இயல் - 3

1. வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக. ( புத்தகம் பக்கம் எண் - 70 )

 

1.என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீதுதான்; அவர்கள் எல்லா பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தை போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள்.

விடை : என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதிய_ தலைமுறை மீதுதான்; அவர்கள் எல்லாப் பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தைப் போல எதிர்கொண்டு_ தீர்ப்பார்கள்

2.எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறி செல்வதனை கண்டு ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றி துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கை கொள்.

விடை : எத்தனை முறை நீ மற்றவர்கள் முன்னேறிச்  செல்வதனைக் கண்டு ஒன்றும் செய்வதறியாது நம்பிக்கையின்றித் துன்புறுவாய். நிறைய தன்னம்பிக்கைக் கொள்.


3.நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தை பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்தக் கவனம் அறிவை பெறுவதற்கும் வளர்ப்பதற்கான அடிப்படை தேவையாகும்.

விடை : நம் வாழ்க்கையின் தரம் நமது கவனத்தின் தரத்தைப் பொறுத்திருக்கிறது. புத்தகம் படிக்கும் பொழுது கூர்ந்த_  கவனம் அறிவைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்கான அடிப்படைத் தேவையாகும்.


4.மாணவர்கள் பெற்றோர்களை தமது நண்பர்களாக பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களை பெற்றோர்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.

விடை : மாணவர்கள் பெற்றோர்களைத்  தமது நண்பர்களாகப் பாவித்து நட்புக் கொள்ள வேண்டும். தமது இன்ப துன்பங்களைப் பெற்றோர்களுடன் பகிர்ந்து_  கொள்ள வேண்டும்.


5. ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு, அறியாமையினை அகற்றி பல நல்லவற்றை கற்று கொடுக்கும்.

விடை : ஆசிரியருக்குக் கீழ்ப்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றைத் தெரிந்துகொண்டு, அறியாமையினை அகற்றி பல நல்லவற்றைக் கற்றுக் கொடுக்கும்.


2. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக.

                 ( புத்தகம் பக்கம் எண் - 72 )

எ.கா : குமரன் வீடு பார்த்தேன்

             விடை : குமரனை வீட்டில் பார்த்தேன்.

1. மாறன் பேச்சுத்திறன் யார் வெல்ல முடியும்.

 விடை : மாறனை பேச்சுத் திறனில் யார் வெல்ல முடியும்.

2. போட்டி வெற்றி பெற்றது கலைச்செல்வி பாராட்டுகள் குவிந்தன

 விடை :  போட்டியில் வெற்றி பெற்றதால் கலைச்செல்விக்குப் பாராட்டுகள் குவிந்தன.

3. காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.

 விடை :  காலையில் எழுந்து படித்தால் நமக்கு நன்மை ஏற்படும்.

4.அனைவர் அன்பு அழைத்தவன் துன்பம் தர யார் மனம் வரும்

 விடை :  அனைவரையும் அன்புடன் அழைத்தவனுக்குத்  துன்பம் தர யாருக்கு மனம் வரும்.

5.சான்றோர் மதிப்பு கொடுத்து வாழ்வு உயரலாம். 

விடை :  சான்றோருக்கு மதிப்புக்  கொடுத்தால் வாழ்வில் உயரலாம்.

6.முருகன் வேகம் சென்றும் பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.

 விடை :  முருகன் வேகமாகச் சென்றும்  பேருந்தைப் பிடிக்க இயலவில்லை.


4. படிப்போம் பயன்படுத்துவோம் ( உணவகம் ) 

                           ( புத்தகம் பக்கம் எண் - 72 )

1. Lobby                - ஓய்வறை

2. Checkout        - வெளியேறுதல்

3. Tips                   - சிற்றீகை

4. Mini meals      - சிற்றுணவு


குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்

முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப் பள்ளி ,நாகர்கோவில்-4,9843448095


 

இலக்கணம்

இயல் - 1


1.முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் - இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்கவும்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவைப்படும் பொருட்களை முடிந்தால் தரலாம்.

ஆசிரியர் கூறியபடிச்  செயல்திட்டப் பதிவேடுகளை முடித்தால் தரலாம்.


2. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள  வேண்டிய  முயற்சிகள் யாவை?

  • எழுத்தினைத்  தெளிவாக உச்சரிக்கப்  பழகவேண்டும். ந, ண, ன/ ல, ள, ழ / ற , ர / ஒலி வேறுபாடு தெரிந்து ஒலிலிக்க வேண்டும்

  • தமிழில் எழுத்துகள் வரும் முறையையும் அவை ஏற்படுத்தும் பொருள் மாற்றத்தையும் அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்றாகும். 

  • தொடக்கத்தில் சில காலம் வாய் விட்டோ  அல்லது மனதுக்குள் உச்சரித்தபடியோ  எழுதப்  பழகுவது நல்லது.

  • வேகமாக எழுத முயல்வது பிழைக்கு  வழிகோலும்..

  • கெ, கே, கொ ,கோ  போன்ற கொம்புடைய குறில் நெடில் வேறுபாட்டினை புரிந்து எழுத வேண்டும். 


இயல் - 2 

1. மொழியின் சொற்றொடர் அமைப்பை விளக்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை?

             மொழியின் சொற்றொடர் அமைப்பை விளக்கிக் கொள்வதற்கும்

பயன்படுத்துவதற்கும் உதவுவன, திணை, பால், எண், இடம் ஆகியனவாகும்.


2. உயர்திணைப் பன்மைப் பெயர்கள், பன்மை விகுதி பெற்று வருமாறு இரண்டு தொடர்களை எழுதுக. 

நீங்கள் வீட்டிற்கு வாருங்கள்.

அவர்கள் ஆலயம் வந்தார்கள்.


இயல் - 3 

1.வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க.

மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.

விடை: மாணவர்கள்வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.


2.கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடரமைக்க.

எ.கா

முன்

1. அவன் முன்வந்து கூறினான்.

2. அவன்முன் வந்து கூறினான்.

தானே

1. கண்ணன்தானே படித்தான்.

2. கண்ணன் தானே படித்தான்.

கொண்டு   

 1. சோமு கையில் கத்தி கொண்டு ஓடினான்.

2. சோமு கத்திக்கொண்டு ஓடினான்.

விட்டான்   

1. அண்ணன் பாம்பைப் பிடித்து விட்டான்ன்

2. அண்ணன் பாம்பைப் பிடித்து விட்டான்.


3. காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தருக. 

சான்று

   1. அவள், அக்கா வீட்டிற்குச் சென்றாள்

   2. அவள் அக்கா வீட்டிற்குச் சென்றாள்

  இச்சான்றின் முதல் தொடரில் அந்தப்பெண் தன் அக்காள் வீட்டிற்குச் சென்றாள் என்ற பொருளை உணர்த்துகிறது அத்தொடரில் உள்ள காற்புள்ளி.

  இச்சான்றின் இரண்டாவது தொடரில் உள்ள காற்புள்ளியால் அந்தப் பெண்ணின் அக்காள் அவளது (தனது) வீட்டிற்குச் சென்றாள் என்ற பொருள் வேறுபாட்டைத் தருவதை அறியலாம்.


4. சலசல, வந்து வந்து, கல கல, விம்மி விம்மி, இவற்றில் இரட்டைக்கிளவித் தொடர்களை எழுதி, அவற்றை எழுதும் முறையைக் கூறுக. 

இரட்டைக்கிளவித் தொடர்கள் - சல சல, கல கல

தொடரில் இரட்டைக்கிளவிச் சொற்களை எழுதும்போது சேர்த்து எழுத வேண்டும்.

சான்று

   1. அருவி விழும் ஓசை சலசலவெனக் கேட்டது (சரி)

     அருவி விழும் ஓசை சல சலவெனக் கேட்டது (தவறு)


   2. செல்வி கலகலவெனச் சிரித்தாள் (சரி)

     செல்வி கல கலவெனச் சிரித்தாள் (தவறு) 


5. திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?

'திருவளர்செல்வன்' என்ற தொடரே சரியான தொடர்.

'வினைத்தொகையாக வரும் சொல்லுக்கிடையில் வல்லினம் மிகுதல் கூடாது' என்ற இலக்கண விதியின் படி 'திருவளர்செல்வன்' என்ற வினைத்தொகையில் வல்லினம் மிகாது.


குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்

முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப் பள்ளி ,நாகர்கோவில்-4,9843448095


இலக்கணம்

உறுப்பிலக்கணம்


1.உயர்ந்தோர் - உயர் + த் ( ந் ) + த் + ஓர்  ( பக் : 9 )

                        உயர்    -  பகுதி 

                               த்    -  சந்தி, ‘த்’ , ‘ந்’ ஆனது விகாரம்   

                               த்    -  இறந்தகால இடைநிலை  

                            ஓர்    -  பலர்பால் வினைமுற்று விகுதி


2. இருந்தாய்  - இரு + த் ( ந் )  + த் + ஆய்  ( பக் : 3) 

இரு    -    பகுதி

                              த்    -  சந்தி, ‘த்’ , ‘ந்’ ஆனது விகாரம்   

                              த்    -  இறந்தகால இடைநிலை

                         ஆய்   -  முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி


3. விம்முகின்ற  - விம்மு + கின்று + அ     ( பக் : 3)

                   விம்மு - பகுதி 

                  கின்று - நிகழ்கால இடைநிலை

                         அ - பெயரெச்ச விகுதி


4. பொலிந்தான்    -  பொலி + த் ( ந்) + த் + ஆன்   ( பக் : 56 )

                   பொலி   - பகுதி   

                               த்   - சந்தி , ‘ த்’ , ‘ந்’ ஆனது விகாரம், 

                               த்   - இறந்தகால இடைநிலை 

                         ஆன்   - ஆண்பால் வினைமுற்று விகுதி


5. விளங்கி - விளங்கு + இ     ( பக் : 9 )

                    விளங்கு   -  பகுதி

                                     இ   -  வினையெச்ச விகுதி


6. வந்து      - வா ( வ ) +  த் ( ந் ) + த் + உ       ( பக் : 9 )

                            வா   -  பகுதி ; வ எனக் குறுகியது விகாரம்    

                              த்    -  ச ந்தி , ‘ த்’ , ‘ந்’ ஆனது விகாரம்,

                              த்   - இறந்தகால இடைநிலை

                             உ  -  வினையெச்ச விகுதி


7. சாய்ப்பான்       -  சாய் + ப் + ப் + ஆன்       ( பக் : 3)

                   சாய்    -   பகுதி      

                           ப்    -   சந்தி  

                          ப்    -   எதிர்கால இடைநிலை  

               ஆன்     -    ஆண்பால் வினைமுற்று விகுதி


8. வியந்து    - விய + த் ( ந் ) + த் + உ    ( பக் : 3 )

             விய   -  பகுதிபகுதி

                  த்    -  ச ந்தி , ‘ த்’ , ‘ந்’ ஆனது விகாரம்,

                    த்   - இறந்தகால இடைநிலை

                    உ  -  வினையெச்ச விகுதி


9. தந்தனன்     - தா ( த) + த் ( ந் ) + த் + அன் + அன்     ( பக் : 9 

தா    -   பகுதி 

த்    -    ச ந்தி , ‘ த்’ , ‘ந்’ ஆனது விகாரம்,

 த்   -   இறந்தகால இடைநிலை

அன்    -  சாரியை

அன்    -  ஆண்பால் வினைமுற்று விகுதி


 இலக்கணம்

புணர்ச்சி

1.அருங்கானம்  = அருமை  + கானம்        ( புத்தகம் பக் : 56)

 விதி 1) : ஈறுபோதல் - அரு + கானம் 

விதி 2) : இனமிகல் - அருங்கானம்


2. செல்லிடத்து  = செல் + இடத்து               ( புத்தகம் பக் : 78)

 விதி 1) : தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் >  செல் + ல் + இடத்து

விதி 2) : உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே > செல்லிடத்து


3. தனியாழி   -    தனி + ஆழி         ( புத்தகம் பக் : 9)

விதி  1 : இ ஈ ஐ வழி யவ்வும் < தனி + ய் + ஆழி

விதி 2 : உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே < தனியாழி


4. செம்பரிதி     -   செம்மை + பரிதி         ( புத்தகம் பக் : 3)

விதி   1  :  ஈறுபோதல்     <  செம் + பரிதி - செம்பரிதி


5. வானமெல்லாம்    = வானம்  + எல்லாம்   ( புத்தகம் பக்  : 3 )

விதி   1  :  உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே < வானமெல்லாம்

6. உன்னையல்லால்       =    உன்னை +  அல்லால்   ( புத்தகம் பக்  : 3 )

விதி  1  :  இ ஈ ஐ வழி யவ்வும்  < உன்னை + ய் + அல்லால் 

விதி  2  :    உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே   <உன்னையல்லால் 


7. செந்தமிழே       =  செம்மை  + தமிழே     ( புத்தகம் பக்  : 3 )

விதி    1   :  ஈறுபோதல் < செம் + தமிழே  

விதி   2  :  முன்னின்ற மெய் திரிதல்  - செந்தமிழே 


8. வெங்கதிர்   =  வெம்மை + கதிர்     ( புத்தகம் பக்  : 9 )

விதி    1   :  ஈறு போதல் < வெம் + கதிர்   

விதி   2  :  முன்னின்ற மெய் திரிதல்  - வெங்கதிர்


9. ஆங்கவற்றுள்  = ஆங்கு  + அவற்றுள்  ( புத்தகம் பக்  : 9 )

விதி   1   :  உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்  < ஆங்க் + அவற்றுள் 

விதி  2  :   உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - ஆங்கவற்றுள்


அணியிலக்கணம் 

4 - மதிப்பெண்கள் 

 1. “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

       பண்பும் பயனும் அது”    -  குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.              இக்குறட்பாவில்பயின்றுவரும் அணி நிரல்நிறை அணி. 

அணி இலக்கணம்: ஒரு செய்யுளில் முதலில் ஒரு சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே பொருள்கொள்ளும் முறை நிரல் நிறை ஆகும். அதாவது சிலசொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து அதனோடு

தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறை மாறாமல் சொல்வது நிரல் நிறை அணி ஆகும்.

சான்று :  

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

  பண்பும் பயனும் அது” 

விளக்கம்:  

     இல்வாழ்க்கையில் நாம் அன்பும் அறனும் கொண்டு ஒழுகினால், அதுவே நமக்கு வாழ்க்கையின் பண்பினையும் பயனையும் முழுமையாகத் தரும்.

அணிப்பொருத்தம்:  

      இக்குறட்பாவில் அன்பு, அரண் என்ற சொற்களை முதலில் ஒரு வரிசையில் நிறுத்திய திருவள்ளுவர் அவற்றோடு தொடர்புடைய பண்பு பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்துப் பொருள் கொள்ளுமாறு அமைத்துள்ளார். எனவே, இந்தத் திருக்குறள் நிரல் நிறை அணி ஆகும்.


2.  ஏகதேச உருவக அணி விளக்குக. ( அல்லது)  கீழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயன்படுகிறது என்பதை விளக்குக. 

         “ சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் 

          ஏமப் புணையைச் சுடும்” 

இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வருகிறது. 

அணியிலக்கணம்: 

         கவிஞர் செய்யுளில் இரு பொருள்களைக் கூறி அதில் ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி அதற்கு ஏற்ப இணையானதொரு  பொருளை உருவகம் செய்யாது விட்டு விடுவது ஏகதேச உருவக அணியாகும்.  

சான்று  விளக்கம்: 

   சினம் தன்னைக் கொண்டவனை மட்டுமல்லாது அவனைச் சேர்ந்த சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும். தன்னைச் சேர்ந்த வரையும் அழித்துவிடும் கொல்லியாகிய சினம் நம்மை மட்டுமல்லாமல் நமக்குப் பாதுகாப்பாக இருக்க கூடிய இனம் என்னும் வெப்பத்தை அழித்துவிடும். 

அணிப் பொருத்தம்: 

      இக்குறட்பாவில் இனம் என்பதைத் தெப்பமாக உருவகப்படுத்தியுள்ள  வள்ளுவர் சினத்தை உருவகப்படுத்தாமல் விட்டுள்ளார். எனவே, இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று வந்துள்ளது.


2 - மதிப்பெண் வினா விடைகள்

செய்யுள் - 6 மதிப்பெண்

உரைநடை  - 4 மதிப்பெண் 

இயல் - 1

1. நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தைக் குறிப்பிடுக.

நடை அழகியல்

கவிதையின் இயங்காற்றல்தான் நடை எனப்படும். தொல்காப்பியமும் இதனையே கூறுகின்றது. 'நடைபெற்றியலும்', 'நடை நவின்றொழுகும்' என்னும் சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டுள்ளது. 

ஒவ்வொரு பாவும் இவ்வாறே அமைய வேண்டும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.


2."படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்

 கடாஅ யானைக் கலிமான் பேக"

இச்சங்கக் கவிதையின் அடிகளில் ஓசை நயமிக்க சொற்களையும் அவற்றிற்கான இலக்கணக் குறிப்புகளையும் எடுத்து எழுதுக.

ஓசை நயமிக்கச் சொற்கள்

படாஅம் ஈத்த, கெடாஅ , கடாஅ யானை, 

இலக்கணக்குறிப்புகள்

படாஅம் ஈத்த

கெடாஅநல்லிசை   இசைநிறையளபெடை(அ)செய்யுளிசையளபெடை

கடாஅ யானை


3.கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

தமிழின் துணை வேண்டும்:

செந்நிறத்து வானம்போலத் தங்கள் கைகள் சிவந்திட உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வை வெள்ளம் அவர்களின் திரண்ட தோள்மீது முத்துமுத்தாய் வீற்றிருக்கும். இந்த அழகினை வியந்து பாடச் செந்தமிழின் துணை வேண்டுமெனக் கவிஞர் சிற்பி கூறுகின்றார்.


5. விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கிணைத்துத் தொடர் அமைக்க.

விடியலில் உதிக்கும் கதிரவனின் தோற்றம் இயற்கையின் வனப்பை எடுத்துரைக்கும்.


இயல் - 2


6. 'நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' – விளக்கம் தருக.

  நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது

மழைக்காலப் பகற்பொழுதில் சூரியனின் வெளிச்சம் இல்லாமல் நகரமானது மழைமேகத்தால் இருள் சூழ்ந்து காணப்படும்.

மழை பெய்து ஓய்ந்த பின்பு, மழைக்கான சுவடுகள் அழிந்த பின்பு சூரியன் திடீரென தன் முகத்தைக் காட்ட மழை மேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கின்றது. 

இன்னும் உறிஞ்சப்படாமல் இருக்கும் ஒரு சில மழைத் துளிகளின் மீது விழுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கின்றது.

 


இயல் - 3

 

7.புக்கில், தன்மனை – சிறுகுறிப்பு எழுதுக.

புக்கில்:

புக்கில் என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிக்கும். "துகள் அறுகேள்வி உயர்ந்தோர் புக்கில்" என்ற புறநானூற்றுப் பாடலில் (222:6) வரும் 'புக்கில்' என்பது தற்காலிகமாகத் தங்கும் இடத்தைக் குறிக்கின்றது. 

தன்மனை:

திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் 'தன்மனை' என அழைக்கப்பட்டது.



 8. நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து யாது?

நிலையாமை குறித்து, சவரி உரைக்கும் கருத்து

பொய்யான உலகப்பற்று அழிந்து போகக் கூடியதாகும். உலகத்தின் மீது பற்றுக் கொள்வது வீணாகும். 

என் மண்ணுலகப் பிறவி ஒழிந்தது. 

ஏனெனில் நிலையாமை என்பது உலக வாழ்வு நிலை இல்லாதது என்பதைக் குறிப்பதாகும்.


 9. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுத்தீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

ஜலாலுத்தீன் ரூமி உருவகப்படுத்துபவை

மனித வாழ்க்கையில் நடக்கின்ற எதிர்பாராத நிகழ்வுகளான, 

ஓர் ஆனந்தம் 

சற்று மனச்சோர்வு 

சிறிது அற்பத்தனம் 

நொடிப்பொழுதேயான விழிப்புணர்வு 

ஆகியவற்றை எல்லாம் நமது இல்லத்திற்கு வரும் எதிர்பாராத விருந்தாளிகளாக உருவகப்படுத்தியிருக்கின்றார்.


10."துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது"? என்ற இராமனின் கூற்று பின்வரும் இரு பழமொழிகளில் எதற்குப் பொருந்தும்?

   அ. நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

   ஆ. சிறு துரும்பும் பல்குத்த உதவும். 

'துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது'? என்ற இராமனின் கூற்று, "நிழலின் அருமை வெயிலில் தெரியும்" என்னும் பழமொழிக்குப் பொருந்தும். 


11.சங்ககாலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?

சங்ககாலத்தில் தாய்வழிச் சமூகமுறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள்

பெண்களே குலத்தொடர்ச்சிக்கு உரியவர்களாக இருந்தனர். 

தாய்வழிமுறையில் குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும் பெண்களுக்குச் சென்று சேர்ந்தன. 


திருக்குறள்

12.முயல்வாருள் எல்லாம் தலை என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?

முயல்வாருள் எல்லாம் தலை

அறத்தின் வழியாக இல்லறவாழ்க்கை வாழ்பவர்கள் முயற்சி செய்து புகழடைய விரும்பும் எல்லாரை விடவும் தலையானவர் என வள்ளுவர் கூறுகிறார்.


13.ஞாலத்தின் பெரியது எது?

ஞாலத்தின் பெரியது

ஒருவர் நமக்கு உரிய காலத்தில் செய்த உதவியானது அளவில் சிறியதாக இருந்தாலும், அவ்வுதவி இந்த உலகைவிடப் பெரியதாகும்.


14.மறக்கக் கூடாதது, மறக்கக் கூடியது எவற்றை?

மறக்கக் கூடாதது

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை ஒருநாளும் மறக்கக்கூடாது.

  மறக்கக் கூடியது

ஒருவர் நமக்குச் செய்த தீமையை அப்பொழுதே மறந்துவிட வேண்டும். 



15.செல்வம் இருப்பதற்கான வழியாக வள்ளுவம் உரைப்பன எவை?

செல்வம் இருப்பதற்கான வழி

செல்வம் ஒருவரிடம் குறையாமல் இருக்க வேண்டுமென்றால், அவர் பிறருடைய கைப்பொருளைத் துளியளவும் விரும்பாமல் இருத்தல் வேண்டும்.

 


16.சினத்தை ஏன் காக்க வேண்டும்?

சினத்தை காக்க

ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள விரும்பினால் அவன், சினத்தைக் காக்க வேண்டும். 

ஏனெனில், சினமானது தன்னைக் கொண்டவனையே அழித்துவிடும்.


மனப்பாடல்

தண்டியலங்காரம்    4- மதிப்பெண் 

    ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி 

      ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் -  ஆங்கவற்றுள் 

      மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது 

        தன்னேர் இல்லாத தமிழ்


கம்பராமாயணப் பாடல் 


                    துன்பு உளதுஎனின் அன்றோ 

                           சுகம் உளது? அது அன்றிப் 

                    பின்பு உளது; இடை மன்னும் 

                           பிரிவு உளது என உன்னேல் ; 

                    முன்பு  உளெம் ஒருநால்வேம் 

                           முடிவு உளது என உன்னா 

                    அன்பு உள, இனி, நாம் ஓர் 

                           ஐவர்கள் உளர் ஆனோம்



                  குகனொடும் ஐவர் ஆனேம் 

                          முன்பு: பின் குன்று சூழ்வான் 

                 மக னொடும் அறுவர் ஆனேம்: 

                         எம்முழை  அன்பின் வந்த 

                அகன் அமர் காதல் ஐய! 

                        நின்னொடும் எழுவர் ஆனேம்; 

                புகல் அருங் கானம் தந்து  

                         புதல்வரால் பொலிந்தான் நுந்தை.


திருக்குறள் - 2 மதிப்பெண்மதிப்பெண்


1. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

    பண்பும் பயனும் அது

2.வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் 

    தெய்வத்துள் வைக்கப் படும்

 

3. செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் 

      வானகமும் ஆற்றல் அரிது.

 

4,. நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது 

      அன்றே மறப்பது நன்று.

 

5.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை 

   செய்ந்நன்றி  கொன்ற மகற்கு.  


6.அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை 

    வேண்டும் பிறன்கைப் பொருள்

 

7. .மறத்தல் வெகுளியை யார்மாட்டும்; தீய 

    பிறத்தல் அதனான் வரும்.

 

8.தன்னைத்தான் காக்கின் சினம்காக்க;  காவாக்கால் 

   தன்னையே  கொல்லும்  சினம்

9. சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் 

    ஏமப் புணையைச் சுடும்.


10.நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றம்தன்  

      உண்மை அறிவே மிகும். 


குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின்

முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப் பள்ளி ,நாகர்கோவில்-4,9843448095


12th Standard -Tamil -Study Material
FIRST REVISION EXAM -February 2022
48 Mark பெற - ONE WORD- பலவுள் தெரிக-மொழிப்பயிற்சி-இலக்கணம்- மனப்பாடல்
PDF DOWNLODE 👇👇👇👇👇

10 ஆம் வகுப்பு
முதல் திருப்புதல் தேர்வு -2022
மாதிரி வினாத்தாள் ( எல்லாப்பாடங்களும் )
MODEL QUESTION PAPER - ALL SUBJECTS : Click Here


12 ஆம் வகுப்பு
முதல் திருப்புதல் தேர்வு -2022
மாதிரி வினாத்தாள் ( எல்லாப்பாடங்களும் )
MODEL QUESTION PAPER - ALL SUBJECTS : Click Here


12th Standard -Tamil -Study Material
FIRST REVISION EXAM -February 2022
14 Mark - ONE WORD- பலவுள் தெரிக
PDF DOWNLODE : click Here

12th Standard -Tamil -Study Material
FIRST REVISION EXAM -February 2022
14 Mark - மொழிப்பயிற்சி -
இலக்கணம் PDF DOWNLODE : Click Here






11 ஆம் வகுப்பு

Slip Test 1 : click here

Slip Test 2 : click here

Slip Test 3 : click here


11 ஆம் வகுப்பு

Unit Test - இயல் - 1 : Click Here

Unit Test - இயல் - 2 : Click Here


11 ஆம் வகுப்பு

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click Here


11 ஆம் வகுப்பு

இயல் - 5

சீறாப்புராணம் 

1 Mark questions

ONLINE TEST எழுத : Click Here

சீறாப்புராணம் 

1 Mark questions (75) Pdf : Click Here

சீறாப்புராணம் 
BOOK BACK QUESTIONS : Click Here
சீறாப்புராணம் 
SLIP TEST QUESTIN & ANSWER : Click Here



12 ஆம் வகுப்பு

இயல் - 1 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : click here


Slip Test 2 : click here


Slip Test 3 : click here


Slip Test 4 : click here


12 ஆம் வகுப்பு

இயல் - 2 ( REDUCED SYLLABUS)


Slip Test 1 : Click here


Slip Test 2 : Click here


Slip Test 3 : Click here


Slip Test 4 : CLICK HERE


மொழிப்பயிற்சி


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here


தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-2 : click here


உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here


12 ஆம் வகுப்பு

இயல்  1 - 8 ( REDUCED SYLLABUS)

 

 1 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

2 மதிப்பெண் வினா விடைகள்  : click here

4 மதிப்பெண் வினா விடைகள்  : Click here

மதிப்பெண் வினா விடைகள்  : Click here


12 ஆம் வகுப்பு

ஜனவரி 2022 ( REDUCED SYLLABUS)

முதல் திருப்புதல் தேர்வு - JANUARY 2022

மாதிரி வினாத்தாள்-1 : click here


மாதிரி வினாத்தாள்-2 : Click here


மாதிரி வினாத்தாள்-3 : Click Here


மாதிரி வினாத்தாள்-4 : Click Here


மாதிரி வினாத்தாள்-5 : Click Here


12 ஆம் வகுப்பு

பாநயம் பாரட்டல்

இயல்  - 1 :   முச்சங்கங்  கூட்டி  :  கண்ணதாசன்     -   Click Here 
இயல் - 2 :   வெட்டி  யடிக்குது              :   பாரதியார்                     -  Click Here


12 ஆம் வகுப்பு
அணியிலக்கணம்

1. பொருள் வேற்றுமை அணி ,நிரல்நிறை அணி,
ஏகதேச உருவக அணி - Click Here


12 ஆம் வகுப்பு

மொழிப்பயிற்சி 

2 mark QUESTIONS  

இயல் 1,2,3                                                      : Click Here




 

©L3MØÑÃDÊ 360

Image by Pete Linforth from Pixabay 

 


Post a Comment

Previous Post Next Post