12th Standard -Tamil -Study Material -EYAL 3 -UNIT TEST - இயல் 3 - அலகுத் தேர்வு - தமிழர் குடும்ப முறை
QUESTIONS-ANSWERS
தமிழர் குடும்ப முறை
வகுப்புத் தேர்வு
வகுப்பு - 12 தமிழ்
மதிப்பெண் : 25 நேரம் : 20 நிமிடம்
அனைத்திற்கும் விடைத் தருக 15 X 1 = 15
1. மனித சமூகத்தின் அடிப்படை அலகு எது?
2. குடும்ப அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை எது?
3. திருமணம் குடும்பம் இந்தச் சொற்கள் இடம் பெறாது இலக்கண நூல் எது?
4. “குடும்பு” என்ற சொல்லின் பொருள் என்ன?
5. “குடம்பை” என்ற சொல் சங்க இலக்கியங்களில் எத்தனை இடங்களில் வருகின்றது?
6. தொல்காப்பிய நூற்பாபா.-129 குறிப்பிடும் இரண்டு வாழிடங்கள் எவை?
7. சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள் சங்ககால சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன அவை யாவை?
8. தனிக்குடும்ப உருவாக்கத்தின் தொடக்க நிலையை எவ்வாறு அழைப்பர்?
9. சங்ககாலத்தில் கண சமூகத்திற்கும் யார் தலைமை ஏற்றிருந்தார்?
10. “முளரிமருங்கின் முதியோள் சிறுவன்”- இப்பாடல் வரி இடம்பெற்ற நூலும் பாடலின் எண்ணும் எழுதுக?
11. இளந்தம்பதியினருக்கு ஏற்ற அறிவுரை கூறி நெறிப்படுத்தும் பணி யாருடையது?
12.‘எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே’ என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்தும் குடும்ப முறை யாது?
13. “மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே” எனக் குறிப்பிடும் நூல் எது?
14. சங்க இலக்கிய குடும்ப அமைப்பில் முதன்மைப் பங்கு பெற்றவர்கள் யாவர்?
15. சங்ககால தலைவனும் தலைவியும் எதை காத்துக் கொள்வதே இல்வாழ்வின் பயன் எனக் கருதினர்?
குறுவினா 5 X 2 = 10
16. புக்கில் , தன்மனை சிறுகுறிப்பு தருக.
17. “மணந்தகம்” என்றால் என்ன?
18. சங்ககாலத்தில் தாய்வழிச்சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?
19. “சிலம்புகழி நோன்பு” என்றால் என்ன?
20. நேர்வழி விரிந்த குடும்ப முறை என்றால் என்ன?
குருசடி எம்.ஏ. ஜெலஸ்டின்,
கார்மல் மேனிலைப்பள்ளி,
நாகர்கோவில் - 4. 9843448095.
தமிழர் குடும்ப முறை
வகுப்புத் தேர்வு
வகுப்பு - 12 தமிழ்
நேரம் : 20 நிமிடம் மதிப்பெண் : 25
விடைகள்
அனைத்திற்கும் விடைத் தருக 15 X 1 = 15
1.குடும்பம்
2.திருமணம்
3.தொல்காப்பியம்
4.கூடி வாழ்தல்
5.இருபது
6.இல், மனை
7. திருமணமும் ,குடும்பமும்
8. மணந்தகம்
9. தாய்
10. புறநானூறு - 278
11. செவிலி / செவிலித்தாய்
12. தந்தைவழிக் குடும்பம்குடும்பம்
13. குறுந்தொகை
14. செவிலித் தாய், அவளது மகளாகிய தோழி
15. மனையறம்
குறுவினா 5 X 2 = 10
16. புக்கில்:
தற்காலிகமாகத் தங்குமிடம் ‘புக்கில்’ என அழைக்கப்படும்.
தன்மனை:
திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியாக வாழும் இடம் ‘தன்மனை’ ( Neolocal) என அழைக்கப்படும்.
17.மணந்தகம்:
திருமணம் புரிந்த கணவனும் மனைவியும் சேர்ந்து இல்லற வாழ்வில் ஈடுபடக்கூடிய தொடக்க கட்டமே “மணந்தகம்” எனப்படுகிறது. இது முதல் குழந்தை பிறக்கும் வரை உள்ள காலகட்டத்தைக் குறிக்கும்.
18. சங்ககாலத்தில் தாய்வழிச்சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள்:
⭐ சங்ககாலத்தில் கண சமூகத்திற்கும் தாயே தலைமை ஏற்றிருந்தாள்.
⭐ சங்ககாலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன்
இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தினாள்.
⭐ குடும்பங்களில் பெண்களே குலத் தொடர்ச்சிக்கு
உரியவர்கள் ஆயினர். பெண்குழந்தைகளின் பிறப்பு
பெரிதும் விரும்பப்பட்டது.
⭐ குடும்பத்தின் சொத்தும் வளங்களும் செல்வங்களும்
பெண்களுக்குச் சென்று சேர்ந்தன.
19. சிலம்புகழி நோன்பு :⭐ திருமணத்திற்கு முந்தைய நாள் தன்காலில்
அணிந்திருக்கும் பழைய கன்னிச் சிலம்புகளைக்
களைந்து புதுச் சிலம்பு பூட்டுவது ‘சிலம்புகழி’ நோன்பாகும்.
20. நேர்வழி விரிந்த குடும்ப முறை :
⭐ கணவன் மனைவி மகன் ஆகியோருடன் பெற்றோர் ஒருவரின்
தந்தையும் சேர்ந்து வாழ்வதே நேர்வழி விரிந்த குடும்ப முறை எனப்படும்.
குருசடி எம்.ஏ. ஜெலஸ்டின்,
கார்மல் மேனிலைப்பள்ளி,
நாகர்கோவில் - 4. 9843448095.