11th Standard - +1Tamil - Tamil -Study Material - QUARTERLY EXAM QUESTION PAPER - SEPTEMBER 2022- MODEL QUESTION PAPER - ANSWER KEY - தமிழ் - காலாண்டுத் தேர்வு - மாதிரி வினாத்தாள்
காலாண்டுத்தேர்வு - செப்டம்பர் 2022
மாதிரி வினாத்தாள்-1
நேரம்: 3:மணி வகுப்பு- 11 மதிப்பெண்:90
பொதுத்தமிழ்
அறிவுரைகள் :
1) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும்
பயன்படுத்தவும்.
2) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.
பகுதி - 1
குறிப்பு :
1. அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.. 14 X1 = 14
2. கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்துக்
குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக.
1. சரியானதைத் தேர்ந்தெடுக்க
அ) வரை- மலை ஆ) வதுவை - திருமணம்
இ) வாரணம் - யானை ஈ) புடவை - கடல்
i ) அ, ஆ, இ - சரி ; ஈ - தவறு ii ) ஆ, இ, ஈ - சரி ; அ - தவறு
iii ) , இ, சரி ; ஆ - தவறு iv ) அ, ஆ, ஈ - சரி; இ - தவறு
2. ஆனந்தரங்கருக்குத் தொடர்பில்லாத குறிப்பு எது?
அ) மொழிபெயர்ப்பாளர் ஆ) இந்தியாவின் பெப்பிசு
இ) தலைமைத் துவிபாஷி ஈ) உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை
3. பிழையான தொடரைக் கண்டறிக
அ) பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவைத் தயாரிக்கின்றனர்.
ஆ) ஏதிலிக்குருவிகள் என்பது வாழ்வதற்கான சூழல் கிடைக்காத குருவிகளாகும்.
இ) குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநுறு நூல்கள் உடையது.
ஈ) யானைகளால் வெகு தொலைவில் உள்ள நீரினை வாசனை மூலம் அறியமுடியும்.
4.துன்பப்படுபவர்_____________
அ) தீக்காயம் பட்டவர் ஆ) தீயினால் சுட்டவர் இ) பொருளைக் காத்தவர் ஈ) நாவைக் காத்தவர்
5. பாயிரம் அல்லது_____________ அன்றே.
அ) காவியம் ஆ) பனுவல் இ) பாடல் ஈ) கவிதை
6. ‘தெற்றிப் பள்ளிகள்’ என அழைக்கப்பட்டவை _________
அ) சமணப்பள்ளிகள் ஆ) பௌத்தப் பள்ளிகள்
இ) திண்ணைப் பள்ளிகள் ஈ) ஐரோப்பிய பள்ளிகள்
7. கூற்று : “கோடு என்பது தமிழ்ச்சொல் ஆகும்.
விளக்கம் : கோடு என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை
என்னும் பொருள்களும் உண்டு.
அ) கூற்று சரி, விளக்கம் தவறு ஆ) கூற்றும் சரி விளக்கமும் சரி
இ) கூற்று தவறு, விளக்கம் சரி ஈ) கூற்றும் தவறு விளக்கமும் தவறு
8. தவறான இணையைத் தேர்வு செய்க
அ) மொழி + ஆளுமை - உயிர்+ உயிர் ஆ) கடல் + அலை - உயிர் + மெய்
இ) தமிழ் + உணர்வு - மெய் + உயிர் ஈ) மண் + வளம் - மெய் + மெய்
9. ‘இந்த உலகமே நாடகமேடை; அதில் நாம் வெறும் நடிகர்களே’ என்று கூறியவர்
அ) பால்பிரண்டன் ஆ) ஜி. யு. போப் இ) ஷேக்ஸ்பியர் ஈ) மில்டன்
10. “இனிதென” இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகளை வரிசைப்படுத்துக.
அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
ஆ) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உயிர்வரின்
உக்குறள் மெய்விட்டோடும்.
இ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே.
ஈ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.
11.“பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்”இக்கவிதை நூலின் ஆசிரியர்..
அ) மல்லார்மே ஆ) வால்ட் விட்மன்
இ) பாப்லோ நெரூடா ஈ) மனோரமா பிஸ்வாஸ்
12. எந்த இதழ்களை பார்த்து பாரதி கருத்து படங்களை மட்டுமே கொண்ட
இதழை நடத்த விரும்பினார்.
அ) இந்தி பஞ்ச், நியூ இந்தியா ஆ) லண்டன் பஞ்ச், இந்து
இ) லண்டன் பஞ்ச் , இந்தி பஞ்ச் ஈ) இந்து, கனடியன் எக்ஸ்பிரஸ்
13. ஈரெழுத்து மெய் மயக்கமாய் வரும் எழுத்துக்கள் _________ ஆகும்.
அ) க், ச், ய் ஆ) ய், ர், ச் இ) ய், ர், ட் ஈ) ய், ர், ழ்
14.‘தவமும் ஈகையும்’ - இச்சொற்களின் இலக்கணக்குறிப்பு
அ) உவமைத்தொகை ஆ) எண்ணும்மை இ) பண்புத்தொகை ஈ) உம்மைத்தொகை
பகுதி - 2
பிரிவு – 1
இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக
எவையேனும் மூன்றனுக்கு விடைதருக 3 x 2 = 6
15. தமிழர்கள் புகழ், பழிஆகியவற்றை எவ்வாறு ஏற்றதாக புறநானூறு கூறுகிறது?
16. மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் என்னும் கூற்றினை உறுதிப்படுத்துக.
17. சீர்தூக்கி ஆராயவேண்டியஆற்றல்கள் யாவை?
18. ஏதிலியாய் குருவிகள் எங்கோ போயின - தொடரின் பொருள் யாது?
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு விடைதருக 2 x 2 = 4
19. தமிழ்நாட்டின் மாநில மரம் - சிறுகுறிப்பு வரைக.
20.“கோட்டை” என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?
21. ஆனந்தரங்கரின் வருணனைத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
பிரிவு – 3
எவையேனும் ஏழனுக்கு விடைதருக 7 x 2 = 14
22.தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர்
உருவாக்குக.
நிலவு வீசுவதால் தெற்கிலிருந்து மாலை தென்றல் மகிழ்விக்கும் எனப்படுகிறது மனதை
23. மயங்கொலி சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
குரை , குறை
24. ஏதேனும் ஒன்றுக்கு உறுப்பிலக்கணம் தருக
அ) அறிந்து ஆ) துஞ்சல்
25. ஏதேனும் ஒன்றுக்குப் புணர்ச்சி விதி தருக
அ) சிறுகோல் ஆ) மனையென
26. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க
எட்டுவரை
27. கலைச்சொல் தருக
அ) Ethnic Group ஆ) Ancestor
28. வல்லின மெய்களைஇட்டும் நீக்கி எழுதுக
அனைத்துத் துறைகளிலும் ஆண்களை போலவேப் பெண்களும் அரசு பணியை
பெற வேண்டும்.
29. பிறமொழிச் சொற்களைச் தமிழாக்கம் செய்க
அ) தேசம் ஆ) வாடகை
30. உவமை, உருவகம் வேறுபடுத்துக.
பகுதி – 3
பிரிவு-1
ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 =8
31 “ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் கொல்” - இடஞ்ட்டிப் பொருள் விளக்குக..
32. நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல்
எவற்றைக் குறிப்பிடுகிறது.
33. மேகத்திடம் கூறுவது போலத் தோழி தலைவனுக்கு உணர்த்திய இறைச்சிப்
பொருள் யாது?
34. புகழுக்குரிய பண்புகளாக நீவிர் கருதுவன யாவை? புகழின் பெருமையை
பொதுமறை வழிநின்று கூறுக
பிரிவு-2
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 =8
35. சமணப் பள்ளிகளும் பெண் கல்வியும் - குறிப்பு வரைக
36.“மலை மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது” - என்பதை எடுத்துக்காட்டுகளுடன்
விவரிக்க
37. வேதிக்கலப்பில்லாத பூச்சிக்கொல்லி நடைமுறைக்குச் சாத்தியமா? நும் கருத்தை
எழுதுக
38.“நேரடிமொழி” என்பதை நும் பாட வழி நின்று எழுதுக.
பிரிவு-3
எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக 3 x 4 =12
39. சொற்பொருள் பின்வருநிலையணி (அல்லது) வேற்றுமை அணியை விளக்குக.
40. கீழ்க்ணும் பாடலைப் படித்து மையக்கருத்து எழுதி, ஏதேனும் மூன்று நயங்களை
விளக்குக.
பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்- புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சில மூடர் - நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்.
கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்
பேதமை யற்றிடும் காணீர்
- பாரதியார்
41. தமிழாக்கம் தருக.
அ) The Pen is mightier than the sword.
ஆ) Winners don’t do different things , they do things differently.
இ) A picture is worth a thousand words.
ஈ) Work while you work and play while you play.
42. புதிர்களுக்கான விடைகளை தேர்ந்தெடுத்து எழுதுக
( கம்பு , மை, வளை, மதி, இதழ், ஆழி )
அ) எலியும் நுழையும்; எழிலரசி கையும் நுழையும் ___________
ஆ) அடிக்கவும் செய்யலாம் ; கோடைக்குக் கூழாகவும் குடிக்கலாம் _________
இ) அறிவின் பெயரும் அதுதான்;அம்புலியின் பெயரும் அதுவேதான் _________
ஈ) பூவின் உறுப்பும் நானே; புன்னகையின் பிறப்பிடமும் நானே _____________
43. கீழ்க்காணும் விளம்பரத்தைப் பத்தியாக மாற்றி அமைக்க
பகுதி – 4
பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல்
விடை தருக 3 x 6 = 18
44. அ) திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை, தென்கரை நாட்டுப் பாடல்கள் வழி
இயற்கை வளங்களை விவரிக. (அல்லது)
ஆ) மதீனா நகரம் ஒரு வளமான நகரம் என உமறுப்புலவர் வருணிக்கும்
செய்திகளைத் தொகுத்து எழுதுக.
45. அ) இயற்கையோடு இயைந்து வாழ்வு நடத்திய தமிழர்களின் வாழ்வில்
இருப்பிடங்களின் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தன-
கூற்றினை மெய்ப்பிக்க. ( அல்லது )
ஆ) பௌத்தக்கல்வி, சமணக்கல்வி, மரபுவழிக்கல்வி முறைகளால் தமிழகக் கல்வி
முறையில் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களை விவரிக்க.
46. அ) யானைடாக்டர் கதை வாயிலாக இயற்கை, உயிரினப் பாதுகாப்பு ஆகியவை
குறித்து நீவிர் அறிந்தவற்றைத் தொகுத்து எழுதுக. ( அல்லது )
ஆ) வாடிவாசல் கதை வாயிலாக நீங்கள் உணர்ந்த கருத்துக்களை விளக்குக.
பகுதி – 5
47. அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக 4 + 2 = 6
அ) “உண்டால் அம்ம ” - எனத் தொடங்கும் புறநானூறு பாடலை எழுதுக.
ஆ) ‘பொருட்டு’’ - என முடியும் திருக்குறளை எழுதுக.
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின் ,
முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேல்நிலைப் பள்ளி ,
நாகர்கோவில் - 4, 9843448095காலாண்டுத்தேர்வு - செப்டம்பர் 2022
மாதிரி வினாத்தாள்-1
நேரம்: 3:மணி வகுப்பு- 11 மதிப்பெண்:90
பொதுத்தமிழ்
விடைகள்
பகுதி - 1
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக 14 X1 = 14
1. i ) அ, ஆ, இ - சரி ; ஈ - தவறு
2. ஈ) உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை
3. இ) குறைந்த எட்டுத்தொகை அடிகளை ஐங்குறுநுறு நூல்கள் உடையது.
4. ஈ) நாவைக் காத்தவர்
5. ஆ) பனுவல்
6. இ) திண்ணைப் பள்ளிகள்
7. ஆ) கூற்றும் சரி விளக்கமும் சரி
8. ஆ) கடல் + அலை - உயிர் + மெய்
9. இ) ஷேக்ஸ்பியர்
10. அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து
ஒன்றுவது இயல்பே
11. ஈ) மனோரமா பிஸ்வாஸ்
12. இ) லண்டன் பஞ்ச் , இந்தி பஞ்ச்
13. ஈ) ய், ர், ழ்
14. ஆ) எண்ணும்மை
பகுதி - 2
பிரிவு – 1
இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடைதருக
எவையேனும் மூன்றனுக்கு விடைதருக 3 x 2 = 6
15.புகழ்: புகழ் வரும் என்றால், தமிழர்கள் தம் உயிரையும் கொடுப்பர்.
பழி: பழி வரும் என்றால், உலகம் முழுவதும் கிடைத்தாலும் ஏற்றுக்கொள்ள
மாட்டார்கள்.
16.மதீனா நகரம் ஒரு மாளிகை நகரம் :
மேரு மலையைப் போன்று மதீனா நகரின் மாளிகைகள் உயர்ந்து இருந்தன.
அங்காடிகள் நிறைந்த தெருக்களில் எழுந்த ஒலி பெரும் கடல்ஒலி போன்று இருந்தது.ஒரே சீராய் அமைந்த வீதிகள் பூமியை அளப்பன போல நீண்டு தோன்றின. அந்நகரில், சிறிதும் இடைவெளி இன்றி மாளிகைகள் நெருக்கமாய் அமைந்திருந்தன. இவ்வாறு மதீனா நகரம் ஒரு மாளிகை நகரமாய் விளங்கியது.
17. சீர்தூக்கி ஆராயவேண்டியஆற்றல்கள்:
தான் செய்ய கருதிய செயலின் வலிமை, அதைச் செய்ய விரும்பும் தன் வலிமை, அதற்கு ஊறு செய்து விலக்கக்கூடிய பகைவனது வலிமை, தனக்குத் துணையானவர்,
பகைவருக்குத் துணையானவர் வலிமை ஆகியனவம்.
18. ஏதிலியாய் குருவிகள் எங்கோ போயின - தொடரின் பொருள்:
மரங்கள் வெட்டப் பட்டதால் காடுகள் அழிந்து போயின மழை பெய்யவில்லை மண்வளம் குன்றியது . வளம் குன்றியதால் இயற்கைச் சூழலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. எனவே, இயற்கையை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த குருவிகளும் வாழ வழியின்றி ஏதிலியாய் (ஆதரவற்றனவாய்) இருப்பிடம் தேடி அலைந்தன.
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு விடைதருக 2 x 2 = 4
19. தமிழ்நாட்டின் மாநில மரம் :
நம் தமிழ்நாட்டின் மாநில மரம் பனை. இது ஏழைகளின் கற்பக விருட்சம் சிறந்த காற்றுத் தடுப்பான் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் நீரைச் சேமித்து வைக்கும் தன்மை உடையது. பனைமரத்தில் இருந்து பதநீர்,நுங்கு முதலியன கிடைக்கின்றன. அவற்றைக் கொண்டு கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரிக்கப்படுகின்றன.
20. கோட்டை என்னும் சொல்,
தமிழில் - கோடு
மலையாளத்தில் - கோட்ட , கோடு
கன்னடத்தில் - கோட்டே, கோண்டே
தெலுங்கில் - கோட்ட
துளுவில் - கோட்டே
தோடா மொழியில் - குவாட்
என்றும் வழங்கப்படுகிறது.
21. ஆனந்தரங்கரின் வருணனைத் திறன் :
“கப்பல்கள் வருகின்ற செய்தியைக் கேட்டதும் நஷ்டப்பட்ட திரவியம் மீண்டும் கிடைத்தாற் போலவும்; மரணமுற்ற உறவினர்கள் உயிர் பெற்று எழுந்து வந்தது போலவும்; நீண்ட நாள் தவமிருந்து புத்திரப்ப்பாக்கியம் கிட்டினாற் போலவும்;
தேவாமிர்தத்தைச் சுவைத்தது போலவும், மக்கள் சந்தோஷப்பட்டார்கள்” எனப் பதிவு செய்துள்ளார். இதனை ஆனந்தரங்கரின் வருணனை திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.
பிரிவு – 3
எவையேனும் ஏழனுக்கு விடைதருக 7 x 2 = 14
22.தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர் ஆக்குக.
i) மாலை நிலவு மனத்தை மகிழ்விக்கும்.
ii) தெற்கிலிருந்து வீசுவதால் தென்றல் எனப்படுகிறது.
23. மயங்கொலி சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
நாய் குரைக்காமல் போனது பெரிய குறைதான். (அல்லது)
எப்போதும் குரைக்கும் நாயைப் பார்த்துக் குறை கூறினார்கள்.
24. ஏதேனும் ஒன்றுக்கு உறுப்பிலக்கணம் தருக.
அ) அறிந்து
அறிந்து - அறி +த் (ந்) +த்+ உ
அறி - பகுதி
த் - சந்தி , “த்” , “ந்” - ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி
ஆ) துஞ்சல்
துஞ்சல் - துஞ்சு + அல்
துஞ்சு - பகுதி
அல் - தொழிற்பெயர் விகுதி
25. ஏதேனும் ஒன்றுக்குப் புணர்ச்சி விதி தருக
அ) சிறுகோல்
சிறுகோல் = சிறுமை + கோல்
i) ஈறுபோதல் > சிறுகோல்
ஆ) மனையென
மனையென = மனை + என
i) இஈஐ வழி யவ்வும் > மனைய் + என
ii) உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே > மனையென
26. சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க
எட்டுவரை
எட்டுவரை : அவன் எட்டுவரை தெளிவாகக் கூறினான்.
எட்டுவரை ( எட்டு வரை = எட்டு மலைகள்): அட்டமா சித்திகள் வாய்க்கப் பெற்ற
சித்தர்கள் எட்டு வரைகளையும் எளிதில் கடப்பர்.
எட்டுவரை ( எள் துவரை ) : அவன் தன் நிலத்தில் எட்டுவரை ( எள் துவரை) விதைத்தான்.
27. கலைச்சொல் தருக
அ) Ethnic Group - இனக்குழு
ஆ) Ancestor - மூதாதையர்
28. வல்லின மெய்களைஇட்டும் நீக்கி எழுதுக
அனைத்துத் துறைகளிலும் ஆண்களைப் போலவே_ பெண்களும் அரசுப் பணியைப்
பெற வேண்டும்.
29. பிறமொழிச் சொற்களைச் தமிழாக்கம் செய்க
அ) தேசம் - நாடு
ஆ) வாடகை - குடிக்கூலி
30. உவமை, உருவகம்:
உவமை: சொல்வதை எளிதில் உணருமாறு கூற உவமை பயன்படும்.
உவமைத் தொடரில் உவமை முன்னும், உவமேயம் பின்னும் அமையும்.
எ - கா: மதிமுகம் ( மதி போன்ற முகம் )
உருவகம்: ஒப்பீட்டு செறிவும், பொருள் அழுத்தமும் கொண்டது உருவகம்..
உருவகத் தொடரில் உவமேயம் முன்னும் உவமை பின்னும் அமையும்.
உவமை வேறு உவமேயம் வேறு எனத் தோன்றா வண்ணம் இரண்டும்
ஒன்றே என தோன்றுமாறு அமைந்திருக்கும்.
எ - கா: முகமதி ( முகமாகிய மதி)
பகுதி – 3
பிரிவு-1
ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக 2 x 4 = 8
31. இடம் :
போதனார் இயற்றிய நற்றிணைப் பாடலில் இத்தொடர் இடம் பெற்றுள்ளது. தலைவி இல்லறம் நடத்தும் பாங்கைக் கண்டுவந்த செவிலி நற்றாயிடம் வியந்து இவ்வாறு கூறுகிறாள்.
பொருள் :
சிறுவயதில் தேனும் பாலும் கலந்த உணவினை மறுத்து வேண்டாமென அங்குமிங்கும் ஓடிய விளையாட்டு பெண்ணாய் இருந்தவள் தலைவி. ஆனால், இப்போது இத்தகைய அறிவும் இல்லற நடைமுறையும் எவ்வாறு அறிந்து கொண்டாள் எனச் செவிலித் தாய் வியக்கிறாள்.
விளக்கம் :
சிறுவயதில் தான் பிறந்த வீட்டில் தேனும் பாலும் கலந்த உணவைச் செவிலியர் தர வேண்டாம் என்று மறுத்தவர் தலைவி. தான் மணந்துகொண்ட கணவனுடன் வறுமையில் வாடும் நிலையிலும் தன் தந்தையின் வீட்டில் பெற்ற வளமான உணவினைப் பற்றி சிறிதளவும் நினைக்காது, ஒருபொழுது விட்டு ஒருபொழுது உண்ணும் மன வலிமையைப் பெற்றுள்ளாள். இந்த அறிவையும் ஒழுக்கத்தையும் எங்குக் கற்றாள் என தான் கண்ட காட்சியைச் செவிலித்தாய் நற்றாயஇடம் கூறி வியக்கிறாள்.
32. நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் கூறுவன :
நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை, நூல் பின்பற்றிய வழி, நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு, நூலின் பெயர், யாப்பு, நூலில் குறிப்பிடப்படும் கருத்து, நூலைக் கேட்போர், நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன் ஆகியன, முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக, நன்னூல் குறிப்பிடுகிறது.
33. மேகத்திடம் கூறுவது போலத் தோழி தலைவனுக்கு உணர்த்திய இறைச்சிப்
பொருள்:
மேகத்திடம் கூறுவது போலத் தலைவனுக்குத் தோழி குறிப்பினால் தலைவியைச் சந்திக்கும் இடம் குறித்து கூறுகிறாள். வேங்கை மலர் அணிந்து, தலைவி தோழியருடன் தழலை, தட்டை என்னும் கருவிகளைக் கொண்டு ஒலியெழுப்பி பறவைகளை ஓட்டிக்கொண்டு தினைப்புனம் காக்கின்றாள்.
கடல் நீரை முகந்து முரசம் போல் இடித்துப் போர் வீரர் வாள் போல மின்னிய மேகமே, “நீ அங்கே சென்று பொழிவாயா? என மேகத்தைக் கேட்பதுபோல் தலைவனுக்குத் தோழி குறிப்பால் உணர்த்துகிறாள். ஏனென்றால், எம் தாயார் விடிய மட்டும் விழித்ததுள்ளனர். ஆகவே, தலைவி தினைப்புனம் காக்கும் இடத்துக்கு தலைவன் வரலாம் என்பது குறிப்பு .இதுவே இறைச்சிப் பொருள் ஆகும்.
34. புகழுக்குரிய பண்புகள் :
அன்பு, அடக்கம், இரக்கம், அறிவு, கொடை, வீரம், வாய்மை, பொறுமை போன்ற பண்புகள் புகழுக்கு உரியவையாகும்..
புகழுக்குரிய பெருமைகள்:
இணையற்ற உயர்ந்த புகழை போல உலகத்தில் ஒப்பற்ற ஒன்றாக நிலைத்து நிற்பது வேறொன்றும் இல்லை. தோன்றினால் புகழ் தரும் பண்புகளுடன் தோன்றுக. இல்லையெனில் தோன்றாமல் இருப்பதே நல்லது.பழி இல்லாமல் வாழ்பவரே வாழ்பவர் ; புகழில்லாமல் வாழ்பவர் வாழாதவர்.
பிரிவு-2
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடைதருக 2 x 4 = 8
35. இயல் - 4 ( பக் : 111 - சிறுவினா கேள்வி எண் - 3 )
36. இயல் - 3 ( பக் : 77 - சிறுவினா கேள்வி எண் - 1 )
37. இயல் - 2 ( பக் : 52 - சிறுவினா கேள்வி எண் - 1 )
38. நேரடிமொழி:
கவிஞர்கள் சிலர் தங்களுடைய கவிதைகளை எதிரிலிருக்கும் வாசகர்களுடன் பேசுவது போல அமைக்கின்றனர். இதையே அவர்கள் நேரடி மொழி எனக் கருதுகின்றனர். நேரடி மொழி எனப்படும் பேச்சு மொழிக்கு ஒருபோதும் பழமை தட்டுவதில்லை, அது ஒருபோதும் வேற்றுமொழி ஆவதில்லை.
பேச்சுமொழி எழுத்துமொழி என்னும் இவ்விரண்டில் எதிராளியிடம் நேருக்கு நேராய் வெளிப்படுத்துவது பேச்சு மொழியே என்பதால் பேச்சுமொழி நேரடி மொழி எனப்படுகிறது. எப்போதும் உயிர்ப்புடன் மாறிக்கொண்டும் இருக்கிறது. மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா ? அல்லது இறந்தகாலத்தவரா ? என்பதை நிர்ணயிக்கிறது.
பிரிவு-3
எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடைதருக 3 x 4 = 12
39. இயல் - 3 வாழ்வியல் - திருக்குறள் ( பக் : 89 - சிறுவினா கேள்வி எண் - 4 ) அல்லது
இயல் - 3 வாழ்வியல் - திருக்குறள் ( பக் : 89 - சிறுவினா கேள்வி எண் - 1 )
40. இயல் - 4 மொழியை ஆள்வோம் ( பக் : 114 - இலக்கிய நயம் பாராட்டுக )
41. இயல் - 1 மொழியை ஆள்வோம் ( பக் : 23 - தமிழாக்கம் தருக - கேள்வி -1,2,3,4 )
42. இயல் - 4 மொழியோடு விளையாடு ( பக் : 143 - புதிர்களுக்கான விடைகளைத்
தேர்ந்தெடுத்து எழுது- கேள்வி -1,2,4,5 )
43. இயல் - 2 மொழியை ஆள்வோம் ( பக் : 54 - விளம்பரத்தைப் பத்தியாக மாற்றி
அமைக்க )
பகுதி – 4
பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல்
விடை தருக 3 x 6 = 18
44. அ) இயல் - 2 ( பக் 53 : - நெடுவினா கேள்வி எண் - 2 ) அல்லது
ஆ)இயல் - 5 ( பக் 140 : -நெடுவினா கேள்வி எண் - 2 )
45. அ) இயல் - 3 ( பக் 78 : - நெடுவினா கேள்வி எண் - 1 ) அல்லது
ஆ)இயல் - 4 ( பக் 112 : -நெடுவினா கேள்வி எண் - 1 )
46. அ) இயல் - 2 ( பக் 53 : - நெடுவினா கேள்வி எண் - 3 ) அல்லது
ஆ)இயல் - 3 ( பக் 78 : - நெடுவினா கேள்வி எண் - 3 )
பகுதி – 5
47. அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக 4 + 2 = 6
அ) உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும், இனிதுஎன
தமியர் உண்டலும் இலரே, முனிவிலர்!
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.
ஆ) தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு.
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின் ,
முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேல்நிலைப் பள்ளி ,
நாகர்கோவில் - 4, 9843448095