12th Standard- +2Tamil - Tamil -Study Material - NOTES OF LESSON - தமிழ் - 12 ஆம் வகுப்பு - பாடக் குறிப்பேடு - இயல் 1- இலக்கணம் - தமிழாய் எழுதுவோம் - மொழிப்பயிற்சி
இயல் - 1
தமிழாய் எழுதுவோம்
மொழிப்பயிற்சி
NOTES OF LESSON ( பாடக் குறிப்பேடு )
வகுப்பு : XII
பாடம் : தமிழ்
நாள் :
பருவம் : முதல் பருவம்
இயல் : 1
அலகு : இலக்கணம், மொழிப்பயிற்சி
பாடத்தலைப்பு :
இனிக்கும் இலக்கணம்
தமிழாய் எழுதுவோம்
மொழிப்பயிற்சி
i) சான்றோர் சித்திரம்
ii) தமிழாக்கம் தருக
iii) இலக்கிய நயம் பாராட்டல்
iv) பத்தியைப் படித்து வினா உருவாக்கல்
V) உவமைத் தொடரை வாக்கியத்தில் அமைத்தல்
vi) கட்டுரை எழுதுதல்
vii) எண்ணங்களை எழுத்தாக்குதல்
viii) அந்தாதித் தொடரால் கவித்துவமாக்கள்
ix) படிப்போம் பயன் படுத்துவோம் - கலைச் சொல் அறிதல்.
x) அறிவை விரிவு செய்தல்.
பாடவேளை : 4
பக்கம் : 14 முதல் 22 வரை
கற்பித்தலின் நோக்கங்கள்:
தமிழ் நாட்டில் பிறந்து, தாய்மொழியாகத் தமிழைக் கொண்டிருக்கும் நாம் பேசுவதிலும் எழுதுவதிலும் பிறமொழி கலப்பை அதிகமாகப் பயன்படுத்துகின்றோம். இதனைப் புரிய வைத்து தூயத்தமிழைப் பயன்படுத்த வைத்தல்.
மொழிப்பயிற்சிகளைப் பயன்படுத்திச் சிறந்த முறையில் தமிழ் எழுதப் பயிற்சிக் கொடுத்தல்
கற்றல் விளைவுகள்
மொழியின் அடிப்படை இலக்கணத்தை அறிந்து பிழையின்றி எழுதும் திறன் பெறுதல்.
தமிழ்மொழியின் சிறப்புகளை அறிந்து கொண்டு மொழிப்பயிற்சி வழியாகச் சிறந்த முறையில் தமிழ் எழுதவும்
தமிழாக்கம் செய்யவும்,
பாடலைப் படித்து நயம் பாராட்டும் திறனைப் பெறவும்,
உவமைத் தொடரை வாக்கியத்தில் அமைக்கும் திறனைப் பெறவும்,
படத்தைப் பார்த்து உணர்வுகளை எழுத்து வடிவம் ஆக்குதல் திறனைப் பெறவும் .
கலைச்சொல் தரும் பொருள் விளக்கங்களைப் பெறுதல் ஆகிய நோக்கங்கள் கற்றல் விளைவாக மாணவர்களுக்குக் கிடைக்கும்.
கற்பித்தல் திறன்கள்:
மாணவர்கள் பாடங்களைப் புரிந்து கொள்ள விரிவுரை திறன் மூலம் விளக்குதல்
தமிழின் எழுத்துகளை அறிமுகப்படுத்தல் திறன் மூலம் அறிமுகப்படுத்துல்
சில சொற்களைக் கூறி அது தமிழ்ச் சொல்லா? பிறமொழிச் சொல்லா? எனக் கேள்விக் கேட்டல் திறன் மூலம் புரிய வைத்தல்.
லகர, ளகர, ழகர சொற்கள் வரும்முறை குறித்து வகுப்பில் விவாதம் மூலம் விளக்குதல் திறன் மூலம் அறிய வைத்தல்.
தமிழ்த்துணை எழுத்துகளைக் குழுக்களுக்குள் விவாதம் உரையாடல் ஏற்படுத்தி விளக்குதல் திறன் மூலம் புரிய வைத்தல்.
பிழையான சொற்களும், அதற்குரிய சரியான சொற்களையும் மாணவர்கள் அறிக்கை மூலம் தயாரிக்கும் திறன் மூலம் அறிய வைத்தல்.
கற்பித்தலில் நுண்திறன்கள்:
பலவகை தூண்டல்கள் நுண்திறன் மூலம் மொழிப்பயிற்சிப் பகுதிகளைப் புரிய வைத்தல்
விரிசிந்தனையைத் தூண்டும் வினாக்கள்,
சிந்தனையைத் தூண்டும் வினாக்கள்,
சரளமாக வினாக்களைக் கேட்டல் ஆகிய நுண்திறன்கள் மூலம் கற்பித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், திரும்ப கூறவேண்டியவற்றைத் திட்டமிடல்,
பாடம் முடித்தல் ஆகிய நுண்திறன்கள் மூலம் கற்பித்திருக்கும் பாடப்பகுதியை மாணவர்களின் மனதில் புரிய வைத்தல்.
ஆயத்தப்படுத்துதல்.
சொற்களைக் கூறி அது தமிழ்ச்செல்லா? பிறமொழிச் சொல்லா? எனக் கண்டறிய செய்து, மாணவர்களிடையே உரையாடல் நடத்தி கற்றல் சூழலை உருவாக்குதல் வேண்டும்.
சில உவமைத் தொடர்களைக் கூறி அதனை வாக்கியத்தில் அமைக்கும் முறையும் அதன் உண்மையான பொருளையும் கூறி, பாடங்களைக் கற்கும் சூழலை உருவாக்குதல்.
எதுகை, மோனை, இயைபு, முரண், என்பவைப் பற்றிய கருத்துருக்களைக் கூறி மொழிப்பயிற்சியினைக் கற்கும் பகுதியை சூழலை உருவாக்குதல்
அறிமுகம்
சில சொற்களைக் கூறுக? மயங்கொலிச் சொற்களைக் கூறுக? உயிரெழுத்து. மெய்யெழுத்து என்றால் என்ன? பிழையான சொற்கள் மற்றும் பிறமொழிச் சொற்களைக் கூறுக? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டு மாணவர்களுக்குக் கற்றலில் ஆர்வத்தைக் கொடுக்க வேண்டும்.
சில ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப்பழமொழிகளைக் கூறி ஒப்புமையான பழமொழிகள் உள்ளதைப் புரிய வைத்தல். சில காட்சிகள் அடங்கிய நிழற்படங்களைக் காண்பித்து அந்நிழற்படங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கேட்டு கற்றலில் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும்.
துணைக்கருவிகள்
i) பாடம் தொடர்பான QR CODE காணொலிகள்
ii) ஒரு சில காட்சிப் படங்கள்
iii) லகர, ளகர, ழகர ஒலிப்புப் பயிற்சிக்கான தொடர்கள் எழுதிய அட்டைகள்
iv) தமிழ் எழுத்துகளும் அவற்றின் வகைகளும் குறித்த அட்டைகள்.
v) கலைச் சொல், மற்றும் அறிவை விரிவு செய் - PPT
கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
ஆசிரியர் செயல்பாடு
கற்பிக்க இருக்கும் பாடப்பகுதிகளான தமிழாய் எழுதுவோம் என்ற இலக்கணப் பகுதியையும் மொழிப்பயிற்சிகளையும் நன்றாகப் புரிந்துக் கொண்டு, பாடப்பகுதியின் உட்பொருளை அறிந்து கொண்டு, அதன் பிறகு கற்பிக்க இருக்கும் பாடப் பகுதியை மாணவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் வாய்விட்டுத் தெளிவாக வாசித்தல் வேண்டும்.
பாடப்பகுதிகளை மாணவர் வாசிக்க தூண்டுதல் வேண்டும். உரத்த குரலில் மாணவன் பாடப்பகுதியை வாசித்தல் வேண்டும். பாடப் பகுதியை மாணவன் வாசிக்க தடுமாறினால் அவனுக்கு வாசிப்புப் பயிற்சி வழங்க வேண்டும். இதனால் வகுப்பில் இருக்கும் அனைத்து" மாணவர்களும் எளிதாக வாசிக்கும் திறனைப் பெறுவார்கள்.
பாடப்பகுதிகள்.
தமிழாய் எழுதுவோம்.
எழுத்துப்பிழை. சொற்பிழை, சொற்றொடர் பிழை போன்றவற்றை உரிய சான்றுகளுடன் விளக்குதல்.
மொழியின் இயல்பை உணர்ந்தும் இலக்கண விதிகளை அறிந்தும்
கவனத் துடன் எழுதினால் பிழைகளைத் தவிர்க்க முடியும் என்பதைக் கரும்பலகை உதவியுடன் கற்பிக்க வேண்டும்
அடிப்படை செய்தியான எழுத்துகளின் வகைகளைக் காணொலி மூலம் கற்பித்தல் வேண்டும்.
மயங்கொலி எழுத்துகளால் ஏற்படும் பிழைகளை அறிய மயங்கொலி எழுத்துகளை அறியும் விதம் கரும்பலகையில் எழுதிக் கற்பித்தல் வேண்டும்.
மயங்கொலி எழுத்துகள்: ல, ள, ழ ; ர, ற ; ன, ண, ந
தொகைச்சொற்களில் ஏற்படும் பிழைகளை மாணவர்களிடம் சில சொற்களைக் கூறச் சொல்லி எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல் திறன் மூலம் கற்பித்தல் வேண்டும்.
என்னென்ன எழுத்துகள் மட்டுமே செல்லின் தொடக்கமாக, இடையில், இறுதியில் வரும் என்பதை விளக்கிக் கற்பித்தல்.
நிர்வாகம் > நிருவாகம் ; கர்மம் > கருமம் , கன்மம்
ஒரு, இரு - உயிர்வரின் > ஓர் , , ஈர்
உயிர்வரின் - அது, இது முறையே அஃது , இஃது .எனமாறும் என்பதைப் புரிய வைத்தல்
லகர, ளகர விதிகள் - வேற்றுமைப்புணர்ச்சி
கல் + சிலை > கற்சிலை
கடல்+கரை > கடற்கரை
மெல்லினம் : பல் + முகம் > பன்முகம்
அல்வழியில் - லகரம் அடுத்து தகரம் அல்+திணை > அஃ:றிணை ; பல்+துளி > பஃறுளி
இயக்குனர் என எழுதுவது தவறு ; இயக்குநர் என எழுதுவது சரி .
வினைகள் “ ந்” பெறும் ; பெயர்ச்சொல் 'இன்' சாரியைப் பெறும்.
தமிழில் ஏற்படக் கூடிய பொதுவான பிழைகளைச் சுட்டிக் காட்டுதல்.
மொழிப்பயிற்சி
சான்றோர் சித்திரம் தரும் செய்திகளையும் பத்தியைப் படித்துப் பொருளுணர்ந்து விடை எழுதும் திறனையும் பெறுதல்.
தமிழ்மொழிக்கு ஏற்ற ஆங்கிலப் பழமொழிகளை அறிவதோடு ஏற்ற முறையில் மொழிப்பெயர்க்கும் பயிற்சினைப் பெறுதல்.
தரப்பட்டுள்ள செய்யுளில் இருக்கும் எதுகை, மோனை, இயைபு, முரண், சந்த நயம், பொருள் நயம், அணிநயம் ஆகியவற்றை விளக்கிக் கற்பித்தல் திறன் மூலம் கற்பித்தல்.
உவமைத் தொடர்களைச் சரியான பொருளுடன் வாக்கியத்தில் அமைத்து எழுதும் முறையைக் கற்றுக் கொடுத்தல்.
தரப்பட்டுள்ள குறிப்புகளின் அடிப்படையில் சொந்தமாகக் கவிதைக்குரிய கருத்துருக்களைக் எழுத கற்றுக் கொடுத்தல்,
தரப்பட்டுள்ள சித்திரம் வெளிப்படுத்தும் எண்ண உணர்வுகளை எழுத்துகளாக்கும் முறையைத் கற்றுக் கொடுத்தல்.
அந்தாதித் தொடரமைப்பையும், அதை வைத்துக் கவிதை எழுதும் முறையையும் கற்றுக் கொடுத்தல்.
கலைச் சொல்லை அறிமுகப்படுத்திப் புரியவைத்தல்
மாணவர் செயல்பாடு
பாடப்பகுதிகளை வாய்விட்டு வாசித்தல்.
தமிழ் எழுதும் போது ஏற்படும் பிழைகளை அறிவதுடன் தமிழ்மொழியின் பழமையையும் அது ஒவ்வொரு இடங்களிலும் பயன்படுத்தப்பட்ட முறையையும் அறிந்து. வகுப்பறையிலும் ஏனையபொதுஇடங்களிலும் தமிழைப் பிழை இல்லாமல் கற்று எழுத வேண்டும்.
லகர, ளகர, விதிகளைப் பின்பற்றி தமிழை எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். மொழிப்பயிற்சிகளைப் புரிந்து மொழித் திறனை வாளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
வலுவூட்டல் செயல்பாடுகள்
இலக்கணப் பகுதியை உணர்ந்தால் மட்டுமே எழுத்துப் பிழைகளை மாணவர்கள் தவிர்ப்பர்கள் என்பதை உணர்ந்து,, பொதுவாக எழுதும்போது மாணவர்களுக்குத் தவறு ஏற்படும் பகுதிகளையும் அத்தவறுகளை எவ்வாறு சரிசெய்யவும் வேண்டும் என்பதைத் தகுந்த சான்றுகள் பல கூறிப் பாடப்பொருளை மாணவர் மனதில் பதிய வைத்தல்.
குறைதீர் கற்பித்தல்
பாடப்பகுதிகளைப் புரிந்து கொள்ள முடியாத மெல்ல கற்கும் மாணவர்களுக்குத் தமிழ் எழுதம் போது, பேசும் போது ஏற்படும் பிழைகள் குறித்த தெளிவான விளக்கங்களைத் தகுந்த சான்றுகளுடன் புரிய வைத்தல்.
மதிப்பீடு
LOT QUESTION:
1 ) உயிரெழுத்துகள் எத்தனை ? அவையாவை?
2 ) Fiction - என்பதன் கலைச் சொல் தருக.
MOT QUESTION:
1 ) அனுப்புநர், அனுப்புனர் இதில் எதுசரி ? ஏன் ?
2 ) தாமரை இலை நீர்போல - உவமையைத் தொடரில் அமைக்க
HOT QUESTION:
1) லகர, ளகர விதிகள் படி சொற்கள் இணைவதைச் சான்றுடன் விவரி
2) முச்சங்கங் கூட்டி - பாடலுக்கான செய்யுள் நயத்தில் ஏதேனும் மூன்று நயங்களை எழுதுக.
தொடர்பணி
1) மயங்கொலி எழுத்துகள் அமைந்த சொற்களைத் திரட்டி, பொருள் வேறுபாடு அறிந்து வகுப்பறையில்கலந்துரையாடல் நடத்துதல் .
2) ஒரு படத்தைக் கொடுத்து எண்ணங்களை . எழுத்தாக்கக் கூறுதல்.
குருசடி எம். ஏ. ஜெலஸ்டின்
முதுகலைத் தமிழாசிரியர்
98434480985
NOTES OF LESON DOWNLOAD 👇👇👇👇👇👇👇
12th Standard| Tamil |Study Material| NOTES OF LESSON | தமிழ் | 12 ஆம் வகுப்பு | பாடக் குறிப்பேடு | இயல் 1 | இலக்கணம் | தமிழாய் எழுதுவோம் |மொழிப்பயிற்சி | NOTES OF LESON | DOWNLOAD HERE|
12th Standard TAMIL QUESTION 2023 |12TH TAMIL PUBLIC STUDY MATERIAL (2023) |TWO MARK STUDY MATERIAL