11th Standard- +1Tamil - Tamil -Study Material - NOTES OF LESSON - தமிழ் - 11 ஆம் வகுப்பு - பாடக் குறிப்பேடு - இயல் 1- நன்னூல் -பாயிரம் - ஆறாம் திணை
நன்னூல் - பாயிரம்
பவணந்தி முனிவர்
ஆறாம் திணை
அ. முத்துலிங்கம்
NOTES OF LESSON ( பாடக் குறிப்பேடு )
வகுப்பு : XI குருசடி எம். ஏ. ஜெலஸ்டின்
பாடம் : தமிழ் முதுகலைத் தமிழாசிரியர்
நாள் : 98434480985
பருவம் : முதல் பருவம்
இயல் : 1
அலகு : செய்யுள் , துணைப்பாடம்
பாடத்தலைப்பு : செய்யுள் ( கவிதைப் பேழை )
நன்னூல் - பாயிரம்
பவணந்தி முனிவர்
துணைப்பாடம் (விரிவானம்)
ஆறாம் திணை
அ.முத்துலிங்கம்
பாடவேளை : 4
பக்க எண் : 9 முதல் 16 முடிய
கற்பித்தலின் நோக்கம்:
ஒரு சிறந்த நூல் என்பது எந்த எந்த பகுதிகளை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும் என்பதைப் புரிய வைத்தல்.
அணிந்துரை, புனைந்துரை, முன்னுரை இவைகளின் தேவையை உணர வைத்தல்.
உள்நாட்டுப் போரினாலும், இயற்கை அழிவுகளாலும் சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வேறு நாடுகளுக்குச் செல்லும் மனிதர்களின் வாழ்வியல் சிக்கல்களைப் புரிய வைத்தல்
ஆறாம் திணை என்றால் என்ன? என்பதைத் தெளிவுடன் விளக்கிக் கூறுதல்.
கற்றல் விளைவுகள்
நூற்களில் பாயிரம் பெறும் இடத்தையும் அதன் இன்றியமையாமையும் அறிதல்..
நூலில் அமையப்பெறும் முகவுரை, அணிந்துரை போன்ற வற்றை அறிந்துது நூலுக்கு அணிந்துரை எழுதும் திறன் பெறுதல்.
புலம் பெயர் வாழ்க்கைச் சூழலால் தமிழ்மொழி உலகெங்கும் பரவியுள்ளதைத் தெரிந்து கொள்ளுதல்
புலம் பெயர்பவர்களின் வாழ்க்கைச் சூழலை அறிந்து அவர்களின் மறுவாழ்விற்கு உரிய செயல்பாடுகளில் ஏற்ற உதவிகளைச் செய்தல்.
கற்பித்தல் திறன்கள் :
மாணவர்கள் பாடங்களைப் புரிந்து கொள்ள விரிவுரை திறன் மூலம் விளக்குதல்.
நூற்களில் இடம் பெறும் முன்னுரை, முகவுரை, அணிந்துரை போன்றவற்றை அறிய சிறந்த நூற்களை அறிமுகப்படுத்துதல் திறன் மூலம் வகுப்பில் மாணவர்களுக்குக் காட்டுதல்.
பனுவல் என்பது 'பாயிரம் இல்லாமல் இருத்தல் கூடாது என்பதை மாணவர்கள் அறிய பாயிரம் உள்ள, பாயிரம் இல்லாத நூற்களை எடுத்துக்காட்டி அவர்களுக்குத் தூண்டல் தொடங்குதல் திறன் மூலம் புரிய வைத்தல்.
கேள்விகள் கேட்டல் திறன் மூலம் புலம் பெயர்பவர்களின் வாழ்க்கை முறைகளைக் கேட்டறிந்து கற்பித்தல்.
புலம் பெயர்பவர்கள் பற்றிய செய்திகளைச் சேகரித்து மாணவர் அறிக்கைகள் தரும் திறன் மூலம் பாடத்தை எளிதாகப் புரிய வைத்தல்
கற்பித்தலில் நுண்திறன்கள்:
சரளமாக வினாக்களைக் கேட்டல்,
விரி சிந்தனையைத் தூண்டும் வினாக்களைக் கேட்டல்,
பல வகை தூண்டல்களை ஏற்படுத்தும் நுண்திறன்கள் மூலம் பாடப் பகுதியை மாணவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளும் விதத்தில் கற்பித்தல் வேண்டும். மேலும்,
திரும்பக் கூறவேண்டியவற்றைத் திட்டமிடல்,
பாடம் முடித்தல் ஆகிய நுண்திறன் மூலம் கற்பித்திருக்கும் பாடப்பகுதியை மாணவர்களின் மனதில் புரிய வைத்தல்.
ஆயத்தப்படுத்துதல் :
நூற்களில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் எவ்வாறு நூலின் (பவலின்) முகத்தில் (நூன் முகத்தில்) குறிப்பிடப்பட்டிருக்கும் என்பது குறித்து மாணவர்களிடையே உரையாடல் நடத்திக் கற்றல் சூழலை உருவாக்குதல்.
விளக்கக்காட்சிகள், புத்தகங்களைக் காட்டுதல், புலம் பெயர்த்தப்படும் வாழ்க்கைச் சூழல்கள் ஆகியவற்றை மாணவர்களுக்குக் கூறி பாடங்களைக் கற்கும் சூழலை உருவாக்குதல் வேண்டும்.
அறிமுகம் :
உனக்குத் தெரிந்த புத்தகத்தின் பெயர் என்ன? ஆசிரியர் பெயர் என்ன? நூலின் முன் பகுதியில் இடம் பெற்றுள்ள தலைப்புகள் என்ன? என்பதை மாணவர்கள் கூறவேண்டும் என்ற அடிப்படையில் சிறந்த புத்தகங்களை மாணவர்களிடம் கொடுத்துக் கேட்க வேண்டும்.
நமது அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள இன அரசியலால் பாதிப்பு அடைந்த தமிழர்களின் வாழ்க்கைச் சூழலைப் பற்றி மாணவர்களிடம் கேட்டு புலம் பெயர்பவர்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும்.
துணைக்கருவிகள்:
i) பாடம் தொடர்பான QR CODE காணொளிகள்
ii) பாயிரம் அமைந்துள்ள பழைய மாற்றும் புதிய பனுவல்கள்
iii ) இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் முகாமில் உள்ள சூழலை விளக்கும் காணொலி காட்சிகள்.
iv ) ஜூன் 20-ஆம் தேதி உலக புலம் பெயர்ந்தவர்கள் தினம் பற்றி காணொலி
கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
ஆசிரியர் செயல்பாடு
கற்பிக்க இருக்கும் பாடப்பகுதிகளான நன்னூல் - பாயிரம் மற்றும் ஆறாம் திணை பாடப்பகுதிகளை நன்றாகப் பொருள் புரியும் முறையில் பாடப் பொருளின் உட்பொருளைப் புரிந்து கொண்டு அதன் பிறகு கற்பிக்க இருக்கும் நன்னூல் பாடலை முதலில் வாய்விட்டு மாணவர்கள் புரியும் விதத்தில் தெளிவாக வாசித்தல் வேண்டும்.
நன்னூல் பாயிரம் பகுதியில் உள்ள மனப்பாடப் பாடலை ஏற்ற ஓசையுடன் இசையாகப் பாடி மாணவர்களுக்குப் புரிய வைத்தல் வேண்டும்.
பின்னர் மாணவர்களில் சிலரைப் பாடப்பகுதியை உரத்த குரவில் வாசிக்கக் கூறுதல் வேண்டும். அவ்வாறு பாடப்பகுதியை மாணவன் வாசிக்க தடுமாறினால் அவனுக்கு வாசிப்புப் பயிற்சி வழங்க வேண்டும். இதனால் வகுப்பில் இருக்கும் அனைத்து மாணவர்களும் எளிதாக வாசிக்கும் திறனைப் பெறுவார்கள்.
பாடப்பகுதிகள்
நன்னூல் - பாயிரம்
நன்னூலின் ஆசிரியர் - பவணந்திமுனிவர் நன்னூல் வழிநூல் - 2 அதிகாரங்கள் எழுத்ததிகாரம்
5 பகுதிகள், சொல்லதிகாரம் 5 பகுதிகள்.
சீயகங்கன் - சிற்றரசன் கேட்க எழுதப்பெற்றது.
பாயிரத்திற்கு உரிய முகவுரை, பதிகம், அணிந்துரை, புனைந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை ஆகிய எழு பெயர்களும் மற்றும் அதற்குரிய விளக்கம்.
முகவுரை - நூலின் முன் சொல்லுவது; பதிகம் - 5 பொது 11 சிறப்பு; அணிந்துரை , புனைந்துரை - நூலின் பெருமை; நூன்முகம் - நூலுக்கு முகம் போன்றது; புறவுரை - நூலின் புறந்தே சொல்வது;
தந்துரை - சொல்லாத பொருளைத் தந்து சொல்வது.
பாயிரத்தின் இருவகை - பொதுப் பாயிரம் ,சிறப்புப் பாயிரம்
பொதுப்பாயிரம் - நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை, ஆகிய ஐந்து..
சிறப்புப் பாயிரம் - நூலின் பெயர் பின்பற்றிய வழி வழங்கும் நிலப் பரப்பு, நூலின் பெயர், யாப்பு, கருத்து, கேட்போர், கற்பதனால் பெறும் பயன் ஆகிய எட்டுச்செய்திகள். - மேலும் காலம், அரங்கேற்றம், காரணம் ஆகிய பதினொன்று..
பல்வேறு துறை செய்திகளைக் கூறினாலும். பாயிரம் இல்லை என்றால் அது நூலாகாது. மாடங்களுக்கு ஓவியம்; மாநாகருக்குக் கோபுரம்; மகளிருக்கு அணிகலன்: -அழகைத் தரும். எல்லாவகை நூற்களுக்கும் அழகு தருவது அணிந்துரை.
ஆறாம் திணை (விரிவானம்)
அ.முத்துலிங்கம்
ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்தவர்களாகப் பிறநாடுகளில் தஞ்சம் புகுவதைக் காணொலிகள் மூலம் காட்டுதல் வேண்டும்.
பிற நாடுகளில் குடியேறும் ஈழத்தமிழர்களின் நிலையைப் பாடப்பகுதியில் காணப்படும் கனடா நாட்டின் நிகழ்வோடும் கதையில் வரும் இளைஞரின் வாழ்க்கை நிகழ்வுகளோடும் இணைத்துக் கூறுதல்.
அ.முத்துலிங்கம் அவர்களின் வாழ்க்கை அனுபவத்தைத் தொகுத்துக் கோர்வையாகக் கூறுதல்.
தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளைப் பட்டியலிடல்
புலம் பெயர்ந்த மக்கள் தமிழ்மொழியை உலக அரங்கில் நிலைநாட்டியுள்ளதை கனடா நாட்டின் தெருவிற்கும் அங்கு நடத்தப்படும் பத்திரிகைக்கும் சூட்டியுள்ள பெயர்களை எடுத்துக் கூறி புரிய வைத்தல்.
புலம் பெயர்ந்து சென்றுள்ள இலங்கை தமிழர்களின் வாழ்வியல் நடைமுறையையும், எதுவுமே தெரியாத ஒரு தேசத்தில் இரவு உணவும், இரவு துணியும் பெற்ற கதையின் ஆசிரியர் பெற்ற அனுபவத்தைக் கூறுதல்.
ஒவ்வொரு இடமாகப் பிரிந்து இருக்கும். அகதிகள் ஐவகை நிலப்பகுதியையும். -தாண்டி ஆறாவது
திணையாகப் பனியும் பனி சார்ந்த பகுதியில் இருப்பதைக் கூறுதல்.
மாணவர் செயல்பாடு
பாடப் பகுதிகளை வாய்விட்டு வாசித்தல். நூற்களின் முன்னுரை பெயர்களை அறிவதுடன் சில நூற்களுக்கு அணிந்துரை எழுத பயிற்சி மேற்கொள்ளுதல் வேண்டும்.
தமிழர்கள் புலம் பெயர்ந்துள்ள நாடுகளின் பட்டியலைத் தொடுத்தல் வகுப்பறையில் கூறுதல் வேண்டும். ஈழத்தில் இருந்து தமிழர்கள் புலம் பெயர்வதற்கான காரணத்தை மாணவர்கள் கலந்துதுரையாடல் மூலம் வெளிப்படுத்தல்.
வலுவூட்டல் செயல்பாடுகள்:
ஒரு சில நூற்களைக் கையில் கொடுத்து அதன் முகவுரை / நுன்முகம்/ அணிந்தரை இவற்றின்
வேறுபாடுகளைத் தெளிவுபடுத்துதல். புலம்பெயர்தவர்களின் வாழ்வியலில் உள்ள நெருடல்களான செய்திகளைக் கூறுதல் பாடப்பகுதிகளை மீள்பார்வை மூலம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டல். கடினமான பகுதிகளை மீண்டும் கற்பித்தல். எளிய வினாக்களைக் கேட்டுப் பாடப் பொருளை மாணவர் மனதில் பதிய வைத்தல், பல்வேறு சான்றுகள் கூறிக் கருத்துகளைப் புரிய வைத்தல்
குறைதீர் கற்றல்:
பாடப் பகுதியைப் புரிந்து கொள்ள முடியாத மெல்ல கற்கும் மாணவர்களுக்கு பாயிரத்தில் இடம் பெறும் பகுதிகள் குறித்தும் அணிந்துரையின் சிறப்புகள் பற்றியும், புலம் பெயரும் மனிதர்களின் வேதனையான வாழ்க்கைப் பற்றியும் தகுந்த விளக்கங்கள் மூலம் புரிய வைத்தல்.
மதிப்பீடு
LOT QUESTIONS.
i) பாயிரம் அல்லது ____________ அன்று.
2 ) ஆறாம் திணை சிறுகதையின் ஆசிரியர் யார்?
MOT QUESTIONS
1) பாயிரத்தின் வேறு பெயர்கள் யாவை?
2) ஆறாம் திணையென கட்டுரை ஆசிரியர் சுட்டுவது எதனை?
HOT QUESTIONS
1) பொதும் பாயிரம், அணிந்துரை குறிந்து எழுதுக
2) ஆறாம் திணை உணர்த்தும் கருத்தினை விவரி.
தொடர்பணி:
மாணவர்களைச் சிறசிறு குழுக்களாகப் பிரித்து உலக அளவில் அகதிகளின் நிலை பற்றிய செய்திகளைத் திரட்டி படத்தொகுப்பை உருவாக்க கூறுதல்.
எல்லா வகை நூற்களுக்கும் அழகு தருவது அணிந்துரையே என்பதை உறுதிபடுத்தும் விதமாக ஒப்படைவு ஒன்றினைத் தயாரித்தல்.
குருசடி எம். ஏ. ஜெலஸ்டின்
முதுகலைத் தமிழாசிரியர்
98434480985
NOTES OF LESON DOWNLOAD 👇👇👇👇👇👇👇
11th Standard| NOTES OF LESSON |தமிழ் |11 ஆம் வகுப்பு|பாடக் குறிப்பேடு | இயல் 1 நன்னூல் |பாயிரம் |ஆறாம் திணை- NOTES OF LESSON|DOWNLOAD HERE
12th Standard TAMIL QUESTION 2023 |12TH TAMIL PUBLIC STUDY MATERIAL (2023) |TWO MARK STUDY MATERIAL
