©Tamilamuthu2020official.blogspot.com
திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் 2021 - 2022
மேனிலை முதலாமாண்டு
தமிழமுது 2020 - பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.
©Tamilamuthu2020official.blogspot.com
SLIP TEST - 3
வகுப்பு : 11 தமிழ் இயல் : 1
நேரம் : 25 நிமிடங்கள் மதிப்பெண் : 30
ஒரு மதிப்பெண் தேர்வு ( ONE WORD TEST - HOT Method Questions )
I. அனைத்திற்கும் விடையளி : 30 x 1 = 30
1. தவறான இணையைத் தேர்வு செய்க
அ) மொழி + ஆளுமை - உயிர்+ உயிர்
ஆ) தமிழ் + உணர்வு - மெய் + உயிர்
இ) கடல் + அலை - உயிர் + மெய்
ஈ) மண் + வளம் - மெய் + மெய்
2. ‘பறவைகள் ஒருவேளை தூங்கப் போய் இருக்கலாம்’ எந்த மொழியின் கவிதைத்தொகுப்பு
அ) இத்தாலி ஆ) ஒரியா
இ) பிரான்ஸ் ஈ) கிரேக்கம்
3. “கபாடபுரங்களைக் காவு கொண்ட பின்னும்
காலத்தால் சாகாத தொல்கனிமங்கள்” - அடி மோனையைத் தெரிவு செய்க
அ) கபாடபுரங்களை - காவு கொண்ட
ஆ)காலத்தால் - கனிமங்கள்
இ) கபாடபுரங்களை - காலத்தால்
ஈ)காலத்தால் - சாகாத
4.வினையாலணையும் பெயரைத் தெரிவு செய்க
அ) கடந்து ஆ) தோய்த்து
இ) உழுதவர் ஈ) பல்லாண்டு
5. “கபாடபுரங்களைக் காவு கொண்ட பின்னும்” இதில் ‘காவு’ என்பதன் பொருள்
அ) பலி ஆ) பழி
இ) அழித்து ஈ) இவற்றில் எதுவுமில்லை
6. கீழ்க்கண்டவற்றுள் இந்திரன் இயற்றிய கவிதை தொகுப்பு
அ) வெளிச்சம்
ஆ) பறவைகள் ஒருவேளை தூங்க போயிருக்கலாம்
இ) நுண்கலை
ஈ) சாம்பல் வார்த்தைகள்
7.பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து
முத்துலிங்கம் - யுகத்தின் பாடல்
பவணந்திமுனிவர் - நன்னூல்
சு. வில்வரத்தினம் - ஆறாம் திணை
இந்திரன் - பேச்சு மொழியும் கவிதை மொழியும்
அ) அ, இ ஆ) அ, ஈ இ) ஆ , ஈ ஈ) அ , இ
8. ‘தமிழின் கவிதையியல்’ நூல் ஆசிரியர் யார்
அ) இந்திரன் ஆ) கா. சிவதம்பி
இ) பாரதியார் ஈ) பாரதிதாசன்
9. மனித இனத்தின் ஆதி அடையாளம்
அ) நாடு ஆ) மொழி
இ) ஜாதி ஈ) இனம்
10. ‘Philosopher’ - என்பதன் தமிழ்ச்சொல்
அ) கலை விமர்சகர் ஆ) தத்துவ ஞானி
இ) இதழாளர் ஈ) மெய்யியலாளர்
11. ‘ராபின் குரூசோ’ என்ற நூலை இயற்றியவர்
அ) பாப்லோ நெரூடா ஆ) அ. முத்துலிங்கம்
இ) மல்லார்மே ஈ) டேனியல் டிஃபோ
12. ‘புலமைக்கதிரவன்’ இலக்கணக் குறிப்புத் தருக.
அ) உவமைத்தொகை ஆ) உருவகம்
இ) பண்புத்தொகை ஈ) பெயரெச்சம்
13. ‘ராச்சியம்’ - சரியான தமிழ்ச்சொல்
அ) அரசாங்கம் ஆ) மன்னர்
இ) அரசாட்சி ஈ) மன்னராட்சி
14. திருப்பாவையை ஆண்டாள் எவ்வாறு குறிப்பிடுகின்றார்.
அ) தமிழ் ஆ) தமிழ்மணம்
இ) தமிழ்அமுதம் ஈ) தமிழ்மாலை
15.’யுகம்’- இதற்கான சரியான தமிழ் சொல்
அ) ஆண்டு ஆ) வருடம்
இ) நூற்றாண்டு ஈ) உலகம்
16. குற்றியலுகர எழுத்துக்களில் மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்
அ) க,ச ஆ) ப,த
இ) த,ப ஈ) ட,ற
17. “மொழி என்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிகிறது என்று கூறியவர்.
அ) வால்ட் விட்மன் ஆ) பாப்லோ நெருடா
இ) எர்னஸ்ட் காசிரர் ஈ) மல்லார்மே
18. சரியானதை தேர்க
அ) மலை + அருவி - உயிர் + மெய்
ஆ) தமிழ் + அன்னை - உயிர் + உயிர்
இ) தென்னை _+ மரம் - மெய் + உயிர்
ஈ) தேன் + மழை - மெய் + மெய்
19. ‘Migration’ என்பதன் சரியான தமிழ்ச்சொல்
அ) இடப்பெயர்ச்சி ஆ) நகருதல்
இ) புலம்பெயர்தல் ஈ) கடந்து போதல்
20. ‘பாஸ்போர்ட்’ சரியான தமிழ்ச்சொல்
அ) நுழைவு இசைவு ஆ) கடவுச்சீட்டு
இ) பயணச் சீட்டு ஈ) நுழைவு சீட்டு
21. “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் கூடில்லாத பறவை’ என்று கூறியவர்
அ) டேவிட் புரூஸ் ஆ) டேவிட் கிங்
இ) ரசூல் கம்சதேவ் ஈ) டேவிட் ஹூக்
22. “புல்லின் இதழ்கள்” என்ற நூலின் ஆசிரியர்
அ) மல்லார்மே ஆ) நெரூடா
இ) வால்ட் விட்மன் ஈ) இந்திரன்
23. “ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா? அல்லது இறந்தகாலத்தவரா ? என்பதை நிர்ணயிக்கிறது மொழி” என்றவர்.
அ) ஆற்றூர் ரவிவர்மா ஆ) இராசேந்திரன்
இ) சங்கர் ஜெயராமன் ஈ) ஸ்ரீராம்
24. ‘களைத்துப்போன கத்திரிக்கோலால் காலத்தை வெட்ட முடியாது’ என்ற வரி யாருடையது?
அ) பாப்லோ நெரூடா ஆ) வால்ட் விட்டமின்
இ) மலார்மே ஈ) எர்னஸ்ட் காசிரர்
25. ‘Aesthetics’ என்பதன் சரியான தமிழ்ச்சொல்
அ) மெய்யியலாளர் ஆ) அழகியல்
இ) கலை விமர்சகர் ஈ) புலம்பெயர்பவர்
26. இவற்றில் எது இடைத்தொடர் குற்றியலுகரம்
அ) பஞ்சு ஆ) முரடு
இ) அச்சு ஈ) மார்பு
27. “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிக்குரிய சொல்லைத் தேர்க
அ) காவுகொண்ட ஆ) கனைகடல்
இ) தீட்டித் தீட்டி ஈ) உறவெல்லாம்
28. கீழ்க்கண்டவற்றுள் எது வடமொழிச்சொல்
அ) கதிரவன் ஆ) நாவலர்
இ) கலம்பகம் ஈ) புலவர்
29.சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த முதல்வர்
அ) காமராசர் ஆ) எம். ஜி. ஆர்
இ) கருணாநிதி ஈ) அண்ணா
30. சரியானதைத் தேர்க
அ) கனிச்சாறு - வினை + பெயர்
ஆ) தமிழ் படி - பெயர் + வினை
இ) நடந்து செல் - பெயர் + பெயர்
ஈ) படித்த நூல் - வினை + வினை
இயல் -1
SLIP TEST -3 ற்கான ANSWER KEY ,Pdf வடிவில்
FREE DOWNLOAD செய்ய CLICK THE BUTTON BELLOW👇👇👇👇👇
Photo by Jeremy Manoto on Unsplash