திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் 2021 - 2022
மேனிலை இரண்டாமாண்டு.
தமிழமுது 2020 - பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.
SLIP TEST -2
வகுப்பு : 12 தமிழ் இயல் : 1
நேரம் : 40 நிமிடங்கள் மதிப்பெண் : 30
விடைகள்
I.பலவுள் தெரிக 6 x 1 = 6
1. ஈ) 2 3 4 1
2. இ) அடி எதுகை, சீர் மோனை
3. இ) தொல்காப்பியம்
4. இ) நம்பி நெடுஞ்செழியன்
5. அ) அறவியல்
6. ஈ) எழுந்த
II.குறுவினா 3 x 2 = 6
7. ஓசை நயம் மிக்க சொற்கள்:
படாஅம் ஈத்த
கெடாஅ நல்லிசை
கடாஅ யானை
இலக்கணக்குறிப்பு:
படாஅம்
கெடாஅ நல்லிசை } இசைநிறை அளபெடை அல்லது செய்யுளிசை அளபெடை
கடாஅ யானை
8. விடியல் , வனப்பு :
பூத்துக்குலுங்கும் பூக்களின் மனத்திலும் பறவைகளின் வழிகளிலும் விடியலின் வெளிச்சமாக உதிக்கும் கதிரவனின் தோற்றம் இயற்கையின் வனப்பை எடுத்துரைக்கும்.
9. கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதிய கவிதை நூல்கள்
ஒளிப்பறவை
சர்ப்பயாகம்
சூரிய நிழல்
ஒரு கிராமத்து நதி
பூஜைகளின் சங்கிலி
III. சிறுவினா 2 x 4 = 8
10. தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயம்:
சிவந்த நிறக் கதிர்களை உடையது கதிரவன். கதிரவன் மாலை நேரத்தில் மறையும், அவ்வாறு மறையும்போது மலைக்குப் பின்னால் தன் தலையைச் சாய்த்து உறங்குவது போல இருக்கும்.
அவ்வாறு, கதிரவன் மறையும் மாலை நேரத்தில் வானமெங்கும் செம்மை நிறத்தில் ஒளி வீசும், அது பூக்கள் நிறைந்த பூக்காடு போல் வானமெங்கும் தெரிகிறது என்று சிற்பி சிறந்த காட்சி நயத்தை இத்தொடர் மூலம் தருகிறார்.
11. ‘கலை முழுமை’ :
இலக்கிய உருவாக்கத்தின்போதே அறம்,பொருள், இன்பம் சார்ந்த அறவியல் கருத்து நிலைகள் சரிவர இணைந்திருக்க வேண்டும் என்பதைத் தொல்காப்பியம் சுட்டிக் காட்டியுள்ளது. இத்தகைய ஒரு முழுமையைத்தான்’கலைமுழுமை ‘என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
சங்க இலக்கியம் அகத்திணை சார்ந்த செய்திகளையும் புறத்திணை சார்ந்த செய்திகளையும் பாடற்பொருளாகத் தந்தாலும் இன்பம், பொருள், அறம் ஆகிய அறவியல் கருத்துக்களை ‘இலட்சியப்’ பொருள்களோடு இரண்டற இணைத்து விடுகிறது. இதைத்தான் ‘கலை முழுமை’ என்று சொல்கின்றார்கள்.
IV.நெடுவினா 1 x 6 = 6
12. கவிதையின் நடையக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள்:
முன்னுரை:
கவிதையின் நடையை கட்டமைக்கும் அழகியல் கூறுகளில் மிக முக்கிய பங்கு வகிப்பவை ஒலிக்கோலம், சொற்களின் புலம், தொடரியல் போக்கு இவை கவிதையின் நடையைக் கட்டமைக்கின்றன. இதைப் பற்றிக் காண்போம்.
ஒலிகோலம்:
இசையோடும் இசைக்கருவியோடும் தான் மொழிசார்ந்த கவிதை பிறக்கும்.
ஓசையும் பொருளும் இணைந்து கலைவடிவம் கொள்வதை ஒலிக்கோலம்
(ஒலிப் பின்னல்) என்பார்.
வன்மைஉணர்ச்சியை வெளிப்படுத்த சங்கப்பாடலில் வல்லின மெய் ஒலிகள்
மிகுதியாக இடம் பெற்றுள்ளன.
சான்று: கடந்தடு தானே..... (புறம் :110)
இனிய இசைக்காக நெடில் ஒலிகள் அதிகமாக இடம்பெறும்.
சான்று: படாஅம் ஈத்த ..... (புறம் :145)
சில ஒலிகளும் சில சொற்களும் திரும்பத் திரும்ப வரும் தன்மையும் உண்டு.
சான்று: புணரின் புணராது..... (நற் : 16)
சொல் விளையாட்டுகளும் சங்கப் பாடல்களில் இடம் பெறுவதுண்டு.
சான்று: நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை...... ( புறம் : 290 )
இவையே சங்கப்பாடல்களில் ஒலிக்கோலம் கொண்டிருந்த குறிப்பிடத்தக்க பண்பாகும்
சொற்களின் புலம்:
சொற்களில் தான் உணர்வும் பொருளும் பொதிந்து கிடைக்கின்றன.
ஒரு பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறது.
இதில் கலை, பண்பாடு, வரலாறு, அரசியல், ஆகியவை
பொதிந்து கிடக்கின்றன.
சங்க இலக்கியத்தில் ஒரு பொருள் குறித்து வரும் பல சொல்,
பல பொருள் குறித்த ஒரு சொல் இடம்பெற்றுள்ளது.
சொற்கள் பல துறைகளுக்கும், பல சூழல்களும், பல புனைவுகள்
உரியதாய் வருவதும் உணர்வும் தெளிவும் கொண்டதாய்
வருவதுமாகச் செழிப்பான தளத்தில் சொற்கள் இருந்தன.
சங்கப்பாடல்களில் சொல்வளம் என்பது தனிச் சொற்களாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து நெகிழாமலும் முயங்கிக் கிடப்பதைக் காணலாம்.
சொற்புலத்தில் தொகைநிலைத் தொடரும், தொகாநிலைத் தொடரும் வரும். இவைகள் கவிதைகளைக் கட்டமைப்பதில் அவற்றின் நடையழகியலைக் கூட்டுவதிலும் செறிவாக்கபட்ட ஒரு சொல்போலவே நடக்கும்.
தொடரியல் போக்கு:
பாடலின் தளத்தை முழுமையடைய செய்வது தொடரியல் போக்காகும். சொல்பவனுடைய மொழித்திறனை, கேட்பவன் அல்லது வாசிப்பவன் முழுமையாகப் பெற வேண்டும்.
சொல்லப்படும் உணர்வுகளுக்கும் செய்திகளுக்கும் ஏற்பத் தொடர்கள்
1.நேர் நடந்தும்
2.ஏறி இறங்கியும்
3.திரும்பியும் சுழன்றும் இயங்கும்.
சங்கப் பாடல்கள் பலவற்றில் மறுதலைத்தொடர் அமைந்திருப்பதும் உண்டு. சான்று:
இடுக வொன்றோ......... (புறம் : 239).
முடிவுரை :
இவையே கவிதையின் நடையைக் கட்டமைக்கும் அழகியல் கூறுகள் ஆகும்.
இதனை அறிந்து நாம் சங்க இலக்கியங்களை அணுகவேண்டும்.
V. அடிமாறாமல் எழுதுக. 1 x 4 = 4
13.மனப்பாடப் பாடல்:
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!
DOWNLOAD BUTTON BELOW👇👇👇👇👇
Follow us on (click the below icons to follow)
Want our Latest Posts?
View Our Blogger(Click The Icon Below)
Tamilamuthu 2020 Official
Keep Supporting Tamilamuthu 2020
Icons from Flaticon
Contact No : 9843448095
©Tamilamuthu2020official.blogspot.com
Thank you
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு நன்றி. உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும்.
ReplyDeleteThanks
ReplyDeleteநன்றி
Delete