12 /இயல் 4 -அலகுத் தேர்வு 12- 2/4 UT/25
அக்டோபர் மாதத் தேர்வு
பாடம் : தமிழ் வகுப்பு : 12
நேரம் : 1.30 மணி மதிப்பெண் : 50
பலவுள் தெரிக 10 X 1 = 10
1. “ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈராறு ஆண்டில் சூழ்கழல் மன்னற்குக் காட்டல்... தொடர்களில் வெளிப்படும் செய்திகள்
கூற்று 1 : மாதவி ஏழு ஆண்டுகள் வரை நாட்டியம் பயின்றாள்.
கூற்று 2 : ஈராறு வயதில் அரங்கேற்றம் செய்ய விரும்பினாள்.
அ) 1 சரி 2 தவறு ஆ) 1 தவறு 2 சரி இ) 1 தவறு 2 தவறு ஈ) 1 சரி 2 சரி
2. சுவடியோடு பொருத்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
அ) வசம்பு ஆ) மணத்தக்காளியிலைச்சாறு இ) கடுக்காய் ஈ) மாவிலைக்கரி
3.மகரயாழ் எத்தனை நரம்புகளைக் கொண்டது?
அ) 14 ஆ) 21 இ) 7 ஈ) 19
4. பள்ளிக்கு முதலில் வருபவனை எவ்வாறு அழைப்பர்.
அ) வேத்தான் ஆ) கணக்கன் இ) அண்ணாவி ஈ) குருசாமி
5.நெடுங்கணக்கு என்பது
அ) நீண்ட கணக்கு ஆ) கணிதம் இ) பெருக்கல் கணக்கு ஈ) அரிச்சுவடி
6. முத்து என்னும் பொருள் தரும் சொல்
அ) புட்பராகம் ஆ) மாணிக்கம் இ) நித்திலம் ஈ)தீலம்
7.ஆராய்ந்து சொல்கிறவர்
அ) அரசர் ஆ) சொல்லியபடி செய்பவர் இ) தூதுவர் ஈ) உறவினர்
8. கல்வியை நிலைக்களனாகக் கொண்ட மெய்ப்பாடு
அ) பெருமிதம் ஆ) உவகை இ) நகை ஈ) மருட்கை
9. பொருத்துக
விதிமீறல் தண்டத்தொகை
அ. கைப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் இயக்குதல் 1) 2,000 ரூபாய்
ஆ. பந்தயம் வைத்து வாகனம் ஓட்டுதல் 2) 25,000 ரூபாய்
இ காப்பீடு இல்லாத வாகனம் ஓட்டுதல் 3) 5,000 ரூபாய்
ஈ. 18 வயது முழுமையடையாதவர் வாகனத்தை இயக்கினால்.
அவரின் பெற்றோருக்கு 4) 1,000 ரூபாய்
அ) 4 1 2 3 ஆ) 4 1 3 2 இ) 4 2 1 3 ஈ) 4 3 1 2
10. தோப்பில் முகமது மீரன்ன் எப்படைப்பு சாகித்திய அகாதமி பரிசனைப் பெற்றது.
அ) கூனன் தோப்பு ஆ) வேர்களின் பேச்சு
இ) சாய்வு நாற்காலி ஈ) துறைமுகம்
குறுவினா (எவையேனும் இரண்டனுக்கு மட்டும் ) 2 X 2 = 4
11. சிலப்பதிகாரத்திற்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?
12. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து - இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக.
13.நீங்கள் படித்ததில் பிடித்த குறளை எழுதி, காரணத்தைக் குறிப்பிடுக.
குறுவினா (எவையேனும் இரண்டனுக்கு மட்டும் ) 2 X 2 = 4
14.அக்காலத்துக் கல்விமுறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?
15. மையாடல் விழா என்றால் என்ன ?
16. எழுத்தாணி எத்தனை வகைப்படும் ? அவை யாவை?
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. 2 X 2 = 4
17. புணர்ச்சி விதி தருக
தலைக்கோல்
18. தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
அ ) ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.
ஆ ) மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
19. கலைச்சொல் தருக
அ) Vice Chancellor ஆ) Discussion
எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க 3 X 4 = 12
20. தொழில் உவமையணியை விளக்குக.
21. நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?
22. மணலில் எழுதியதுமுதல் தற்காலம்வரை எழுதும் முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க.
23. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’- பழமொழியை வாழ்வியல் நிகழ்வில் அமைத்து எழுதுக.
நெடுவினா (எவையேனும் இரண்டனுக்கு மட்டும் ) 2 X 6 = 12
24.அரங்கின் அமைப்பை சிலப்பதிகாரத்தின்வழி விளக்கி எழுதுக.
25. பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகளைத் தொகுத்தெழுதுக.
26 . 'சூரியனைப் பிரசவிக்கும் பாறை எனும் சிறுகதை உணர்த்தும் கருத்துகளைச் சுவை குன்றாமல் சுருக்கி வரைக.
அடிபிறழாமல் எழுதுக. 2 + 2 = 4
27. ‘பிற’ - என முடியும் திருக்குறள் பாடல்.
28. ‘தொடர்பு ’ - என முடியும் திருக்குறள் பாடல் .
குருசடி எம்.ஏ.ஜெலஸ்டின் , முதுகலைத் தமிழாசிரியர், கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில் - 9843448095