12 /இயல் 3 -அலகுத் தேர்வு 12- 1/3 UT/25
ஆகஸ்ட் மாதத் தேர்வு
பாடம் : தமிழ் வகுப்பு : 12
நேரம் : 1.30 மணி மதிப்பெண் : 50
பலவுள் தெரிக 8 X 1 =8
1.பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களில் பொருந்துவதைத் தேர்க
அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்
ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்
இ)நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்
ஈ) வல்லின மெய்களை தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்
2.’குடும்பம்’ என்னும் சொல் முதல்முதலில் இடம்பெற்றுள்ள நூல்
அ) தொல்காப்பியம்
ஆ) திருக்குறள்
இ)குறுந்தொகை
ஈ)புறநானூறு
3.பொருத்தி விடையைத் தேர்ந்தெடுக்க.
சொல் பொருள்
அ) செற்றார் - 1) மகிழ்ச்சி
ஆ)கிளை - 2) காடு
இ)உவகை - 3) பகைவர்
ஈ)கானும் - 4) உறவினர்
அ) 2 4 3 1
ஆ) 3 4 1 2
இ) 2 4 1 3
ஈ) 3 2 4 1
4. “இவற்றை வாயிலுக்குசச் சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக” என்று ஜலாலுதீன் ரூமி குறிப்பிடுவது _______________________ .
அ) வக்கிரம்
ஆ) அவமானம்
இ) வஞ்சனை
ஈ) இவை அனைத்தும்
5.”தந்தனன் தாதை தன்னைத் தடைக்கையான் எடுத்துச் சார்வான்” அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பு ____________________ .
அ) உரிச்சொல் தொடர்
ஆ) வினைத்தொகை
இ) உம்மைத்தொகை
ஈ)இடைச்சொல் தொடர்
6.”எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சுினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே”- என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது
அ) தனிக்குடும்ப முறை
ஆ) விரிந்த குடும்ப முறை
இ) தாய்வழிச் சமூக முறை
ஈ) தந்தை வழி சமூக உரை
7. சங்க சமூகத்தின் அடிப்படை அலகு
அ) கணவன்
ஆ) மனைவி
இ) திருமணம்
ஈ) குடும்பம்
8. உரிமை தாகம் என்னும் கதையை எழுதியவர்_____________________
அ) உத்தமசோழன்
ஆ) பூமணி
இ) ஐராவதம் மகாதேவன்
ஈ) முகமது மீரான்
குறுவினா ( எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ) 3 X 2 = 6
9. புக்கில், தன்மனை - சிறுகுறிப்பு எழுதுக.
10. இராமன் சுக்ரீவனிடம் கூறிய செய்திகளை எழுதுக.
11. எதிர்பாராத நிகழ்வுகளை ஜலாலுதீன் ரூமி எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?
12.சங்க காலத்தில் தாய்வழிச் சமூக முறையில் பெண்கள் பெற்றிருந்த உரிமைகள் யாவை?
சிறுவினா ( எவையேனும் இரண்டனுக்கு மட்டும்) 2 X 4 = 8
13. “வருபவர் எவராயினும்
நன்றி செலுத்து” - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
14. குகனோடு ஐவராகி வீடணனோடு எழுவரான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுக.
15. மணந்தகம் விளக்குக.
நெடுவினா ( ஏதேனும் ஒன்று மட்டும் ) 1 X 6 = 6
16. பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட ராமன் பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக.
17. ‘உரிமை தாகம்’ கதையில் வெளிப்படும் உறவின் மேன்மையைப் புலப்படுத்துக.
அனைத்திற்கும் விடை தருக 7 X 2 = 14
18. உறுப்பிலக்கணம் தருக
அ ) தந்தனன் ( அல்லது ) ஆ) பொலிந்தான்
19. புணர்ச்சி விதி தருக.
அ) அருங்கானம்
20. இலக்கணக்குறிப்புத் தருக
அ) செற்றவர்
ஆ) நுந்தை
21. பொருத்தமான வேற்றுமை உருபுகளைச் சேர்த்து முறையான தொடர்களாக ஆக்குக.
அ) காலை எழுந்து படித்து நமக்கு நன்மை ஏற்படும்.
ஆ) போட்டி வெற்றி பெற்றது கலை செல்வி பாராட்டுகள் குவிந்தன.
22.வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.
அ) என்னுடைய நம்பிக்கை முழுவதுமே புதியத் தலைமுறை மீதுதான்; அவர்கள் எல்லா பிரச்சினைகளையும் ஒரு சிங்கத்தை போல எதிர்கொண்டுத் தீர்ப்பார்கள்.
ஆ) ஆசிரியருக்கு கீழ்படிதல் என்னும் குணம், உண்மையானவற்றை தெரிந்துக் கொண்டு, அறியாமையினை அகற்றி பல நல்லனவற்றை கற்று கொடுக்கும்.
23. பொருள்கோள் எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
24. கலைச்சொல் தருக.
அ) Nuclear family ஆ) Hbitat
பயிற்சி வினா 1 X 4 = 4
25. தன் விவரத் தகவல் பட்டியலை உருவாக்குக.
அடி மறாமல் எழுதுக. 1 X 4 = 4
26. ‘துன்ப உளது .............’ எனத் தொடங்கும் பாடல்.
எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095
Click Here to download the document.