Loading ....

UT-11th Tamil-Unit Test-OCTOBER 2025-Unit 4-Monthly Test-Question paper-11ஆம் வகுப்பு-தமிழ்-அலகுத் தேர்வு-இயல் 4-அக்டோபர் 2025-மாதத் தேர்வு- வினாத்தாள்-

 11 /இயல் 4 -அலகுத் தேர்வு     11- 1/4 UT/25

அக்டோபர்  மாதத் தேர்வு

பாடம் : தமிழ்                                        வகுப்பு : 12

நேரம் : 1.30 மணி                              மதிப்பெண் : 50


பலவுள் தெரிக 8 X 1 = 8

 1.சரியான விடையைத் தேர்க.

அ) கல்வி அழகே அழகு                            - 1) புறநானூறு

ஆ) இளமையில் கல்                             - 2) திருமந்திரம்

இ) துணையாய் வருவது தூயநற்கல்வி             - 3) ஆத்திசூடி

ஈ) உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்     - 4) திருக்குறள்

                        - 5) நாலடியார்

ⅰ)அ -2, ஆ-3, இ-4, ஈ-1 ⅱ)அ -3, ஆ-4,இ-1,ஈ-2

iii) அ-5, ஆ-3,இ-2,ஈ-1 iv) அ-4,ஆ-1,இ-2,ஈ-5

2. "விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் ஒரு வினாவாய் நீயே நிற்கின்றாய்" என்று உரைப்பவர்

அ) பிரமிள் ஆ) அழகிய பெரியவன் இ) அப்துல் ரகுமான் ஈ) இரா.மீனாட்சி

3.ஏடு, சுவடி, பொத்தகம் முதலிய சொற்கள் தரும் பொருள்

அ) நூல் ஆ) ஓலைக்கற்றை இ) எழுத்தாணி ஈ) தாள்

4. மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து நினை.

அ) முகக்குறிப்பை அறிந்தவரை ஆ) எண்ணியதை எண்ணியவரை

இ) மறதியால் கெட்டவர்களை ஈ) சொல்லேர் உழவரை

5.  பிள்ளைக்கூடம் கவிதை இடம்பெற்ற நூல்

அ) வடக்கு வீதி ஆ) கொடி விளக்கு இ) தகப்பன் கொடி ஈ) சுட்டுவிரல்

6. Horticulture’ - இணையான தமிழ்க் கலைச்சொல்

அ) தோட்டக்கலை ஆ) ஒட்டுவிதை இ) விவசாயக்கலை ஈ) இவற்றில் எதுவுமில்லை

 7.கலைச்சொற்கள் பெரும்பாலும் 

அ) சிறப்புப்பெயர்கள் ஆ) வினைப்பெயர்கள்

இ) பொதுப்பெயர்கள் ஈ) காரணப்பெயர்கள்

8. ஜெயகாந்தனின் படைப்பில் திரைப்படமாக்கப்பட்ட படைப்பு

அ) யாருக்காக அழுதேன் ஆ) புதிய வார்ப்புகள்

இ) கைவிலங்கு ஈ) சினிமாவுக்குப் போன சித்தாளு

குறுவினா ( எவையேனும் மூன்றனுக்கு மட்டும் ) 3 X 2 = 6

9. சங்ககாலத்தில் தமிழ்மொழியின் நிலைபற்றி இராசமாணிக்கனாரின் கூற்று யாது?

10. "இங்கே, ஐம்பதாண்டு வேம்பு

கோடையில் கொட்டும் பூக்களை எண்ணச் சொல்கிறார்கள்" - எண்ணச் சொல்கிறவர்கள் யார்? எண்ணுபவர்கள் யார்?

11. கற்றேன் என்பாய் கற்றாயா?" என்று அப்துல் ரகுமான் யாரிடம் எதற்குக் கேட்கிறார்?

12. எப்போது மருந்து தேவையில்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார்?

 சிறுவினா ( எவையேனும் இரண்டனுக்கு மட்டும்)  2 X 4 = 8

13. எண்ணியதை அடைதல் எப்போது எளிதாகும்? குறள் கருத்தை விளக்குக. 

14.தமிழ் இலக்கியங்களில் கல்வி குறித்து நீங்கள் அறிந்த செய்திகளை அட்டவணைப்படுத்துக.

15.அப்துல் ரகுமானின் கவிதையிலிருந்து வினா- விடை வடிவத்திற்கு ஏற்ற அடிகளைத் தருக.

நெடுவினா ( ஏதேனும் ஒன்று மட்டும் ) 1 X 6 = 6 16.பௌத்தக் கல்வி, சமணக் கல்வி மரபுவழிக் கல்வி முறைகளால் தமிழகக் கல்வி முறைப் ஏற்பட்ட பல்வேறு மாறுதல்களை விவரிக்க.

17. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் நண்பன் என்பவன் பிரிக்க முடியாத அங்கமாவா என்பதை ஜெயகாந்தனின் ஒரே நண்பன் சிறுகதைவழி விளக்குக.

அனைத்திற்கும் விடை தருக                       7 X 2 = 14

18. உறுப்பிலக்கணம் தருக 

வென்றனர்                  

19. கலைச்சொல்லாக்கம் - பொருள் தருக.

20. இலக்கணக்குறிப்புத் தருக 

அ) உடை அணிந்தேன் கெடுக

21. விடுபட்ட இடத்தில் அடுத்து வரவேண்டிய சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

அ) தனிமொழி - அறிவு; _______________-  வண்ண மயில்; பொதுமொழி- ___________________

ஆ) எழுத்து,______________ சீர், தளை, _______________, தொடை

22.வல்லின மெய்களை இட்டும் நீக்கியும் எழுதுக.

பள்ளிகூடங்களில் பயிலும் மாணவர்கள், தாய்மொழி வழியாகவே அனைத்துக் துறை கல்வியையும் பெறுதலே முறையானதென்றும், அத்தகையக் கல்வியேப் பயனளிக்குமென்றும் போப் கருதினார்.

23.சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க

அ) நஞ்சிருக்கும் ஆ) பிண்ணாக்கு

24. கலைச்சொல் தருக.

அ)   Ancestor ஆ) Mental Ability

25. அணியைச் சான்றுடன் விளக்குக 1 X 4 = 4

“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்”- இக்குறட்பாவில் இடம்பெற்றுள்ள அணியை விளக்குக

அடி மறாமல் எழுதுக. 1 X 4 = 4

26. “ நான் என்பேன்......”  எனத் தொடங்கும் தொலைந்து போனவர்கள்  பாடல் 


 எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095


Click Here to download the document.








Post a Comment

Previous Post Next Post