12 ஆம் வகுப்பு
இயல் 1
தன்னேர் இல்லாத தமிழ்
தண்டியலங்காரம்
சிறப்புப் பலவுள் தெரிக
ஒரு மதிப்பெண் வினா விடைகள்
One word questions (40 question)
அ) அணி ஆ) எழுத்து இ) சொல் ஈ) பொருள்
அ) அணி
2. நம் பாடப்பகுதி இடம்பெற்றுள்ள பகுதி
அ) உரை மேற்கோள் பாடல் ஆ) தன்னேர் இலாத தமிழ்
இ) பொருளணியியல் ஈ) தண்டியலங்காரம்
இ) பொருளணியியல்
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 98 43 44 80 95 .
3. தண்டி எழுத காரணமான நூல்
அ) உரை மேற்கோள் பாடல் ஆ) காவியதர்சம்
இ) தொல்காப்பியம் ஈ) தொன்னூல் விளக்கம்
ஆ) காவியதர்சம்
4. ஓங்கலிடை பாடலில் இடம் பெறும் அணி
அ) பொருள் அணி ஆ)சொல்லணி
இ) பொருள் வேற்றுமை அணி ஈ) வேற்றுமை அணி
இ) பொருள் வேற்றுமை அணி
5. அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் நூல்
அ) தொல்காப்பியம் ஆ) முத்துவீரியம்
இ) இலக்கண விளக்கம் ஈ) இவற்றில் எதுவுமில்லை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
6. இருளகற்றுபவை எவை?
அ)கதிரவன்,சந்திரன் ஆ)கதிரவன், விண்மீன்
இ)தமிழ், சந்திரன் ஈ) கதிரவன், தமிழ்
ஈ) கதிரவன், தமிழ்
7.'இலாத'- இலக்கணக்குறிப்பு
அ) பண்புத்தொகை ஆ) இடைக்குறை
இ) பெயரெச்சம் ஈ) மரூஉ
ஆ) இடைக்குறை
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 98 43 44 80 95 .
8. ஒளிர்கின்றது எது?
அ)கதிரவன் ஆ)தமிழ் இ) கதிரவன், தமிழ்
ஈ)இவற்றில் எதுவுமில்லை
அ)கதிரவன்
9. தனக்கு நிகரில்லாத தமிழ் என்பவர்
அ)தண்டி ஆ)தொல்காப்பியர்
இ)நன்னூலார் ஈ)வீரசோழியம்
அ)தண்டி
10. பொதிகைமலை எனப்படுவது
அ)விந்தியம் ஆ)இமயம் இ)குற்றாலம் ஈ)சுவாமிமலை
இ)குற்றாலம்
11. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது தன்னேர் இலாத தமிழ்"! இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடை நயம்
அ) அடிமோனை ,அடி எதுகை ஆ)சீர் மோனை , சீர் எதுகை
இ)அடி எதுகை, சீர் மோனை ஈ) சீர் எதுகை , அடிமோனை
இ)அடி எதுகை, சீர் மோனை
12. அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் நூல்
அ) தொல்காப்பியம் ஆ) மாறனலங்காரம்
இ) வீரசோழியம் ஈ)முத்துவீரியம்
ஆ) மாறனலங்காரம்
13. _______என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்டது தண்டியலங்காரம்.
அ) காவியதர்சம் ஆ)இலக்கணக் கொத்து
இ)இந்திர வியாகரணம் ஈ) கௌமாரம்
அ) காவியதர்சம்
14. "ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும்"- இவ்வடிகளில் பயின்று வந்துள்ள அடி எதுகை சொற்களைக் கண்டறி.
அ )வந்து - உயர்ந்தோர் ஆ) ஓங்கலிடை - உயர்ந்தோர்
இ) ஓங்கலிடை - ஏங்கொலிநீர் ஈ) ஞாலத்து- இருளகற்றும்
இ) ஓங்கலிடை - ஏங்கொலிநீர்
15. தண்டி வாழ்ந்த காலம்
அ)கி.பி. 12ஆம் நூற்றாண்டு ஆ)கி.பி.8 நூற்றாண்டு
இ) கி.பி.7 நூற்றாண்டு ஈ) கி.பி.9 நூற்றாண்டு
அ)கி.பி. 12ஆம் நூற்றாண்டு
16. கீழ்க்கண்டவற்றுள் அணியிலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்
அ) தண்டியலங்காரம் ஆ) மாறனலங்காரம்
இ) குவலயானந்தம் ஈ)இலக்கண விளக்கம்
ஈ)இலக்கண விளக்கம்
17. தண்டியலங்காரம்____ இயல் களையும், ______நூற்பாக்களையும் பெற்றுள்ளது
அ) 6,126 ஆ) 3,123 இ) 3,126 ஈ) 4,123
இ) 3,126
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 98 43 44 80 95 .
18. "ஓங்கலிடை வந்து உயர்ந்தோர்" என்ற செய்யுளில் இடம்பெற்றுள்ள பாவகை
அ) ஆசிரியப்பா ஆ)நேரிசை வெண்பா
இ) இன்னிசை வெண்பா ஈ) பஃறொடை வெண்பா
ஆ)நேரிசை வெண்பா
19. கூற்று 1: ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் என்னும் செய்யுளில் பொருள் வேற்றுமை அணி பயின்று வந்துள்ளது
காரணம் 2 :இருவேறு பொருளுக்கான ஒற்றுமையை முதலில் கூறி பின் வேறுபடுத்தி காட்டுவது பொருள் வேற்றுமை அணி எனப்படும்
அ)கூற்றும், காரணமும் சரி ஆ) கூற்று சரி, காரணம் தவறு
இ) கூற்று தவறு, காரணம் சரி ஈ) கூற்றும், காரணமும் தவறு
அ)கூற்றும், காரணமும் சரி
20.' வெங்கதிர்'- இலக்கணக் குறிப்பைக் கண்டறி
அ)பண்புத்தொகை ஆ)வினைத்தொகை
இ)உவமைத்தொகை ஈ)உம்மைத்தொகை
அ)பண்புத்தொகை
21. இருவேறு பொருளுக்கான ஒற்றுமையை முதலில் கூறிப் பின் வேறுபடுத்திக் காட்டும் அணி
அ)தற்குறிப்பேற்றணி ஆ)பொருள் வேற்றுமை அணி
இ) உருவக அணி ஈ)உவமை அணி
ஆ)பொருள் வேற்றுமை அணி
22.பொருத்தித் தேர்க
அ) ஓங்கல் - 1.தன்னிகரில்லாத
ஆ) தொழுதல்- 2.உலகம்
இ)ஞாலம்- 3.வணங்குதல்
ஈ)தன்னேர் -4.மலை
அ)4 3 2 1 ஆ)3 2 4 1 இ)4 2 1 3 ஈ)2 3 4 1
அ)4 3 2 1
23. பொருந்தாததைத் தேர்க
அ) தமிழ்மொழி- பொதியமலை
ஆ) தொல்காப்பியம் - இலக்கண நூல்
இ)தண்டியலங்காரம் - தண்டி
ஈ)காவியதர்சம் - தமிழ் மொழி இலக்கண நூல்
ஈ)காவியதர்சம் - தமிழ் மொழி இலக்கண நூல்
24) சரியானதைத் தேர்க
அ) வீரசோழியம் - நாவல்
ஆ) முத்துவீரியம் - சிறுகதை
இ)குவலயானந்தம் - அணி இலக்கணம்
ஈ) மாறனலங்காரம் - சொல்லிலக்கணம்
இ)குவலயானந்தம் - அணி இலக்கணம்
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 98 43 44 80 95 .
25. சரியா? தவறா?
கருத்து 1 : மக்களின் அறியாமையை அகற்றுவது தமிழ் மொழியாகும்.
கருத்து 2 : புற இருளைப் போக்க கதிரவன் உதவும்.
அ)இரண்டு கருத்தும் சரி ஆ)கருத்து 1 சரி, 2 தவறு
இ) கருத்து 1 தவறு, 2 சரி ஈ) இரண்டு கருத்தும் தவறு
அ)இரண்டு கருத்தும் சரி
26).பொருத்திக் தேர்க
அ) வெங்கதிர் - 1. இடைகுறை
ஆ)இல்லாத - 2.வினையெச்சம்
இ) வந்து - 3. வினையாலணையும் பெயர்
ஈ) உயர்ந்தோர்- 4. பண்புத்தொகை
அ)4 2 3 1 ஆ)4 1 3 2 இ)4 1 2 3 ஈ)2 3 1 4
இ)4 1 2 3
27. "ஈறுபோதல்","முன் நின்ற மெய் திரிதல்"இவ்விதிக்குப் பொருந்தும் சரியான சொல்
அ) கருங்குயில் ஆ)வெங்கதிர் இ)நெடுந்தேர் ஈ)முதுமரம்
ஆ)வெங்கதிர்
28. சரியானதைத் தேர்க
அ)வந்து - பெயரெச்சம்
ஆ) உயர்ந்தோர் - பலர்பால் வினைமுற்று
இ)இலாத - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஈ) வெங்கதிர் - பண்புத்தொகை
ஈ) வெங்கதிர் - பண்புத்தொகை
29. சரியா? தவறா?
கருத்து 1 : 'தொன்னூல் விளக்கம்' அணி இலக்கணத்தை மட்டுமே கூறும் நூல்.
கருத்து 2 : 'குவலயானந்தம்' என்னும் நூல் முழுமையான இலக்கண நூல்.
அ) இரண்டு கருத்தும் சரி ஆ) இரண்டு கருத்தும் தவறு
இ) கருத்து 1 தவறு, 2 சரி ஈ) இவற்றில் எதுவுமில்லை
ஆ) இரண்டு கருத்தும் தவறு
30. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இலக்கண ஆசிரியர்
அ) நன்னூலார் ஆ) தொல்காப்பியர்
இ)வீரசோழிய ஆசிரியர் ஈ) இவர்களில் எவரும் இல்லை
ஈ) இவர்களில் எவரும் இல்லை
31. தமிழ்மொழி தோன்றிய மலையாகச் சொல்லப்படுகின்ற மலை
அ)பரம்பு மலை ஆ)நளிமலை
இ)பொதிய மலை ஈ)விந்திய மலை
இ)பொதிய மலை
32. தண்டியலங்காரம் கொண்டுள்ள பிரிவு
அ) 3 ஆ)7 இ)5 ஈ)4
அ) 3
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 98 43 44 80 95 .
33. 'விளங்கி' இச்சொல்லின் சரியான பகுபத உறுப்பிலக்கணம் பிரிப்பு முறை
அ)விள+ங்+க்+இய ஆ)விளங்கு+க்+ய்+அ இ)விளங்கு+ இய ஈ)விளங்கு + இ
ஈ)விளங்கு + இ
34. கீழ்க்கண்டவற்றுள் வினையாலணையும் பெயர் எது?
அ) உயர்ந்தோர் ஆ)வந்தான் இ)நடப்பான் ஈ)உயர்ந்து
அ) உயர்ந்தோர்
35. வானம் அளந்து, அனைத்தையும் அளக்கும் வலிமை மிக்கது
அ)கடல் ஆ)தமிழ் இ)வானம் ஈ)நூல்
ஆ)தமிழ்
36. 'ஏங்கொலி நீர்' பொருள் தருக.
அ)மலை ஆ)பூ இ)ஆகாயம் ஈ)கடல்
ஈ)கடல்
37. 'தனியாழி'- சரியான புணர்ச்சி விதி
அ)இஈஐ வழி யவ்வும்
ஆ)உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
இ)இஈஐ வழி யவ்வும்,உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
ஈ)ஈறுபோதல்,உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
இ)இஈஐ வழி யவ்வும்,உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
38. தமிழின் விரிவை __________ எனப் போற்றுவர்.
அ) நிலம் ஆ)கடல் இ)வானம் ஈ)மலை
அ) நிலம்
39."உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்"
என்னும் விதிக்கான சான்று
அ)ஆங்கவற்றுள் ஆ)எத்திசை இ)வெங்கதிர் ஈ)பூம்பாவாய்
அ)ஆங்கவற்றுள்
40.ஓங்கலிடை வந்து உயர்ந்தோர்" என்ற செய்யுளில் இடம்பெற்றுள்ள பாவகை.
அ) ஆசிரியப்பா ஆ)நேரிசை ஆசிரியப்பா
இ) இன்னிசை ஆசிரியப்பா ஈ) இவற்றில் எதுவுமில்லை
ஈ) இவற்றில் எதுவுமில்லை
விடைக் குறிப்பு pdf download செய்ய கீழ்க்காணும் download button click செய்யவும்👇👇👇👇👇👇
Photo by Jeremy Brady on Unsplash