ஜூலை 2025, 2 ஆவது வாரம் - பாடக்குறிப்பு
வகுப்பு : 11
பாடம் : தமிழ்
நாள் : ஜூலை 2 ஆவது வாரம்
பருவம் : முதல்பருவம்
இயல் : 2 ( மாமழைப் பேற்றுதும் )
அலகு : i ) கவிதைப் பேழை
பாடத்தலைப்பு :
i ) கவிதைப் பேழை
அ) ஐங்குறுநூறு - பேயனார்
ஆ) மனோன்மணீயம் - பெ. சுந்தரனார்
பாடவேளை : 4
பக்க எண் : 26 முதல் 30 வரை
கற்பித்தல் நோக்கங்கள்
1. இயற்கை மனிதனுக்கு உதவுவதையும் உணர்த்துவதையும் இலக்கியம் வழி அறிந்து மதிப்பளிக்கக் கற்றுக் கொடுத்தல்.
2.மரபுச் செய்யுளான ஐங்குறுநூறு கூறும் கருத்துகளை அறிய வைத்தல்.
3. சங்ககால தலைவன் தலைவியின் இல்லற வாழ்னின் மாண்பினை விளங்க வைத்தல்.
4. நாடகத் தமிழ் வழியாகத் தமிழ்மொழியின் சிறப்பை அறிய வைத்த ஆசிரியர் பெ.சுந்தரனார் இயற்கை காட்சிகளைப் பற்றி விளக்குவதை அறியவைத்தல்.
சிறப்பு நோக்கங்கள்
1. தலைவன் பொருள் ஈட்ட பிரிந்து செல்வும் நிகழ்வினை விளக்கிப் புரிய வைத்தல்.
2.சங்ககால மக்களின் வாழ்வோடு இயற்கை ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்திருப்பதை அறிய வைத்தல்.
3. முல்லை நிலம், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை அறிந்து கொள்ளுதல்.
4. கிழவன் பருவம் பாராட்டும் பத்து பற்றிய செய்திகளை அறிய வைத்தல்.
5.முல்லை நில மலர்கள் பற்றி அறிதல்.
6. மனோன்மணீயம் கூறும் புல்லின் பரிவு பற்றிய செய்திகளைப் புரிய வைத்தல்
7. மண்புழு விவசாயத்திற்குச் செய்துவரும் செயல்பாடுகளை மனோன்மணீயம் பாடல் முலம் புரிய வைத்தல்.
கற்பித்தல் திறன்கள்
1. பாடப்பகுதிகளை அறிமுகப்படுத்தல் திறன்
2.விரிவுரை
3. எடுத்துக்காட்டு மூலம் விளக்குதல்
4. கேள்விகள் கேட்டல்
5. அறிக்கைகள் மூலம் விளக்குதல்
6. காட்சிப்படுத்துதல்
7.வலுவூட்டும் செயல்பாடுகள் மூலம் விளக்குதல்
8. சிக்கவற்ற மற்றும் சுருக்கமான பாட இலக்கை அடைதல்
ஆகிய கற்பித்தல் திறன்கள் லேம் பாடப் பகுதியான ஐங்குறுநூறு , மனோன்மணீயம் பாடப்பகுதியின் கருத்துருக்கு எந்தெந்தத் தறன்கள் பொருந்துகிறதோ அந்தந்தத் திறன்களைப் பயன்படுத்தி மாணவர் களுக்குக் கற்பித்தல் வேண்டும்.
கற்பித்தல் நுண்திறன்கள்
1. பல்வகை துண்டும் வினாக்களைக் கேட்டல்
2. சரளமாக வினாக்களைக் கேட்டல்
3. விரிச்சிந்தனையைத் தூண்டும் வினாக்களைக் கேட்டல்
4. தகவல் பரிமாற்றத்தை நிறைவு செய்தல்.
5. பாடம் முடித்தல்.
ஆகிய நுண்திறன்கள் மூலம் பாடப் பகுதியின் நுட்பமான பொருளை மாணவர்களுக்குக் கற்பித்தல் வேண்டும்.
பல்வகைத் தூண்டும் வினாக்களைக் கேட்பதன் மூலம் தமிழ்மொழியின் சங்க
இலக்கியத்தின் ஐங்குறுநூறு -பாடலில் குறிப்பிடப்படும் முல்லை நிலம் பற்றிய செய்திகள், மனோன்மணீயம் குறிப்பிடும் புல் மற்றும் மண்புழு இவற்றின் செயல்பாடுகளைக் கேட்டறிதல்.
விரிச்சிந்தனையைத் துண்டும் வினாக்கள் மூலம் கார்காலத்தில் மலரும் பூக்கள், முல்லை நிலத்திற்கு உரிய மலர்கள், புல் தன் இனத்தை எவ்வாறு பெருக்குகிறது என்பவற்றைக் கேட்டல்.
சரளமாக வினாக்களைக் கேட்பதன் மூலம் தலைவன் தலைவியிடம் இருந்த அன்பு, சங்க காலத்தில் தமிழர்கள் இயற்கையுடன் கொண்டிருந்த தொடர்பு, மண்புழுவின் செயல்பாடுகள் போன்ற செய்திகளை அறிய வைத்தல்.
மேலும் எந்தெந்த நுண்திறன்கள் எந்தெந்தப் பாடப்பகுதிக்குப் பொருந்துமோ அந்தந்த நுண்திறன்களைப் பயன்படுத்தியும், திரும்பு கூற வேண்டியவற்றைத் திட்டமிட்டுப் பாடத்தை முடித்தல் வேண்டும் .
ஆயத்தப்படுத்தல்
1. பெரும்பொழுது ஆறினையும் கூறி, அதில் முல்லை நிலத்திற்கு உரிய பெரும்பொழுதான கார்காலம் பற்றியும் கார்காலத்தில் பூக்கும் பூக்கள் பற்றியும் முல்லை நிலக் கருப்பொருளில் பூ, மரம் பற்றி பல்வேறு சான்றுகளுடன் விளக்குதல்.
2. நடராசன் புல்லின் பரிவு பற்றி பேசுவதையும், நாங்கூழ்புமு மண்ணுக்குச் செய்யும் நல்ல செயல்களையும் குறிக்கும் செய்திகளைக் காட்சிப் படுத்திக் காட்டுதல்.
3. ஐங்குறுநூலின் பிரிவுகள் மற்றும் பாடியப் புலவர்கள் பற்றியும், புல்லானது தனது இனத்தை எவ்வாறு பரப்புகிறது என்பன போன்ற பல்வேறு தகவல்கள் கூறுதல் திறன் மூலம் கூறுதல்
அறிமுகம்
பாடப்பகுதியை மாணவர்கள் புரிந்து கொள்ள எந்தெந்தக் கற்பித்தல் திறன்கள் மற்றும் கற்பித்தல் நுண்திறன்கள் எந்தெந்தப் பாடப்பகுதிக்குப் பொருந்துகிறதோ அந்தத்தத் திறன்களின் அடிப்படையில் பாடத்தின் கருத்துகளை அறிமுகம் செய்து வைத்தல் வேண்டும். இச்செயல்பாடு மாணவர்களிடம் கற்கும் ஆர்வத்தை அதிகமாக்கும் .
ஆர்வமூட்டல்
1.முல்லை நிலத்தில் பூக்கும் பூக்களின் பெயர்களைக் கேட்டல்.
2. முல்லைநிலப் பகுதியின் தன்மைகளைக் கேட்டல்
3. இல்லற வாழ்வின் மேன்மைப் பற்றி கலந்துரையாடல் நடத்துதல்.
4. ‘புல்’ எவ்வாறு தனது இனத்தைப் பரப்புகிறது என்பது பற்றிக் கேட்டல்
5. மண்புழுவைப் பார்த்துள்ளீர்களா? அதன் வாழ்க்கை முறை பற்றிக் கேட்டல்
6. மண்புழு நிலத்திற்குச் செய்யும் நன்மைப் பற்றிக் கலந்துரையாடல் நடத்துதல்
துணைக்கருவிகள்
1. பாடம் தொடர்பான காணொலிகள்.
2. முல்லை நிலத்தில் மழை பெய்யும் காணொலி.
3 முல்லை நிலப் பூக்களின் படம்.
4. ஐங்குறுநூறு பாடல் PPT
5.’புல்’ காணொலி
6.’புல்’ இனத்தைப் பெருக்கும் காணொகி
7. மண்புழுவின் செயல்பாட்டை விளக்கும் காணொலி
8. மனோன்மணீயம் பாடம் PPT
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
பாடப்பொருள்.
ஐங்குறு நூறு -பேயனார்
* ஐந்து +குறு+நூறு = ஐங்குறுநூறு - 6அடி பேரெல்லை. அகவல் பா -குறிஞ்சி -கபிலர்; முல்லை - பேயனார்; மருதம்- ஓரம்போகியார்; நெய்தல். அம்மூவனார்; பாலை - ஓதலாந்தையார்
*கிழவன் பருவம் பாராட்டும் பத்து - பொருளீட்ட சென்ற தலைவன் அவன் தான் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்ற காலத்திற்கு முன்னரே வீட்டிற்குத் திரும்புகிறான்- தான் வீட்டிற்கு வந்ததை உணர்ந்த நினைக்கின்றான்.
* பெரிய அழகிய கண்களை உடையவளே! அழகிய மாலை நேரத்தில் (முல்லை நிலத்தில் காயா, கொன்றை, நெய்தல் முல்லை, செம்முல்லை, பிடவம் ஆகிய மலர்கள் பூத்திருக்கின்றன - அப்பூக்களைப் பார்த்து மகிழ்ந்து ஆட விரைந்து வா!
இலக்கணக் குறிப்பு
ஆல் - அசைநிலை
கண்ணி - அண்மை விளிச்சொல்
ஆடுகம் தன்மைப் பன்மை வினைமுற்று
உறுப்பிலக்கணம்
அலர்ந்து - அலர்+த்(ந்)+த்+உ
அலர் - பகுதி
த் - சந்தி, ந் ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச வகுதி
மனோன்மணீயம்
பெ.சுந்தரனார்
*தமிழின் முதல் பா வடிவு நாடாக நூல் .லிட்டன் பிரபு - இரகசிய வழி- பேராசிரியர் பெ. சுந்தரனார் 5 அங்கம் - இருபது களம் -கடவுள் வாழ்த்து, தமிழ்த் தாய் வாழ்த்து
பெ. சுந்தரனார் - திருவிதாங்கூர்- ஆலப்புழை - 1855 பிறந்தார் -தத்துவப் பேராசிரியர் - ராவ்பகதூர் பட்டம்- இவர் பெயரால் பல்கலைக் கழகம் உள்ளது.
* தமிழ் நாடக இலக்கண நூல்கள்: அகத்தியம், குணநூல், கூத்தநூல், சந்தம் ,சயந்தம், செயன்முறை, செயிற்றியம், முறுவல், மதிவாணனார் நாடகத் தமிழ்நூல், நாடகவியல்
* சுந்தர முனிவர் -சுரங்கம் அமைத்தல்.
மூன்றாம் அங்கம், இரண்டாம் களம்
*வேலை இன்று முடியும் வேலை முடிக்க இலக்கு வேண்டும் - உயிர்க்கு அது தூண்டுகோல் புல்லின் பரிவு
*சிறிய புல்குலை - தேன்துளி தாங்கி- ஈக்களை அழைத்து -தனது பூம்பராகம் பரப்பி - சிறுகாய் தூசிடைச் சிக்கும் - தோட்டி - தழைப்பதற்கு இடமில்லை-பிழைக்க வேறுஇடம் செல்லுங்கள். பறவை, கால்நடை, எருது, ஆடு ,குதிரை இவற்றின் மூலம் பல இடங்களுக்குச் செல்லுங்கள் நாங்கூழ்ப் புழுவின் பொதுநலம்
* உழவோர்க்கு நீயே அரசன்- எந்த மண்ணையும் நல்ல மண் ஆக்குவாய்- இதற்காகத் தான் பிறந்தாயோ- மண்ணை மெழுகாக்கி- சேராய் மாற்றி- புகழை விரும்பாமல்- குழிக்குள் ஒளிக்கின்றாய்- உலகில் உள்ள எல்லா உயிர்களும் பிழைக்க உழைக்கும் நீ புகழை விரும்பவில்லை.
*இப்பாடப்பகுதியில் உள்ள இலக்கணக்குறிப்பு, உறுப்பிலக்கணம் ஆகிய இலக்கணப் பகுதிகளை விளக்கமாகக் கற்பித்தல்.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
ஆசிரியர் செயல்பாடுகள்
ஆசிரியர் பாடப்பகுதியின் அனைத்து உட்பொருளையும் புரிந்து கொண்டு,
மாணவர்களுக்குப் புரியும் விதத்தில் கற்பித்தல் திறன்கள், கற்பித்தல் நுண்திறன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பாடப் பகுதியின் அனைத்துக் கருந்துருக்களையும் மாணவர்கள் புரியும் விதத்தில் விளக்கிக் கற்பித்தல் வேண்டும். கற்பிக்க இருக்கும் பாடம் பகுதிகளை மாணவர்கள் வாசிக்க கூறுதல் வேண்டும்.
மாணவர்களுக்குப் பாடப்பகுதியில் ஏதேனும் ஐயங்கள் ஏற்பட்டால் அவர்களது ஐயங்கள் முழுமையாகத் தீரும் அளவிற்குக் கற்பித்தல் வேண்டும்
பாடப்பகுதியில் இருந்து சிறு சிறு கேள்விகள் கேட்டல் வேண்டும். பாடம் நிறைவுற்றதும் வகுப்புத் தேர்வு நடத்துதல்
மாணவர் செயல்பாடுகள்
1.பாடப்பகுதியை வாய்விட்டு வாசித்துப் பழகுதல்.
2. வகுப்பறையில் ஆசிரியர் கூறும் பாடப் பகுதியை வாய்விட்டு வாசித்தல்.
3. பாடம் தொடர்பான செய்திகளைச் சேகரித்துப் பாடத்தின் கருத்துகளைப் புரிந்து கொள்ளுதல்.
4. ஐங்குறுநூறு பாடலில் வரும் பூக்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
5. மனோன்மணீயம் நூலில் வரும் மண்புழுவின் வாழ்க்கை சுழற்சியைத் தெரிந்து கொள்ளுதல்.
6. ஆசிரியர் கற்பிக்கும் பாடப்பாகுதியில் ஏதேனும் ஐயங்கள் ஏற்பட்டால் கேட்டுத் தெளிவடைதல்
7. ஆசிரியர் தரும் பாடம் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் குழு செயல்பாடுகளில் முழுமையாகப் பங்கேற்றல் .
8. பாடம் தொடர்பான காணொலிகளைக் கவனம் சிதறாமல் பார்த்துப் பாடப் பகுதிகளைப் புரிந்து கொள்ளுதல்.
வலுவூட்டும் செயல்பாடுகள்
1.ஐங்குறுநூறு பாடலில் கூறப்பட்டுள்ள முல்லைத் திணையின் கருப்பொருள் மற்றும் மழைக்கால மலர்கள் பற்றியும், தலைவன் கார்காலத்திற்கு முன்பே வந்து தலைவியைச் சந்தித்ததுப் பற்றியுமான நிகழ்வுகளைப் பொருத்தமான திறன்கள் மூலம் கற்பித்தல்.
2.மனோன்மணீயம் நாடக நூலில் குறிப்பிடப்பட்டுள்ள புல்லின் பரிவையும், நாங்கூழ் புழுவின் அன்றாட வாழ்க்கை முறையையும் மாணவர்கள் புரியும் விதத்தில் தக்க சான்றுகள் மற்றும் நிகழ்வுகள் மூலம் விளக்குதல்.
3. ஐங்குற்நூறு மற்றும் மனோன்மணீயம் பாடப்பகுதியில் உள்ள இலக்கணக் குறிப்பு,
உறுப்பிலக்கணம் ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்திக் கரும்பலகையின் உதவியுடன் கற்பித்தல்
குறைதீர் கற்பித்தல்
பாடப்பகுதியின் உட்பொருளைப் புரிந்து கொள்ளும் திறன் குறைந்த மெல்ல கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பகுதியின் நோக்கம் புரியும் விதத்தில் முல்லை நிலத்தின் கருப்பொருள், மழைக்கால மலர்கள், பெரும்பொழுது, சிறுபொழுது, கிழவன் பருவம் பாராட்டும் பத்து, தலைவனின் கூற்று மற்றும் மனோன்மணீயம் பாடப்பகுதியில் நடராசனின் தனிமொழி, இலக்கை அடைய மேற்கொள்ளும் திட்டம், புல்லானது தனது இனத்தைப் பரப்பும் விதம், மண்புழுவின் செயல்பாடுகள் பற்றியும் மீண்டும் மீண்டும் பல்வேறு கற்பித்தல் திறன்களைப் பயன்படுத்தியும், துணைக்கருவிகள் மற்றும் மீள்பார்வை மூலம் புரிய வைத்தல் வேண்டும்.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
கற்றல் விளைவுகள்
1.நிலங்களின் கருப்பொருள்களை அறிவதன் மூலம் ஒவ்வொரு நிலத்தின் கருப்பொருள்களைத் தெரிந்து இனம் கண்டு அவற்றைப் பற்றிய அறிவைப் பெற்று அப்பொருள்ளைப் பாதுகாத்தல்.
2. கார்காலத்தில் பூக்கும் பூக்களின் வகைகளை அறிவதன் மூலம் ஒவ்வொரு பருவங்களிலும் பூக்கும் பூக்களின் வகைகளை அறிதல்.
3. பண்டைய தமிழர்கள் பருவங்களைப் பயன்படுத்திய முறையை அறிந்து ஒவ்வொரு பருவங்களிலும் வாழ்வதற்கு உரிய சூழலை உணரல்.
4. வாழ்க்கையில் இலக்கு வேண்டும் என்பதை நடராசனின் செயல்பாட்டின் மூலம் அறிவதன் வழியாக வாழ்வில் குறிக்கோளுடன் வாழ்தல்.
5. 'புல்' பரிவுடன் தன் இனத்தைப் பரப்புவதை அறிவதன் மூலம் உலகில் பிறந்துள்ள அனைவரும் பரிவுடன் வாழவேண்டும் என்றும் வாழ்வதற்கு இந்த உலகில் வழி உண்டு என்பதை அறிந்து குறிக்கோளுடன் வாழும் திறனைப் பெறுதல்
6. தன்னலம் கருதாமல் உழைக்கும் மண்புமுவின் செயல்பாட்டை அறிவதன் மூலம் வாடும் திறனைப் பெறுதல். பிறர்நலனுடன்
மதிப்பீடு
எளிய சிந்தனை வினாக்கள் LOT QUESTIONS
1.மனோன்மணீயம் நூலின் ஆசிரியர் யார்?
2. முல்லை நில பூக்களில் சிலவற்றின் பெயரை எழுதுக?
நடுத்தரச் சிந்தனை வினாக்கள் MOT QUESTIONS
1. கிழவன் பருவம் பாராட்டும் பத்து பற்றிக் குறிப்புத் தருக.
2. தலைவன் தலைவியிடம் கூறிய கூற்று- விவரி
3. புல்லின் பரிவைக்குறித்து எழுதுக.
உயர்தரச்சிந்தனை வினாக்கள் HOT QUESTIONS
1.நாங்கூழ் புழுவின் செயல்பாட்டு உணர்த்தும் செய்தியை விவரி.
2. ‘ஆடுகம் விரைந்தே’ என்று தலைவன் கூற கரணமாக அமைந்த சூழலை விவரி
3. புல் மேற்கொள்ளும் வாழ்க்கைச்சூழலைப் புரிந்த நமது வாழ்விலும் வாழ முடியும் என்பதை நிறுவு.
தொடர் பணி
1.தமிழ் இலக்கியங்கள் காட்டும் பூக்கள் குறித்த செய்திகளைத் திரட்டி அது குறித்த தகவல்களைச் சேர்த்து ஒப்படைவு தயார் செய்க.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
Click Here to download the document.
ஜூலை 2025, 1 ஆவது வாரம் - பாடக்குறிப்பு Click Here