Loading ....

SL-12th Tamil-தமிழ்- இயல் 3 - பொருள் மயக்கம் -2025-மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடைக் குறிப்பு- Slow learners study material-Unit 3-

 12 /இயல் - 3  பொருள் மயக்கம்       12 -  1 / 3 SLSM/25

மெல்ல கற்கும் மாணவர்களுக்கான விடைக் குறிப்பு


இயல் - 3

இலக்கணத் தேர்ச்சி கொள் (புத்தகம் பக்கம் எண்  : 66)

1. பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க.

அ) தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்

ஆ) தேவையற்ற இடங்களில் இடைவெளி விட்டு எழுதுதல்

இ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்

ஈ) வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்

விடை : இ) நிறுத்தற்குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்


2. வல்லினம் மிகும், மிகாத் தொடர்களின் பொருளறிந்து பொருத்துக

அ) பாலை பாடினான் - 1) தேரை என்னும் உயிரினத்தைப் பார்த்தான்.

ஆ) பாலைப் பாடினான் - 2) தேரினைப் பார்த்தான்

இ) தேரை பார்த்தான் - 3) பாலினைப் பாடினான்

ஈ) தேரைப் பார்த்தான் - 4) பாலைத் திணை பாடினான்

அ) 4  1  3  2 ஆ) 2  3  1  4 இ)  4  3  1  2 ஈ) 2  4  1  3

விடை : இ) 4  3   1  2


3. வேறொரு பொருள் அமையுமாறு சொற்களைச் சேர்த்துத் தொடரமைக்க. ( ஜூலை 2024 ) 

மாணவர்கள் வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.

விடை: மாணவர்கள்வரிசையில் நின்று அறிவியல் கண்காட்சியைக் கண்டனர்.


4. கீழ்க்காணும் சொல்லுருபுகளைப் பிரித்தும் சேர்த்தும் இருவேறு தொடரமைக்க 


முன்   ( மார்ச்  2020, மே 2022) 

1. அவன் முன்வந்து கூறினான்.

2. அவன்முன் வந்து கூறினான்.


தானே     ( மார்ச் 2020 ,  மே 2022 ) 

1.கண்ணன்தானே படித்தான்.

2. கண்ணன் தானேபடித்தான்.


கொண்டு   ( மார்ச் 2020 ) 


1.எடுத்துக்கொண்டு வந்தான்.

2.எடுத்துக் கொண்டுவந்தான். 


விட்டான்

1.பாம்பைப் பிடித்து விட்டான் 

2.பாம்பை பிடித்துவிட்டான் 


5. பொருள்கோள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பொருள்கோள் எட்டு வகைப்படும். அவையாவன,

1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்     2. மொழிமாற்றுப் பொருள்கோள்

3. நிரல் நிறைப் பொருள்கோள்             4. பூட்டுவிற்பொருள்கோள்

5. தாப்பிசைப் பொருள்கோள்     6. அளைமறிபாப்புப் பொருள்கோள்

7. கொண்டு கூட்டுப் பொருள்கோள்     8. அடிமறி மாற்றுப் பொருள்கோள்


6. காற்புள்ளி இடாமல் எழுதுவதனால் ஏற்படும் பொருள் மயக்கத்திற்குச் சான்று தருக.

சான்று

கனகா, அக்கா வீட்டிற்குச் சென்றாள்

கனகா அக்கா, வீட்டிற்குச் சென்றாள்.


7. சலசல, வந்துவந்து, கலகல, விம்மிவிம்மி, இவற்றில் இரட்டைக் கிளவித் தொடர்களை எழுதி, அவற்றை எழுதும் முறையைக் கூறுக.

இரட்டைக்கிளவித் தொடர்கள் 

சலசல, கலகல

தொடரில் இரட்டைக்கிளவிச் சொற்களை எழுதும்போது சேர்த்து எழுத வேண்டும்.

சான்று

1. அருவி விழும் ஓசை சலசலவெனக் கேட்டது (சரி) 

அருவி விழும் ஓசை சல சலவெனக் கேட்டது (தவறு)


2. செல்வி கலகலவெனச் சிரித்தாள் (சரி)

செல்வி கல கலவெனச் சிரித்தாள் (தவறு)


8. திருவளர்ச்செல்வன், திருவளர் செல்வன் இவற்றில் சரியான தொடர் எது? அதற்கான இலக்கண விதி யாது?  ( பெ.ஆ.க - 1, செப் 2021, ஜூன்  2023 , மார்ச் 2025 ) 

திருவளர்செல்வன் என்ற தொடரே சரியான தொடர்.

வினைத்தொகையாக வரும் சொல்லுக்கிடையில் வல்லினம் மிகுதல் கூடாது' என்ற இலக்கண விதியின் படி 'திருவளர்செல்வன்' என்ற வினைத்தொகையில் வல்லினம் மிகாது.


 அரசுப் பொதுத் தேர்வு  மற்றும்  PTA வினா - விடைகள்


1. பொருள் முழுமை பெற்ற சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க (பெ.ஆ. க - 5)

அ) இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் பணிவிடை செய்யப் புறப்பட்டான்.

ஆ) பணிவிடை செய்ய இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.

இ) இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.

ஈ) காட்டில் இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் புறப்பட்டான்

விடை : இ) இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.


2. பிழையற்ற தொடரைக் கண்டறிக (மார்ச் 2020)

அ) சென்னையிலிருந்து நேற்று வந்தான்

ஆ) கோவலன் மதுரைக்குச் சென்றது.

இ) பறவைகள் நெல்மணிகளை வேகமாகக் கொத்தித் தின்றது.

ஈ) குதிரையும் யானையும் வேகமாக ஓடியது.

விடை : அ) சென்னையிலிருந்து நேற்று வந்தான்.




3. சரியான எழுத்து வழக்கைத் தேர்க (பெ.ஆ.க - 3)

அ) புள்ளைக்கு ஒடம்பு சரியில்லை

ஆ) புள்ளைக்கு உடம்பு செரியில்லை

இ) புள்ளைக்கு உடம்பு சரியில்லை.

ஈ) பிள்ளைக்கு உடம்பு சரியில்லை

விடை : ஈ) பிள்ளைக்கு உடம்பு சரியில்லை


4. மரபுப் பிழை நீக்கி எழுதுக       ( பெ.ஆ.க.-6  ) 

அ) கோவலன் மதுரைக்குச் சென்றது. 

விடை : கோவலன் மதுரைக்குச் சென்றான்.

ஆ) குதிரையும் யானையும் வேகமாக ஓடியது. 

விடை : குதிரையும் யானையும் வேகமாக ஓடின.

இ) பறவைகள் நெல்மணிகளை வேகமாகக் கொத்தித் தின்றது.   ( பெ.ஆ.க- 6 ) 

விடை : பறவைகள் நெல்மணிகளை வேகமாக கொத்தித் தின்றன.

ஈ ) அவன் வெண்மதியிடம் பேசினாய். 

விடை : அவன் வெண்மதியிடம் பேசினான்.


5. தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.     (ஆகஸ்ட்  2021  )

நான் சுடுதண்ணீரில் குளித்தேன்.

விடை : நான் சுடுநீரில் குளித்தேன்.


 எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095


Click Here to download the document.




Post a Comment

Previous Post Next Post