திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் 2021 - 2022
மேனிலை முதலாமாண்டு
தமிழமுது 2020 - பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.
SLIP TEST - 2
வகுப்பு : 11 தமிழ் இயல் : 1
நேரம் : 40 நிமிடங்கள் மதிப்பெண் : 30
I . பலவுள் தெரிக. 6 x 1 = 6
1.மொழிமுதல் எழுத்துக்களின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க
அ) அன்னம், கிண்ணம் ஆ) டமாரம், இங்ஙனம்
இ) ரூபாய், லட்சாதிபதி ஈ) றெக்கை, அங்ஙனம்
2. பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க
அ) அ. முத்துலிங்கம் - பாடல் ஆ) பவணந்தி முனிவர் - நன்னூல்
இ) வில்வரத்தினம் -ஆறாம் திணை ஈ) இந்திரன் - பேச்சு மொழியும் கவிதை மொழியும்
i) அ , ஆ ii) அ , ஈ iii) ஆ , ஈ iv) அ , இ
3.கீழ் உள்ளவற்றைப் பொருத்தி விடை காண்க
அ) புதுக்கவிதை இயக்கம் - 1. வால்ட் விட்மன்
ஆ) குறியீட்டு கவிதை - 2. மகாகவி பாரதியார்
இ) தேசியக் கவி - 3. பாப்லோ நெரூடா
ஈ) இலக்கியத்திற்கு நோபல் பரிசு - 4. ஸ்டெஃபன் மல்லார்மே
அ) 1 3 4 2 ஆ) 1 4 2 3 இ) 4 3 2 1 ஈ) 2 1 4 3
4. “பறவைகள் ஒருவேளை தூங்க போயிருக்கலாம்” - கவிதை நூலின்ஆசிரியர்
அ) ஸ்டெஃபன் மல்லார்மே ஆ) வால்ட் விட்மன்
இ) மனோரமா பிஸ்வாஸ் ஈ) பாப்லோ நெரூடா
5. ‘பஞ்சுப்பொதி’ எவ்வகை குற்றியலுகரம்
அ) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
ஆ) நெடில்தொடர்க் குற்றியலுகரம்
இ) மென்தொடர்க் குற்றியலுகரம்
ஈ) இடைத்தொடர்க் குற்றியலுகரம்
6.கீழ்க்கண்பவற்றுள் பிறமொழிச் சொல் எது?
அ) நினைவு ஆ) பூரிப்பு இ) வருடம் ஈ) ஊழி
II.குறுவினா 3 x 2 = 6
7.என் அம்மை, ஒற்றியெடுத்த
நெற்றிமண் அழகே!
வழிவழி நினதடி தொழுதவர்,
உழுதவர், விதைத்தவர்,
வியர்த்தவர்க்கெல்லாம்
நிறைமணி தந்தவளே! - இக்கவிதை அடியில் உள்ள
வினையாலணையும் பெயர்களை எழுதுக.
8. உயிர் முதல், மெய் முதல் எடுத்துக்காட்டுடன் விவரிக்க.
9. பேச்சுமொழி கவிதை,எழுத்துமொழி கவிதை குறித்து
இந்திரன் கூறுவது யாது?
III.சிறுவினா 1 x 4 = 4
10. கூற்று: குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வதன்று;
நினைவு கூரத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும்.
கவிதை : கூண்டு திறந்தது
சிறகடிக்கவா?
இல்லை! சீட்டெடுக்க.
கூற்றில் ‘குறியீடு’ எனக் குறிப்பிடப்படுவது கவிதையின் எப்பொருளாக வந்துள்ளது?
IV . அனைத்திற்கும் விடை தருக. 3 x 4 = 12
11. தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர்களாக்குக
அ) பள்ளிக்கூடம் எல்லாம் தருபவை ஒவ்வொரு கலைகள் குழந்தையும் போக வேண்டும் மகிழ்ச்சி.
ஆ) கோசல மக்கள் நாடு ஒரு மகிழ்ச்சியாக சிறந்த வாழ்ந்து நாடு வந்தனர்.
12. கீழ்க்காணும் வேர்ச்சொல்லை வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம், வினையாலணையும் பெயராக மாற்றித் தொடரை உருவாக்குக.
அ) தா ஆ) ஓடு
13. கலைச்சொல் தருக
அ) Aesthetics ஆ) Art critic இ) Symbolism ஈ) Migration
V . அனைத்திற்கும் விடையளி. 2 x 1 = 2
14.தமிழாக்கம் தருக.
அ) A picture is worth a thousand words
15.பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்க
அ) தருணம் ஆ) பாஸ்போர்ட்
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095
இயல் -1 ,SLIP TEST -2 ற்கான ANSWER KEY ,பார்க்க, படிக்க,Pdf வடிவில் FREE YA DOWNLOAD செய்ய CLICK THE BUTTON BELLOW👇👇👇👇👇