12 /இயல் 2 -அலகுத் தேர்வு 12 - /2 UT/25
ஜூலை மாதத் தேர்வு
பாடம் : தமிழ் வகுப்பு : 12
நேரம் : 1.30 மணி மதிப்பெண் : 50
சரியான விடையைத் தேர்வு செய்க. 10 x 1=10
1."நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது" என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது-
அ) சூரிய ஒளிக்கதிர்
ஆ) மழை மேகங்கள்
இ) மழைத்துளிகள்
ஈ)நீர்நிலைகள்
2. சென்னை வெறும் நகரம் மட்டுமன்று. அது நம்பிக்கை மையம் காரணம்
அ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம்
ஆ) மென்பொருள். வன்பொருள், வாகன உற்பத்தியில் பங்கு
இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை
ஈ) அ.ஆ, இ அனைத்தும்
3. இந்தியாவின் முதல் பொது நூலகம்
அ) கீழ்திசைச் சுவடிகள் நூலகம்
ஆ) அண்ணா நூற்றாண்டு நூலகம்
இ) மறைமலையடிகள் நூலகம்
ஈ) கன்னிமாரா நூலகம்
4.தாலமி என்பவரால் 'மல்லியர்பா' என்று சுட்டிக்காட்டப்பட்ட துறைமுகம் 4.
அ) மயிலாப்பூர்
ஆ) திருவல்லிக்கேணி
இ) மகாபலிபுரம்
ஈ) அடையாறு
5. ‘நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து
உறிஞ்சுகிறது ஒளிக்கதிர்கள்’ என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள கவிதை நூல்
அ) மழைக்குப் பிறகு மழை
ஆ) நானென்பது வேறொருவன்
இ) பிறகொரு நாள் கோடை
ஈ) நீர்வெளி
6. பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பைத் தேர்க.
அ) வினைத்தொகை
ஆ) உரிச்சொல் தொடர்
இ) இடைச்சொல் தொடர்
ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
7. வெள்ளம் என்று பொருள் தரும் சொல்
அ) பனிப்ப
ஆ) ஏறுடை
இ) நீடுஇதழ்
ஈ) ஆர்கலி
8. இந்தோ-சாரசனிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்ட முதல் கட்டடம்
அ) பொது அஞ்சல் அலுவலகம்
ஆ) மத்தியத் தொடர்வண்டி நிலையம்
இ) சென்னைப் பல்கலைக்கழகம்
ஈ) சேப்பாக்கம் அரண்மனை
9. 'ஞாலம்' என்பதன் பொருள்
அ) முகமலர்ச்சி
ஆ) ஆகாயம்
இ) உலகம்
ஈ) அறம்
10. இருதிணைக்கும் பொதுவாக வரும் சொற்கள்
அ) குழந்தை, கதிரவன்
ஆ) மரம், மனிதர்கள்
இ) சீதா,இராமன்
ஈ) நாம், நாங்கள்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க 2 × 2 = 4
11. நகரம் பட்டை தீட்டிய வெள்ளை வைரமாகிறது' விளக்கம் தருக.
12. குளிர்காலத்தில் பறவைகளும் விலங்குகளும் எவ்வாறு நடுங்கியதாக நெடுநல்வாடை கூறுகிறது?
13. மறக்க கூடாதது, மறக்க கூடியது எவற்றை ?
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. 2 x 2 = 4
14. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
15. சென்னையை லங்கரித்த ஆறுகளை எழுதுக.
16. இந்தோ- சாரசனிக் கட்டடக்கலை என்றால் என்ன ? சான்று தருக.
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. 2 x 2 = 4
17. பகுபத உறுப்பிலக்கணம் தருக
கலங்கி
18. கீழ்க்காணும் நான்கு சொற்களைக் கொண்டு தொடர் எழுதுக.
விண்மீன், ஒளிர், எரி, விழு
19. கலைச்சொல் தருக
அ) Software ஆ) Archive
மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க 3 x 4 = 12
20. 'கூதிர்ப் பாசறை' துறைக்குச் சான்று தந்து விளக்குக.
21. கீழ்க்காணும் குறளில் ஏகதேச உருவக அணி எவ்வாறு பயின்று வருகிறது என்பதை விளக்குக.
"சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்வி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்"
22. நீர்நிலைகளிலிருந்து உதடுகள் குவித்து உறிஞ்சுகின்றன ஒளிக்கதிர்கள்" இக்கவிதையின் அடி, தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே" என்னும் நாட்டுப்புறப் பாடலின் தொடர்ச்சியாய் அமைவதைப் பற்றி எழுதுக.
23. எவற்றையெல்லாம் விட நன்றி உயர்ந்தது? - குறள் வழி விளக்குக.
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. 2 x 6 = 12
24. நீங்கள் வியந்து பார்த்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
25. நெடுநல்வாடையில் நக்கீரர் காட்டும் மழைக்கால வருணனையைத் தொகுத்து எழுதுக.
26. முதல் கல் கதையில் வரும் மருதனின் பண்பு நலன்களை விவரிக்க.
அடிபிறழாமல் எழுதுக. 4
27. 'மாமேயல்' எனத் தொடங்கும் நெடுநல்வாடை' பாடலை அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
Click Here to download the document.