Loading ....

12 ஆம் வகுப்பு,தமிழ்,சிறுத்தேர்வு, இயல் 1,Slip Test ,Unit 1,

திருத்தப்பட்ட பாடத்திட்டம்  2021 - 2022

மேனிலை இரண்டாமாண்டு.



 தமிழமுது 2020 -  பயிற்சிப் பாசறை, கன்னியாகுமரி மாவட்டம்.


 SLIP TEST -1

வகுப்பு : 12                                   தமிழ்                                             இயல் : 1

நேரம் : 40 நிமிடங்கள்                                                                  மதிப்பெண் : 30


I.பலவுள் தெரிக                                                                                                                              6 x 1 = 6


1.சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பன்முகத் தன்மையில் அடங்காத ஒன்று  

அ)பேராசிரியர்           ஆ) இதழாசிரியர்           இ) கட்டுரையாளர்       ஈ) மொழிபெயர்ப்பாளர் 

2. இவற்றுள் தி. சு. நடராசன் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றாத பல்கலைக்கழகம் 

அ) பாரதியார் பல்கலைக்கழகம்           ஆ) வார்சா பல்கலைக்கழகம் 

இ) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் 

ஈ) காமராசர் பல்கலைக்கழகம் 

3. இவற்றுள் உரைநடை நூல் எது? 

அ) இன்று        ஆ) மழைக்குப் பிறகு மழை      இ) சூரிய நிழல்      ஈ)மலையாளக் கவிதை 4.’நெல்லை தென்றல்’ எனும் நூல் 

அ)கவிதை நூல்     ஆ) உரைநடை நூல்       இ) கடித இலக்கியம்    ஈ)வரலாற்று நூல்  5.வருமொழி தகரமாயின்  லகரம் றகரமாக மாறுவதோடு தகரமும் றகரமாக மாறும் - என்ற புணர்ச்சிக்குச் சான்று. 

அ)நாண்மீன்          ஆ) சொற்றுணை            இ) பன்னூல்                ஈ) பஃறுளி 

6. தவறான இணையைக் கண்டறிக. 

அ) பாரதியின் கடிதங்கள்   -     ரா.அ.பத்மநாபன் 

ஆ) காட்டுவாத்து                   -    அகிலன் 

இ) சுவரொட்டிகள்                 -     ந. முத்துசாமி 

ஈ) தமிழ் அழகியல்                -     தி.சு. நடராசன் 


II.குறுவினா                                                                                                                                          3 x 2 = 6

7.நடை அழகியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் கருத்தை குறிப்பிடுக. 

8. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை? 

9.கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட ,தமிழின் துணை வேண்டும் என்கிறார்?


III.சிறுவினா                                                                                                                                       2 x 4 = 8

10. சங்கப் பாடலில் ஒலிகோலம் குறிப்பிடத்தக்க ஒரு பண்பாகும் - விளக்குக. 

11. ‘ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்’ - இடம் சுட்டி பொருள் விளக்குக 


IV.நெடுவினா                                                                                                                                     1 x 6 = 6

12. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறியவற்றைத் தொகுத்து எழுதுக. 


V. அடி மாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக.                                                                                          1 x 4  = 4      

13.”ஓங்கலிடை வந்து…. எனத் தொடங்கும் தண்டியலங்காரப் பாடலை எழுதுக.


எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்

கார்மல் மேனிலைப் பள்ளி, நாகர்கோவில்- 49843448095


  இயல் -1 ,SLIP TEST -1 ற்கான ANSWER KEY ,பார்க்க, படிக்க,Pdf  வடிவில் FREE YA DOWNLODE செய்ய CLICK THE BUTTON BELLOW👇👇👇👇👇











Photo by Arleen wiese on Unsplash

2 Comments

Previous Post Next Post