12T - திணை /துறை இயல் 2
வாகைத் திணையைச் சான்றுடன் விளக்குக.
திணை விளக்கம்:
வெற்றி பெற்ற அரசனும் அவனது வீரர்களும் வெற்றியின் அடையாளமாக வாகைப்பூவைச் சூடி வெற்றியைக் கொண்டாடுவது வாகைத் திணை ஆகும்.
சான்று:
“வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்” எனத் தொடங்கும் நக்கீரர் எழுதிய நெடுநல்வாடைப் பாடல்
திணைப் பொருத்தம்:
வாடைக் காலத்தில் இவ்வுலகம் குளிரும்படி மழை பெய்தது. வாடைக் காற்றின் குளிர்ச்சியினால் ஆயர்கள் கொள்ளி நெருப்பின் மேல் கைகளை நீட்டிக் குளிரினைப் போக்கினர். அத்தகைய குளிர்ச்சியான நேரத்தில் மன்னனும் கூதிர்பாசறையில் அமர்ந்து தன் வெற்றியைத் தனது வீர்ர்களுடன் கொண்டாடினான் என்பதால் இப்பாடல் வாகைத் திணையைச் சார்ந்ததாகும்.
'கூதிர்ப்பாசறை துறையைச் சான்றுடன் விளக்குக.
துறை விளக்கம்:
கூதிர்ப்பாசறை என்பது, போர் மேற்சென்ற அரசன் குளிர்காலத்தில் தங்கும் படை வீடாகும். (இங்கிருந்து அரசன் எதிரிகளை அழிக்கும் திட்டங்களை அமைச்சர்களுடன் ஆலாசித்து முடிவெடுப்பான்)
சான்று:
“வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்’...... எனத் தொடங்கும் நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை பாடல்.
துறைப் பொருத்தம்:
வாடைக் காலத்தில் மன்னன் கூதிர்ப்பாசறையில் அமர்ந்து தனது வீர்ர்களுடன் அந்த நாள் போரின் வெற்றியைக் கொண்டாடியப் பின் அடுத்த நாள் போருக்குரிய திட்டங்களைக் கூதிர்பாசறையில் ஆலோசித்துக் கொண்டிருந்ததால் இப்பாடல் கூதிர்ப் பாசறைத் துறையைச் சார்ந்ததாகும்.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
Click Here to download the document.