©Tamilamuthu2020official.blogspot.com
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக | Spot The Error For Tamil ( 2021) Part - 2
11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்குத் தமிழ்ப் பொதுத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில் இது ஒரு முக்கியமான கேள்வியாகும். மொழிப்பயிற்சி பகுதியில் 7x 12 = 14 மதிப்பெண்களை உள்ளடக்கிய கேள்வி தொகுதி இடம்பெறும். அதில், இரண்டு மதிப்பெண்ணுக்கான கேள்வி இந்த கேள்வி முறையிலே அமைந்திருக்கும்.
மிக எளிய முறையில் இதில் இருக்கின்ற நுட்பத்தை அறிந்து கொண்டு; ஒருமை பன்மை வேறுபாடு புரிந்துகொண்டு; உயர்திணை அஃறிணையில் எந்தெந்த சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டு இந்தத் தொடரில் இருக்கும் பிழைகளை நீக்க கற்றுக் கொண்டீர்கள் என்றால் நிச்சயமாக உங்களுக்குத் தொடரில் இருக்கும் பிழைகளை நீக்குக என்ற இந்தக் கேள்விக்கு முழு மதிப்பெண் கிடைக்கும்.
மாணவர்களே! தொடரில் இருக்கும் பிழைகளை அறிந்து அவற்றை நீக்கும் முறைகளைத் தெரிந்து கொள்ள வாருங்கள்.
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
பகுதி - 2
1.நம் மானிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது.( புத்தகம் பக் : 102 )
நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது.
2.எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கியது.(புத்தகம் பக் :102)
எங்கள் ஊரில் நூலகக் கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியது.
3. ரங்கன் வெங்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.(புத்தகம் பக் :102)
ரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.
4. மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.( பக் :102)
வானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
5. ஐப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்தது.( பக் :102)
ஐப்பசி அடைமழையில் ஊருணி நிறைந்தது.
6. இன்னிக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும்.( பக் :102)
இன்றைக்குச் சாயங்காலம் கபடிப் போட்டி நடைபெறும்.
7. மணவாளன் செய்திகளை வாசிக்கிறது.
மணவாளன் செய்திகளை வாசிக்கிறார்.
8. நான் சொல்வது எனக்காக அல்ல.
நான் சொல்வது எனக்காக அன்று.
9. தமிழ்நாட்டு மாணவர் நல்லொழுக்கம் உடையது.
தமிழ்நாட்டு மாணவர் நல்லொழுக்கம் உடையவர்கள்.
10. புலவர்களைப் புரவலர்கள் போற்றினார்.
புலவர்களைப் புரவலர்கள் போற்றினார்.
11. நீயும் நானும் வந்தேன்.
நீயும் நானும் வந்தோம்.
12. நான் பார்த்தது அவைகள் அன்று.
நான் பார்த்தது அவைகள் அல்ல.
13. பழங்கள் ஒவ்வொன்றும் சுவையாக இருந்தன.
ஒவ்வொரு பழமும் சுவையாக இருந்தன.
14. தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றனர்.
தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றது.
15. தலைவி தலைவனோடு சென்றார்.
தலைவி தலைவனோடு சென்றாள்.
16. புலி வந்தன. எருதுகள் ஓடியது.
புலி வந்தது. எருதுகள் ஓடியன.
17.ஒவ்வொரு நல்ல நூல்களிலும் உயர்ந்த குறிக்கோள் ஒன்று அமைந்திருக்கும்.
ஒவ்வொரு நல்ல நூலிலும் உயர்ந்த குறிக்கோள் ஒன்று அமைந்திருக்கும்.
18 .காட்டில் முயலும் ஆமையும் நட்பாயிருந்தது.
காட்டில் முயலும் ஆமையும் நட்பாயிருந்தன.
19. நரி வந்ததன. ஆடுகள் ஓடியது.
நரி வந்ததது. ஆடுகள் ஓடியன.
20. மாணவன் முதல்வரை வரவேற்றனர்.
மாணவன் முதல்வரை வரவேற்றான்.
21. மாடுகள் பயிரை மேய்ந்தது.
மாடுகள் பயிரை மேய்ந்தன.
22. மாமரம் பூத்துக் காய்த்துக் கனிந்து குலுங்கின.
மாமரம் பூத்துக் காய்த்துக் கனிந்து குலுங்கியது.
23. நமது தேசியக் கொடியில் மூவண்ணம் உள்ளது.
நமது தேசியக் கொடியில் மூவண்ணங்கள் உள்ளன.
24. செய்திகள் வாசிப்பது கண்ணன்.
செய்திகள் வாசிப்பவர் கண்ணன்.
25. கயல்விழி என்னும் பெண் நாட்டியம் ஆடியது.
கயல்விழி என்னும் பெண் நாட்டியம் ஆடினாள்.
26. மலர்கொடி அரும்பி மலர்ந்து மணம் பரப்பின.
மலர்கொடி அரும்பி மலர்ந்து மணம் பரப்பியது.
27. அப்பா வீட்டில் இருக்குதா?
அப்பா வீட்டில் இருக்கிறாரா?
28. சேர சோழ பாண்டியர் தமிழகத்தை ஆண்டார்கள்.
சேர சோழ பாண்டியர்கள் தமிழகத்தை ஆண்டனர்.
( அல்லது )
சேரர்களும் சோழர்களும் பாண்டியர்களும் தமிழகத்தை ஆண்டார்கள்.
29. தலைவர்கள் அவர்கள் சிலையைத் திறந்து வைப்பார்கள்.
தலைவர்கள் அவர்கள் சிலையைத் திறந்து வைப்பர்.
30. தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடியது பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை.
தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடியவர் பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை.
31. பல அறிஞர்கள் வந்தார்கள்.
அறிஞர் பலர் வந்தனர்.
32. அவன் ஓவியன் அல்ல.
அவன் ஓவியன் அல்லன்.
33. கைகள் நடுங்குகிறது.
கைகள் நடுங்குகின்றன.
34. பத்து பழங்களில் ஒரு பழமே நல்லன
பத்து பழங்களில் ஒரு பழமே நல்லது.
35. வருவதும் போவதும் கிடையாது.
வருவதும் போவதும் கிடையா.
36. சென்னைக்கு அருகாமையில் இருப்பது கன்னியாகுமரி அல்ல.
சென்னைக்கு அருகாமையில் இருப்பது கன்னியாகுமரி அன்று.
37. அவர்தான் கூறினார் இவர்தான் கூறினார் என்று பாராது எவர்தான்
கூறினாலும் மெய்ப்பொருள் காண்க.
அவர்தாம் கூறினார் இவர்தாம் கூறினார் என்று பாராது எவர்தாம்
கூறினாலும் மெய்ப்பொருள் காண்க.
38. இடது பக்கம் இருப்பது ஔவையார் சிலை அல்ல.
இடப்பக்கம் இருப்பது ஔவையார் சிலை அன்று.
39. கண்ணன் முருகன் மற்றும் வேலன் வந்தனர்.
கண்ணன், முருகன், வேலன் ஆகியோர் வந்தனர்.
40. நல்லவைகளும் கெட்டவைகளும் பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றன
நல்லனவும் கெட்டனவும் பத்திரிகைகளில் வெளியிடப்படுகின்றன.
41. இதனைச் செய்தது இவர் அல்லவா?
இதனைச் செய்தவர் இவர் அல்லரே?
42. விழாவில் பல அறிஞர்கள் பேசினர்.
விழாவில் அறிஞர் பலர் பேசினர்.
43. ஒவ்வொரு சிற்றூர்களிலும் ஊராட்சி உள்ளது.
ஒவ்வொரு சிற்றூரிலும் ஓர் ஊராட்சி உள்ளது.
44. மாணவர்கள் கல்வியறிவும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும்.
மாணவர்கள் கல்வியறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.
45. வனிதாமணி தன் முயற்சியால் முதலிடத்தைப் பெற்றது.
வனிதாமணி தன் முயற்சியால் முதலிடத்தைப் பெற்றாள்.
46. தமிழரசன் தமிழரசிக்கு எவ்வாறு உதவியது?
தமிழரசன் தமிழரசிக்கு எவ்வாறு உதவினான்?
47.புலி வந்தன.
புலி வந்தது.
48.எருதுகள் ஓடியது
எருதுகள் ஓடின.
49.பூச்செடிகள் தோட்டத்தில் மலர்ந்து மணம் வீசியது.
பூச்செடிகள் தோட்டத்தில் மலர்ந்து மணம் வீசின.
50.எனக்குப் பல வேலைகள் இருக்கின்றது.
எனக்குப் பல வேலைகள் இருக்கின்றன.
51.எனக்குப் பல வீடுகள் உள.
எனக்குப் பல வீடுகள் உள்ளன.
52.இது பொது வழி அல்ல.
இது பொது வழி அன்று.
53.தென்றல் மெல்ல வீசின.
தென்றல் மெல்ல வீசியது.
54.வாகனத்தை இடதுபக்கம் திருப்பாதே.
வாகனத்தை இடப்பக்கம் திருப்பாதே.
55.வலது பக்கச் சுவரில் எழுதாதே.
வலப்பக்கச் சுவரில் எழுதாதே.
56.நான் புதிய நூல் ஒன்று வாங்கினேன்.
நான் ஒரு புதிய நூல் வாங்கினேன்.
57.தலைவி தலைவனோடு சென்றாள்.
தலைவி தலைவனோடு சென்றார்.
58.கட்சிச் சண்டைகள் பிளவை உண்டாக்குகிறது.
கட்சிச் சண்டைகள் பிளவை உண்டாக்கும்.
59.சில வீரர்கள் நாட்டிற்காக தன் இன்னுயிர் ஈந்தனர்.
வீரர்கள் சிலர் நாட்டிற்காகத் தன் இன்னுயிர் ஈந்தனர்.
60.அங்கே வருவது கோமதி அல்ல.
அங்கே வருவது கோமதி அல்லள்.
மொழிப்பயிற்சி :
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக Part-1 : Click here
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக : Click here
இந்தப் பகுதியில் மேலும் ஏதேனும் விளக்கங்களும் தெளிவுகள் வேண்டுமென்றாலும், மொழிப்பயிற்சி சார்ந்த ஏதேனும் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் வேண்டுமென்றாலும், வேறு மொழிப்பயிற்சி கேள்விகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும், நீங்கள் மறக்காமல் Comment Box இல் பதிவிடுங்கள்.
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 4, 9843448095