திருத்தப்பட்ட பாடத்திட்டம் 2021 - 2022
மேனிலை இரண்டாமாண்டு.
SLIP TEST -1
வகுப்பு : 12 தமிழ் இயல் : 1
நேரம் : 40 நிமிடங்கள் மதிப்பெண் : 30
விடைகள்
I.பலவுள் தெரிக 6 x 1 = 6
1.இ) கட்டுரையாளர்
2. அ) பாரதியார் பல்கலைக்கழகம்
3. ஈ) மலையாளக் கவிதை
4. அ) கவிதை நூல்
5. ஆ) சொற்றுணை
6. ஆ) காட்டுவாத்து - அகிலன்
II.குறுவினா 3 x 2 = 6
7. நடை அழகியல்
கவிதையின் இயங்காற்றல்தான் நடை எனப்படும‘நடைபெற்றியலும்’, ‘நடைநவின்றொழுகும் என்னும்
சொற்றொடர்களைத் தொல்காப்பியம் கையாண்டுள்ளது ஒவ்வொரு பாடலும் அதற்குரிய நடையிலேயே
அமைய வேண்டும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.
8. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கான முறைகள்;
எழுத்தினைத் தெளிவாக உச்சரிக்க பழகவேண்டும்.
மயங்கொலி எழுத்துகளின் ( ந, ண, ன/ ல,ள, ழ / ர,ற )
ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும்.
தமிழில் மயங்கொலி எழுத்துக்கள் வரும் முறையையும்
அவை ஏற்படுத்தும் பொருள் மாற்றத்தையும் அறிந்துகொள்வது
இன்றியமையாத ஒன்றாகும்.
தொடக்கத்தில் சில காலம் வாய்விட்டு அல்லது
மனதில் உச்சரித்தபடி எழுதப் பழக்குவது நல்லது.
வேகமாக எழுத முயல்வது பிழைக்கு வழிகோலும்.
கெ, கே, கொ, கோ போன்று கொம்புடைய குறில்
நெடில் வேறுபாட்டினைப்
புரிந்து எழுத வேண்டும்.
9 தமிழின் துணை வேண்டும்:
உடல் நோக உழைக்கும் தொழிலாளர்கள் சிந்தும் வியர்வை
மற்றும் மாலை நேரத்தில் வானில் தோன்றும் சிவந்த பூக்களைப்
போன்ற அவர்களின் கைகள் ஆகியவற்றை வியந்து பாட தமிழின்
துணை வேண்டும் என்கிறார் சிற்பி.
III.சிறுவினா 2 x 4 = 8
10. ஒலிகோலம்:
இசையோடும் இசைக்கருவியோடும் தான் மொழிசார்ந்த
கவிதை பிறக்கும். ஓசையும் பொருளும் இணைந்து
கலைவடிவம் கொள்வதை ஒலிக்கோலம்
(ஒலிப் பின்னல்) என்பார்.
வன்மைஉணர்ச்சியை வெளிப்படுத்த சங்கப்பாடலில்
வல்லின மெய் ஒலிகள்மிகுதியாக இடம் பெற்றுள்ளன.
சான்று: கடந்தடு தானே..... (புறம் :110)
இனிய இசைக்காக நெடில் ஒலிகள் அதிகமாக இடம்பெறும்.
சான்று: படாஅம் ஈத்த ..... (புறம் :145)
சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பத் திரும்ப
வரும் தன்மையும் உண்டு.
சான்று: புணரின் புணராது..... (நற் : 16)
சொல் விளையாட்டுகளும் சங்கப் பாடல்களில் இடம் பெறுவதுண்டு.
சான்று: நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை...... ( புறம் : 290 )
இவையே சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் கொண்டிருந்த
குறிப்பிடத்தக்க பண்பாகும்
11.இடம் சுட்டி பொருள் விளக்குக:
இடம் :
இவ்வடி இடம் பெற்ற நூல் தண்டியலங்காரம். ஆசிரியர் தண்டி.
இந்நூலில் உள்ள உரை மேற்கோள் பாடலில் இவ்வடி இடம் பெற்றுள்ளது.
பொருள்:
ஓசையை உடைய அலைகள் வீசும் கடல் சூழ்ந்த உலகத்தில் புற இருளை
அகற்றுவது சூரியன் என்பதே இவ்வடியில் பொருளாகும்.
விளக்கம் :
எப்போதும் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும் கடல் சூழ்ந்த
இந்த உலகின் இருளை அகற்றும்கதிரவன்
மக்களால் போற்றப்பட்டு உயர்ந்த மலைகளுக்கு
இடையே தோன்றி சான்றோரால்
தொழப்படுகின்ற ஒன்றாகும்.
IV.நெடுவினா 1 x 6 = 6
12. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி கூறுவன:
முன்னுரை:
தமிழ் மொழி நம் அடையாளம்: பண்பாட்டின் நீட்சி;
தோன்றிய காலம் தொட்டு மக்களால்
பேசப்பட்டு, எழுதப்பட்டு, உயிர்ப்போடும்
இளமையோடும் இருப்பது. அத்தகைய சிறந்த
தமிழின் திறத்தை வியந்து கவிஞர் சிற்பி
பாடுவதை காண்போம்.
இயற்கையைப் பாட வருக:
தமிழை மாலை நேரத்தில் சிவந்த கதிர்களைச்
சுருக்கி கதிரவன் பின் சென்று மறைவான்.
கதிரவனின் ஒளி பட்டு செந்நிப்ற பூக்காடாகக்
காட்சியளிக்கும்.
அக்காட்சியைப் பாட தமிழே வா!
தொழிலாளர்களைப் பாட வருக தமிழே :
தினமும் உழைக்கும் தொழிலாளர்கள்
கைகளும் மாலை நேர வானம் போல சிவந்திருக்கும்.தொழிலாளர்களின் திரண்ட தோள்களில் முத்து முத்தாய்
வியர்வை பூத்திருக்கும்.
இக்காட்சிகளைப் பாட தமிழே நீ வா!
தமிழின் பழமை நலம்:
பொங்கிவரும் கவிதைக்கு உணவாக
விளங்குவது முத்தமிழ் ஆகும். பாண்டியனின்
ஆட்சிப் பகுதியான மதுரையில் சங்கம்
அமைத்து அரசாட்சி செய்த சிறப்புடையது.
பாரி போன்ற வள்ளல்களைத் தமிழ்நாட்டிற்குத்
தந்த பெருமை உடையது.
சிங்கம் போல சீறி வா :
பழமைநலம் மீண்டும் பிறக்க மேனிசிலிர்க்க
தமிழ் குயிலே மீண்டும் கூவி வா!
குளிர்ச்சியான பொதிகை மலையில் தோன்றிய
தென்னாட்டு தமிழே உன்னை புதுப்பிக்க
புறப்பட்டு வா!. தமிழரின் அடிமைத்தனமும்
அறியாமையும் அகன்றிடவும், அவர்கள்
சிறைப்பட்டிருக்கும் கூண்டினை உடைத்திட
சிங்கம் போல சீற்றத்தோடு வா !
முடிவுரை:
காலத்திற்கு ஏற்றவாறு தம்மை புதுப்பித்துக்கொண்டும்
இன்றளவும் சிறப்புற்றுத் திகழ்கின்ற தமிழின் திறத்தைக்
கவிஞர் சிற்பி வியந்து பாடுகிறார்.
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
V. அடி மாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. 1 x 4 = 4
13.மனப்பாடப் பாடல்:
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!
(download Link below) 👇👇👇👇
Follow us on (click the below icons to follow)
Want our Latest Posts?
View Our Blogger(Click The Icon Below)
Tamilamuthu 2020 Official
Keep Supporting Tamilamuthu 2020
Icons from Flaticon
Contact No : 9843448095
©Tamilamuthu2020official.blogspot.com
Photo by Arleen wiese on Unsplash
Super
ReplyDeleteநன்றி,தொடர்ந்து உங்கள் ஆதரவை நாடுகிறேன்.உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
Delete