கன்னயாகுமரி மாவட்டப் பொதுத் தேர்வுகள்
சிறு தேர்வு - 2 July 2025 வகுப்பு - 12
பொதுத் தமிழ் வினாத்தாள் Click Here
12T ST 2 A - July 2025 tamilamuthu2020official.blogspot.com
கன்னயாகுமரி மாவட்டப் பொதுத் தேர்வுகள்
சிறு தேர்வு - 2 July 2025
பொதுத் தமிழ்
வகுப்பு : 12 மதிப்பெண்கள் : 30
விடைகள்
விடை தருக 1 x 4 = 4
1. இ) மழைத்துளிகள்
2. ஈ) கூற்று சரி, காரணம் சரி
3. ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
4. அ) ஐப்பசி , கார்த்திகை
II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக 3 x 2 = 6
5.நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது'
மழை பெய்து ஓய்ந்த பின்பு நகரத்தில் இருந்த தூசுகள் அழிந்தன. சூரியன் திடீர் வருகையால் மழை மேகத்தால் மறைந்திருந்த நகரம் பிரகாசமாய்க் காட்சியளிக்கின்றது.
இன்னும் உறிஞ்சப்படாமல் இருக்கும் ஒரு சில மழைத் துளிகளின் மீது விழுகின்ற சூரியக் கதிர்களின் பிரதிபலிப்பால் நகரமே வெள்ளை வைரமாகக் காட்சியளிக்கின்றது.
6. நெடுநல்வாடை - பெயர்க்காரணம்
போருக்குச் சென்றிருக்கும் தலைவனைப் பிரிந்த தலைவிக்கு வாடைக்காற்று துன்ப மிகுதியைக் கொடுத்ததால் நெடுவாடை (நீண்ட வாடை) யாக இருந்தது.
போர்ப் பாசறையில் இருந்த தலைவனுக்கு வெற்றிபெற காரணமான நல்வாடையாகவும் இருப்பதால் ‘நெடுநல்வாடை’ என்னும் பெயர் பெற்றது.
7. இந்தோ-சாரசனிக் கட்டடக்கலை
முகலாயக் கட்டடக்கலை, பிரித்தானியக் கட்டடக்கலை (பிரிட்டன்) இந்தியப் பாரம்பரியக் கட்டிடப் பாணி இந்த மூன்றும் கலந்து உருவாக்கப்பட்டதே இந்தோ-சாரசக் கட்டடக்கலை எனப்படும்.
8. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு 1869-இல் உருவாக்கப்பட்ட இந்நூலகம் . இங்கு அரிய ஓலைச்சுவடிகள், தாள்சுவடிகள், புத்தகங்கள் எனப் பெரும் தொகுப்புகள் உள்ளன.
III. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை தருக 2 x 4 = 8
9. வாடைக்காலத்தில் கோவலர்கள்
வாடைக் காலத்தில் வலப்பக்கமாக எழுந்த மேகமானது உலகம் குளிரும் புதுமழையினைப் பொழிந்தது. இதனால் தாழ்வான பகுதியில் வெள்ளம் பெருகியது. வெள்ளத்தை விரும்பாத கோவலர்கள் தாங்கள் மேய விட்டிருந்த எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை மேடான நிலங்களுக்கு அழைத்துச் சென்று மேயவிட்டனர்.
கோவலர்கள் தாங்கள் பழகிய நிலப்பகுதியை விட்டுப் புது இடத்தை அடைந்ததால் வருத்தினர். தண்ணீர் தாழ்வான பகுதியை நிரப்பிவிடும் என்பதால் தங்களுக்கும், தங்கள் ஆநிரைகளுக்கும் பாதுகாப்பு வேண்டி மேடான பகுதிக்குச் சென்றனர். நீர்த் துளிகள் மேலே படுவதாலும், வாடைக் காற்றின் குளிர்ச்சி மிகுதியாலும் உடலுக்குச் சூடேற்ற பலருடன் சேர்ந்து, கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றினர்.
10.சென்னை 'அறிவின் நகரம்'
சென்னையில் 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய ஐரோப்பிய கல்வி முறையால் பல பள்ளிகளும் கல்லூரிகளும் தோன்றின.
1812இல் உருவான சென்னைக் கோட்டைக் கல்லூரி, 1837இல் தொடங்கப்பட்ட கிறித்தவக் கல்லூரி 1840இல் உருவான பிரசிடென்சி பள்ளி (பின்னாளில் மாநிலக் கல்லூரி) போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்கள் சென்னையின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றின.
பல்வேறு தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்கும் வேராக இருந்து 19ஆம் நூற்றாண்டின் அறிவுப் புரட்சியில் பெரும்பங்காற்றிய சென்னைப் பல்கலைக்கழகம் 1857ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
1914இல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட இராணிமேரி கல்லூரி பெண்கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனம் ஆகும்.
அவற்றுடன் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளும் மருத்துவக் கல்லூரிகளும் கவின் கலை கல்லூரிகளும் அமைந்துள்ளன. இவ்வகையில் பல பள்ளிகளும் கல்லூரிகளும் பொறியியல் கல்லூரிகளும் இருப்பதால் சென்னை மாநகரம் அறிவின் நகரமாக விளங்குகிறது.
11.நாட்டுப்புறப்பாடல்
'தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரவன்" - இரவு முழுவதும் மூங்கில் இலைமேலே தூங்கிக் கொண்டிருந்த பனி நீரானது, காலைக் கதிரவனின் ஒளிக்கதிரால் உறிஞ்சப்படுகிறது.
பிறகொருநாள் கோடை
கவிஞர் அய்யப்ப மாதவனின் கவிதையில் இடம்பெறும் "நீர் நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்" என்ற பாடல் வரிகள் மழை பெய்ததால் நீர்நிலையில் இருக்கும் நீரினை சூரியன் ஒளிக்கதிர் என்னும் உதடுகளால் உறிஞ்சுகிறான்.
நாட்டுப்புறப்பாடலின் தொடர்ச்சி
சூரியனின் செயல்பாட்டை நாட்டுப்புறப்பாடலில் இருந்து எடுத்துக்கொண்ட கவிஞர் சூரியனின் ஒளிக்கதிர்கள் இதழ்கள் போலச் செயல்பட்டு நீர்நிலை நீரினை உறிஞ்சுகின்றன என்கிறார்.
சூரியனால் நீர்த்துளிகள் ஆவியாகி மேலே செல்கின்றன என்ற அறிவியல் கருத்தை நாட்டுப்புறப்பாடல் வரி 'கதிரவன் வாங்கினான்' என்று நயம்படக் கூறுகிறது. 'பிறகொரு நாள் கோடை' என்ற கவிதையில் இடம்பெறும் பாடல் வரி 'ஒளிக்கதிர்களால் உறிஞ்சினான்" என்று நயம்படக் கூறுகிறது.
IV. எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை தருக 4 x 2 = 8
12.கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதுக.
விண்மீன் ஒளிர்ந்தது. எரிநட்சத்திரம் விழுந்தது.
13.மயங்கொலிச் சொற்களை ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
கார்ப் பருவத்தில் நன்றாக விளைந்ததால் தானியங்களின் விலை குறையாமல் இருக்க ஏற்றுமதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விழைவதாக அரசு அறிவித்தது.
( அல்லது )
விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை அதிக விலைக்கு விற்க விழைந்தனர் .
14. கலைச் சொல் தருக.
அ) Archive - ஆவணக்காப்பகம் ஆ) Software- மென்பொருள்
15. உறுப்பிலக்கணம் தருக.
கலங்கி - கலங்கு + இ
கலங்கு - பகுதி
இ - வினையெச்ச விகுதி
16.புணர்ச்சி விதி தருக ( ஒன்றனுக்கு)
அ) புதுப்பெயல் = புதுமை + பெயல்
விதி: 'ஈறுபோதல்' - புது + பெயல்
விதி : ‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’ - புதுப்பெயல்
ஆ) இனநிரை = இனம் + நிரை
விதி : ‘மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்’ -இனநிரை
V. அடிபிறழாமல் எழுதுக. 4
மாமேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை
கன்றுகோள் ஒழியக் கடிய வீசிக்
குன்று குளிர்ப்பன்ன கூதிர்ப் பானாள்.
குருசடி எம்.ஏ. ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
Click Here to download the document.