12th Standard- +2Tamil - Tamil -Study Material - NOTES OF LESSON - தமிழ் - 12 ஆம் வகுப்பு - பாடக் குறிப்பேடு - இயல் 1- செய்யுள் - தண்டியலங்காரம்- துணைப்பாடம் -தம்பி நெல்லையப்பருக்கு
தன்னேர் இலாத தமிழ்
தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்
தம்பி நெல்லையப்பருக்கு
- பாரதியார்
NOTES OF LESSON ( பாடக் குறிப்பேடு )
வகுப்பு : XII குருசடி எம். ஏ. ஜெலஸ்டின்
பாடம் : தமிழ் முதுகலைத் தமிழாசிரியர்
நாள் : 98434480985
பருவம் : முதல் பருவம்
இயல் : 1
அலகு : செய்யுள் ( கவிதைப் பேழை )
துணைப்பாடம் ( விரிவானம் )
பாடப் பகுதி : தன்னேர் இலாத தமிழ்
தண்டியலங்கார உரை மேற்கொள் பாடல்
தம்பி நெல்லையப்பருக்கு
- பாரதியார்
பாடவேளை : 4
பக்க எண் : 8 முதல் 13 முடிய
கற்பித்தலின் நோக்கம் :
மரபுக் கவிதையினைப் பொருளுணர்ந்தும் சீர்பிரித்தும் படிக்கும் ஆற்றல் பெறுதல்.
கடித இலக்கியத்தின் வாயிலாகச் சமூக உணர்வை வெளிப்படுத்தும் திறன் வளர்த்தல்.
கற்றல் விளைவு:
மரபுக் கவிதை படைக்கும் திறன் பெறுதல்.
தமிழ்மொழியின் சிறப்பினை அறிந்து அதன் புகழை வெளிப்படுத்தும் விதமாகப் புதுக்கவிதை எழுதுதல்.
கடிதம் மூலம் உள்ள கருத்தை வெளிப்படுத்தும் திறன் பெறுதல்.
பாரதியாரிடம் காணப்பட்ட மொழிப் பற்று, சமூகப் பற்றை அறிதல்.
கற்பித்தல் திறன்கள் :
பாடங்களை மாணவர்கள் புரிந்து கொள்ள விரிவுரை திறன் மூலம் கற்பித்தல் பணியை மேற்கொள்ளுதல்.
கடிதங்களை அறிமுகப்படுத்துதல் திறன் மூலம் கூறுதல்.
சில புகழ்பெற்ற நபர்களின் கடிதங்களை எடுத்துக்காட்டி விளக்கல் திறன் மூலம் விளக்குதல்.
கற்பித்தலில் நுண்திறன்கள்:
சிந்தனைகளைத் தூண்டும் வினாக்களைக் கேட்கும் நுண்திறன் மூலம் மாணவர்களிடையே கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்துதல்.
விரி சிந்தனையைத் தூண்டும் வினாக்களைக் கேட்டும் நுண்திறன் மூலம் சிறந்த தலைவர்கள் எழுதியுள்ள கடிதம் மற்றும் நாட்குறிப்பேடுகள் ஆகியவற்றைக் கூறிக் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்துதல்.
திரும்பக் கூற வேண்டியவற்றைத் திட்டமிடல், பாடம் முடித்தல், ஆகிய நுண்திறன் மூலம் கற்றிருக்கும் பாடப் பகுதிகளை மாணவர்களின் நினைவில் நிறுத்துதல்,
ஆயத்தப்படுத்துதல் :
மரபுக் கவிதைப் பற்றியும் . தமிழ்மொழியின் சிறப்புக் குறித்தும் மாணவர்களிடையே உரையாடல் நடத்திக் கற்றல் சூழலை உருவாக்குதல். விளக்கக் காட்சிகள் மூலம் சிறந்த நபர்களின் கடிதங்களை மாணவர்களின் பார்வைக்குக் கொடுத்து பாடங்களை கற்கும் சூழலை உருவாக்குதல்.
அறிமுகம் :
மரபுக் கவிதை என்றால் என்ன? மரபுக் கவிதை எழுத தெரிய வேண்டியவை எவை? தமிழ்மொழியின் தனிச் சிறப்புகள் என்னென்ன? தமிழ்மொழிக்குள்ள சிறப்பைப் போன்ற வேறு மொழிகள் உள்ளனவா? எனக் கேள்விகளைக் கேட்டு, மாணவர்கள் கூறும். விடைகளைத் தொகுத்து கூறுதல் வேண்டும்.
மிகச் சிறந்த கடிதம் எழுதியவர் யார்? கடிதம் எழுதிய அனுபவம் உள்ளதா? என்ற கேள்விகளைக் கேட்டுப் பாடப்பகுதியை அறிமுகம் செய்தல்.
துணை க்கருவிகள்:
i) பாடப்பகுதிக்கான QR CODE காணொலி
ii) பழைய கடிதங்கள், சூரியன், கடல் இவற்றின் படங்கள்
iii ) பாடப்பகுதி தொடர்பான PPT
கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
ஆசிரியர் செயல்பாடு :
கற்பிக்க இருக்கும் பாடப்பகுதியை நன்றாகப் பொருள் புரியும் முறையில் வாசித்துப் பாடப்பகுதிகளின் உட்பொருளைப் புரிந்து கொண்ட பிறகு, கற்பிக்க இருக்கும் தண்டியலங்காரம் பாடல் மற்றும் தம்பி நெல்லையப்பருக்குப் பாடப்பகுதியை மாணவனிடம் எழுந்து நின்று உரத்த குரலில் வசிக்க கூறுதல் வேண்டும்.
அவ்வாறு பாடப்பகுதியை மாணவன் வாசிக்க தடுமாறினால் அவனுக்கு வாசிப்புப் பயிற்சி வழங்க வேண்டும். இதனால் வகுப்பில் இருக்கும் மாணவர்கள் எளிதாக வாசிக்கும் திறனைப் பெறுவர்.
மாணவர்கள் வாசிக்க, வாசிக்க ஆசிரியர் பாடப்பகுதிகளை விரிவுரைத் திறன், அறிமுகப்படுத்தல் திறன், எடுத்துக்காட்டி விளக்குதல் திறன், சிறுசிறு கேள்விகளைக் கேட்டல் திறன், திரும்ப கூற வேண்டியவற்றை கூறும் திறன் ஆகியவற்றின் மூலம் விளக்கிப் பாடப்பகுதியை முடிக்க வேண்டும்.
பாடப்பகுதிகள்:
தண்டியலங்காரம்
ஆசிரியர் - தண்டி : 'காவியதர்சம்'- அணி இலக்கணத்தைக் கூறும் நூல் - நூலின் 3 பிரிவு பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் அணியிலக்கணத்தை மட்டும் கூறும் நூற்கள் - அணியிலக்கணத்தோடு பிற இலக்கணங்களைக் கூறும் நூற்கள்
பொருள் வேற்றுமையணி பற்றிய விளக்கம் -தமிழுக்கும் கதிரவனுக்கும் உள்ள ஒற்றுமை, தமிழ் தன்னேரிலாதது என வேறுபடுத்தல்.
புற இருளை அகற்றுபவன் சூரியன். தமிழ் அகஇருளை அகற்றவதுடன் தன்னிகரில்லாத ஒன்று. இரண்டும் மலையில் தோன்றும். (ஒப்புமை)
தமிழ் தன்னிகரில்லாதது (வேறுபடுத்தல்)
புத்தகத்தின் பாடப்பகுதியில் உள்ள இலக்கணக்குறிப்பு, உறுப்பிலக்கணம், புணர்ச்சி விதி இம் மூன்றையும் கரும்பலகையின் உதவியுடன் மாணவர்களுக்கு ஏற்கனவே கற்றுள்ளுள்ள நினைவுகளை மீள்பார்வை மூலம் புரிய வைத்தல் வேண்டும். சிக்கலற்ற மற்றும் சுருக்கமான கற்பித்தல் திறன் மூலம் எளிமையாகக் கற்பித்தல் வேண்டும்.
தம்பி நெல்லையப்பருக்கு
பாரதியார்
ரா.அ. பத்மநாபன் பதிப்பித்த 'பாரதி கடிதங்கள்' நூலில் இடம் பெற்றது.
15 வயதில் கல்விக் கற்க உதவிவேண்டி பாரதியார் எழுதிய முதல் கடிதம் முதல், குத்தி கேசவருக்கு எழுதிய கடிதம் வரை தொகுக்கப்பட்டுள்ளது.
கடித இலக்கியம் (நடை அழகு) - 7 ஆண்டு இளைய பரலி.சு.நெல்லையப்பரைத் தன் தம்பியாக நினைத்தவர் பாரதியார். பரலிசு. நெல்லையப்பர்:
விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர் மொழிப்பெயர்ப்பாளர், இதழாளர், பதிப்பாளர். - கண்ணன் பாட்டு, நாட்டுப்பாட்டு, பாப்பாப் பாட்டு, முரசுப் பாட்டு இவற்றைத் தொகுத்தவர்.
துணையாசிரியர் - சூரியோதயம், கர்மயோகி (பாரதியார் நடத்திய இதழ்) லோகோபகாரி, தேசபக்தன் -துணை ஆசிரியர் - பின் ஆசிரியர்.
நெல்லைத் தென்றல், பாரதி வாழ்த்து, உய்யும் வழி - கவிதை நூற்கள்.
வாழ்க்கை வரலாறு : வ.உ. சிதம்பரனார்
கவிகேசரி சாமி தீட்சிதர் - 1879 இல் வம்சமணி தீபிகை என்னும் நூலை வெளியிட்டார். இது எட்டயபுர மன்னர்களின் பரம்பரை வரலாறு அதில் தவறு - திருத்தம் செய்ய பாரதியாருக்கு ஆசை- 6. 8. 1919 - இல் வெங்கடேசுர எட்டப்பருக்குக் கடிதம் - ஆசை
நிறைவேறவில்லை. இந்நூலின் மறுபதிப்பு இளசை மணியால் 2008 இல் வெளிவந்தது.
பாரதியார் வெளிப்படுத்திய மொழிப்பற்று :
எப்போதும் தமிழை வளர்ப்பதைக் கடமையாக எண்ண வேண்டும்.
பிறமொழி அறிவது நல்லது. அவற்றின் மூலம் புதுமைகளை அறியலாம்.
அந்தப் புதுமைகளைத் தமிழ்ப் பத்திரிகைகளில் சேர்க்க வேண்டும்.
கண்கள் இருந்தும் கற்க இயலாத அறியாமை அகல வேண்டும். மக்களின் இழிநிலை மாற தமிழ்நாட்டில் தெருவெல்லாம் தமிழ்ப்பள்ளிகள் மலிய வேண்டும்.
நவீன கலையில் பயிற்சி வேண்டும்.
இசை, சிற்பம், இயற்கை, பூமி, வானம் இவற்றைப் பற்றிய நூற்களுடன் பலதுறை நூற்கள் தமிழில் தோன்ற வேண்டும்.
சமூகப்பற்று:
ஆண்கள் பெண்களை அடிமையாகக் கருத கூடாது.
ஆணும் பெண்ணும் ஓர் உயிரின் இரு தலைகள். அவை ஒன்றிலொன்று தாழ்வு இல்லை.
பெண்ணைத் தாழ்வாக எண்ணுபவன் கண்ணிணைக் குத்தியவனுக்குச் சமம். அறியாமையும் அச்சமும் நீங்கினால் அடிமைத் தனம் அகலும்.
மாணவர் செயல்பாடு:
பாடப்பகுதிகளை வாய்விட்டு வாசித்து பாடப்பொருளை உணர்ந்து, தமிழ் எல்லாவற்றை விடவும் உயர்ந்தது என்பதையும், சமூகத்தில் ஆணும் பெண்ணும் சமம். என்பதையும், இன்னும் தமிழ்மொழியை வளர்க வேண்டும் என்ற ஆர்வமும் கொண்டு சொந்தமாகத் தமிழின் சிறப்பினை எழுத வேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்பதை அறிந்து பாலின வேறுபாடு களைந்து. சமூகத்தில் உயர் பண்புள்ள மாணவனாக மாற வேண்டும்.
ஆசிரியர் கற்பித்துள்ள பாடப் பகுதிகளை உள்வாக்கி, கற்றல் பணியைச் சரிவர மேற்கொள்ளுதல். புரியாத பகுதிகள் இருப்பின் ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு கற்றல் வேண்டும்.
வலுவூட்டல் செயல்பாடுகள் :
தமிழ்மொழிக்கு நிகரானது ஒன்றும் இவ்வுலகில் இல்லை என்பதை உணர்த்திய தண்டியலங்காரப் பாடலின் பொருளை உணர்ந்த பின்னர் , வாழ்வியல் அறங்களைக் கூறும் தமிழ்மொழியின் இலக்கியங்களை வாசித்து அதில் கூறப்பட்டுள்ள தமிழின் இனிமை, எளிமை, செம்மை ஆகியவற்றைப் பல சான்றுகள் மூலம் மாணவன் புரிந்து கொள்ள வைக்க வேண்டும். உடலியல் ரீதியாக ஆணும் பெண்ணும் சமம் என்பதை புரிய வைத்தல்.
மதிப்பீடு :
LOT QUESTION
1. தண்டியலங்காரத்தின் ஆசிரியர் யார்?
2. பாரதியார் யாருக்கு தம்பி நெல்லையப்பர் என்ற கடிதத்தை எழுதினார்?
MOT QUESTION
1. பொருள் வேற்றுமைய பயணி என்றால் என்ன?
2. பாரதியார் வெளிப்படுத்தும் மொழிப்பற்று யாது?
HOT QUESTION
1. அணியிலக்கணத்தை மட்டும் கூறும் நூற்கள் யாவை?
2. பரலி.சு. நெல்லையப்பர் பணியாற்றிய இதழ்கள் யாவை?
குறைதீர் கற்றல்:
பாடப்பகுதியைப் புரிந்து கொள்ள இயலாத மெல்ல கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பகுதியில் அம்மாணவன் கடினமாகக் கருதுகின்ற, வேற்றமையணி, இலக்கணக்குறிப்பு, உறுப்பிலக்கணம், புணர்ச்சி விதி மற்றும் பாரதியார் கடிதத்தில் இடம் பெற்றுள்ள வடமொழிச் சொற்களைத் தகுந்த விளக்கங்கள் மூலம் புரிய வைத்தல்
வேண்டும். அவர்களைக் கொண்டே கரும்பலகையில் இலக்கணப் பகுதிகளுக்கான விடைகளைச் செய்ய தூண்டுதல் வேண்டும்.
தொடர்பணி:
மாணவர்களைச் சிறுசிறு குழுக்களாகப் பிரித்து தமிழின் சிறப்பினை உரையாடல் மூலம் கலந்துரையாடி எழுதி வர கூறுதல்.
பாரதியின் வாழ்வினைக் காலக் கோடாக உருவாக்க கூறுதல்.
பாரதியார் செய்துள்ள சமுக விடுதலைக் குறித்து அவரைப் பாராட்டிக் கற்பனை கடிதம் ஒன்றினை எழுத கூறுதல்.
குருசடி எம். ஏ. ஜெலஸ்டின்
முதுகலைத் தமிழாசிரியர்
98434480985
தமிழ் - 11 ஆம் வகுப்பு - பாடக் குறிப்பேடு - இயல் 1- உரைநடை- பேச்சுமொழியும் கவிதைமொழியும் -NOTES OF LESSON -DOWNLOAD HERE
12th Standard TAMIL QUESTION 2023 |12TH TAMIL PUBLIC STUDY MATERIAL (2023) |TWO MARK STUDY MATERIAL