Loading ....

11th Standard- +1Tamil - Tamil -Study Material - NOTES OF LESSON - தமிழ் - 11 ஆம் வகுப்பு - பாடக் குறிப்பேடு - இயல் 1- உரைநடை- பேச்சுமொழியும் கவிதைமொழியும்

11th Standard- +1Tamil - Tamil -Study Material - NOTES OF LESSON - தமிழ் - 11 ஆம் வகுப்பு - பாடக் குறிப்பேடு - இயல் 1- உரைநடை- பேச்சுமொழியும் கவிதைமொழியும்  







மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம் என்பதும் ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலை
நிறுத்திக்கொள்கின்றன.
- எர்னஸ்ட் காசிரர்

வாளினும் வலிமை

மொழிவழியாக ஒன்றைப் பெயரிட்டு அ ழைக்க த் தொட ங்கியவு டன் 
அந்தப் பொருளின் மீது எனக்கொரு அதிகாரம் வந்துவிடுவதை உணர்கிறேன். குழந்தையாக இருந்தபோது, “ அம்மா , அம்மா ” என்று
அழைப்பேன். வேலையில் மூழ்கிய அம்மா, என்னைக் கவனியாதபோது திடீரென்று அவரது பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறேன் . அவர்
திடுக்கிட்டுத் திரும்பி என்னிடம் வந்திருக்கிறார். அப்போதுதான் என்னுடைய மொ ழி, பெயர்கள் இட்டு அழைத்தவுடன் அவற்றின் மீது ஒரு அதிகாரத்தை உருவாக்கிக் கொடுத்ததை உணரத் தலைப்பட்டேன்.
உடம்பின் ஒரு பகுதியாக இருக்கிற தொண்டையிலிருந்து சொற்கள் எழுகின்றன. அவற்றை ஏற்றம், இறக்க ம், உச்சரிப்பு , வேக ம் , நிதான ம், 
திருப்பித் திருப்பி ச் சொல்லுதல், இடையில் கொடுக்கும் மெளன ம்
ஆகியவற்றிற்கு ஏற்றவாறு பயன்படுத்திப் பொருள் வேறுபாடுகளை என்னால் ஏற்படுத்த முடியும் என உணர்கிறேன். இதுமட்டுமன்றி,
கைகால் அசைவுகள், முகத்தின் தசைநார்ச்சுருக்கங்களின் அபிநயங்கள் ஆகிய உடம்பின் செயல்பாடுகள் எ ன்னுடை ய மொழி வெளிப்பாட்டின் பகுதியாக உள்ளன.

          ஒரு திரவ நிலையில், நான் விரும்பும்  வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து  நடந்துகொ ள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது  உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற
திடநிலையை அடைந் துவிடுகிறது. இந்தத் திடநிலையை அடை ந்த மொ ழி அது அச்சிடப்பட்ட ஒரு கவிதையாக மாறுகிறபோது என்னிலிருந்து பிரி ந் து போய்விட்ட ஒரு பொருளாக மாறிவிடுகிறது. உலகை, மொ ழி
கட்டியெழுப்பியது என்று சொல்கிறபோது உலகம் மொழியின் 
கைப் பிடியிலிருந்து நழுவுவதற்குத் தொடர்ந்து முயல்வதாகவும்
தெரிகிறது. நேரடிமொழி எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கிறது. எ னவேதான் இலக்கிய வழக்கைக் கைவிட்டுப் பேச்சுமொழிக்குத் திரும்பியவுடனே கவிஞனுடைய கவிதையின் மொழி, அதிக வெளிப்பாட்டுச் சக்தி கொண்டதாக மாறிவிடுகிறது. எழுத்துமொழி அப்படியன்று. எழுதுவதை மட்டும்தான்
மனிதனின் கை செய்கிறது. முகத்திலிருக்கும் வாய், உடம்பிலிருக்கும் கையைக் காட் டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டை த் தெரிவிப்பதாக
அமைந் துள்ளது. அதனால்தான், பேச்சுமொ ழி எழுத்துமொழியைக் காட்டிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.

             எழுத்துமொழியில் பேச்சைக் கேட்க எ திராளி என்கிற ஒருவன் கிடையா து . எழுத்து என்பது ஒரு வகையில் பார்த்தால் தனக்குத்தானே பேசிக்கொள்கிற பேச்சு. ஆனால் பேச்சு என்பது அப்படிப்பட்டதன்று. பேச்சு என்பது தன்னைத் திறந்துகொள்கிற ஒரு செயல்பாடு. உண்மையில் சொல்லப்போனால் பேச்சு என்பது மொழியில் நீந்துவது. 
பேச்சுமொழியின்போது நமது உடம்பின் வெளிப்பாடுகள் நம்மை மொழியென் னும்  நீரில் முன்னோக்கி நகரச் செய்கின்றன. இதை உணர்ந்த கவிஞர்கள் சிலர் தங்களுடைய கவிதைகளை எதிரிலிருக்கும் வாசகனுடன் பேசுவதுபோல அமைக்கின்றனர். இதையே அவர்கள் நேரடிமொழி எனக் கருதுகின்றனர்.







 12th Standard TAMIL QUESTION 2023 |12TH TAMIL  PUBLIC STUDY MATERIAL (2023) |TWO MARK STUDY MATERIAL



12th Standard TAMIL QUESTION PAPER 2023 |12TH TAMIL PUBLIC EXAM STUDY MATERIAL 2023 |MODEL QUESTION PAPER -1(2023)

12th Standard TAMIL QUESTION PAPER 2023 |12TH TAMIL PUBLIC EXAM STUDY MATERIAL 2023 |MODEL QUESTION PAPER - 5 (2023)|WITH ANSWER KEY






Post a Comment

Previous Post Next Post